தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர்
மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ அறிக்கை
கழகத் தலைவரின் சார்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணைக்கு வந்தன. இன்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஒரு ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பு குறித்த பல விமர்சனங்களை இணைய தளத்தில் பார்த்தேன். அதற்கான விளக்கமே இந்த அறிக்கை.
இந்த இரண்டு வழக்குகளுமே, கழக சட்டத்துறையின் சார்பில் தலைவரிடம் இதற்கான சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லி, நீதி மன்றம் என்ன தீர்ப்பு தந்தாலும், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்கு பதிவு இயந்திரங்களின் உள்ள குறைப்பாட்டை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்லவும், முறையாக பதிவு செய்யவும் இந்த முன்னெடுப்பை செய்யாமல் விடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் , தலைவர் தந்த ஒப்புதலால் தாக்கல் செய்யப்பட்டவை.
WP 34884/2026- தேர்தல் ஆணையத்தின் EVM-களை சரி பார்ப்பதற்க்கான வழிகாட்டு நடைமுறை - SOP உச்ச நீதிமன்ற உத்திரவிற்க்கு எதிரானதாக உள்ளதால் அதனை நீக்கறவு செய்ய வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்டது. அது தனி நபருக்கான மனு அல்ல. இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடிய வழக்கு. 2024 வழிகாட்டு நடைமுறை - SOP யை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.ஆனால் 2025 வழிகாட்டு நடைமுறை - SOP வந்து விட்டதால் அதனை எதிர்த்து மனு செய்யும் உரிமையுடன் அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது.
2024 ல் உச்ச நீதி மன்றம் EVM கருவிகளில் சந்தேகம் இருந்தால் 2 ஆம் அல்லது 3 ஆம் இடம் பெறும் வேட்பாளர்கள் 5% கருவிகளை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி EVM கருவிகளின் BURNT MEMORY ஐ சரி பார்க்கலாம் என உத்திரவிட்டது.
திராவிட முன்னேற்ற கழக சட்ட துறையின் சார்பில் நான் கழகத்தலைவரிடம் இந்த நிலையை சொல்லி, கொளத்தூர் தொகுதியில் EVM களை சரி பார்க்க வேண்டும் என வலியுறுத்தினேன். தலைவரும் ஒப்புதல் தந்தார்.
29.07.2026-லிருந்து 05.08.2026 வரை Checking and Verification நடைபெற்றது. 14 தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகளில் சோதனையில் 5 கருவிகள் செயல்படவில்லை அல்லது தலைவரின் பெயர் இருந்த வாக்கு செலுத்தும் கருவி(Ballot Unit)-ஐ வாக்கு பதிவு இயந்திரத்தால் (Control Unit) அடையாளம் காண இயலவில்லை. ஒரு வாக்கு இயந்திரத்தில் பாதுகாப்பு சீல்கள் புதியவையாக , நிரப்பபடாமல் இருந்தது.
தேர்தல் ஆணையம் இந்த பழுதுகளை குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி விளக்கங்களை தரவில்லை.
1. 1951 மக்கள் பிரதிநிதி சட்டத்தின் படி தேர்தல் முடிவுகளுக்கு பின் 45 நாட்களில் தேர்தல் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
2. அதுவும் பிரிவு 100ல் கூறப்பட்டுள்ள காரணங்களுக்கு மட்டுமே தேர்தல் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
3. யூகங்களின் அடிப்படையில் தேர்தல் மனுவை தாக்கல் செய்ய முடியாது.
4. வாக்கு இயந்திரங்களை ஏறக்குறைய 3 மாதங்களுக்கு பிறகே சரிபார்க்க ,தேர்தல் ஆணையம் , உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்து போகச்செய்யும் வகையில் நடத்தியது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து உயர் நீதி மன்றத்தில் முறையிட வேண்டும் என கழக சட்டத்துறை, தலைவரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டது. தலைவர் அவர்கள் முதலில் வேண்டாமென்று நினைத்தார். பின் இது குறித்து விளக்கங்களை கேட்டறிந்து ஒப்புதல் தந்தார்.
கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்கு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் மற்றும் VVPAT ல் உள்ள வாக்கு சீட்டுகளை சரி பார்க்க வேண்டும். இதனின் முடிவு அனைவருக்கும் தெரிந்ததே.வாக்கு இயந்திரங்களினால் மட்டுமே கொளத்தூரின் தேர்தல் முடிவு மாறியது.
Article 329(b)ன் படி தேர்தல் வழக்கின் மூலமாக மட்டுமே தேர்தலை செல்லாது என்றும் வேறொரு வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும், ஏன் EVM இயந்திரங்களை அறிமுகப்படுத்தியபோதும் இது போன்ற நிகழ்வுகளை சட்டமியற்றுபவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
2024 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே வாக்கு பதிவு இயந்திரங்களை சரிபார்க்க உரிமை தரப்பட்டது. வாக்கு பதிவு இயந்திரங்கள் முறையாக இல்லையென்றால் என்னவாகும் என்பதற்கு நீதிமன்றங்களே தீர்ப்பளிக்க வேண்டும்.எனவே ஏற்கனவே நடந்த பரிசோதனையில் 30% சதவிகித இயந்திரங்கள் பழுதானவை என்றால் அனைத்து இயந்திரங்களையும் சோதித்தால் கழக தலைவர் அவர்களே வெற்றி பெறுவார் என்பதில் அய்யமில்லை. சட்டத்தில் இடமில்லை என்கிறது தேர்தல் ஆணையம், இதற்க்கான சட்டம் உருவாக்கப்படவில்லை அதனை ஆய்ந்து, நீதியை வழங்கிடத்தான் நீதிமன்றம் என்கிறோம் நாம்.
தமது தீர்ப்பில் உயர் நீதி மன்றம் இறுதியாக “ஏற்புடைமை (Maintanability) குறித்த மேற்கண்ட முடிவைக் கருதி, சரிபார்ப்பு நடைமுறைக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் தகுதி குறித்தோ, 05.08.2026 தேதியிட்ட எதிர்க்கப்பட்ட உத்தரவின் சரியான தன்மை குறித்தோ ஆராய வேண்டிய அவசியம் இல்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது; எனவே அது குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. விதி 49-T மீறப்பட்டதாகக் கூறப்படுவது, VVPAT கருவிகளின் செயலிழப்பு, மற்றும் வாக்குச்சாவடி எண்.208-இல் வாக்குப் பதிவு அலகு கண்டறியப்படாதது ஆகியவை உள்ளிட்ட, தகுதி சார்ந்த அனைத்து வாதங்களும், தேவைப்பட்டால் உரிய மன்றத்தின் முன் எடுத்துரைக்கப்படுவதற்காக அனுமதி தரப்படுகிறது. அதன்படி, ரிட் மனு ஏற்புடையதன்று எனத் தள்ளுபடி செய்யப்படுகிறது; சட்டப்படி தனக்குக் கிடைக்கக்கூடிய தீர்வை நாடுவதற்கு மனுதாரருக்கு உரிமை வழங்கப்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளது.
நீதிக் கட்சி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை உயர் நீதி மன்றமும் உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொள்ளவில்லை. தொடர் சட்டப்போரட்டமும் , போரட்டங்களுமே , இட ஒதுக்கீட்டை , அரசியல் அமைப்பு திருத்தமாக கொண்டு வந்தன. வாக்கு பதிவு இயந்திரங்களும் அப்படித்தான், நீதிமன்றம், இது எங்கள் எல்லைக்கு உட்பட்டதில்லை என்று சொன்னாலும்கூட வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், தேர்தல் முடிவுக்குப்பின் அதனை சோதனை செய்யும் நடைமுறை, அந்த சோதனையில் இயந்திரங்கள் தவறாக இருந்தால் அதற்க்கான தீர்வு ஆகியவற்றிக்கான விடை கிடைக்க வேண்டும்.
இந்தியாவில் இது போன்ற நிலை ஏற்பட்டதும், வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் இதுவே முதல் முறை. சட்டமும், நீதியும் நல்ல விடையினைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
ஆங்கில கருத்தொன்றுதான் நினைவுக்கு வருகிறது.
