M-Kavach 2: உங்கள் மொபைலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்!
M-Kavach 2 செயலி மூலம் மொபைலின் பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கலாம். சந்தேகத்திற்குரிய அல்லது தீங்கிழைக்கும் ஆப்ஸைக் கண்டறியலாம். Hidden/Sideloaded Apps மற்றும் Hardware ஆகியவற்றையும் ஸ்கேன் செய்யலாம். மேலும், ஆப்ஸின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது, WhatsApp/SMS மூலம் வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை URL Scanner மூலம் சரிபார்ப்பது மற்றும் ஆன்லைன் மோசடிகளை புகார் செய்யும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.
M-Kavach 2: Keep Your Mobile Safe and Secure!
The M-Kavach 2 app allows users to check their mobile security settings and detect suspicious or malicious apps. It can also scan for Hidden/Sideloaded Apps and Hardware. Additionally, users can verify the authenticity of apps, check suspicious links received via WhatsApp/SMS using the URL Scanner, and report online fraud through the available reporting feature.
#MKavach2 #MobileSecurity #CyberSecurity #StaySafeOnline #TNpolice #Tamilnadupolice
ஒரு உறவுமுறை ஆலோசகராக நான் உங்களுக்கு கொடுக்கும், உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் சிறந்த விஷயங்கள்:
1. எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வீட்டை விட்டு வெளியேறி, 45 நிமிடங்களாவது வெளியுலகில் செலவழியுங்கள்.
2. வீட்டு வாடகை செலுத்தும் நாளிலேயே உங்கள் சேமிப்புக்கான தொகையையும் ஒதுக்கிவிடுங்கள்.
3. கோபத்தில் ஒரு செய்தியை எழுதினால், அதை உடனடியாக அனுப்பாமல் இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள். மறுநாள் காலையில், பெரும்பாலும் நீங்கள் வேறு விதமான செய்தியையே அனுப்புவீர்கள்.
4. மற்றவர்களுக்காகச் சமைக்கக்கூடிய ஒரு உணவைத் தயாரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவருக்கு உணவளிப்பது அவர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கான மிக எளிய வழியாகும்.
5. உங்கள் நடப்புக் கணக்கில் (current account) ஒரு மாத வீட்டு வாடகைக்கு இணையான தொகையை எப்போதும் வைத்திருங்கள்; அதை உங்கள் குறைந்தபட்ச இருப்பாகக் கருதுங்கள். இந்த இருப்பு, கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படும்போது அது 'ஓவர் டிராஃப்ட்' (overdraft) கட்டணமாக மாறுவதைத் தடுக்கிறது.
6. மிகவும் எளிமையானது என்று உங்களுக்குத் தோன்றும் கேள்வியைக் கூட கேளுங்கள். அந்த அறையில் அக்கேள்வியைக் கேட்க விரும்பும் பலரும் இருக்கவே செய்வார்கள்.
7. நீங்கள் நேசிக்கும் மனிதர்களை மதிப்பிடுவதை (rating) நிறுத்துங்கள். இந்த விளையாட்டில் யாரும் வெற்றி பெற்றதில்லை.
8. ஒருபோதும் 72 மாத கால கார் கடனைப் பெறாதீர்கள். மாதத் தவணை குறைவாகத் தெரிந்தாலும், கார் பழையதாகிவிட்ட பிறகும் நீங்கள் அதற்கான பணத்தைச் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.
9. வீட்டில் பழுதாகி இருக்கும் அந்தச் சிறிய பொருளை இந்த வாரமே சரிசெய்யுங்கள். அதைப் பழுதான நிலையிலேயே வைத்துக்கொண்டு நீண்ட காலம் வாழ்ந்தால், பழுதான பொருளுடன் வாழ்வது இயல்பானது என்று நீங்கள் நம்பத் தொடங்கிவிடுவீர்கள்.
10. புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதில் நீங்கள் எப்படித் தெரிகிறீர்கள் என்பது பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.
11. கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது, எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் சரி, குறைந்தபட்சத் தொகையை விடக் கூடுதலாகச் செலுத்துங்கள். குறைந்தபட்சத் தவணை முறைகள் உங்களை வட்டி கட்டிக்கொண்டே இருக்க வைப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை; கடனிலிருந்து விடுவிப்பதற்காக அல்ல.
12. சில சமயங்களில் கோபத்துடனேயே தூங்கச் செல்லுங்கள். சில சண்டைகளின் உண்மையான அர்த்தம் ஒரு இரவுத் தூக்கத்திற்குப் பிறகே தெரியவரும்.
13. ஓய்வை ஒரு வேலையாகவோ அல்லது சம்பாதிக்க வேண்டிய ஒன்றாகவோ மாற்றாதீர்கள். உங்கள் வேலைப் பட்டியலை முடிக்காமலேயே அமர்ந்திருப்பதற்கான உரிமை உங்களுக்கு உண்டு.
14. இன்று, எந்தவிதமான கூடுதல் ஆய்வும் செய்யாமலேயே ஏதேனும் ஒரு சந்தாவை (subscription) ரத்து செய்யுங்கள். அதைப் பயன்படுத்தியது உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், அதுவே போதுமான காரணமாகும்.
15. அன்புடன் உண்மையைச் சொல்லும் நண்பரை எப்போதும் உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடன் எப்போதும் உடன்படுபவர்களை விட இவர்கள் மிகவும் அரிதானவர்கள்.
16. இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதற்கு எந்தச் செலவும் இல்லை;
17. ஏதேனும் ஒரு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உங்கள் கட்டணத்தில் தள்ளுபடி கோருங்கள். தொலைபேசியில் செலவிடும் அந்தப் பத்து நிமிடங்கள், பல ஆண்டுகளாக நீங்கள் மாதந்தோறும் செலுத்திவரும் ஒரு செலவைக் குறைக்க உதவக்கூடும்.
18. ஒருவருக்கு நன்றி கூறும்போது, அவர்களின் பெயரைக் குறிப்பிடுங்கள். இது ஒரு சாதாரணமான நாகரிகமான செயலை, மனதிலிருந்து வெளிப்படும் உண்மையான உணர்வாக மாற்றுகிறது.
19. முன்பு உங்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய விஷயங்களின் பட்டியலை வைத்துக்கொள்ளுங்கள். அவற்றில் எதுவுமே உண்மையில் நடக்கவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
இவற்றில் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்க்கும்போது, எதுவும் அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றாது. ஆனாலும், மற்றவர்களின் வாழ்க்கை மேலும் சிக்கலாகிக்கொண்டிருந்த நிலையில், சிலருடைய வாழ்க்கை மட்டும் அமைதியாக இருந்ததற்குக் காரணமாக இவையே இருந்திருக்கலாம்.
For & Against
இந்த போட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
நமக்கு ஒரு டாபிக் கொடுத்திருவாங்க. அதை ஆதரிச்சு பாசிட்டிவா 5 நிமிஷம் பேசணும். எதிர்த்து நெகட்டிவா 5 நிமிஷம் பேசணும்.
எதை எடுத்தாலும் அதில், பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே இருக்கும் ஆனா நாம பொதுவாகவே ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் தான் விடாம பிடிச்சுட்டு நிற்போம்.
இந்த விளையாட்ட தினசரி நடக்குற ஒவ்வொரு விஷயங்களிலும் ட்ரை பண்ணி பார்த்தால், இன்னோரு Perspective ல யோசிக்க தோணும்.
சில சமயங்களில் எதிர் தரப்பு சொல்றதும்/ மாற்றுக்கருத்தும் சரின்னு தோணும்.
