நான் ஆங்கிலச் சூழலில் வளர்ந்தேன்.. தமிழ் வரவில்லை என்கிறார் நிதி அமைச்சர் மரிய வில்சன் ! அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.. “தான் கிருஸ்துவர், பைபிள் எனக்கு அன்பு மொழியைச் சொல்லிக் குடுத்து இருக்கிறது” என்கிறார்.
கான்ஸ்டாண்டின் நோபில் பெஸ்கி எனும் ஐரோப்பியர் இந்தியா வந்து தமிழ் கற்று ���வீரமாமுனிவர்” என தனது பெயரையும் மாற்றுகிறார். தான் கற்ற சங்க இலக்கியத்தில் உள்ள தமிழர் வாழ்வியலுக்கும் நடப்பில் உள்ள வாழ்வியலுக்குமான வித்யாசத்தை உணர்ந்து “தனித்த” தமிழர் மரபில் வேறு ஏதோ ஒரு சமூகத்தின் ( ஆரியர்) தாக்கம் பிற்காலத்தில் உருவாகியிருக்கிறது என முதன்முதலில் எழுதியவர். தமிழ் சிந்தனை மரபில் ஏற்பட்ட முதல் மாற்றம் அதுதான்!
ஐரோப்பாவில் இருந்து வந்த பாதிரியார் கார்டுவெல் தமிழ் மொழியை கசடறக் கற்று.. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதனை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்து “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஆய்வு நூலையும் அளித்து தமிழின் தனித் தன்மையை உறுதி செய்தார்.
மேல் ஜாதி மட்டும் தான் படிக்க முடியும் என்ற சாதியக் கொடுமையான அன்றைய சூழலில் மாவட்டங்கள் தோறும் பள்ளிகள் திறந்து ஆனா ஆவன்னா சொல்லிக் குடுத்து தமிழர்கள் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமையும் கிருஸ்துவ சமூகத்திற்கே உண்டு.
கிருஸ்துவம் அன்பு மொழி மட்டுமல்ல.. தமிழ் மண்ணில் தமிழையும் ஆழமாகச் சொல்லிக் குடுத்தே இருக்கிறது.
கிருஸ்துவம் மட்டுமல்ல.. அத்தனை மதங்களின் அடிநாதமாக இருப்பதும் அன்பு மொழிதான்.
ஆனால் நான் பார்த்தவரை
��ந்து மதம் அன்பையே போதிக்கிறது என்று சொல்லி ஊருக்கு ஊர் கலவரங்களை உருவாக்கித் திரிந்த ராமகோபாலன், இஸ்லாம் அன்பை போதிக்கிறது என இயக்கம் வைத்து பிரச்சாரம் செய்து பின்பு குண்டும் வைத்த கோவை பாட்சா துவங்கி.. சமீபத்தில் சொந்த அண்ணன் வீட்டில் உருட்டு கட்டையோடு புகுந்து அவர்கள் குடும்பத்தினரை அடித்து கிழித்த இதே அமைச்சர் மரியவில்சன் வரை “ என் மதம் அன்பைதான் போதிக்கிறது” என்று வார���த்தைக்கு வார்த்தை சொல்லும் எவரும் அடிப்படையில் வன்முறையாளர்களாகவே இருக்கிறார்கள்!!
சொத்து வரி உயர்ந்தால் இனி வீட்டு வாடகையும் உயரும்! ஏற்கனவே மின் கட்டணம் பல மடங்கு கூடிருச்சி!! சென்னையில் வாழும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்க��ின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் துண்டு விழும்! சென்னை மக்கள் தேர்தலில் ஊதியது விசில் அல்ல.. சங்கு!!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்தப்பிள்ளை முரசொலிக்கு பிறந்த நாள் இன்று.
கூர்மையான தலையங்கங்கள், ஆழமான அரசியல் கட்டுரைகள் என திராவிடத்தின் திசைகாட்டும் போர் முரசாக வெளிவந்து கொண்டிருக்கும் முரசொலியில், கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, @dmk_youthwing சார்பாக @MPaasarai பக்கம் நடத்தி வருகிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் சிறு துண்டறிக்கையாக தொடங்கிய முரசொலியின் பயணம் இன்றைய நவீன உலகில் பல்வேறு பரிணாம வளர்ச்சியைப் பெற்று, நாள்தோறும் லட்சக்கணக்கானோரை சென்றடைந்து கொண்டிருக்கிறது.
கழகத்தின் மீதான அவதூறுகள், வசவுகள், விமர்சனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கும் முதல் கருத்தாயுதமாக இன்றும் முரசொலி திகழ்கிறது.
தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு நலனுக்கான முரசொலியின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!
