#Formula1 thread; from the time as early as I could remember..
1998 - Mika Häkkinen wins his first WDC; McLaren-Mercedes takes Constructor's; Strong fight from Michael Schumacher & Ferrari; Disappointing for '97 winners Williams & Jacques Villeneuve as Renault withdraws
(1/∞)
பிட்-லேன் ஸ்பீடிங் காரணமாக விதிக்கப்பட்ட பெனால்டிக்கு எதிராக அவரது ஆல்பைன் அணி வெற்றிகரமாக அப்பீல் செய்ததையடுத்து, பியர் காஸ்லி தனது மூன்றாவது இடத்தை திரும்ப பெற்றுள்ளார்
இதனால் புள்ளிகளில் சிறிய மாற்றம்
WDC
ஆன்டோனெல்லி 156
ஹாமில்டன் 90 ⬆️
ரசல் 88 ⬇️
லெக்லர் 75 ⬇️
பியாஸ்ட்ரி 58 ⬆️
WCC
மெர்சிடிஸ் 244
ஃபெராரி 165
மெக்லாரன் 116
ரெட் புல் 69
அல்பைன் 50
#F12026#MonacoGP
பெரும்பாலான F1 ரசிகர்களுக்கு மொனாக்கோ பிடிக்காத சுற்றாக மாறியுள்ளது. அவர்களையும் குறை சொல்ல இயலாது. முந்தி செல்ல மிக மிக வாய்ப்பு குறைவான குறுகலான நகர்ப்புற சாலைகளில் நடக்கும் சுற்று, வெறும் நீண்ட மரபுக்காகவே நடத்தப்படுகிறது என்று கூட தோன்றும்.
ஆனால் என்னை பொறுத்த வரையில் இதுவும் முக்கியமான சுற்று தான். முந்துதல் இன்றி ஒரே சுற்றுப்பாதையில் குறுகலான நெருக்கடியில் தொடர்ந்து ஓட்டுவதும், மிக அருகில் விபத்து நடக்கும் போது சுதாரிப்பதும் இங்கு சோதனைக்கு உள்ளாகும்.
மேக்ஸ் - ரெட்புலின் தொடர் முன்னேற்றம் மற்றும் மேக்ஸ் காரணத்தால் கிமியுடன் முதல் வரிசையில் ஆனால் என்ஜின் பழுதால் தொடக்கத்திலேயே வெளியேறினார். பின்னர் போட்டாஸ், பேர்மன் மற்றும் நோரிஸ் வெளியேறினர்.
அதன் பிறகான தார்த்தள பழுதால் ஸ்ட்ரால் மற்றும் லெக்லர் வெளியேறி ரேஸ் ரெட் பிளாக் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது
இதற்கிடையில் பெரும்பாலான ஓட்டுநர்கள் பிட் ஸ்டாப் முடித்து வெளியே வரும்போது அதி வேகத்தில் சென்றதாக பெனால்டி விதிக்கப்பட்டனர். இந்த பெனால்டியை சரியாக செயல்படுத்தாத மெர்சிடிஸ் அணியால் ஜார்ஜ் ரசல் மேலும் பெனால்டி அனுபவித்தார், பின்னுக்கு தள்ளப்பட்டார்
கிமி ஆன்டோனெல்லி - அடுத்த சூப்பர் ஸ்டாராக மாறி வருகிறார். 5வது தொடர் வெற்றி. இளம் வயதில் மென்மேலும் சாதனைகள்
இந்த குழப்பத்திற்கு இடையில் சிறப்பாக ஓட்டி வந்த லூயிஸ் ஹாமில்டன் இரண்டாம் இடம், ஹட்ஜர் மூன்றாம் இடம்
அடுத்த சுற்று — ஸ்பெயின் - பார்சிலோனா (ஜூன் 12-14)
பார்ப்போம்...
WDC
ஆன்டோனெல்லி 156
ஹாமில்டன் 90 ⬆️
ரசல் 88 ⬇️
லெக்லர் 75 ⬇️
பியாஸ்ட்ரி 60 ⬆️
WCC
மெர்சிடிஸ் 244
ஃபெராரி 165
மெக்லாரன் 118
ரெட் புல் 72
அல்பைன் 41

#F12026#CanadianGP
இந்த ஆண்டின் இதுவரையிலான மிக குளிரான ரேஸ், வெப்பநிலை கணிப்பு சுமார் 12-16°C. கடந்த 2 ஆண்டுகளாகவே மெக்லாரன் ஆதிக்கம் இருந்தபோதும், மெர்சிடிஸ் மற்றும் ஜார்ஜ் ரசல் இங்கே தங்களின் சிறந்த பார்மன்ஸை காட்டியிருந்தனர். இந்த ஆண்டு புதிய ஒழுங்குமுறை மாற்றங்களுடன் என்ன பார்க்கப் போகிறோம்? மெர்சிடிஸ் ஆதிக்கம் தொடருமா? ஃபெராரி மீண்டும் சண்டைக்குள் வருமா? மெக்லாரன் மற்றும் ரெட் புல் மெதுவாக மீண்டும் போட்டியில் சேருமா?!
