ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலை ஒட்டி, பெண் இராணுவ அதிகாரியான சோஃபியா குறைஷியை மையப்படுத்தி தவறான கருத்தை பதிவு செய்த ம.பி.யை சேர்ந்த பாஜக அமைச்சர் விஜய் ஷா குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைக்கப்பட்டது.
SIT அறிக்கையின் படி விஜய் ஷா மீது அடுத்தகட்ட வழக்கு தொடர வேண்டுமென கூறப்பட்ட பின்பும், அதை செய்ய மாட்டோம் என பாஜக முடிவெடுத்துள்ளதாக Dainik Bhaskar பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவையே மறுக்கும் பாஜகவின் செயல் கண்டனத்திற்குரியது!
https://t.co/VPgXdzSfoG
சட்டவிரோதமாக குடியேறியவர் என்ற சந்தேகத்தின் பெயரில், மேற்கு வங்கத்தை சேர்ந்த 40 வயதான ஷாஹிதா ஃபக்கீர் என்ற பெண்மணியை நடு இரவு 1 மணிக்கு அஸ்ஸாம் எல்லையிலிருந்து பங்களாதேஷிற்கு நாடு கடத்தியுள்ளது இந்திய அரசு.
20 ஆண்டுகளாக மும்பையில் இவர் வசிக்கிறார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற SIRல், இவரது 4 சகோதரர்கள் மட்டும் ஒரு சகோதரியின் ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஷாஹிதா மற்றும் அவரது மற்றொரு சகோதரியின் ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்படாததால் அவர்களின் வழக்கு தீர்ப்பாயத்தில் உள்ளது.
திடீரென இவரை கைது செய்து, அகதிகள் முகாமில் அடைத்து, உடனடியாக பங்களாதேஷிற்கு நாடு கடத்தியுள்ளதில் நீதமான சட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவரை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இம்முயற்சியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை பாய வேண்டும்.
https://t.co/YzZuW84bIa
இந்தியாவிலுள்ள 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களில், 100 பேரில் 26 நபர்களே முறையான சம்பளம் பெரும் வேலையில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக Bloomberg News வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது!
சுயவேலை செய்வோர் 10, குடும்பத்திற்கு உதவியாக வாழ்வோர் 11, வீட்டு வேலை செய்வோர் 3, வேலையில்லாதோர் 15, வேலை தேடுவோர் பட்டியலுக்குள்ளேயே இல்லாதோர் 35 என இந்திய இளைஞர்களின் பொருளாதார ஈட்டும் நிலை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
பாஜக ஆட்சியில் போலியான விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் சந்திக்கும் அவல நிலைகள் மறைக்கப்படுகிறது.
https://t.co/04HxKYiqz7
தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட முஹம்மது சாகிப் அன்சாரி மற்றும் வக்கார் அஸாரின் வழக்கு குறித்த விசாரணையை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக நடத்தி இன்னும் முடிக்காமல் இருப்பது, மேலும் தொடர்ந்து சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டிருப்பது, அரசியலமைப்பின் 21வது பிரிவிற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் காவல்துறையை சாடி, அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
இது போன்ற வழக்குகளில் விசாரணையை உரிய நேரத்தில் முடிக்காமல், காலம் தாழ்த்தும் வேலையை செய்யும் காவல்துறையினர் சட்டப்படி தண்டிக்கப்பட்டால் தான் விதிமீறல்கள் குறையும்.
https://t.co/RA1tH8aVhc
டெல்லியில்
மாணவர்கள் மீது தடிஅடி தாக்குதல்
போராடும் உரிமையை மறுப்பதா?
22 மாணவர்களின் குரலை அடக்க முடியாது!
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
#Delhi#DelhiProtest#DelhiLiveProtest#DelhiProtestLive#DelhiProtestUpdates#DelhiParliamentMarch#CJP #DelhiStudentProtest #DelhiStudentsProtest #TNTJ #DelhiStudentsProtestLive #DelhiStudentMovement #DelhiStudentMarch #DelhiCJPProtest
டெல்லியில் நடைபெறும் CJPன் போராட்டத்தில் காவல்துறையால் கடும் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
எங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள்! மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான வீடியோக்களை பார்ப்பதற்கெல்லாம் எங்களுக்கு நேரம் இல்லை! என வழக்கை விசாரித்த CJI சூர்யா காந்த் கூறியுள்ளார்.
