அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
மக்கள் மனசுல இருக்கிற உண்மையான நினைவுச் சின்னம் எது தெரியுமா? திருச்சி ஏர்போர்ட்ல சார் சார்னு கூப்பிடும்போது, நீங்க ஓடு ஓடுன்னு வேகமா நடைபோட்டீங்களே அந்த முதுகும், அந்த சம்பவமும்தான் மக்கள் மனசுல நீங்காத நினைவுச் சின்னமா இருக்கு
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing
தி.மு. கழகத்தின் கொள்கைப் பட்டாளமான @dmk_youthwing-ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடத்தினோம்.
இளைஞர் அணியை வளர்த்தெடுத்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் எங்கள் சீனியரான கழகத் தலைவர் @mkstalin அவர்கள், ‘தோல்வி கண்டு துவளாமல், விழுந்த வேகத்தில் உற்சாகமாக எழுந்து, மக்கள் பணியாற்ற வேண்டுமென’ ஜூனியர்களாகிய எங்களிடையே சிறப்புரை ஆற்றினார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் கரம் பற்றி அவரின் கட்டளைகளை நிறைவேற்றக் கழக இளைஞர் அணி என்றும் துடிப்போடு செயல்படும்!
#DMKYW
@Joel_Dmk@Inba_AN_Ragu@ilaiyadmk@keprakashdmk@AbdulmalikDmk@Prabhugajendran@pssrinivasandmk@GprMadurai@C_ANAND_KUMAR
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.கழகத்தின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்களுக்கு இளைஞர் அணி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜனநாயகத்தைக் காப்பதில் முன்நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம் என்பதைக் கழக இளைஞர் அணிச்செயலாளர் அவர்கள் தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபிப்பார் என்பது உறுதி.
@arivalayam #DMK
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
Gemini Prompt:
A stylish South Indian man, face from reference image, confident expression, looking slightly upward to the side, wearing a fitted black shirt with sleeves rolled up, bright red veshti with black border, red shawl around the neck, black wrist watch, standing in front of a massive black and red flag, dramatic crowd silhouettes in the background holding flags, smoky red atmosphere, cinematic lighting, high contrast shadows, stormy sky, wind blowing through clothes, ultra realistic, powerful heroic mood, political poster style, wide angle composition, no text.