கஜானாவில் பணம் இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்துவிட்டு இலவசமாக கார் கொடுக்க மட்டும் எப்படி பணம் வந்தது.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதலமைச்சர் அவர்களே கூறி வருவதால், எங்களுடைய கழகத் தலைவர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாகனங்களைப் பெறுவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக நேரலை செய்தது திராவிட மாடல் அரசு எங்கள் தலைவர் அவர்கள் தான்!
எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்
#TNAssembly
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைநாளை முன்னிட்டு ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலையில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
#KalaignarForever
தமிழர்களின் வாழ்வியலிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் என்றுமே நீங்காத இடம் பிடித்த தலைவர் கலைஞர் அவர்களின் புகழும் லட்சியமும் என்றும் நிலைத்து நிற்கும்!
#KalaignarForever
பொய்யை மட்டுமே பேசும் அமைச்சர் @CTR_Nirmalkumar கவனத்திற்கு!! 🚨
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள், நேற்று கழக உடன்பிறப்புகளையும் பொதுமக்களையும் சந்தித்து உரையாடிய தருணம்.
#TVKFakeNews
'தூய சக்தி' 'வாஷிங் மெஷின்' சக்தியானது! இது தான் ஊழலை ஒழித்த டம்மியின் இலட்சணம்!
நாங்கள் ஊழலற்ற தூய்மையான ஆட்சியைத் தருவோம் என்று மேடைக்கு மேடை எழுதிக் கொடுக்கப்பட்ட சினிமா வசனம் பேசி தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்யின் மாற்று அரசியல் சாயம் இன்று முழுமையாக வெளுத்துவிட்டது!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை ED வழக்கு, குட்கா ஊழல் CBI வழக்கு, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு, அரசு முத்திரையையே போலியாகத் தயாரித்து மோசடி செய்ததும், அனுமதியின்றி மணல் கொள்ளையில் ஈடுபட்டதுமான கிரிமினல் வழக்குகளில் சிக்கிய என ஊழலின் உச்சத்தில் இருக்கும் விஜயபாஸ்கர்களைப் புனிதர்களாக மாற்றும் வாஷிங் மெஷினாக மாறிவிட்டது நிழல் முதல்வர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தவெக!
#TVKFails
கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சீரழிந்த சட்டம்-ஒழுங்கு!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது.
இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது. இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்பத்தார் பிரச்சினையில் வீடுகளும் வாகனங்களும் நொறுக்கப்படும் புதிய அபாயமும் அரங்கேறியுள்ளது.
சினிமாவில் மட்டுமே வரக்கூடிய கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனைக் கொடூரங்களும் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது. குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சோபா மாடல் அரசின் முதலமைச்சர், தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கின் மீது இனியாவது கவனம் செலுத்துவாரா?
திமுக இதைக்கூட விமர்சிக்காமல்-கேள்வி கேட்காமல் 6 மாதம் பொறுத்திருந்தால், அநியாயமாகப் பறிபோன இரண்டு உயிர்களைத் திருப்பிக் கொடுத்து விடுவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?
#TVKFails
50 நாட்களில் 5 ஆணவப் படுகொலைகள்!
மயிலாடுதுறையில் நடந்த நெஞ்சை உலுக்கும் ஆணவக் கொலையோடு சேர்த்து தவெக ஆட்சிக்கு வந்த கடந்த 50 நாட்களுக்குள் மட்டும், தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட கொடூரமான ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன!
ஆனால், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று மேடைக்கு மேடை வசனம் பேசிய 'சோஃபா மாடல்' அரசு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?
இதுபோன்ற கொடூரமான குற்றச் சம்பவங்களுக்கு எதிராக வாய் திறக்கச் சொன்னால், முதலமைச்சர் விஜய் அவர்கள் "பேசாமல் சாதிக்கிறேன்" என்று மௌன சாமியாராக நாடகம் ஆடுகிறார்!
தட்டிக் கேட்டால் கேமரா முன்னாடி சினிமா அடுக்கு மொழியில் ஏதேதோ வசனம் பேசுவது, சைகை செய்வது, அல்லது கூட்டணி கட்சியை ஏவிவிட்டு "அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு..." என்று எப்போதோ புளித்துப்போன, நடக்காத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பேச வைத்துத் திசை திருப்புவது... இதுதான் மாற்று அரசியலா?
நீதிபதி கே.என்.பாஷா ஆணையம் என்னவாயிற்று? "அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சமத்துவச் சிந்தனையும் - சுயமரியாதையும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்க வேண்டும்" என்ற உயரிய நோக்கத்தோடு, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க முந்தைய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு சிறப்பு ஆணையத்தை அமைத்தது.
பாதிக்கப்பட்ட பல குடும்பங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தங்களது ஆவணங்களையும், சாட்சியங்களையும் அந்த ஆணையத்திடம் அளித்துள்ளார்கள்.
சமூக நீதியைப் பற்றி மேடையில் மட்டும் முழங்கும் 'இன்ஸ்டா அரசன்' விஜய் அவர்களே, முந்தைய திமுக அரசு அமைத்த அந்த ஆணையம் இப்போது என்னவாயிற்று?
அதன் அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தவெக அரசு?
எடுத்ததற்கெல்லாம் வாய் கிழியப் பேசும் நீங்கள், இதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் பறிக்கப்படும் போது மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்?
சமூக நீதியைக் காக்கத் துப்பில்லாத, நிர்வாகத் திறமையின்மையால் தமிழ்நாடு இன்று மீண்டும் இருண்ட காலத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது!
இனியும் மௌனம் சாதித்தால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!
#TVKFails