அறிஞர் அண்ணா "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு"ன்னு சொன்ன மாதிரி, அடுத்தவங்க சொல்ற கருத்திலும் ஒரு நியாயம் இருக்கலாம். அதை நாம புரிஞ்சிக்கணும்னா இந்த விளையாட்ட அடிக்கடி விளையாடணும்.
ட்ரை பண்ணி பாருங்க.😊👍
Proud to be part of a legacy that turns 30 today. 🎉
Watching Tanishq grow from 1996 to 2026 — from a single showroom to a name that millions of families trust for their most precious moments.
Let's celebrate today!
புதிய Top up மருத்துவ காப்பீடு Tata AIG Medicare Reserve பற்றிய முழு விவரம்.
பாலிசி எடுக்க வயது:
பெரியவர்கள் 18-55
Floater பாலிசியில் குழந்தைகள் 0-25
காப்பீடு தொகை:
5 லட்சம் முதல் 5 கோடி
கழிவு (Deductible)3 லட்சம் முதல் 50 லட்சம் வரை
அடிப்படை கவர் (inbuilt Cover )
அறை வாடகை வரம்பு
Room Single ac room
Rider மூலம் any room வசதி
மருத்துவமனைக்கு முந்தைய செலவுகள் (Pre-Hospitalization): 90 நாட்களுக்கு, மற்றும்
மருத்துவமனைக்குப் பிந்தைய செலவுகள் (Post-Hospitalization): 90 நாட்களுக்கு கவர் உள்ளது
பகல் நேர சிகிச்சை முறைகள் (Day Care Procedures): அனைத்து பகல் நேர சிகிச்சைகளும் காப்பீட்டுத் தொகை வரை கவர்
உறுப்பு தானம் செய்வோர் செலவுகள் (Organ Donor Expenses): காப்பீட்டுத் தொகை வரை கவரேஜ் உண்டு.
வீட்டிலேயே சிகிச்சை (Domiciliary Treatment): காப்பீட்டுத் தொகை வரை கவரேஜ் உண்டு.
ஆயுஷ் சிகிச்சை (AYUSH treatment): சித்த மருத்துவ முறைகளுக்கான (AYUSH) செலவுகள் காப்பீட்டுத் தொகை வரை கவர்
ஆம்புலன்ஸ் கவர் (Ambulance Cover): காப்பீட்டுத் தொகை வரை கவர்
Modern treatment: காப்பீடு தொகை வரை கவர்
Pocket Protect : 7 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்கினால் 10000 கிளைம் செய்யலாம்.
அதிகபட்சம் ஆண்டுக்கு 5 முறை இந்த வசதி.
Waiver of Aggregate Deductible: பாலிசி எடுத்து 5 ஆண்டுகள் கழித்து எப்போது வேண்டுமானாலும் கழுவு இல்லாத நார்மல் பாலிசியா மாற்றும் வசதி.
Restore benefit 100% நார்மல் பாலிசியா மாற்றிய பிறகு கிடைக்கும்
போனஸ்:50-100% நார்மல் பாலிசியா மாற்றிய பிறகு கிடைக்கும்
விருப்பக் கவர் மற்றும் ரைடர்கள் (Optional Covers and Riders)
Consumables Benefit மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கையுறைகள், மாஸ்க் கிருமி நாசினி கவர்
TransiCare Wallet :
வேலை இலக்கும் போது 90 நாட்கள் வரை 3 லட்சம் வரை கழிவு இல்லாமல் கிளைம் செய்யும் வசதி ( அலுவலக மருத்துவ காப்பீடு வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் இந்த வசதி)
Inbound Emergency Hospitalization:
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வரும் நிலை விபத்து மூலம் கிளைம் செய்யும் போது எந்த வித கழிவும் இல்லாமல் கிளைம் செய்யும் வசதி
காத்திருப்பு காலம்
பொதுவாக 30 நாள்
குறிப்பிட்ட அறுவை சிகிச்சை 3 வருடம்
முன்பே இருக்கும் நோய்கள் 3 வருடம்
35 வயது வரை உள்ள 2 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள் பிரிமியம் consumables rider உடன்
( Rest of India zone)
25 லட்சம் காப்பீடு 5 லட்சம் கழிவு பிரிமியம் ரூபாய் 6593
(Zone மாற்றி சிகிச்சை பெற்றால் co pay 10% உண்டு எனவே பாலிசி எடுக்கும் போது சரியான zone தேர்வு செய்வது நல்லது)
இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் தயவு செய்து RT செய்யவும் மற்றவர்களுக்கு இந்த தகவல் சென்று சேர
தற்போது உள்ள மருத்துவ செலவை பார்க்கும் போது எடுக்க வேண்டிய சிறந்த பாலிசி 6
உதாரணம்.