#Murasoli85
ஆகஸ்ட் 10 - முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளை 'முரசொலி'-யின் 85வது பிறந்தநாள்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ஒரு மாணவராக இருந்தபோது துண்டுப் பிரசுரமாகத் தொடங்கப்பட்டு, இன்று திராவிட இயக்கத்தின் சரித்திரத்தைப் பறைசாற்றும் மாபெரும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது முரசொலி.
கழகத்தின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் உடன்பிறப்புகளுக்கு வழிகாட்டியாகத் திகழும் முரசொலியின் பணி, நூற்றாண்டு கடந்தும் தொடரட்டும்!
#Murasoli85
இன்று (09.08.2026) புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு சுபநிகழ்வுகளில் நேரில் பங்கேற்று, குடும்பத்தினரோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டோம்.
புதுக்கோட்டை திருவப்பூரில் நடைபெற்ற திரு. பாலாஜி மற்றும் திருமதி. சைலஜா ஆகியோரின் இல்லக் காதணி விழாவிலும், லேனா திருமண மஹாலில் நடைபெற்ற திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் திரு. VRM. தங்கராஜ் அவர்களின் இல்லக் காதணி விழாவிலும் கலந்துகொண்டு செல்வங்களை மனதார வாழ்த்தினோம்.
இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மச்சுவாடியில் நடைபெற்ற ஒன்றிய கழக செயலாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களின் சகோதரி இல்லக் காதணி விழாவிலும் பங்கேற்றோம்.
மேலும், திருச்சியில் நடைபெற்ற ஹாஜி. K.K.M. ஹாஜா மைதீன் மற்றும் ஹாஜி. K. அப்துல் வாஹித் ஆகியோரின் குத்தூஸ் இல்ல நிக்காஹ் திருமண விழாவிலும் கலந்துகொண்டோம்.
இந்த இனிய நிகழ்வுகளில், புதிய இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் புதுமணத் தம்பதியினரையும், காதணி விழாக் கண்ட செல்வங்களையும் நேரில் சந்தித்து நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டோம்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் குரல் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்ற அந்த ஒற்றை வார்த்தைக்கு ஈடு இணை இந்த உலகத்தில் ஏது?
எங்கள் உணர்விலும் உதிரத்திலும் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று, அவருக்கு எமது வீரவணக்கங்கள்.
உங்களின் லட்சியங்களை என்றென்றும் நெஞ்சில் ஏந்தி களத்தில் வெல்வோம்!
#KalaignarForever
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில��� சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுத��கள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
திமுகவின் திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்'.. பாஜகவின் 'ஜெராக்ஸ் காப்பி'யாக தவெக அரசின் முதல் பட்ஜெட்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு இன்று தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட்டே, இது பாஜகவின் நேரடி வாரிசு அரசுதான் என்பதைத் தெள்ளத்தெளிவாக நிரூபித்துவிட்டது.
திராவிட மாடல் அரசு கட்டமைத்த அறிவார்ந்த சமூகத்தைச் சிதைக்கும் நோக்கில், மாணவர்களின் கல்வி நிதியில் ஒட்டுமொத்தமாக 2,341 கோடி ரூபாயை ஈவிரக்கமின்றி வெட்டியுள்ளது இந்த கையாலாகாத அரசு.
கடந்த கழக ஆட்சியில் பள்ளிக்கல்விக்கு 46,767 கோடி ரூபாயும், உயர்கல்விக்கு 8,494 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை முறையே 44,523 கோடி ரூபாயாகவும், 8,393 கோடி ரூபாயாகவும் குறைத்து மாணவர் சமுதாயத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளனர்.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தைக் காட்டி ஒன்றிய பாஜக அரசு ஒருபுறம் தமிழ்நாட்டின் கல்வி நிதியை முடக்கி வஞ்சிக்கிறது என்றால், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யும் தவெக அரசோ இப்படி நிதியைப் பறித்து மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறது.
சொந்தமாக ஒரு மக்கள் நலத் திட்டத்தைக் கூட சிந்தித்துச் செயல்படுத்தத் துப்பில்லாத இந���த #SofaModel அரசு, முந்தைய கழக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்குத் தங்கள் கட்சியின் 'ஸ்டிக்கர்' ஒட்டுவதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த���கிறது.
விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தை 'வெற்றி வீடு திட்டம்' என்றும், மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறந்த 'உலகம் உங்கள் கையில்' மடிக்கணினி திட்டத்தை 'வெற்றி மடிக்கணினி திட்டம்' எனவும் பெயர்மாற்றித் தங்களின் சிறிய புத்தியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.
திட்டங்களின் பெயர்களை மாற்றுவதில் காட்டும் இந்த அதீத அக்கறையை, தேர்தல் வாக���குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்த அரசு காட்டவில்லை. பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் என்று தேர்தல் மேடைகளில் முழங்கிய ₹2500 உரிமைத்தொகை குறித்து பட்ஜெட்டில் எந்தவொரு அறிவிப்பும் இல்லை. மீன்பிடித் தடைக்கால உதவித்தொகையையும் தாங்கள் வழங்குவதாகக் கூறியதிலிருந்து குறைத்து வழங்கி மீனவப் பெருங்குடி மக்களையும் ஏமாற்றியுள்ளனர்.
