மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை 8.6.2026 அன்று தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) அகில இந்தியத் துணைத் தலைவர்
திரு.ஏ. சௌந்தரராஜன், தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. ஜி. சுகுமாரன், பொதுச் செயலாளர் திரு. எஸ். கண்ணன், பொருளாளர் திரு. எஸ். ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (9.6.2026) தலைமைச் செயலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது தந்தையும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான திரு. ப. தனபால் அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் திரு. ஆர். வரதராஜன், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் திருமதி ராஜ்ஸ்ரீ பதி, சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர்
திரு. முத்தையா முருகப்பன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. அர்ஜுன் கோத்தாரி, பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. என். ராமநாதன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு.எம். சில்வெஸ்டர், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் திரு. ஜே.ஏ.எச். ஆஷிக், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் Chief Strategy Officer திரு ஆதித்ய பதி, ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் பிரசிடெண்ட் திரு. ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், சன்மார் குழுமத்தின் தலைவர் திரு. விஜய் சங்கர் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற
நீதிபதி திரு. எஸ். மணிகுமார் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான
50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
#CMJosephVijay
மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026-ல் தங்கப் பதக்கம் வென்றதோடு, 2027 FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#CMJosephVijay
And finally my official directorial debut, Nurtured this dream for more than 30 years
to come true,
Supa excited to finally unveil what we've been working on!!
Will be presenting the Teaser of #Magudam/#Makutam on 10th June, God Bless
#DirectorVishal#SGF99#Vishal35