@KanimozhiDMK@Anbil_Mahesh எக்கோவ், சட்டம் தங்கடமையை தான் செய்து இருக்கிறது. என்னைக்கு அரச குமார் பொறுப்பு குடுத்தீங்களோ, அன்னைக்கே முடிச்சு போச்சு எல்லாம்.
போயாமொழி ஒரு 6 அல்லது ஓரு வருசத்துல வந்துடுவாரு.
@TheEagle3_0 இந்த வேஷம் அன்றிலிருந்து இன்று வரை
கருணாநிதி அவர்களின் குடும்பம் அன்றே தொடங்கிய பாப்புநர் எதிர்ப்பு, தனது குடும்பத்திற்கு மட்டும் பார்ப்பனர் பெண்களை திருமணம் முடிப்பார்கள். வெளியில் கடவுளை எதிர்ப்பு காலை மாலையில் பூஜை புனஸ்காரம் செய்து கொண்டு தமிழக மக்களே முட்டாளாக்குவது.
பிரபல சமையல் கலை வல்லுனர் திரு.தாமு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
சமையல் கலையில் நிபுணத்துவம் பெற்ற திரு.தாமு அவர்கள் பத்மஸ்ரீ விருது பெற்று சமையல் கலைக்கும், சமையல் துறைக்கும் பெருமை சேர்த்தவர்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், சமையல் கலைஞர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
சாணக்யா டிவி சார்பில் திரு.@RangarajPandeyR அவர்கள் தலைமையில் தேனியில் நடைபெற்ற பட்டிமன்றம்.
தமிழகத்தில் தேசியத்திற்கும் தேசிய கட்சிக்கும் இடம் எப்போதும் உண்டு என்ற பார்வையில் பாஜக சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் திரு.@ProfessorBJP அவர்கள் உரையாற்றிய தருணம்..!
#வெல்க_பாஜக
நவீன சாணக்யர் என அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. @AmitShah பிறந்த தினத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
அவர் நல் ஆரோக்யத்தோடும், நீண்ட ஆயுளோடும் தேசப்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
பாஜகவின் நிழலில் அடையாளம் பெற்றுவிட்டு, இன்று அதே பாஜகவையே விமர்சிப்பவர்களே!
இந்தாண்டு ஜூன் மாதத்தில் நீங்கள் விலகிய தேதியை நாங்கள் மறக்கவில்லை. ஆனால்,நீங்கள் அப்போது தான் உண்மையில் விலகினீர்களா, இல்லை இங்கே இருந்து கொண்டே விலகித் தான் இருந்தீர்களா?
நீங்கள் இங்கே இருந்து கொண்டே செய்த சுயநல அரசியல் நகர்வுகளைத்தான் எப்போது ஆரம்பித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. சர்ச்சைக்குரிய போராட்டங்களை முதலில் ஆதரிப்பதும், எதிர்ப்பு வந்ததும் பின்வாங்குவதும்தான் உங்களின் 'அதிரடி சரவெடி' அரசியலா என்ன? தன்னைப் பாராட்டினால் ஏற்பதும், விமர்சித்தால் தாங்க முடியாமல் ஆணவத்துடன் நடந்துகொண்டு தேச நலனுக்கு எதிராக நிற்பதும் அரசியல் முதிர்ச்சியாகாது என்று தாங்களே சொல்லி இருக்கிறீர்கள்.
கரப்பான் கட்சி போராட்டத்திற்கு ஆதரவு அளித்த பின்னர் எதிர்ப்பு கிளம்பியதும் ஆதரவு இல்லை என நிலைப்பாடு எடுத்த நீங்கள்.. கரப்பான் பூச்சிகளை பார்த்து வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்கிறீர்களா..? அப்படியென்றால் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள்! பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டுங்கள்! அதைவிட்டுவிட்டு, நீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் வீதிகளில் கூச்சலிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்ற கேள்விகளை முன்வைத்தீர்களா..
டெல்லி போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்த வன்முறையை பார்த்து காரப்பன்களுக்கு அறிவுரை கூறினீர்களா? டெல்லி காவல் துறைக்கு பாடம் சொல்லும் நீங்கள் நீங்கள் ஆதரவு அளித்த கரப்பான்கள் குறித்து வாயை திறக்காதது ஏனோ ? கரப்பான்களின் போராட்டத்தில் ஈடுபட்ட நேஹா போரா இந்தியாவின் Gen Z தலைமுறை மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் வங்கதேசத்தின் மாணவர் இயக்கத்திலிருந்து ஊக்கம் பெற்றதாக குறிப்பிட்டார். இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கிளர்ச்சிகளை உண்டாக்குவோம் என கூறிய கரப்பான் ஆதரவாளர்களுக்கு எதிராக என்ன பேசினீர்கள்? இதை உங்களிடம் கேட்டால் கேட்டால் என்னிடம் தேசப்பற்றை பற்றி பாடம் எடுக்காதீர்கள் என வீர வசனம் பேசுகிறீர்கள். தடை செய்யப்பட்ட இடத்தில் போராடினால் என்ன நடக்கும்' என்பது ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்ததாகப் பெருமை பேசுபவருக்குத் தெரியாதா? சுயநலத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் பிரதமர் மோடியை விமர்சித்தபோதே உங்களின் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது. கேள்வி கேட்பது மட்டும் ஜனநாயகமல்ல, கேட்கப்படும் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதும் தான் உண்மையான ஜனநாயகம்! தேசத்தை துண்டாக்க நினைக்கும் தேச துரோகிகளுக்கு ஆதரவு அளித்தவர்கள் அழிந்து தான் போயிருக்கிறார்கள். அது நிச்சயம்!