ManipalCigna Sarvah Uttam
* குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை: 4 நபர்
* காப்பீடு செய்பவர்கள் வயது: 35 வயது, 32 வயது, 10 வயது மற்றும் 12 வயது, இருப்பிடம் சென்னை
* காப்பீட்டுத் தொகை: 1 கோடி
பிரீமியம் (Premium) விவரங்கள்
(1 கோடி காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியம் விவரம்):
* 1 வருடம்: ₹ 36,826
* 2 வருடங்கள்: ₹ 68,042
* 3 வருடங்கள்: ₹ 99,174
காப்பீட்டுப் பலன்கள்
* உள்நோயாளி சிகிச்சை: காப்பீட்டுத் தொகை வரை முழுமையாக கவர் பெறலாம்.
* அறை வாடகை: single ac room /எந்த அறையும் (any room Room) வசதி
* சில மணி நேர சிகிச்சைகள் ( day care): காப்பீட்டுத் தொகை வரை கவர்
* நவீன சிகிச்சைகள் மற்றும் ஆயுஷ் (AYUSH): காப்பீட்டுத் தொகை வரை கவர்
* மருத்துவமனைக்கு முன் மற்றும் பின் செலவுகள்: 60 நாட்கள் வரை சிகிச்சைக்கும் முன், 180 நாட்கள் வரை சிகிச்சைக்கு பின் ஆகும் செலவுகள் கவர்.
* ஆம்புலன்ஸ்: சாலை ஆம்புலன்ஸ் காப்பீட்டுத் தொகை வரை செலவு ஏற்கப்படும். ஆகாய ஆம்புலன்ஸ் காப்பீடு தொகை வரை கவர்.
*உடல் உறுப்பு தானம் (Organ donor ) காப்பீடு தொகை வரை கவர் மேலும் அதிக பட்சம் இரண்டு லட்சம் வரை மருத்துவமனையில் சேர்வதற்கு முன் அல்லது மருத்துவனையில் இருந்து வந்த பின் கிளைம் செய்யும் வசதி
*போனஸ் : Gullak ரைடர் தேர்வு செய்தால் கிளைம் செய்தால் கூட ஆண்டுக்கு 120 % அதிக பட்சம் 1500%
*Restore:
ரைடர் மூலம் அளவில்லா restore உள்ளது.
Surplus rider மூலம் கூடுதல் காப்பீடு வசதி
உதாரணமாக 10 லட்சம் காப்பீடு எடுத்தால் 20 லட்சம் கவர் பெறலாம்
காத்திருப்பு காலம் (Waiting Period)
* முன்பே உள்ள நோய்கள் (PED): 3 ஆண்டுகள் காத்திருப்பு காலம். ரைடர் மூலம் ஆஸ்துமா , இரத்த அழுத்தம்,சுகர் ,கொலஸ்டிரால் வியாதிகளுக்கு பாலிசி எடுத்த 31 நாளில் கவர் பெறும் வசதி
* குறிப்பிட்ட நோய்கள் (Specific Disease): 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம்.
* ஆரம்ப காத்திருப்பு காலம்: 30 நாட்கள்.