உருப்படியான எந்தவொரு புதிய திட்டமும் இல்லாத நி���ையில், 2026-27 நிதியாண்டில் மட்டும் சுமார் 1.73 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் புதிய கடனை வாங்கப்போவதாக அறிவித்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் பெருஞ்சுமையைச் சும��்தியுள்ளது இந்தத் திறனற்ற அரசு.
திட்டங்களின் பெயர்களை மாற்றுவதிலும், மாநிலத்தைக் கடனாளியாக்குவதிலும், கல்வி நிதியைப் பறிப்பதிலும்தான் இவர்களின் 'வெற்றி' அடங்கியிருக்கிறது.
ஏமாற்று வித்தைகளாலும், மலிவான விளம்பர அரசியலாலும் கட்டமைக்கப்பட்ட இந்த மக்கள் விரோத பட்ஜெட்டை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.
கல்விக்கு வேட்டு.. தவெக ஆட்சியின் முதல் ப���்ஜெட்டே மாபெரும் துரோகம்!
தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் தலையில் பேரிடியை இறக்கியிருக்கிறது முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு. மிகவும் கவலையளிக்கக்கூடிய விஷயமாக, கடந்த நிதியாண்டை விட இந்த ஆண்டு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒட்டுமொத்தமாக 2,341 கோடி ரூபாயை அநியாயமாகக் குறைத்திருக்கிறார்கள்.
முந���தைய திமுக ஆட்சியில் பள்ளிக்கல்விக்கு 46,767 கோடி ரூபாயும், உயர்கல்விக்கு 8,494 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் அதனை முறையே 44,523 கோடி ரூபாயாகவும், 8,393 கோடி ரூபாயாகவும் குறைத்து மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளனர். பி.எம்.ஸ்ரீ திட்டம் உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி ஒன்றிய அரசு ஒருபுறம் பல கோடி ரூபாய் கல்வி நிதியை தமிழ்நாட்டிற்கு ஒதுக்காமல் வஞ்சித்து வரும் நிலையில், மாநில அரசும் இப்படி மாணவர்களின் நிதியில் கைவைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
புதிய திட்டங்களைச் சிந்திக்க வக்கில்லாத இந்த #SofaModel அரசு, முந்தைய திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டுவதில் மட்டுமே குறியாக உள்ளது. எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தை 'வெற்றி வீடு திட்டம்' எனவும், மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறந்த 'உல��ம் உங்கள் கையில்' மடிக்கணினி திட்டத்தை 'வெற்றி மடிக்கணினி திட்டம்' எனவும் பெயர்மாற்றித் தனது வக்கிர புத்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, மீன்பிடித் தடைக்கால உதவித்தொகையிலும் தாங்கள் வழங்கப்போவதாகச் சொன்ன தொகையைக் குறைத்து வழங்கி மீனவப் பெருங்குடி மக்களை ஏமாற்றியுள்ளனர். பெண்களுக்கு மாதம் ₹2500 வழங்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதி குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் பெண்களை ஏமாற்றியுள்ளனர்.
மக்கள் நலனுக்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டமும் இல்லாத நிலையில், 2026-27 நிதியாண்டில் மட்டும் சுமார் 1.73 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் புதிய கடனை வாங்கி ஒட்டுமொத்த தமிழ்நாட்���ு மக்களின் தலையிலும் பெருஞ்சுமையைச் சுமத்தியுள்ளது இந்த கையாலாகாத அரசு. திட்டங்களின் பெயர்களை மாற்றுவதிலும், கடன் வாங்குவதிலும், கல்வி நிதியைப் பறிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தும் பாஜகவின் வாரிசான இந்த தவெக அரசின் முதல் பட்ஜெட், தமிழ்நாட்டிற்கு நேர்ந்த மிகப்பெரிய அவலம்.
எதிர்க்கட்சித் தலைவர் கைதால் தமிழ்நாடு ஸ்தம்பித்தது.
பழிவாங்கும் நடவடிக்கையில் ஈட���படும் #SofaModel அரசுக்கு எதிராக அணிதிரண்ட மக்கள்.
#தொடைநடுங்கி_அரசு
அய்யாவை நான் விஜய் ரசிகர் மன்றத் தலைவர்னு சொன்னப்ப பலரும் என்னிடம் கோவிச்சிக்கிட்டாங்க. அவங்க கிட்ட நான் இப்ப மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான் தவறுதலா சொல்லிட்டேன். அய்யா திரிஷா ரசிகர் மன்றத் தலைவர் போல!!
