@TANGEDCO_Offcl Consumer No: 020030041041 என் EB பில் 700 யூனிட் +. TN அரசு விதி படி 100 யூனிட் கழிக்க வேண்டும். ஆனால் முடியாது, EB ஆபீஸ் செல்லச் சொன்னார்கள். தெளிவுபடுத்துங்கள். #TANGEDCO
நீங்கள் கடினமாக உழைத்தீர்கள் அதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இல்லை, இயற்கையே உங்களுக்கு ஓய்வு தேவை என்று நினைத்து இருக்கிறது, நன்கு ஓய்வெடுங்க சார் 🙏 அடுத்த தேர்தலில் இதே உற்சாகத்தோடு களம் காணுங்கள் நன்றி 🙏
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
5. தவெக தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்; ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அதை செய்யத் தவறின.
எல்லாவற்றுக்கும் மேல் - போதை கலாச்சாரம் கிராமம் வரை பரவியதால், பெண்கள் மாற்றத்தைத் தேடி வாக்களித்து விட்டார்கள்.
#திமுக_தோல்வி#மாற்றம்_தேவை#TVKfor2026TN
திமுக தோல்விக்கு முக்கிய காரணங்கள்:
1. பொறுப்பாளர்கள் மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டுமே பார்த்தனர்; தேர்தல் நேரம் தவிர நேரில் சந்தித்ததே இல்லை.
2. சில பொறுப்பாளர்கள் ஊருக்குள் "நாங்கதான் பெரிய ஆள்" என பந்தா காட்டியது.
#TNelection_2026
3. கூட்டணியில் வி.சி.க-வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேமுதிக & காங்கிரஸுக்கு அதிக இடம் ஒதுக்கியது. வி.சி.க. தொண்டர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது அதனால் அவர்கள் ஓட்டு பெருமளவு த.வெ.க. - க்கு போனது.
4. திமுக ஜெயிக்க வேண்டிய இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் விட்டது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
@scbjagadish@rajinikanth விஜய் அவங்க ரசிகர்களை மக்களையும் நம்பி வந்தாரு, ஆனா இவரு அரசியல் வல்லுனர்களை கூப்பிட்டு ஆராய்ச்சி பண்ணாரு அவங்க இவர் அரசியலுக்கு வராம பாத்துக்கிட்டாங்க குறிப்பா ரங்கராஜ் பாண்டே ரொம்ப குழப்பிட்டான், நடிகர் சிரஞ்சீவி அரசியல் தோல்வி இந்த மாதிரி விஷயங்கள் அவரை யோசிக்க வைத்தது
இப்ப விஜய்க்கு வர ரிசல்ட், 2021 அன்று தலைவர் ரஜினிக்கு வர வேண்டியது, மிஸ் பண்ணிட்டியே தலைவா @rajinikanth நீங்க கட்சி ஆரம்பிக்க போறீங்கன்னு சொன்ன நாளில் இருந்து கஷ்டப்பட்டு வேலை செஞ்சோம், வந்திருந்தீங்கன்னா ஜெயிச்சிருப்பீங்க...
#TNElections2026
எம்ஜிஆர் காலத்து வரலாறு திரும்புகிறது, விஜய் கலக்கிட்டு இருக்கார், தமிழ்நாட்டில் புதிய அரசியல்வாதிகள் வர இருக்கிறார்கள், கொத்தனார் பெயிண்டர் போன்ற ஏழை எளிய மக்கள் அரசியல்வாதியாக மாறுவது சந்தோஷம் அளிக்கக்கூடிய விஷயம்
#TNvotes#TVK
காலையிலிருந்து விசாரிச்ச வரைக்கும் ஆளுங்கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் இந்த முறை மிகப்பெரிய சவால் காத்திருக்கு, புதிய கட்சி வாக்குகளை நன்கு அறுவடை செய்திருக்கு.
#TnElection2026
இப்போது தான் “கர” பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது. நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய @dhanushkraja சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது. அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும் …கர கொண்டாடப்படும்…..#KARA. @VelsFilmIntl@gvprakash@_mamithabaiju@vigneshraja89@thenieswar
காலையிலிருந்து விசாரிச்ச வரைக்கும் ஆளுங்கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் இந்த முறை மிகப்பெரிய சவால் காத்திருக்கு, புதிய கட்சி வாக்குகளை நன்கு அறுவடை செய்திருக்கு.
#TnElection2026
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.