“I MAY BE WRONG, BUT I AM CLEAR”
கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் , வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே என்பதே , அந்த தெளிவு.
தலைவரின் பேரன் இன்பநிதிக்கான விளையாட்டு மேம்பாடு தொடர்பான படிப்பிற்கான பட்டமளிப்பு விழா..!
எங்கள் தலைவரின் இறுகப்பிடித்திருக்கும் காட்சிப்படம்..!
உள்ளம் பட்டமென
உயரப்பறக்கும் என்பது உறுதி..!
மகிழ்ந்திருங்கள்
எங்கள் உணர்வானவரே...!
நான் முதல்வன் திட்டத்தில் "முதல்வன்" நீக்கம்
மகளிர் விடியல் பயணத்திட்டத்தில்
"விடியல்" நீக்கம்.
விஜிண்ணாவோட அகராதியில் விடியல்,முதல்வன் என்பதற்கான அர்த்தம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று தான் அர்த்தம்...!
நீ கைய வச்சி சூரியன பொத்துனா...
எல்லாம் இருட்டிடும்....!!!!
கடல் நீர் உப்பாக இருக்கும்..!
சுத்திகரிக்கப்பட்ட நீரோடு
கொஞ்சம் கரிக்கும் உப்பையும் சேர்த்து குடித்து
இந்த ஆய்வினை செய்தால்
எங்கே அப்பாவ காணோம்னு எகத்தாள விக் செய்தவர்க்கு
ஆய்வின் முடிவில்
இது அப்பாவின் மகத்தான திட்டம் எனப்புரியும்...!
அதிமுகவின் விஜயபாஸ்கர்கள்
த வெ கவில் சேர்ப்பு.
மக்கள் பணத்தை
தொட மாட்டேன்
தொட விட மாட்டேன்
தொட்டவர்களையும் விட மாட்டேன்- விஜய் அங்கிள்
இப்ப இந்த 'தொட' (touch) க்கு
எந்த தூய சக்தியாவது விளக்கம் சொல்லுங்க தெரிஞ்சிப்போம்...!
யார் தோற்றது!
திருவெறும்பூரின் மக்களா!அல்லது
"மக்கள் போற்றும் மகேஸரா"
யார் தோற்றது!
.........................................
ஓ மனிதாத்மக்களே!
யார் தோற்றது!
இந்த மண்ணில்
யார் தோற்றது!
மனிதம் தோற்றது!
மகத்துவம் தோற்றது!
புனிதம் தோற்றது!
புத்தாக்க மிக்க செயல்கள் தோற்றது!
இந்த திருவெறும்பூர் மண்ணிலே! பத்தாண்டு காலம் நமக்காக பாடுபட்ட!
ஓர் வீரமிக்க இளைஞன்!
விவேகமுள்ள இளைஞன்!
தன்னலமற்ற இளைஞன்!
தனித்துவமிக்க இளைஞன்!
தனிமனித ஒழுக்கத்தில் தன்னிகரற்ற இளைஞன்!
இவர் போல் யாரென்று!
பார்போற்றும் இளைஞன்!
தன் சொல்லால்!
தன் செயலால்!
தன் சிந்தையில் உதித்த சமூக நீதி சித்தாந்தத்தால்
தன் உயிராய் கருதும்
தி.மு.க.இயக்கத்தின் கொள்கையின்பால்
தான் ஏற்றுக்கொண்ட தலைவர்களாகிய
தந்தை பெரியார்!
பேரறிஞர் அண்ணா!
முத்தமிழறிஞர் கலைஞர்!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
ஆகியோரின்
நெறிபிறழா அடிச்சுவடாய்!
ஒவ்வொரு
அடி அடியாய்!
படி படியாய்!
பார்த்து பார்த்து!
ஒட்டுமொத்த திருவெறும்பூர் மக்களையும்
தன் குடும்பமாய் ஏற்று!
அதற்காக அனுதினமாய்
ஊன் கருதாமல்!
உடல் கருதாமல்!உழைத்து! உழைத்து!
தேய்ந்து அயர்ந்து போகாமல் உழைத்த ஓர் உத்தமனை!
நாம் இழந்தோமே!
எனதருமை திருவெறும்பூர் மக்களே!