ஸ்பிரிண்ட்
போல் பொசிஷனில் தொடங்கிய ஜார்ஜ் ரசல், முழு ஆதிக்கத்துடன் ஸ்பிரிண்ட் ரேஸை வென்றார். முன் வரிசையில் தொடங்கிய கிமி, முதல் லாப்பிலேயே லாண்டோ நோரிஸிடம் இடத்தை இழந்தார். அதன் பின்னர் ஆஸ்கர், ஃபெராரி மற்றும் மேக்ஸ் அடுத்த இடங்களில் முடித்தனர்.
மெயின் ரேஸ்
குவாலிபையிங்கில் மெர்சிடிஸ் ஆதிக்கம் செலுத்தியது. ஜார்ஜ் ரசல் முதல் இடம், கிமி முன் வரிசை, அதன்பின் மெக்லாரன், லூயிஸ், இரண்டு ரெட் புல்கள், பின்னர் லெக்லர்.
ரேஸ் நாளில் மிதமான மழை கணிப்பு இருந்ததால், அணிகள் கலவையான டயர் தேர்வுகளை செய்தன. மெக்லாரன் உள்ளிட்ட சில அணிகள் இன்டர்மீடியட் டயர்களில் தொடங்கின. ஆனால் பின்னர் அது பெரிய தவறான முடிவாக மாறியது.
மெக்லாரன் பின்னடைவு, ரசலுக்கு என்ஜின் செயலிழப்பு — இதற்கிடையில் கிமி ஆன்டோனெல்லி தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்து, தனது முதல் நான்கு வெற்றிகளையும் தொடர்ச்சியான ரேஸ்களில் பெற்ற முதல் டிரைவர் என்ற சாதனையை படைத்தார்.
அவரைத் தொடர்ந்து முன்னாள் சாம்பியன்கள் லூயிஸ் மற்றும் மேக்ஸ் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் முடித்தனர். கடைசி கட்டத்தில் வேகத்தை உயர்த்திய லூயிஸ், மேக்ஸை முந்தினார்.
சமீப காலங்களில் அல்பைனுக்கு சிறந்த முடிவாக ஃபிராங்கோ கொலாபின்டோ P6 மற்றும் காஸ்லி P8 முடித்தனர். ரேசிங் புல்ஸின் லாஸன் P7.
அடுத்த சுற்று — மொனாக்கோ (ஜூன் 5-7)
புதிய ஒழுங்குமுறைகள் சிக்கலாக இருக்கும் நிலையில், ஏற்கனவே மிகவும் சிக்கலான மொனாக்கோ ட்ராக் — இது செம்ம விருந்தா? இல்ல மொக்கையா?
பார்ப்போம்...
WDC
ஆன்டோனெல்லி 131
ரசல் 88
லெக்லர் 75
ஹாமில்டன் 72 ⬆️
நோரிஸ் 58 ⬇️
WCC
மெர்சிடிஸ் 219
ஃபெராரி 147
மெக்லாரன் 106
ரெட் புல் 57
அல்பைன் 35

#F12026#MiamiGP
புதிய ஒழுங்குமுறைகள் வந்ததிலிருந்து மெர்சிடிஸின் முன்னேற்றம். ஃபெராரி ரேஸ் ஸ்டார்ட்ஸ்களில் குடுக்கும் பலமான போட்டி, மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் மெக்லாரன் சிறிய முன்னேற்றம், ஏப்ரல் மாதம் முழுவதும் இடைவெளி, அதோடு மேலும் சில ஒழுங்குமுறை மாற்றங்கள் — இந்த பின்னணியில் இந்த ஆண்டின் மயாமி ரேஸ்க்கு மிக கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
அணிகளுக்கு தரவுகளை பகுப்பாய்வு செய்ய உதவ பிராக்டிஸ் செஷன் கூடுதலாக 30 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டது. காரணம் — நீண்ட நாட்கள் இடைவெளி, மேலும் சிறிய ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் ஸ்பிரிண்ட் வார இறுதி
ஸ்பிரிண்ட்
இந்த ஆண்டு தெளிவாக 4-முனை போட்டியாக மாறியிருக்கிறது— மெர்சிடிஸ், ஃபெராரி, மெக்லாரன், ரெட் புல். மெக்லாரன் குவாலிபையிங்கில் P1-P3 பிடித்து, தற்போதைய சாம்பியன் இன்னும் போட்டியில் இருக்கிறோம் என்று காட்டி கடைசியில் ஸ்பிரிண்ட் முடிவு P1-P2. அதன் பிறகு ஃபெராரி (லெக்லர்), மெர்சிடிஸ் (ரஸல்), மேக்ஸ்.
