தில் இருந்தா வழக்கு போடு, கைது பண்ணுன்னு வீராவேசமா மேடையில சவடால் பேச வேண்டியது.
சட்டத்தை மீறியதுக்கு சட்டப்படி வழக்கு போட்டால் கைது செய்தால் ஒப்பாரி வெச்சி முதலாளி கிட்ட போயி ஆதரவு கேட்குறது.! ச்ச்சீ...
ஸ்டாலின் அங்கிள் கொஞ்சம் கூட உங்களுக்கு வெக்கம் கூச்சம் இல்லையா உங்களால உங்க சொந்த கட்சிக்காரனையே பாத்துக்க முடியலையோ நீங்க தமிழ்நாட்டை காப்பாத்த போறீங்களா... ரவுடிகளோட கூடாரமா இருக்கு இந்த திமுக 🤬
#dmkfailsTN#dmk
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை..
🚨 சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது.
🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது.
🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள்.
🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது.
🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார்.
🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா?
🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா?
🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும்.
🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா?
🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன.
🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
அரசியலில் பழக்கடை மூர்த்தி நம்ம Sweet Uncle தான்!
அவர் எவ்வளவு பெரிய Dummy என்பது உடன் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், காலம் காலமாகக் கட்டுமரக்கதைகளால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம்தான் தனது உண்மையான பிம்பம் என்று நம்பும் அளவிற்கு எதுவுமே தெரியாதவர்தான் Dummy Daddy.
ஒரு செயலை எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாது. Action என்றால் விளம்பர Shooting-இல் நடிப்பார். கொடுக்கப்பட்ட Script-இல் என்ன இருக்கிறது, ஏன் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்று தெரியாமல், அவ்வளவு Confident-ஆக Script-ஐ பார்த்துக்கொண்டே தப்பும் தவறுமாக உளறிக் கொட்டுவார்.
அதுவும் மேடை ஏறிவிட்டால், பெண்களை மிக இயல்பாக இழிவாகப் பேசுவதில் கில்லாடி "அரசியல் மூர்த்தி" Sweet Uncle!
இதில், தங்களது போலி பிம்பத்தையே உண்மையான பெரும் பிம்பமாக நம்பும் அரசியல் மூர்த்திக்கும் அவரது வாரிசு டம்மிநிதிக்கும், அந்தப் பிம்பத்தைக் கட்டிக்காப்பாற்றுகிறோம் பேர்வழியென அவர்களுக்கே விபூதி அடிக்கும் இரண்டு பில்டப் Admin-கள் வேறு!
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
அதெப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இப்படி அறிவுரை கருணாநிதியெல்லாம் கொடுக்க முடியுது ? உங்க ஆட்சியில் போஸ்டர் மேல மண்ணள்ளி போட்ட கிழவியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைச்ச கேவலவாதி தான நீங்க ?
🚨 கோவையில் கார்த்திகா கைது!
தாராபுரம் இடைத்தேர்தலின்போது முதலமைச்சர் விஜய் செல்லும் பாதையில் போராட்டம் நடத்திய வழக்கில், நாதக வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகாவையும் அவரது கணவரையும் தாராபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேர்தல் தொடர்பாக கார்த்திகா மற்றும் நாதகவினர் மீது 3 வழக்குகள்! ⚖️
சட்டம் தன் கடமையைச் செய்யும்!
சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றால், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதுதான் நிதர்சனம்! 😏
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா அறிவிப்பு
🔥💥💥🔥💥💥🔥💥💥🔥🔥💥💥🔥
"So Called" பாரம்பரியக் கட்சிக்கு எனது வன்மையான கண்டனங்கள்!!
இதுதான் "So Called" பாரம்பரியக் கட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் அரசியல் நாகரிகமா?
முதல்வரை ஒருமையில் பேசுவதை மேடையில் ரசித்துச் சிரிப்பதுதான் பாரம்பரியக் கட்சித் தலைவர்களின் பண்பாடா?
திமுக கூட்டங்களில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பைக்கூடப் பொருட்படுத்தாமல், முதல்வரை ஒருமையில் பேசும் போக்கு திமுகவின் தலைமை மூலம் ஊக்குவிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
இதுபோன்ற பேச்சுகளைக் கேட்டு மேடையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர்கள் ஆரவாரம் செய்து சிரித்துக் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரியது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம். ஆனால், பொது மேடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை மரியாதையையும் அரசியல் நாகரிகத்தையும் மறந்துவிடலாமா?
திமுகவின் முன்னாள் தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களும் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா அவர்களும் இத்தகைய செயல்கள் குறித்து தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக, மேயர் பிரியா அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் முதல்வரைப் பற்றி தொண்டர் ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் பேசுகையில், அதை ரசித்து நகைப்புக்குள்ளாக்குவதும், இழிவுபடுத்தும் பேச்சைக் கேட்டு சிரிப்பதும்தான் ஒரு மாநகராட்சியின் மேயருக்குரிய அரசியல் மாண்பா?
தமிழ்நாட்டின் முதலமைச்சரை ஒருமையில் அழைத்துப் பேசுவதும், அதை மேடையில் கொண்டாடுவதும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எத்தகைய அரசியல் பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது இந்த திமுக என்னும் So Called (பாரம்பரியக் கட்சி)?
அரசியல் என்பது கருத்துகளால் மக்களைச் சந்திப்பதற்கான களம்; தனிநபர் மரியாதையைச் சிதைப்பதற்கான மேடை அல்ல.
எதிர்க்கட்சியாக உள்ள திமுக இதுபோன்ற மரியாதையற்ற செயலில் ஈடுபட்டால், மக்கள் மனதிலிருந்து ஓரங்கட்டப்படும் நாள் விரைவில் வரும்.
@PriyarajanDMK@KanimozhiDMK