#நாகப்பட்டினம் மற��றும் #மயிலாடுதுறை மாவட்டங்களில் திரளாகக் குழுமி நின்ற பொதுமக்கள் இடையே, கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
திரு. @mkstalin மயிலாடுதுறை மாவட்டத்தின் மாப்பிள்ளை என்று சொல்லலாம். ஆனால், இந்த மயிலாடுதுறை மாவட்டத்தையே உருவாக்கியது @AIADMKOfficial அரசு.
டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவித்து, விவசாயம் காத்தது அஇஅதிமுக அரசு.
ஆனால், மேகதாது கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கைகட்டி வேடிக்கை பார்த்து, விவசாயத்திற்கு துரோகம் இழைக்கிறது ஸ்டாலினின் திமுக அரசு.
ஏப்ரல் 23 அன்று மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பால் அமையவுள்ள அஇஅதிமுக அரசு, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, விவசாயத்தைக் காக்க அனைத்து ந��வடிக்கைகளையும் முழுமூச்சாய்க் கொண்டு செயல்படும்.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளை, வலிகளை உணர்ந்து, அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் அடுத்த 5 ஆண்டிற்கான “பாதுகாப்பான தமிழகம்-
பார்போற்றும் வளர்ச்சி”க்கான #அஇஅதிமுக_தேர்தல்அறி��்கை.
https://t.co/8zKSd6RxB7
மக்கள் நலமுடன் வாழ,
மகளிர் வாழ்வு உயர,
தமிழகம் செழித்து வளர,
நல்லாட்சி மலர,
வாக்களிப்பீர் - இரட்டை இலை! 🌱
@epstamilnadu
#Vote4AIADMK #AIADMKGovernmentLoading
தமிழக மக்களுக்கு வணக்கம்.
கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன்.
ஆனால், பொம்மை முதல்வராக இருந்த
திரு.@mkstalin , அவர் நடத்திய விடியா திமுக கா��்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை!
எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன்.
திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான்.
இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது,
குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது,
அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம்!
ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள��� என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சியாக உள்ளது!
விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திரு. திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுக-விடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளையும் பேசலாமே?
@thirumaofficial
இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி!
இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம்!
தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு காவல்துறை போலவே செயல்படாமல், தமிழக காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களே- இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது!
நான் கேட்கப்போவது,
உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம்.
இத்தன��� ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி.
தமிழகம் வாழ வேண்டும் என்றால்,
திமுக வீழ வேண்டும்!
செய்வீர்களா?
@AIADMKOfficial
தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து,
தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி,
மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில்,
பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும்,
பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும்
போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.
“தமிழகம் வாழ வேண்டும் என்றால்
திமுக வீழ வேண்டும்”
என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி!
நமது கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களுக்கும், மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுக்��ும், @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும்,
@ammkofficial பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும்,
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவன��் திரு. @PaarivendharTR அவர்களுக்கும்
இத்தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும்.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகப் பதவியேற்றுள்ள மாண்புமிகு. @rajendraarlekar அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியலமைப்பின் அங்கமான இப்பொறுப்பில் தாங்கள் மேற்���ொள்ளவுள்ள மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
@lokbhavan_tn
@AIADMKOfficial
To see the mood of Tamil Nadu, come to Tiruchirappalli! Public anger against DMK is at an all-time high. People are going to vote them out.
People see NDA as the alliance which can ensure all-round progress.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில், 9 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென நுழைந்து பெட்ரோல் குண்டு நடத்திய கண்மூடித்தனமானக் கொடூரத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இது தொடர்பாக ஊடகங்கள் ��ற்றும் சமூக வலைதளங்களில் வரும் காட்சிகள் காணவே பதைக்கின்றன.
"சட்டம் ஒழுங்கு" என்பது ஒரு விஷயமே இல்லை என்பது போலவே, கடந்த ஐந்தாண்டுகளை Lethargic-ஆக
கடந்துவிட்ட இந்த பொம்மை முதல்வரின் அவல ஆட்சியால் ஏற்பட்ட நிலை தான் இது.
திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல கலர் கலராக ரீல் விளம்பரங்களை மட்டும் செய்கிறது
இந்த @mkstalin அரசு. ஆனால்,
திமுக ஆட்சியில் உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுகிறத�� !
இப்பகுதியை சேர்ந்த ப���்டியலின மக்கள், தங்கள் சமூகத்தை குறிவைத்தே இத்தாக்குதல் நடந்துள்ளதாக அச்சத்துடன் போராடி வருகின்றனர்.
இந்த அச்சமும், பதற்றமும் தான் திமுக அரசின் சாதனையா? தொடர்ந்து இப்படி பதற்ற நிலையில் தமிழ்நாட்டை வைத்திருக்க வேண்டுமென திமுக அரசு நினைக்கிறதா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
சமூக சமநிலையை, பாதுகாப்பு உணர்வை மக்களிடையே உறுதி செய்ய முடியாத இந்த அரசு இருந்து என்ன பயன்?
சம���க மோதல்களை தடுக்க, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வக்கற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக இந்த கொடிய குற்ற சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
இன்றைய தினம், பல்வேறு அரசியல் செய்திகளுக்கு இடையே புதைக்க முயற்சிக்கப்படும் ஒரு கொடூரமான செய்தி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் என்ற SIR-ஆல் 2 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது.
தமிழ்நாட்டில், இந்த விடியா திமுக ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற முழுமுதற் பிரச்சனையை மறைக்க எத்தனையோ சித்துவேலைகளை திமுக செய்து வருகிறது...
ஆனால், பாதிக்கப்படும் தமிழக மக்களுக்கு, பெண்களுக்கு, தங்களின் பாதுகாப்பு தொலைந்திருப்பது தெரியாதா? அல்லது இதற்கு காரணம் இங்கு ஆளக்கூடிய விடியா திமுக அரசும், அதன் கையாலாகாத பொம்மை முதல்வரும் தான் என்று தெரியாதா என்ன?
திமுக மறைக்க முயலலாம்...
மக்கள் மறக்க மாட்டார்கள்...!!
#DMKFailsTN