மெயின் ரேஸ்
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் குடுத்த அழுத்தத்தையும் தாண்டி, கிமி ஆண்டோனெல்லி மீண்டும் போல் பொசிஷன் பெற்றார். ஃபெராரி, மெக்லாரன் மற்றும் ரஸல் தொடர்ந்து அடுத்த இடம் பிடித்தனர். அல்பைன் டாப் 10-இல் இடம் பிடித்து, இந்த சீசனில் 5வது சிறந்த அணியாகவும், மிட்ஃபீல்டில் சிறந்த அணியாகவும் நிலைபெற்றுள்ளது — ஃபிளாவியோவுக்கு ரொம்ப ஆண்டுகள் கழித்து நல்ல செய்தி.
மழை அச்சுறுத்தல் காரணமாக ரேஸ் 3 மணி நேரம் முன்பாக முன்னேற்றப்பட்டது (இந்தியாவில் பார்க்கும் நமக்கு நல்ல சலுகை 😄).
ரேஸ் தொடக்கத்தில், முந்தைய ரேஸ்களைப் போலவே, கிமி நல்ல தொடக்கம் எடுக்காமல் முன்னிலை இழந்தார். மேக்ஸ் ஒரு தவறால் சுழன்று P10-க்கு விழுந்தார். இதனாலும், வழக்கம் போல ஃபெராரியின் சிறந்த தொடக்கத்தினாலும் லெக்லர் முன்னிலை பெற்றார், மெக்லாரனின் நோரிஸ் கூடவே தொடர்ந்து வந்தார்.
விரைவிலேயே சேஃப்டி கார் — ஹட்ஜார் சுவரை தொட்டதும், லாஸன் காஸ்லியை மோதியதும் காரணம். இதை பயன்படுத்தி மேக்ஸ் மட்டும் ஹார்ட் காம்பவுண்ட் டயர்களுக்கு மாறி நீண்ட தூர உக்திக்கு முயன்றார்.
பின்னர் நடந்த அனைவரின் பிட்ஸ்டாப்ஸ் போது ஏற்பட்ட சிறிய தாமதம் காரணமாக லெக்லர் தனது முன்னிலையை கிமி மற்றும் நோரிஸிடம் இழந்தார். கிமி முன்னிலையை கடைசி வரை தக்கவைத்து தனது 3வது வரலாற்று வெற்றியை பெற்றார்.
கடைசி நிமிடத்தில் சுழன்ற லெக்லர், தனது போடியம் நிலையை பியாஸ்ட்ரியிடம் இழந்து 8-ம் இடம் பிடித்தார்.
மேக்ஸ் P16-ல் இருந்து முன்னேறி 5-ம் இடம் பிடித்தார். ஹாமில்டன் 6-ம் இடம், அல்பைனின் கொலபிண்டோ 7-ம் இடம். வில்லியம்ஸ் 9 மற்றும் 10ம் இடம்.
WDC
ஆண்டோனெல்லி – 100
ரஸல் – 80
லெக்லர் – 59
நோரிஸ் – 51 ⬆️
ஹாமில்டன் – 51 ⬇️
WCC
மெர்சிடிஸ் – 180
ஃபெராரி – 110
மெக்லாரன் – 94
ரெட் புல் – 30 ⬆️
அல்பைன் – 23
அடுத்த நிறுத்தம்: மான்ட்ரியல், கனடா — மே 22–24
பார்ப்போம்..