இழப்பு நமக்கல்லவா!
ஏன் சிந்திக்க மறந்தீர்கள்!
ஏன் சிறப்பானவரை மறந்தீர்கள்!
ஏன் செய்நன்றி
மறந்தீர்கள்!
இழப்பு நமக்கல்லவா!
மாநிலத்தின் துணையோடும்!
மானுடம் போற்றும்
நெஞ்சுரத்தோடும்!
மத்திய சர்க்காரையே எதிர்த்து!
மதயானை தந்த! தமிழ்நாட்டு கல்வியின்
புரட்சியாளர் இவரன்றோ!
ஏன் இழந்தோம்!
எதற்காக இழந்தோம்!
எப்படி இழந்தோம்!
நாடு தோறும்
மேடை தோறும்
சொன்னாரே!
திருவெறும்பூர் தான் என் தாய் வீடு!
திருவெறும்பூர் மக்கள்தான் என் சகோதரர் சகோதரிகள்
உற்றார் உறவினர்கள்
என்று பாசாங்கில்லாத பாசத்தை நேசத்தோடு வழங்கினாரே
அந்த உத்தமர்!
அவர்
இங்கே நிற்க மாட்டாரா!
இங்கே நிற்க மாட்டாரா!
என்று ஏங்கிய தொகுதிகள் எண்ணற்றவை!
அவர்
இங்கே நிற்க மாட்டாரா!
இங்கே நிற்க மாட்டாரா!
என்று ஏங்கிய மக்களும் எண்ணற்ற வர்கள்!
இப்பேர்பட்ட மாமனிதரை நாம் இழந்தோமே!
நம் ஊணும் உடலும்
கூச வேண்டாமா!
நம் நெஞ்சமெல்லாம் பதபதைக்க வேண்டாமா!
அந்த அப்பழுக்கற்ற மனிதரின் மனதில் ஏற்பட்ட காயத்தை இனி நாம் எப்படி ஈடு செய்ய போகிறோம்!
எதை செய்து
நம் நன்றி கடனை தீர்க்க போகிறோம்!
அந்த உத்தமரை!
மக்கள் பணியே
மகேசன் பணி!
என்று உழைத்திட்ட அந்த தூயவரை
வணங்குவோம்
அவரின் அப்பழுக்கற்ற மனிதரின் புகழினை போற்றுவோம்!
தோற்றது!
"மக்கள் போற்றும் மகேஸர்"அல்ல!
இந்த மண்ணும்!
மக்களும் தான் என்பதை உணர்வோம்!
வழக்கறிஞர் ந.செந்தில்
விளையாட்டு வீரர்
விளையாட்டுத்துறை அமைச்சர் நல்லா விளையாடுறார்.
உதயநிதி அப்படி விளையாண்டாரா..? - த வெக கிடுக்கிப்பிடி கேள்வி.
நடிகர் விஜய்
நல்ல முதலமைச்சரா ஏண்டா நடிக்க கூட மாட்டேங்குறார்னு கேட்டா
....சக்தி....சக்தினு மேல்மருவத்தூர்க்கு மாலை போட்டவன் மாதிரி கத்திட்டே போய்ட்டான்
நாம் இப்போது அடையும் கல்வி உரிமைகளுக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான சர்.ஏடி.பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாள் இன்று!
திருவையாறு சமஸ்கிருத கல்லூரியில் பார்ப்பனர்களை தவிர மற்ற மாணவர்கள் படிக்க முடியாத நிலையை மாற்றியவர். லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்று தனித்தொகுதி கேட்டு உரையாற்றிய திராவிட தளபதிதான் சர்.ஏடி.பன்னீர்செல்வம் அவர்கள்.
அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக நமது திருச்சியில் மணிமண்டபம் அமைத்து திறந்துவைத்தார் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர்-கழகத் தலைவர் @mkstalin அவர்கள். திராவிடர் தளபதி அவர்களின் பிறந்தநாளில் அவரின் பெரும்பணியை போற்றுவோம்! கொண்டாடுவோம்!