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் காவிரி உரிமைக்காகவும் விவ��ாயிகளுக்காகவும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் ஊடுருவிய தவெகவினர் சிலர் திட்டமிட்டு அநாகரிகமாக நடந்துகொண்டனர்.
உண்மையை மறைத்து, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தவறாகப் பேசியதாக ஒரு வீடியோவைச் சித்தரித்து பரப்பி, அதையே காரணமாக வைத்து அவர் மீது பொய்வழக்குப் போட்டு கைது செய்திருக்கிறது இந்த கையாலாகாத அரசு.
சட்டமன்றக் கூட்டத்தொடர் வரவிருக்கும் நிலையில், எங்கே நாங்கள் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்துக் கேள்வி கேட்போமோ என்ற பயத்தில்தான் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தை திசைதிருப்ப தவெக அரசு செய்யும் இந்த மலிவான 'Diversion Politics' மக்களிடம் எடுபடாது.
பாஜகவின் அடியொற்றிச் செயல்படும் இந்த அரசின் பொய் வழக்குகளுக்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது.
இந்த அடக்குமுறைகளைச் சட்டத்தின் துணைகொண்டு உறுதியாக எதிர்கொள்வோம்!
காவிரிக்காகக் குரல் கொடுத்தால் கைதா? நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்திருக்கும் தவெக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டு, #SofaModel அரசின் ஏவல்துறையால் கைது செய்யப்பட்டோம்!
தஞ்சை மண்ணில் உழவர்களுக்காகப் பேசிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் பேச்சு மக்கள் மனதில் ஏற்படுத்திய மாபெரும் வரவேற்பைக் கண்டு நடு���்கிப்போய் இருக்கிறது இந்த #SofaModel அரசு.
எந்தவித ஆதாரமும் இன்றி, உயர்நீதிமன்றம் அளித்த அவகாசத்தையும் மீறி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கைது நடவடிக்கை, அவர்களின் பயத்தின் பிம்பமே தவிர வேறில்லை.
சிறைக்கொட்டடிகளையும் ��டக்குமுறைகளையும் கண்டே வளர்ந்த இயக்கம் திமுக! இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.
நீதிமன்றத்தில் சட்டரீதியாக சந்தித்து, இந்த #SofaModel ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிப்போம்.
காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் த.வெ.க அரசைக் கண்டித்து தஞ்சையில் நேற்றுப் போராட்டம் நடைபெற்றது. அதி���் கலந்துகொண்ட மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பேசும்போது காவிரி தண்ணீர் வரவேண்டிய இடத்தில் வரவில்லை என்று தெளிவாக க���றிப்பிடுகிறார். அந்த பேச்சில் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், இந்தப் பேச்சை விஷமத்தனமாக வெட்டி எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக பரப்புகிறது மாஃபியா கும்பல். இந்த விர்ச்சுவல் வெறியர்களோடு சேர்ந்துகொண்டு ஊடகவியலாளர்களும் வன்மத்தை கக்குகின்றனர்.
நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தில் இருக்கிறது த.வெ.க அரசுக்கு. விவசாயிகள் பிரச்சனையை, காவிரி விவகாரத்தை கேள்விகளால் திண��� வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார் உதயநிதி அவர்கள். தி.மு.க-வின் கேள்விகளை எதிர்கொள்ள பயந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது ஒன்றுக்கும் லாயக்கில்லாத த.வெ.க தற்குறி அரசு. எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து பயந்து காவல்துறையை ஏவிவிடும் தொடைநடுங்கிகளே இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு எங்களுக்கு அஞ்சியே நீங்கள் ஆட்சி நடத்தப்போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங��கள். திமுக ஒன்றும், பிரச்சனை என்றதும் தலைதெறிக்க ஓடிய உங்கள் தலைவனைப்போல ஒரு கோழையை தலைவனாக கொண்ட கட்சியில்லை. மிசாவையே எதிர்கொண்டு வந்தவரை தலைவராகக் கொண்டது. இந்த கைது நடவடிக்கைக்கெல்லாம் அஞ்சுபவரில்லை எங்கள் இளந்தலைவர். கைது செய்துபார் விளைவு புரியும்
காவிரி நீரைப்பெற்றுத் தர வக்கில்லை. விவசாயிகள் பிரச்சனையை சரி செய்ய வகையில்லை. மாநில உரிமைகளைப் பறிக்கும் பாஜகவுக்கு எதிராக வாய்திறக்க முதுகெலும்பில்லை, கேள்விகளுக்கு பயந்து கைது செய்ய மட்டும் வீரம் வருகிறதோ?
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் வீரன் சாவதே இல்லை கோழை வாழ்வதே இல்லை
காவல்துறையை ஏவல்துறையாக பயன்ப��ுத்தும் தொடைநடுங்கி சோஃபா மாடல் அரசுக்கு வன்மையான கண்டனங்கள்.