#F12026#GSMF1
கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் சில போட்டிகளில் பெரிய மாற்றம் ஒன்றுதான் கண்களில் பட்டது – சக்தி மேலாண்மை(Power Management). முன்னாள் சீசனில் கார்கள் நீண்ட நேரம் முழு வேகத்தில் செல்ல முடிந்தது; மின்சக்தியை தொடர்ந்து பயன்படுத்தி நேரான பாதைகளில் நீடித்த வேகத்தை வைத்திருக்க முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆரம்ப போட்டிகளில் ஓட்டுநர்கள் சக்தியை “சேமித்து–சரியான நேரத்தில் பயன்படுத்தும்” முறைக்கு மாறியிருக்கிறார்கள். சில சுற்றுகளில் வேகம் திடீரென குறைவது போல தோன்றும் “வெட்டுப்பாடு(Clipping)” தருணங்களும் அதிகமாக காணப்பட்டது. இதனால் முந்திச் செல்லுவது நேரடியாக வேகத்தின் மேல் அல்ல, எப்போது தாக்க வேண்டும் என்ற திட்டமிடல் மீது அதிகம் சார்ந்தது.
மியாமி முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் இந்த போக்கை இன்னும் தீவிரப்படுத்தும். எளிமையாக சொன்னால் – மொத்தமாக கிடைக்கும் மின்சக்தி கொஞ்சம் குறைகிறது, ஆனால் அதை பயன்படுத்தும் போது கிடைக்கும் திடீர் சக்தி அதிகரிக்கிறது. அதாவது, நீண்ட நேரம் மெதுவாக கூடுதல் வேகம் கிடைப்பதற்குப் பதிலாக, குறுகிய நேரத்தில் மிக அதிக வேகத்தை கொடுத்து விடும். அதே சமயம், எல்லா பகுதிகளிலும் அந்த சக்தியை பயன்படுத்த முடியாது என்பதால் ஓட்டுநர்கள் எங்கு அதை பயன்படுத்த வேண்டும் என்பதை மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டும். இதனால் “நிலையான வேக ஓட்டம்(Consistent Pace) ” குறைந்து, தந்திரம் முக்கியமான போட்டி ஆக மாறுகிறது.
இதன் விளைவாக அடுத்த போட்டிகளில் நாம் பார்க்கப்போவது இன்னும் சுவாரஸ்யமான காட்சிகள். நீண்ட நேர வேகத்துக்கு பதிலாக, திடீர் வேக உயர்வுகள் அதிகமாக இருக்கும்; அதனால் சரியான இடத்தில் தாக்கினால் மட்டுமே முந்திச் செல்ல முடியும். வளைவுகளில் பெரிய வேக வித்தியாசம் இருக்காது, ஆனால் நேரான பகுதிகளில் திடீர் முயற்சிகள் அதிகரிக்கும். மொத்த சுற்று நேரம் பெரிதாக மாறாது, ஆனால் போட்டியின் ஓட்டம் – யார் எப்போது முன்னேறுகிறார்கள், எப்படி பாதுகாக்கிறார்கள் – எல்லாம் அதிகமாக மாறும். சுருக்கமாக சொன்னால், வேகம் மட்டும் போதாது; புத்திசாலித்தனமான நேரத் தேர்வே வெற்றியை தீர்மானிக்கும்.
பார்ப்போம்...
I think this was done already and a regular practice during every delimitation right?
With the current political scene, same way South States fight for their representations, those Districts (or maybe regions) who lost voters more will then fight that they would lose out constituencies
A simulation of what the speed traces might look like, in a qualifying lap at Australia, with the changes introduced for Miami
🔵 2025 cars
🔴 Initial 2026 cars
🟢 2026 cars after the changes introduced
📰 @wearetherace
#F12026#GSMF1
கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் சில போட்டிகளில் பெரிய மாற்றம் ஒன்றுதான் கண்களில் பட்டது – சக்தி மேலாண்மை(Power Management). முன்னாள் சீசனில் கார்கள் நீண்ட நேரம் முழு வேகத்தில் செல்ல முடிந்தது; மின்சக்தியை தொடர்ந்து பயன்படுத்தி நேரான பாதைகளில் நீடித்த வேகத்தை வைத்திருக்க முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆரம்ப போட்டிகளில் ஓட்டுநர்கள் சக்தியை “சேமித்து–சரியான நேரத்தில் பயன்படுத்தும்” முறைக்கு மாறியிருக்கிறார்கள். சில சுற்றுகளில் வேகம் திடீரென குறைவது போல தோன்றும் “வெட்டுப்பாடு(Clipping)” தருணங்களும் அதிகமாக காணப்பட்டது. இதனால் முந்திச் செல்லுவது நேரடியாக வேகத்தின் மேல் அல்ல, எப்போது தாக்க வேண்டும் என்ற திட்டமிடல் மீது அதிகம் சார்ந்தது.