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! தயவுசெய்து வீரவசனம் வேண்டாம்
பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தகுதித் தேர்வு”(TET) கட்டாயம் என 01.09.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
“ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கும், பணியில் தொடர்வதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்” எனவும், “இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுதல் அவசியம்” என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மூத்த ஆசிரியர்களைப் பாதுகாக்கும் வகையில், திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் நம் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி தீர்ப்பு வந்த மறுநாளே, எனது தலைமையில் உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களை அழைத்து இரண்டு முறை விரிவான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினோம். ஒரு ஆசிரியர் கூட உச்சநீதிமன்ற தீர்ப்பினால் பாதிக்கப்படாத வகையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்குத் துணை நிற்கும் என்ற உத்தரவாதத்தை வழங்கியதால், ஆசிரியர்கள் மனச்சுமையின்றி பணியாற்றும் சூழலைத் திராவிட மாடல் அரசு உருவாக்கியது.
மேலும், அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடு நானும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்தினோம். தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வது என்றும், மூத்த ஆசிரியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவான அறிக்கையின் மூலம் தெரிவித்தார்கள்.
உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு சீராய்வு மனுவினைத் தாக்கல் செய்வதற்கு, ‘வில்சன் அல்ல வின்சன்’ என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. வில்சன் உள்ளிட்ட வழக்கறிஞர்களோடு தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசனை வழங்கினார். “இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்கப் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்” என்கிற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்தினார்கள். இத்தகைய தொடர் நடவடிக்கைகள் மூலமாக ஆசிரியர் சமூகத்தைக் காத்து வந்தது தி.மு.க அரசுதான் என்பது ஆசிரியர்கள் அனைவரும் நன்கு அறிவர்.
இத்தகைய நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, மேலும் ஓராண்டு காலநீட்டிப்பும் வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு கட்டாயம் என்பதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளால், ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியர் முதல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவி உயர்வுகள் வழங்கப்படாததால் நிர்வாகப் பணியிடங்களில் சுணக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது பல ஆண்டுகால அனுபவமுள்ள மூத்த ஆசிரியர்களுக்குப் பெரும் சுமையாகவே அமையும்.
திராவிட மாடல் அரசின் சிறப்பு முயற்சியால் “ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்” என்று அரசாணை: 231, நாள் 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5 சதவீதத் தளர்வும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.
மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிடும் வகையில், அதற்கான பயிற்சிக் கட்டகங்கள் (Training Modules) தயாரிக்கும் பணி மற்றும் இணையவழிப் பயிற்சி வழங்கும் பணியானது, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் (SCERT) ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், ஜூலை மாதம் முதல் வாரம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், இதுவரை ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கட்டகங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இணையவழிப் பயிற்சி குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை.
ஆகவே, ‘ரீல்ஸ்’ அரசாகத் திகழும் இன்றைய தமிழ்நாடு அரசு வீரவசனம் பேசி அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுபோல, இவ்விரண்டையும் எளிதாகக் கடந்து சென்றுவிடாமல் உடனடியாக நம்முடைய ஆசிரியர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஒன்றிய அரசை வலியுறுத்தி, பாராளுமன்றத்தில் சிறப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரச்செய்து, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுமைக்குமாகப் பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் இணையவழிப் பயிற்சி குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
எங்கள் குடும்ப உறுப்பினர்களான ஆசிரியர்களுக்கு எப்போதும் நாங்கள் துணை நிற்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
https://t.co/lAszySb9nB
ஆசிரியர் தகுதித்தேர்வு
ஆசிரியர்கள் பணி பறிபோகும் நிலையில்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பக்கம் நின்று காத்தவர்கள்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினையும்
எங்கள் அண்ணன் Anbil Mahesh Poyyamozhi
அறிவீர்கள் என நம்புகின்றோம்..!
Good news க்கான
God
திமுக அரசு என
புரிந்தால்
நீயே ஆசிரியர்.
வால்வோ பஸ்ச பத்தி என்னிடம் கேட்காதே..வால்வோ கம்பனிகாரன்கிட்ட போய் கேளு- த வெ க அமைச்சர்
என்னா அருமையான அமைச்சர்..!
மாற்றத்தானுக
மணத்துக்க வேண்டிய நேரம்..!