உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
@Vasheegaran@Dir_Ashwath I can tell one thing.
Rajini fan ku rajini ku aduthu piditha actor Kamal aaga thaan irukum.
Kamal fan ku kamal ku aduthu piditha actor Rajini aaga thaan irukum.
@sri50 This could be the best ever transformation in the history of cinema
Bharathiraja
A village based director to urban director
Ilaiyaraja
Folk music to western music
Kamal haasan
Village bumpkin to Stylish psycho villain.
Two trendsetting movies ever in Tamil cinema.
Advancing cognitive neuroscience & neuromusicology. MOU signed with @OneMercuri, under the patronage of Dr.@ilaiyaraaja, to establish the Centre for Music, Brain, Mind & Health. Visit included the Brain Museum & Music Cognition Lab, led by Dr
@shantala_hegde.
#neuromusicology
இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..!
இசையில் உருவெடுத்த உலகின் முதல் தத்துவம்!
உலக இசை வரிசையில் தமிழுக்கு முகவரி பெற்றுத் தந்த தனித்துவம்..!
மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் இசை வடிவம் கொடுத்த இசைக் கடவுள்! தம் கைவிரல் மீட்டிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும் இசை நுணுக்கங்களால் துயரில் தவிக்கும் மனிதனை, உடைந்து கிடக்கும் மனதினை, காதலால் கசிந்து உருகும் விழிகளை, அன்பால் நெகிழ்ந்து உறையும் ஆன்மாவை, இசை என்ற இன்ப உலகிற்குள் காற்றில் மிதந்தபடி, கைபிடித்து அழைத்துச் செல்லும் எங்கள் ஐயா இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
உலகிற்கே இன்னிசை புகட்டும் தமிழினத்தின் பெருமைமிக்க அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலனுடனும், உள நிறைவுடனும் மகிழ்வாக வாழ்ந்து, அவருக்குள் ஊற்றெடுக்கும் வற்றா இசை அமுதத்தை வாரி வழங்கி, எங்கள் வாழ்வினை அவரது இசை அருளால் நிறைக்க வேண்டும் என இப்பிறந்த நாளில் உளமார வாழ்த்துகிறேன்.
ஈடு இணையற்ற இசை மேதை, இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
@ilaiyaraaja
Wishing the one and only இசைஞானி Ilaiyaraaja sir a very Happy Birthday! ✨
A maestro whose music has transcended generations, touched countless hearts, and become an inseparable part of our lives.
"Thank you for the music that we breathe forever." 🎼✨
May you continue to inspire the world with your timeless melodies and extraordinary musical legacy.
With love and respect,
D. Imman
#HappyBirthdayIlaiyaraaja #Isaignani #Ilaiyaraaja #Maestro #Legend
HAPPIEST MUSICAL BIRTHDAY to the MAESTRO ..
One & Only..
GOD OF MUSIC..
ISAIGNANI
ILAIYARAAJA SIR @ilaiyaraaja
😍😍♥️♥️🙏🏻🙏🏻🎶🎶🙏🏻🙏🏻
🎂🎂🎂🎂🎂🎶🎶🎶🎶🎶
Elated to meet him and get his Blessings on his BDAY..
ThankU RAAJA SIR for Every MAGICAL NOTE that You Created & Decorated our LIVES with !!!!
#HBDIlaiyaraaja Sir ♥️🎶🙏🏻
இசைஞானி @ilaiyaraaja அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
இசையோடு இயைந்த வாழ்வு என்பதை உங்களாலேயே நாங்கள் பெற்றுள்ளோம். "இசை உலகின் ராஜா"வாக எங்களுக்கான உங்கள் பயணம் என்றென்றும் சிறக்கட்டும். 🎹
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja#HBDIlaiyaraaja
இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து
தொடர வேண்டும்: நூறாண்டுகள் வாழ வேண்டும்!
எங்களின் இசை மருத்துவரும், உலகின் தலைசிறந்த இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா அவர்கள் 84-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசைஞானியின் தனிச்சிறப்பு என்னவென்றால், தாய், தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் விட, இசையாய் மிக அதிக நேரம் ஒவ்வொருவருடனும் இணைந்திருப்பது தான். இளையராஜா படைப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மன சஞ்சலங்கள், மன அழுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் இலவச மருத்துவமாக அமைவது அவரது இசை தான்.
இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும். இசைஞானி நூறாண்டுகளைக் கடந்து வாழ்ந்து இசையால் இனிவரும் தலைமுறைகளையும் மகிழ்விக்க வேண்டும்.
@ilaiyaraaja
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் தனக்கெனக் கொண்ட இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
உங்கள் Harmonium கொடுத்த மெட்டுக்கள் பல உள்ளங்களில் Harmony-ஐ விதைத்துள்ளது. அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அரும்பணி, மஞ்சணத்தியும் தாண்டி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
#HBDIlaiyaraaja @AIADMKOfficial
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
“நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா”
எப்பொழுதுக்குமான என் இளைப்பாறுதல்
“இசைஞானி”
அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!🔥❤️🔥❤️
இசை உலகின் ஈடு இணையற்ற மாமேதையாகவும், கோடிக்கணக்கான மக்களின் மனங்களை தன் உணர்வுப்பூர்வமான இசையால் ஆட்கொண்டிருப்பவருமான இசைஞானி திரு. இளையராஜா அவர்களின் பிறந்த தினம் இன்று.
கிராமிய இசையில் தொடங்கி மேற்கத்திய இசை வரை தன்னுடைய தனித்திறமையால் கோலோச்சி, காலம் கடந்தும் நிற்கும் காவியங்களைப் படைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி திரு.இளையராஜா அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது இசையால் மக்களை மகிழ்விக்க வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️
@ilaiyaraaja #HBDIlaiyaraaja
இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் திரு @ilaiyaraaja அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu