Today I meet our National organising General sec Hon @blsanthosh ji in his chamber in The National BJP office, New Delhi, successful discussion went on useful about my book which I realising soon,
இன்று புதுடில்லியில் 25.9.2026 ,எங்கள் அகில பாரத அமைப்பு பொதுச் செயலாளருடனான சந்திப்பு அவரது அலுவலகத்தில் இனிதே நடைபெற்ற மகிழ்வான தருணம் , அரசியல் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும் , எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாகவும் இருந்தது என் நீண்ட அரசியல் பொதுவாழ்வில் மற்றுமொரு பெருமை , மகிழ்ச்சி
Met Hon’ble Vice-President of India Shri C. P. Radhakrishnan at his residence and discussed Tamil Nadu’s role in building a developed India by 2047.
மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் திரு. @CPR_VP அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு குறித்து கலந்துரையாடினோம். @narendramodi@AmitShah@NainarBJP
Heartiest congratulations to Shri @rammadhav_ Ji on his new organisational responsibility. As BJP National Vice President, his experience and guidance can play an important role in strengthening the party organisation, energising grassroots workers, and preparing the Tamil Nadu unit for the political challenges ahead. Wishing him great success in his responsibilities and continued service to the nation under the leadership of Prime Minister @narendramodi Ji. @AmitShah
மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமாக இருப்போம் என்றார் முதல்வர் @CMOTamilnadu. ஆனால் இன்று அவரது அமைச்சர்கள் மத்திய அரசுக்கு எதிராக தேவையற்ற கருத்துக்களை சொல்வதை பார்க்கும் போது வேறு மாதிரி தோன்றுகிறது. இதே நிலை நீடித்தால் தவெக அரசு ஆட்சியில் தொடர்வது கடினம் தான். @narendramodi@AmitShah@NainarBJP
Guiding Bharath towards a wealthy and prosperous future!" Wishing our visionary leader, Hon'ble Prime Minister Shri @narendramodi Ji, a very Happy Birthday. Committed to the path of progress and a developed India! 🇮🇳🪷
பாரதபிரதமர் நமது தேசதந்தை நரேந்தர மோடி அவர்களின் 76 வது பிறந்தநாள் நாமக்கல் -இராசிபுரத்தில் நகர பாஜக தலைவர் வேல்முருகன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில் நானும் , சேதுராமன், ஆர்டி இளங்கோ , தமிழரசு அண்ணா திமுக நகரசெயலாளர் கோபால் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
PM-KISAN completes 7 years of supporting India’s farmers. 🌾🇮🇳 @narendramodi
Through direct financial assistance, the scheme has strengthened the livelihoods of crores of farming families across the country and continues to contribute towards a stronger agricultural sector and a prosperous India.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டம் 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
நேரடி நிதியுதவியின் மூலம் கோடிக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் இந்தத் திட்டம், வளமான விவசாயம் – வலிமையான இந்தியா என்ற இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்கட்டும்.
தமிழின் பெருமையை போற்றும் வகையில் ரஷ்ய அதிபர் புதின் அவர்களுக்கு நவீன பாரதத்தின் சிற்பி பிரதமர் @narendramodi அவர்கள் ரஷ்ய மொழியில் திருக்குறளை வழங்கியுள்ளார் என்பதை பார்க்க மனது மகிழ்வுற்றது. வாழ்க தமிழ், வளர்க பாரதம்.
It was heartening to see Prime Minister Modi, the architect of modern Bharat, honour the greatness of Tamil by presenting Russian President Putin with a Russian-language edition of the Thirukkural. Long live Tamil! May Bharat prosper!
இந்திய விடுதலைப் போராட்டத்தின் தீப்பொறியாகவும், தமிழின் பெருமையாகவும் விளங்கிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு நாளில் பணிவான அஞ்சலி. 🇮🇳
தேசப்பற்று, துணிவு, சமத்துவம், பெண்முன்னேற்றம் மற்றும் சுயமரியாதையை தனது எழுத்துகளால் விதைத்த பாரதியாரின் சிந்தனைகள் என்றும் நம்மை வழிநடத்தட்டும்.
ரஷ்ய அதிபர் திரு. புதின் அவர்களுக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியைப் பரிசளித்த பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு நன்றி!
திருவள்ளுவரின் அளப்பரிய ஞானம் தேச எல்லைகளையும் மொழிகளையும் கடந்து ஒளிர்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் நமது பிரதமர்!