மியாமி முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் இந்த போக்கை இன்னும் தீவிரப்படுத்தும். எளிமையாக சொன்னால் – மொத்தமாக கிடைக்கும் மின்சக்தி கொஞ்சம் குறைகிறது, ஆனால் அதை பயன்படுத்தும் போது கிடைக்கும் திடீர் சக்தி அதிகரிக்கிறது. அதாவது, நீண்ட நேரம் மெதுவாக கூடுதல் வேகம் கிடைப்பதற்குப் பதிலாக, குறுகிய நேரத்தில் மிக அதிக வேகத்தை கொடுத்து விடும். அதே சமயம், எல்லா பகுதிகளிலும் அந்த சக்தியை பயன்படுத்த முடியாது என்பதால் ஓட்டுநர்கள் எங்கு அதை பயன்படுத்த வேண்டும் என்பதை மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டும். இதனால் “நிலையான வேக ஓட்டம்(Consistent Pace) ” குறைந்து, தந்திரம் முக்கியமான போட்டி ஆக மாறுகிறது.
இதன் விளைவாக அடுத்த போட்டிகளில் நாம் பார்க்கப்போவது இன்னும் சுவாரஸ்யமான காட்சிகள். நீண்ட நேர வேகத்துக்கு பதிலாக, திடீர் வேக உயர்வுகள் அதிகமாக இருக்கும்; அதனால் சரியான இடத்தில் தாக்கினால் மட்டுமே முந்திச் செல்ல முடியும். வளைவுகளில் பெரிய வேக வித்தியாசம் இருக்காது, ஆனால் நேரான பகுதிகளில் திடீர் முயற்சிகள் அதிகரிக்கும். மொத்த சுற்று நேரம் பெரிதாக மாறாது, ஆனால் போட்டியின் ஓட்டம் – யார் எப்போது முன்னேறுகிறார்கள், எப்படி பாதுகாக்கிறார்கள் – எல்லாம் அதிகமாக மாறும். சுருக்கமாக சொன்னால், வேகம் மட்டும் போதாது; புத்திசாலித்தனமான நேரத் தேர்வே வெற்றியை தீர்மானிக்கும்.
பார்ப்போம்...
#F12026#GSMF1#JapaneseGP களம் சூடு பிடிக்கிறதா..
மெர்சிடிஸ் ஃபெராரி மட்டுமே சண்டை செய்து கொண்டிருந்த முன்களத்தில் இப்போ மெக்லாரனும் முன்னேறி வந்திருக்கு. போல் பொசிஷன் பெற்றாலும் தொடக்கத்திலேயே 6ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட கிமி பின்னாடி ஏற்பட்ட பேர்மேன் விபத்தால் பிட்ஸ்டாப் சாதகமாக அமைந்து மீண்டும் முதல் இடம். பியாஸ்ட்ரி லெக்லேர் சிறப்பாக ஓட்டி 2&3ஆம் இடம்.
ரஸல் வெற்றி நிலைக்கு வந்தாலும் கிமியின் பிட்ஸ்டாப் அதிர்ஷ்டத்தால் இவருக்கு பின்னடைவு.
3ஆம் இடத்திற்கு லெக்லேர் ரஸல் நோரிஸ் ஹாமில்டன் நல்ல சண்டை செய்தனர்.
19Y 216d வயதான கிமி ஆன்டோனெல்லி WDC சாம்பியன்ஷிப்-ல் முன்னிலை பெற்று இளம் வயது சாதனை படைத்துள்ளார்
அடுத்த சுற்று மே 1-3
அமெரிக்கா - மியாமி
மத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக ஏப்ரலின் பஹ்ரைன் மற்றும் சவூதி போட்டிகள் ஏற்கனவே
ரத்து..
பாப்போம்...
WDC
ஆன்டோனெல்லி 72
ரசல் 63
லெக்லர் 49
ஹாமில்டன் 41
நோரிஸ் 25
WCC
மெர்சிடிஸ் 135
ஃபெராரி 90
மெக்லாரன் 46
ஹாஸ் 18
அல்பைன் 16
அவங்க இதை செய்வதே 543 ஏ போதும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை சொல்ல வைக்கத்தான்.