கூடுதல் சிறப்பம்சங்கள்
* ரைடர் மூலம் காப்பீடு கோரும்போது நுகர்பொருட்கள் ( non payable items) செலவும் ஏற்கப்படும்.
Anand ரைடர் மூலம் புற்றுநோய், இதய நோய், பக்க வாதம் ( stroke), முக்கிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ( major organ transplant) செய்யும் போது அளவில்லா கவர்
Rider மூலம் மகப்பேறு சிகிச்சைக்கு காப்பீடு தொகை பொறுத்து அதிகபட்சம் 5 லட்சம் வரை கவர் பெறலாம்.
#healthinsurance #claim #insurance
#InsuranceAgent #kapeetuthalam #ManipalCigna #SarvahUttam #hospital #claim
நிறைய பேருக்கு தனித்தனியா DM ல் பகிர முடியவில்லை. நீங்களே கீழ்க்கண்ட எண்ணில் தொடர்புகொண்டு, வாங்கிக் கொள்ளலாம்.
Laptop contact details
9087016664
Refer my name while talking to them.
வாழ்க்கையில் எப்போது என்ன செலவு வரும் என்று யாருக்கும் தெரியாது. மருத்துவம், வீட்டுப் பழுது, வண்டி ரிப்பேர், திடீர் குடும்பச் செலவுகள் — பல விஷயங்கள் சாதாரண இன்சூரன்ஸால் கூட கவர் ஆகாது. அதனால் எமர்ஜென்சி பண்டு மற்றும் ரிசர்வ் பண்டு இரண்டும் இப்போது குடும்பங்களுக்கு மிகவும் அவசியமாகி வருகிறது.
Emergency Fund என்பது உடனடியாக பயன்படுத்த வேண்டிய திடீர் நெருக்கடி செலவுகளுக்கான பாதுகாப்பு. இது மாத வருமானத்தின் 3–6 மாதச் செலவுக்கு சமமாக வைத்திருக்க வேண்டும். இது மிக லிக்விட் ஆக (அதாவது உடனே எடுக்கக்கூடிய) இருக்க வேண்டியது முக்கியம். அதனால் Savings account அல்லது Liquid mutual fund போன்ற இடங்கள் சிறந்தவை.
ஆனால் Reserve Fund என்பது பெரிய, திடீரென வரும் uninsured செலவுகளுக்காக — பல் மாற்று, பெரிய வீட்டு பழுது, வண்டி எஞ்சின் வேலை, செல்லப்பிராணி சிகிச்சை போன்ற நீண்டகால, பெரும் தொகை செலவுகளுக்காக வைத்திருக்கும் தனி பண்ட். இது emergency fund மாதிரி உடனே எடுக்க வேண்டியதல்ல. Medium அல்லது long-term investments-ல் இருக்கலாம்.
எங்கு வைத்து சேமிப்பது?
🔹 Emergency Fund: Savings A/c, Liquid Mutual Fund, Short-term FD — உடனே எடுக்க இயலும் இடங்கள்.
🔹 Reserve Fund: Arbitrage MF, Ultra-short-term MF, Short-term debt funds, அல்லது equity MF-களில் ஒரு சிறிய பங்கு — பெரிய செலவுகளை 1–5 ஆண்டுகளில் நிறைவேற்ற உதவும் வகையில்.
முக்கிய வித்தியாசம்:
Emergency fund = உடனடி நெருக்கடிக்கான பாதுகாப்பு.
Reserve fund = பெரிய, திட்டமிடாமல் வரும் uninsured செலவுகளை சமாளிக்கும் குஷன்.
இரண்டும் இருந்தால் வேண்டாத கடன் எடுக்காமல் குடும்ப நிதியை பாதுகாக்க முடியும். Small SIP-ஆகவேனும் இந்த இரண்டு பண்ட்களையும் இன்றே கட்டிப் போட தொடங்குங்கள்.
இந்த amount தனியாக இல்லை என்றால் stocks & mutual funds விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.