நவம்பர் மாதம் 28ஆம் தேதி அகவை 100 யி்ல் அடிஎடுத்து வைக்கும் பத்மஶ்ரீ டாக்டர் H V ஹண்டே அவர்களை அவரது மருத்துவமனையில் சந்தித்து, நான் விரைவில் வெளியிட இருக்கும் என் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதவேண்டுமென புத்தகத்தின் நகலை அவரிடம் வழங்கியபோது அதை அவர் புரட்டியபோது மறைந்த என் தந்தையின் கரங்களில் தவழும் பக்கங்களாக இருப்பதாக நான் உணர்ந்தேன், படித்து முடித்து ஒரு வாரகாலத்தில் எழுதி அனுப்புகிறேன் என்று அவர் கூறியபோது என் கண்கள் பனித்தன, 100 வயதிலும் 50 ஆண்டுகளுக்கு முன் நான் கண்ட அதே ஆசானாக பாசத்தையும் பரிவையும் அவர் சந்திப்பில் நான் கண்டேன் மகிழ்வான பெருமை தந்த சந்திப்பு வாழ்க !
பாரதபிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட இராசிபுரம் நகர நிர்வாகிகள் நகர பாஜக தலைவர் வேல்முருகன் ஏற்பாட்டில் எனது இல்லத்தில் நடைபெற்று விழாபொறுப்பாளர்களாக 27 வார்டுகளுக்கும் நியமித்து விழாவை சிறப்பாக நடத்துவது என முடிவெடுத்தோம் , மகழ்ச்சி
சேலம் மாநகர் மாவட்ட பாஜக மாவட்டதுணைத்தலைவர், திரு மாதவ் கண்ணன் அவர்கள் தனது 51 வது பிறந்தநாளை முன்னிட்டு இராசிபுரம் எனது இல்லத்தில் வாழ்த்துபெற்ற மகிழ்வான தருணம் , பல்லாண்டு எல்லாசெல்வங்களையும் பெற்று பெருமையுடன் வாழ்ந்து நமது பேரியக்கத்தற்கு பெருமை சேர்க்க வாழ்த்தினேன் ,வாழ்க!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, வளம் பெருகட்டும். தர்மத்தின் பாதையில் நம்மை வழிநடத்தும் அவரது போதனைகள் என்றும் நமக்கு ஒளிவிளக்காக இருக்கட்டும். அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
நம் சங்க குடும்பத்தைச்சார்ந்த சேலம் தொழிலதிபர் திரு நாரயணவிஸ்வபிரசாத் - திருமதி கனக பிரபா பிரசாத் தம்பதியின் தவப்புதல்வன் செல்வன் விஸ்வஜித் தின் முதலாம் ஆண்டு பிறந்தநாளன்று சேலம் மாவட்ட துணைதலைவர் தொழிலதிபர் மாதவ்கண்ணனுடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி , வாழ்த்தியதில்பெருமை ,வாழ்க!
சேலம் & திருச்செங்கோடு தொழில் அதிபரும் சேலம் மாவட்ட பாரதியஜனதா கட்சி பொதுச்செயலாளருமான என் நன்பர் திரு இராஜேந்தரன் - திருமதி சித்திரா ஆகியோரின் புதல்வர் மணமகன் நிஷாந்த் - மணமகள் அனுபரியா ஆகியோரின் திருமணவரவேற்பில் என் மனைவி சரஸ்வதியுடன் கலந்து கொண்டு வாழ்த்திய மகிழ்வான தருணம் ,
மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் சீரிய தலைமையில், நமது நாட்டின் உள்கட்டமைப்புத் துறை புதிய உச்சத்தை நோக்கி வீறுநடை போடுகிறது.
மத்திய அரசின் சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 9 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி 5.4% அபரிமிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சிமெண்ட், மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் இந்த வலுவான முன்னேற்றம், வளமான இந்தியாவின் அஸ்திவாரத்தை மேலும் பலப்படுத்துகிறது.
தேசம் காப்போம்!
தமிழகம் வெல்வோம்!
@AmitShah@byadavbjp@NainarBJP@BJP4TamilNadu
தமிழகம் மற்றும் ஆந்திராவை இணைக்கும் கும்மிடிப்பூண்டி – கூடூர் இடையேயான 90 கி.மீ புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ₹2,229 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
தமிழ்நாடு–ஆந்திரா இடையேயான ரயில் இணைப்பு இத்திட்டத்தின் மூலம் மேலும் வலுப்பெறும். பயண நேரம் குறையவும், ரயில் சேவை திறன் அதிகரிக்கவும், முக்கியத் துறைமுகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு எளிதான இணைப்பு கிடைக்கவும் இத்திட்டம் உதவும்.
@AmitShah@NainarBJP@byadavbjp@BJP4TamilNadu