அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி @Anbil_Mahesh அவர்கள் மீது பொய் செய்தி பரப்பிய ஆட்டுக்குட்டி @annamalai_k அண்ணாமலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
The discrepancies in the translated NEET question papers have discriminated against non-Hindi speaking students. I urge all Chief Ministers of non-BJP ruling States to join together in opposing this unfair test on this ground also. (2/2) #NEETKillsPradeeba#BanNeet
நாடாளுமன்றத்தில் மாணவர்களுக்காக ஒலித்த தி.மு.கவின் உரிமைக்குரல்!
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தங்கள் எதிர்கால நல்வாழ்விற்காக அறவழியில் போராடும் மாணவர்களைத் தாக்கி ஒடுக்கும் ஒன்றிய அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு. @KanimozhiDMK எம்.பி. அவர்களின் தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் பிரதான வாசலில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர் @mkstalin அவர்களை எனது மகனுடன் சந்தித்து, பள்ளி படிப்பை நிறைவு செய்து கல்லூரியில் அடியெடுத்து வைத்துள்ளமைக்காக வாழ்த்துகள் பெற்றோம்.
#BanNEET
Why NEET when Tamilnadu was already delivering best medical care without NEET!
Bring education system under state concurrent list!
DMK Leader @mkstalin article in opEd in @the_hindu
நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!
நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.
மாணவர்கள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுத்து விட்டு, பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு நகைப்புக்குரியது!
- திரு. @tiruchisiva எம்.பி அவர்கள்
கழக மாநிலங்களவை குழுத் தலைவர்
#NEET ❌ MERIT என்ற நிலைபாட்டில் தெளிவாக நின்ற முதல் மக்கள் இயக்கம் #திமுக🌄
2017 முதல் இன்று வரை அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
“NEET என்பது திறமையின் தேர்வு அல்ல என்பதை பல தரவுகள் தெளிவாக சொல்கின்றன.
நீதிபதி டாக்டர் ஏ.கே. ராஜன் குழுவின் ஆய்வு கூறுகிற புள்ளி விவரங்கள் :
• அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவச் சேர்க்கை 32.7% இலிருந்து 15.6% ஆக சரிந்தது.
• கிராமப்புற மாணவர்களின் பங்கு 55.5% இலிருந்து 38.1% ஆக குறைந்தது.
• பல ஆண்டுகள் "கோச்சிங்" பெற முடிந்த "ரிப்பீட்டர்" மாணவர்கள் 12.5% இலிருந்து 71.4% ஆக உயர்ந்தனர்.
• மாநிலப் பாடத்திட்டம் மற்றும் தமிழ்மூல மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், CBSE மாணவர்களின் பங்கு அதிகரித்தது.
NEET, கற்றலை விட கோச்சிங்கிற்கும், சம வாய்ப்பை விட பொருளாதார வசதிக்கும், சமூக நீதியை விட சலுகைக்கும் முன்னுரிமை அளிக்கும் தேர்வாகவே NEET உள்ளது.
தமிழ்நாட்டின் NEET எதிர்ப்பு என்பது கல்வியின் தரத்தை எதிர்ப்பதல்ல; திறமை என்பது ஒரு மாணவனின் உழைப்பால் தீர்மானிக்கப்பட வேண்டும்; அவரது குடும்பத்தின் பொருளாதார நிலையாலோ, கோச்சிங் சென்டருக்குச் செலுத்தும் கட்டணத்தாலோ அல்ல என்பதற்கான உறுதியான நிலைப்பாடு.
நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது ஒன்றிய பாஜக அரசும், தமிழ்நாட்டின் தவெக அரசும் தங்களின் காவல்துறையைக் கொண்டு நடத்தி இருக்கும் கொடூர தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நீட்டை முழுமையாக ஒழிக்கும் வரை #திமுக களத்தில் நிச்சயமாக நிற்கும்🙏🏾
#BanNEET #SocialJustice #DravidianModel #TamilNadu
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம்...
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம்…
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்...
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️
@amutharasan_dmk
நாடாளுமன்ற #MonsoonSession குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:
மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்!
#Parliament #MekedatuDam #Cauvery #DeltaFarmers #DMK
ஊழலை ஒளித்து வைத்து
ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும்
விஜய் அரசு
பழநி கோயில் அறக்கட்டளையின் 100 கோடி ரூபாய் சொத்துகளை 2 கோடி ரூபாய்க்கு அவசர அவசரமாகத் தனியாருக்குப் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் அம்பலப்பட்டிருக்கிறது விஜய் அரசு. நீதிமன்றமும் இந்த மோசடியைக் கண்டித்து, பத்திரப் பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக பெண்கள் உள்ளிட்ட பதிவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதுடன், விநோத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது விஜய் அரசு. அதாவது, ஊழல் விவகாரத்தை ஒளித்து வைத்துவிட்டு, அது பற்றி பேசியவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒழிக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே த.வெ.க அரசு இப்படித்தான் செயல்பட்டு வருகிறது. முந்தைய கைது நடவடிக்கைகளில் சட்டவழியில் வென்றது போலவே, இந்த வழக்கிலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். யோக்கியர்கள் போல மேக்கப் போட்டுத் திரியும் ஆட்சியாளர்களின் உண்மையான கொடூர முகம் இன்னும் நன்றாகத் தெரியட்டும்.