ஏற்கனவே சுயாட்சியில் இருந்து இறங்கி வந்து கூட்டாட்சி(Federalism) தேவை என்றும் அதை விரிவாக்குவதே நாட்டை இன்னும் முன்னணிப்பாதைக்கு கொண்டு செல்லும் என்று சொல்ல வைத்தார்கள். 543 எம்பி கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் ஒன்றிய அரசிடம் குவிந்திருக்கும் அதிகாரம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கபடனும்னு சொல்லியது கடந்து இப்போ 543 ஏ போதும் என்று கெஞ்ச வைப்பதில் தான் இவர்களின் சூழ்ச்சி இருக்கு.
உண்மையில் போராட வேண்டியது ஒவ்வொரு மாநில (அ ) பிராந்திய (தென், வட, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு) அளவில் நிராகரிக்கும் அதிகாரம் (Veto Power or Majority out of Regions) தரப்பட வேண்டும், எந்த சட்டமும் ஒவ்வொரு மாநில/பிராந்திய அளவிலும் பெரும்பான்மை பெறாமல் கொண்டு வர முடியாத அளவில்.
I think it's already mentioned in the Video. Their targeted prime audience is the majority who can understand Hindi. From their perspective they're National Channel and in their Nation everyone "should" know Hindi.
The counterattack would be to have some media network like Sun start a "National" new channel in English and freely allow people to speak in Tamil/Malayalam/Kannada/Telugu and interrupt when someone tries to speak in Hindi saying this "National" channel is targeted for four language audiences.
#F12026#GSMF1#JapaneseGP களம் சூடு பிடிக்கிறதா..
மெர்சிடிஸ் ஃபெராரி மட்டுமே சண்டை செய்து கொண்டிருந்த முன்களத்தில் இப்போ மெக்லாரனும் முன்னேறி வந்திருக்கு. போல் பொசிஷன் பெற்றாலும் தொடக்கத்திலேயே 6ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட கிமி பின்னாடி ஏற்பட்ட பேர்மேன் விபத்தால் பிட்ஸ்டாப் சாதகமாக அமைந்து மீண்டும் முதல் இடம். பியாஸ்ட்ரி லெக்லேர் சிறப்பாக ஓட்டி 2&3ஆம் இடம்.
ரஸல் வெற்றி நிலைக்கு வந்தாலும் கிமியின் பிட்ஸ்டாப் அதிர்ஷ்டத்தால் இவருக்கு பின்னடைவு.
3ஆம் இடத்திற்கு லெக்லேர் ரஸல் நோரிஸ் ஹாமில்டன் நல்ல சண்டை செய்தனர்.
19Y 216d வயதான கிமி ஆன்டோனெல்லி WDC சாம்பியன்ஷிப்-ல் முன்னிலை பெற்று இளம் வயது சாதனை படைத்துள்ளார்
அடுத்த சுற்று மே 1-3
அமெரிக்கா - மியாமி
மத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக ஏப்ரலின் பஹ்ரைன் மற்றும் சவூதி போட்டிகள் ஏற்கனவே
ரத்து..
பாப்போம்...
WDC
ஆன்டோனெல்லி 72
ரசல் 63
லெக்லர் 49
ஹாமில்டன் 41
நோரிஸ் 25
WCC
மெர்சிடிஸ் 135
ஃபெராரி 90
மெக்லாரன் 46
ஹாஸ் 18
அல்பைன் 16
#F12026#GSMF1#ChineseGP மீண்டும் ஒரு மெர்சிடிஸ் ஃபெராரி ஆதிக்கம்
ஸ்பிரிண்ட்:
இந்த ஆண்டின் வழக்கம் போல மெர்சிடிஸ் 1-2, ஃபெராரி-யும் மெக்லாரனும் 3-4-5-6, பிறகு அல்பைன்-ஹாஸ்-ரெட்புல் என்று தொடங்கி 11வது லேப்பில் ஹல்கென்பர்க் வெளியேற்றம் காரணமாக ஏற்பட்ட சேஃப்டி கார் பிட்ஸ்டாப் முடிவில் ரஸல் வெற்றி, லெக்லர் P2, ஹாமில்டன் P3
மெயின் ரேஸ்:
19Y 201d வயதான கிமி ஆன்டோனெல்லி போல் பொசிஷன் பெற்று இளம் வயது சாதனை படைத்தார். இதற்கு முன் செபாஸ்டின் வெட்டல் 21Y 73d 2008-
மோன்சா, இத்தாலி
தொடக்கத்தில் ஃபெராரி வழக்கம் போல முந்தி சென்றாலும் பிறகு மீண்டு வந்து முதல் இடத்தில் முடித்தார்.
கிமிக்கு முதல் வெற்றி!!