இது போன்ற பேச்சுக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும்!
டெல்லியில் நடக்கும் CJP போராட்டத்தில் பங்கெடுத்துள்ள இளைஞர்கள் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி சுட்டு தாக்கியுள்ளது டெல்லி காவல்துறை.
காயம்பட்டவரின் மருத்துவ அறிக்கை பெல்லட் குண்டு தாக்குதலை உறுதி செய்துள்ளது.
அமைதி வழியில் போராடும் இளைஞர்கள் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தும்
உரிமையை காவல்துறைக்கு யார் கொடுத்தது?
இந்தியாவின் நில பரப்பளவில் எட்டில் ஒரு பங்கே உள்ள நாடான வியட்நாம் செய்யும் ஏற்றுமதி, இந்தியாவின் ஏற்றுமதி அளவை எட்டியுள்ளது.
ஏற்றுமதி சந்தையில் வல்லாதிக்க நாடுகள், தொழில் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் அருகில் கூட நெருங்க இயலாத அளவிற்கு இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்களை கண்டுபிடிக்கவே SIR என்று கூறிய தேர்தல் ஆணையம், இதுவரை ஒரு வெளிநாட்டவரை கூட கண்டுபிடித்தபாடில்லை!
பாஜகவை ஆட்சியில் அமரவைக்க தீட்டப்பட்ட திட்டமாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது!
https://t.co/zBp0c8txFz
கடந்த ஆண்டு 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்
நடைபெற்ற SIR பணியின் முடிவாக 5 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். அதில் மே.வங்கத்தில் மட்டும் நீக்கப்பட்டவர்களில் 27 இலட்சம் பேர் தீர்ப்பாய முடிவு கிடைக்காமல் வாக்காளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதன் முடிவு வரும் முன்பே, பசுவதை தடுப்பு சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் அப்பெண்கள் மீது வழக்கு பதிந்துவிட்டது காவல்துறை!
காவல்துறையின் இந்த போக்கு கண்டனத்திற்குரியது!
https://t.co/BLOGOSKpqW
முஸ்லிம் சமூகத்தை வைத்து ஒரு கட்சியை அளவுக்கு மீறிப் புகழ்வதை விடுங்கள்.
முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்றுத் தர முடியுமா?
உ.பி.ல் மூன்று இஸ்லாமிய பெண்களை (ஷாமா பர்வீன், ஷாய்ஸ்தா, ஃபாத்திமா) மாட்டுக்கறி சமைத்தார்கள் என கூறி கைது செய்துள்ளது காவல்துறை! கைப்பட்டப்பற்ற கறியை தடயவியல் ஆய்விற்கு அனுப்பியுள்ளார்களாம்!
பக்ரீத் பண்டிகையை ஒட்டி, மே 11 - 29, 2026 வரை முஸ்லிம்களுக்கு எதிராக 46 வன்முறை சம்பவங்களை சங்பரிவார கூட்டம் நடத்தியுள்ளதாக, The Association for Protection of Civil Rights (APCR) அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜகவின் இசைவோடு சங்பரிவார கூட்டம் ஆடும் மதவெறியாட்டத்திற்கு, அரசுத்துறைகளும் அமைதி காத்து ஆதரவாக நிற்பது கண்டிக்கத்தக்கது.
https://t.co/VwgRzY8kmF
தென்னிந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடத்தில், $15 பில்லியன் மதிப்பில் Data Centerஐ, Google நிறுவனம் கொண்டுவர உள்ளது.
தங்களது நிலத்தை விற்க சொல்லி நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தலித் மக்கள் குமுறுகின்றனர். இந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் குறைவான அளவே நிலம் வைத்துள்ள நிலையில் அதையும் பிடுங்குவதற்கு அரசுகள் அனுமதி வழங்குவது மனிதநேயமற்ற செயலாகும்.
https://t.co/rngjJ0oGt7
நார்வே என்பது World Press Freedom Indexல் முன்னணி வகிக்கும் நாடு. அங்கு ஆட்சியாளர்களிடம் பத்திரிக்கியாளர்கள் மக்கள் பிரச்சினை குறித்த கேள்விகளை வெளிப்படையாக கேட்பார்கள்... (1/2)
மகாராஷ்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் வாக்ரி நகர் பகுதியில் கோவிலுக்குள் நுழைவதில் பிரச்சனை.. பெண்ணை அரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய கும்பல்... (1/2)