ஒரு படையில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்பதில் இல்லை படையின் வலிமை..,
எத்தனை வீரர்கள் ஈடுபாட்டோடு இருக்கிறார்கள் என்பது தான் வலிமை..,
எண்ணிக்கையில் இல்லை வலிமை..,
எண்ணத்தில் தான் இருக்கிறது..,
அண்ணன் சீமான்..,
#Seeman#NTK
" அப்பாவைக் காணோம்! "
எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும்.
பொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்!
- முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து...
( படத்துக்கும், பகுப்பாய்வுக்கும் தொடர்பில்லை)
Photo Courtesy: @trishtrashers
‘அப்பாவைக் காணும்’ என்று யாரையோ தேடுகிறார். அதுசரி! உங்கள் கதையில் அப்பாவைக் காணாதது போல, சபையில் உங்களிடம் ஆளுமை என்பதையே காண முடியவில்லையே, ஏன் முதல்வரே? சொந்தத் துறையைச் சார்ந்தக் கேள்விகளுக்கும் சொந்தமாகப் பதில் சொல்ல வக்கற்று நிற்கிறீர்களே? தமிழ்நாட்டுச் சட்டமன்றம் காணாத கந்தர்வக்கோலமாக அல்லவா இருக்கிறது! யாரோ எழுதிக் கொடுத்ததை ஏற்ற இறக்கமாக வாசித்து, உடல்மொழி காட்டுவதில் மட்டும்தானே வீரம் இருக்கிறது உங்களிடம்! மற்றபடி, ‘ A4 Paper’ இல்லையென்றால், முதல்வரே! நீங்களே Waste Paperதானே!
10 லட்சம் கோடி கடன்.
-- பாட்டாவே பாடினார் சீமான் அண்ணன்.
இலவசங்களால் தான் இவ்வளவு கடன்.
-- தேர்தல் பிரச்சாரத்தில் இதனால் நான் இலவசம் தரமாட்டேன் என சொன்னார் சீமான் அண்ணன்..
போக்குவரத்து துறையில் 75000 கோடி கடன்.
-- கடனில் துறை இருக்க யார் கேட்டார்கள் இலவச பேருந்து என கேட்டார் சீமான் அண்ணன்.
மின்சாரவாரியத்தில் 2.75 லட்சம் கடன்.
-- இவ்வளவு கடனில் எதற்கு இலவச மின்சாரம் என கேட்டார் சீமான் அண்ணன்.
பிறக்கும் குழந்தை தலையில் 1 லட்சம் கடன் இருக்கிறது.
-- நாமெல்லாம் பிறக்கும் பொழுதே கடனாளிகள் என சொன்னார் சீமான் அண்ணன்.
இதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை சீமான் அண்ணனின் தேர்தல் பிரச்சார காணொளிகள் பார்த்தாலே தெரியும்.
தூக்கி கையில் வையுங்கள் நான் மலையை தூக்குகிறேன் என்கிற செந்திலின் காமெடியை விஜய் அரசியலில் செய்து கொண்டு இருக்கிறார்.
ஓட்டு கேட்ட்கும் பொழுதும் தேர்தல் அறிக்கையிலும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று கூறிவிட்டு இப்பொழுது ஒன்றிய அரசு எடுத்த பின் இவர் கணக்காய்வு எடுப்பாராம். சாதிவாரி கணக்கெடுப்பை மறுக்கும் ஒன்றிய அரசின் மேல் பழியை போட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறது தவெக அரசு.
மக்களை இதிலும் ஏமாற்றிவிட்டார் விஜய்.
#TVKFails #PoliticalDisaster
சொந்த தொகுதியில் தோல்வி என்பதை பற்றி இந்தியாவையே சொந்தமாக வைத்திருந்து இன்று 13 மாநிலத்தில் முட்டை(0) தொகுதிகளை வைத்திருக்கும் காங்கிரஸ் பேசுவது வேடிக்கை. அனிதா ராதாகிருஷ்ணன் முறை செய்ததை டீலிங் செய்வதாக சொல்வது யாரென்று பார்த்தல் 26 வருடமாக அறிவாலயத்தில் முறைவாசல் செய்த காங்கிரஸ்காரர். 2014யில் நின்ற பொழுது காங்கிரஸ் எடுத்த வாக்குகளை விட 2 லட்சம் வாக்குகள் அதிகமாக தனியாக நின்று இந்த தேர்தலில் எடுத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி என்று தெரிவித்துக்கொண்டு மீண்டும் சொல்கிறோம் திமுக தயவில் பெற்ற வெற்றியை உதறித்தள்ளிவிட்டு பிறகு வீரவசனம் பேசுங்கள்.
#அட்டகத்தி_காங்கிரஸ்
தொடர்ச்சியாக தவெகவை விமர்சித்தார் என்பது தான் கைதுக்கான உள்நோக்கமே தவிர ஒரு பதிவில் வந்த தவறான செய்தி அல்ல.. ஆட்சியை விமர்சிக்கிறார் என்பதற்கு கைது செய்வது பாஜக, திமுக வழக்கம். அதை தான் விஜய்யும் செய்கிறார்.
#ReleaseMaridhas
தூத்துக்குடி, திருவைகுண்டத்தில் 17 வயது பள்ளி மாணவி கடத்தப்பட்டு நான்கு நாட்களாகியும் மாணவி இன்னும் மீட்கப்படவில்லை; குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டு முதல்வரே! உங்களது கீழுள்ள காவல்துறையின் இலட்சணம் இதுதானா?
உங்களது வீர பராக்கிரமச் செயல்பாடுகள் எல்லாம் திரைப்படத்தில் மட்டும்தானா?
தேர்தல் முடிவு வந்த பின் வந்த நாட்களில் ஒரே பாடலைத்தான் மீண்டும் மீண்டும் கேட்டு நான் மீண்டேன்..