ரஸல்-லெக்லர்-ஹாமில்டன் இவர்களிடையே நடந்த ஓவர்டேக் முக்கியமாக ஃபெராரி ஓட்டுநர்கள் சண்டை போட்டாலும் அதை கண்ணியமான முதிர்ச்சியோடு செய்தது சிறப்பான காட்சி
ஆரம்பிக்காமலேயே வெளியேறினர் இரண்டு மெக்லாரன்கள், ஆடியின் போர்டலேடோ, வில்லியம்சின் ஆல்பன்
ரேஸின் போது வெளியேறினர் ஸ்ட்ரோல், அலோன்சோ, வேர்ஸ்டப்பன்
மிட்பீல்ட் அணிகளில் மீண்டும் ஹாஸ்-ன் ஆலி பேர்மேன், ஆல்பைன்-ன் கேஸ்லி சிறப்பான பங்களிப்பு
அடுத்த சுற்று மார்ச் 27-29
ஜப்பான் - சுசூகா
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஏப்ரலில் நடக்கவிருந்த பஹ்ரைன் மற்றும் சவூதி போட்டிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது..
பாப்போம்...
WDC
ரசல் 51
ஆன்டோனெல்லி 47
லெக்லர் 34
ஹாமில்டன் 33
பேர்மேன் 17
WCC
மெர்சிடிஸ் 98
ஃபெராரி 67
மெக்லாரன் 18
ஹாஸ் 17
ரெட்புல் 12

#F12026#GSMF1#AustralianGP எதிர்பார்ப்பை தாண்டி ஆச்சரியங்கள் இருக்கும்னு பாத்தா நினைச்சபடி மெர்சிடிஸ் ஃபெராரி கை தான் ஓங்கி இருந்தது.
சனிக்கிழமை குவாலிஃபையிங் முடிவுல மெர்சிடிஸ் P1-P2 வந்தப்போ 2014-21 அவங்க ஆதிக்கம் செஞ்சது ஞாபகம் வந்துட்டு போச்சு.
ஃபெராரி சிறந்த தொடக்கத்தை கொடுக்க, அப்படியே தக்க வைப்பாங்கனு எதிர் பாத்தா வழக்கம் போல, Virtual Safety Car pitstop உத்தியில் சிறந்த முடிவு எடுக்க முடியாம தடுமாறி மெர்சிடிஸ் மீண்டும் 1-2
முடிவுல ஜார்ஜ் ரசல் வெற்றி, கிமி ஆன்டோனெல்லி P2. சார்ல் லெக்லர் P3 & லூயிஸ் ஹாமில்டன் P4
2025 சாம்பியன்
மெக்லாரன் இருக்கற இடம் தெரியலை. சாம்பியன் நோரிஸ் P5, பியாஸ்ட்ரி முதல் லேப்-ல் வெளியேற்றம்..
ரெட்புல் க்கு கலவையான ரேஸ் தான்..
குவாலி Q1 ல விபத்தில் வெளியேறி P20 மேக்ஸ் நல்லா முன்னேறி P6..
ஐசக் ஹட்ஜர் 3 வதுல தொடங்கினாலும் என்ஜின் பழுதாகி வெளியேறினார்
மிட்பீல்ட் அணிகளில் ஹாஸ், ரேசிங் புல், ஆடி, ஆல்பைன் நல்ல முடிவுகள்
வில்லியம்ஸ், காடிலாக் பெருசா ஏதும் பண்ணல
ஆஸ்டன் மார்டின் முழுசா முடிக்க கூட முடியாம வெளியேற்றம். ஆஸ்டன்-ஹோண்டா கூட்டணி பேரழிவு மாதிரி இருக்கு..
அடுத்த சுற்று இந்த வாரமே
சீனா - ஷாங்காய் - ஸ்பிரிண்ட் ரேஸ்..
பாப்போம்...
WDC
ரசல் 25
ஆன்டோனெல்லி 18
லெக்லர் 15
ஹாமில்டன் 12
நோரிஸ் 10
WCC
மெர்சிடிஸ் 43
ஃபெராரி 27
மெக்லாரன் 10
ரெட்புல் 8
ஹாஸ் 6
நீங்க விவரித்த அனைத்தும் எனக்கும் கிட்டத்தட்ட நடந்தது. வட இந்தியர்களுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை என்பதாலோ என்னவோ இதை ஒன்றிய அலுவலகங்கள் மதிப்பதில்லை.
எரிவாயு முகவர் மூலம் இது போன்ற மாற்றங்களை நாம் சீக்கிரம் சரி செய்கிறோம் என்று அறிந்து அதையும் சில நாட்களில் தடை செய்வார்களோ என்னவோ..
கடவுச்சீட்டு மாற்றம் என்ன ஆச்சு என்று கடைசி வரை சொல்லாமல் சஸ்பென்ஸ்லேயே விட்டுடீங்க..
Formula 1 as we know already crossed the "fairness" line towards "viewership" pleasure. Imagine both Ferraris running away during every start. A fair solution would be not making any changes to the start procedures, giving all teams to catch-up with a deadline before midseason. Ferrari should use this period to further improve their cars while others concentrate on Start Procedure fixings.
#F12026#GSMF1#AustralianGP எதிர்பார்ப்பை தாண்டி ஆச்சரியங்கள் இருக்கும்னு பாத்தா நினைச்சபடி மெர்சிடிஸ் ஃபெராரி கை தான் ஓங்கி இருந்தது.
சனிக்கிழமை குவாலிஃபையிங் முடிவுல மெர்சிடிஸ் P1-P2 வந்தப்போ 2014-21 அவங்க ஆதிக்கம் செஞ்சது ஞாபகம் வந்துட்டு போச்சு.
ஃபெராரி சிறந்த தொடக்கத்தை கொடுக்க, அப்படியே தக்க வைப்பாங்கனு எதிர் பாத்தா வழக்கம் போல, Virtual Safety Car pitstop உத்தியில் சிறந்த முடிவு எடுக்க முடியாம தடுமாறி மெர்சிடிஸ் மீண்டும் 1-2
முடிவுல ஜார்ஜ் ரசல் வெற்றி, கிமி ஆன்டோனெல்லி P2. சார்ல் லெக்லர் P3 & லூயிஸ் ஹாமில்டன் P4
2025 சாம்பியன்
மெக்லாரன் இருக்கற இடம் தெரியலை. சாம்பியன் நோரிஸ் P5, பியாஸ்ட்ரி முதல் லேப்-ல் வெளியேற்றம்..
ரெட்புல் க்கு கலவையான ரேஸ் தான்..
குவாலி Q1 ல விபத்தில் வெளியேறி P20 மேக்ஸ் நல்லா முன்னேறி P6..
ஐசக் ஹட்ஜர் 3 வதுல தொடங்கினாலும் என்ஜின் பழுதாகி வெளியேறினார்
மிட்பீல்ட் அணிகளில் ஹாஸ், ரேசிங் புல், ஆடி, ஆல்பைன் நல்ல முடிவுகள்
வில்லியம்ஸ், காடிலாக் பெருசா ஏதும் பண்ணல
ஆஸ்டன் மார்டின் முழுசா முடிக்க கூட முடியாம வெளியேற்றம். ஆஸ்டன்-ஹோண்டா கூட்டணி பேரழிவு மாதிரி இருக்கு..
அடுத்த சுற்று இந்த வாரமே
சீனா - ஷாங்காய் - ஸ்பிரிண்ட் ரேஸ்..
பாப்போம்...
WDC
ரசல் 25
ஆன்டோனெல்லி 18
லெக்லர் 15
ஹாமில்டன் 12
நோரிஸ் 10
WCC
மெர்சிடிஸ் 43
ஃபெராரி 27
மெக்லாரன் 10
ரெட்புல் 8
ஹாஸ் 6
#F12026#GSMF1
புது ஆண்டு..
புது ஒழுங்குமுறைகள்..
புது அணிகள்..
புது ஓட்டுநர்கள்..
2026-ன் உலக சாம்பியனாகப் போவது யார்?
நோரிஸ் தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பாரா..
மேக்ஸ் மீண்டு வருவாரா..
ஃபெராரி தனது விசிறிகளை மகிழ்ச்சிப்படுத்துமா..
அடுத்த தலைமுறையில் இருந்து சாம்பியன் வீரர்களை யார் சோதனைக்கு உட்படுத்துவார்..
பழைய தலைமுறை ஆட்கள் களத்தில் என்ன நிரூபிக்க போகிறார்கள்..
மெக்லாரன் மெர்சிடிஸ் ரெட்புல் ஃபெராரி யார் எந்த வரிசையில்..
மிட்பீல்ட் அணிகளில் யார் ஆச்சரியப்படுத்த போகிறார்கள்..
கடைசி நிலைக்கு எந்த அணி தள்ளப்படும்..
ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்புடன் தொடங்கும் #F1 ன் இந்த ஆண்டு ஆரம்பிச்சிருக்கு..