அறுவடை நாள் படத்தில் வந்த "தேவன் கோயில் மூடிய நேரம்" என்ற பாடல்.. அல்ல, அல்ல.. தேவகானமே அது..
இருளில் இருக்கையில் வெளிச்சம் நோக்கி அந்த இசையே இழுத்துக்கொண்டு சென்றது.
உள்ளுக்குள் எழுந்த பிசாசின் கோவத்தை அதுவே சாந்தப்படுத்தியது..
எதிர்காலம் எண்ணி உருவான நடுக்கத்தை தவிர்க்க அதுவே நம்பிக்கையாக இருந்தது..
அடங்காத பதட்டத்தை நடுவே வந்த ""ஏஏ
தந்தன தந்தன தந்தனா..ஆஆஅ..
தந்தான தந்தான தானன்னா நனா
தந்தானா தந்தனா ஹே.."" தான் அடக்கியது.
பாடல் முழுக்க பின்னால் தூரத்தில் கேட்கும் மணியோசை அதிகாலை தேவாலய அமைதியை உள்ளுக்குள் உருவாக்கியது.
பாடலில் முடிவில் "ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம் அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்" என்னும் பொழுது மேலெழுந்து வரும் மன உளைச்சலின் அழுத்தத்தை எல்லாம் ராகத்தின் வழியே சுத்தமாக துடைத்து இசைஞானஸ்நானம் பெற்றவனாக மீண்டவனானேன்..
என்ன செய்வது இளகிய இதயம் கொண்டவன் இளையராஜாவிடம் தானே தஞ்சமடையவேண்டும்..
இளையராஜா எனும் மீட்பரை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!!!
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் "தனிப்பட்டவை" என்ற ஒரு வகைமை இருக்கும்.ஆங்கிலத்தில் அதை Private, Personal போன்ற சில சொற்களில் அழைக்கிறார்கள்.
அப்படி மனிதனுக்குள்ள தனிப்பட்டவையாக இருக்கும் பலவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாது. அவைகள் அவனோடு தோன்றி அவனோடு வாழ்ந்து அவனோடு முடிபவை.
இதில் இளையராஜா விதிவிலக்கு.
ஏறக்குறைய தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு இளையராஜா அவர்களுக்கே உரிய அந்தரங்கமான Personal தான். என்ன ஒன்று என்றால்.. இது பற்றி அவர்களால் பலரோடும் பகிர்ந்துக் கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு இளையராஜா. எண்பதுகளில் பிறந்த பலருக்கும் இளையராஜா தான் தாலாட்டு. பதின் வயதுகளில் கிடைத்த முதல் முத்தத்தில் இளையராஜா தான் முதல் காதல். முதல் காமம். ஊர் திருவிழாக்களில் இளையராஜா ஒலிக்க தொடங்கியவுடன் திருவிழாக்கள் வந்துவிட்டன. எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு இரவில் வலியால் கசிந்து கொண்டிருந்த விழிகளுக்கு.. இளையராஜா பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
வேலை கிடைக்காமல் முகவரி தெரியாத ஊரில் எங்கோ கிடைத்த ஒரு இடத்தில் பசியோடு தனியே படுத்துக் கொண்டிருந்தபோது, இளையராஜா குரல் மூலம் தான் அவரவர் சொந்த ஊரின் சுவாசத்தை பருகிக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு இளையராஜா எப்படி என்றால்.. உங்களைப் போல எல்லாமும் தான்.
எல்லோருக்கும் சொல்லிக் கொள்வதற்கும், சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே நெகிழ்ந்து கொள்வதற்கும், யாருக்கும் தெரியாமல் விழிகளில் வடிகிற ஒரு துளி கண்ணீரை சிறிய வலியோடும், நிறைய நினைவுகளோடும் உணர்ந்து நினைக்கின்ற ஒரு காலம் இருக்கும் இல்லையா...
அந்தக் காலத்தின் இசையமைப்பாளர் இளையராஜா தான்.
இளையராஜா சிம்பொனி இசைத்து சாதனை படைத்து விட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால் ஒவ்வொரு எளிய மனிதனின் வாழ்க்கையிலும் அவனது நிராதரவு பொழுதுகளில்... அவரது வயலின்களும், அருண் மொழியின் ஒற்றைப் புல்லாங்குழலும்.. கொடுக்கின்ற ஆறுதல்.. சிம்பொனி இசையெல்லாம்
அதற்கு முன்னால் கொஞ்சம் சின்னது தான்.
இளையராஜாவை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு.. சற்றே சிந்தித்து, உள்ளுக்குள்ளேயே உருகி, இப்படி ஒரு கேள்வியா என நினைத்து பதில் சொல்ல சில மணித்துளிகள் எடுத்துக் கொள்கிற எல்லோருக்கும் தெரிந்த உண்மை..,
இளையராஜா என்பது வெறும் பெயர் அல்ல.
அவர் நமது வாழ்க்கை.
தீவிர எதிர் முனைகளான அளவற்ற அறமும், தீரா வன்மமும் இரண்டும் எதிர்பாராத வகையில் கலந்து நிற்கிற நமது இயல்பான வாழ்க்கையில்.. அவர் மட்டும் தான் தேங்கிவிட்ட கடவுளின் அமுதம்.
கடவுள் உலகத்தை படைத்தார் என்பது உண்மையோ பொய்யோ தெரியாது.
ஆனால் எங்கள் உலகத்தை படைத்தது இளையராஜா தான்.
எங்கள் தலைமுறையின் மகத்தான மாமேதைக்கு.. திசை உணர்த்திய இசைக் கடவுளுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
♥️
மணி செந்தில்.
@ilaiyaraaja