இன்றைய தினம், கோவை வடக்கு மாவட்டம் - அவிநாசி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தண்ணீர்பந்தம்பாளையம் பகுதியில் கைத்தறி நெசவு தொழில் செய்து வரும் சகோதரர் திரு. தமிழ் அன்பு அவர்களை சந்தித்து கலந்துரையாடினேன்.
இன்று, கோவை வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தெக்கலூர், புதுப்பாளையம், நம்பியாம்பாளையம் கிராமங்களில் உள்ள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் இல்லத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடினேன்.
கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றியதற்காக அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டேன்.
@BJP4TamilNadu
ஏராளமான பொதுமக்களின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நமது பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பிரசாரங்களுக்கு நாம் செல்லும் இடங்களிலெல்லாம், நமது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்காளப் பெருமக்கள் அளித்து வரும் ஆதரவானது அளப்பரியதாக இருந்து வருகிறது.
அவ்வகையில், இன்றைய தேர்தல் பிரசாரத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாண்புமிகு மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான திரு. @PiyushGoyal ஜி அவர்களுடன் இணைந்து, அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருவலூர் மற்றும் தெக்கலூர் போன்ற பகுதிகளில் உள்ள மக்களைச் சந்தித்து, நமது தேசிய ஜனநாயக கூட்டணி சின்னமான தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்.
#Murugan4Avinashi #Vote4BJP #Avinashi #தாமரை_மலரட்டும்_அவிநாசி_வளரட்டும்
(1/2)
இன்று, அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்த்திடல் பகுதியில் துவங்கி, அவிநாசி தாலுகா அலுவலகத்தில், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தேன்.
சிறப்பு அழைப்பாளராக, மாண்புமிகு மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் திரு.@kishanreddybjp அண்ணா அவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவு தந்தார்கள்.
கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழக மக்கள் நலனிற்கு எதிராகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற இந்த மக்கள் விரோத திமுக அரசை, தங்களது வாக்குகளின் மூலம் வீட்டிற்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். அவ்வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு வலுசேர்க்கும் விதமாக, அவிநாசி சட்டமன்றத் தொகுதி பொதுமக்களின் ஆதரவோடு நமது பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெரும்.
#தாமரை_மலரட்டும்
#அவிநாசி_வளரட்டும்
@NitinNabin@blsanthosh@PiyushGoyal@NainarBJP
தமிழக மக்களின் பேராதரவோடு தமிழகத்தில் ஆட்சியையும், அவினாசி வாக்காளப் பெருமக்களின் பேரன்போடு அவினாசி தொகுதியையும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெல்லும்.
தாமரையை மலரச் செய்வோம்..!
அவினாசி தொகுதியை வளரச் செய்வோம்..!
#தாமரை_மலரட்டும்#அவிநாசி_வளரட்டும்
இன்றைய தினம் காலை தெக்கலூரில், @BJP4TamilNadu அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் திரு. R. சத்தியமூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
கணவன் - மனைவியாக வாழ்வின் புதிய பயணத்தை துவக்கி இருக்கும், செல்வன் T. பிரவீன் குமார் மற்றும் செல்வி K. ரேணுகா ஆகியோர், வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்புற வாழ மனதார வாழ்த்துகிறேன்.
அவிநாசி அத்திக்கடவு போராளி வழக்கறிஞர் திரு.AR ரங்கசாமி அண்ணன் அவர்கள்,
தொழில்துறை வல்லுனர் பிரிவு மாநில செயலாளர்,
ஆற்றல்மிகு செயல்வீரர், அதிரடி ஆட்டநாயகன் கோவை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் திரு. கணியாம்பூண்டி M செந்தில் அண்ணன் ஆகிய இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் தீபாவளியின் பிரகாசமான தீப ஒளியைப் போல உங்கள் வாழ்க்கையிலும் வெளிச்சம் பரவட்டும்.
உங்கள் வாழ்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சி பெருக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 🎇🪔🎇🪔
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம், இன்றைய மாலை முரசு பத்திரிக்கை செய்தி
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம், இன்றைய தினமலர் பத்திரிக்கை செய்தி
தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ள முன்னாள் மாநில தலைவர், தற்போதைய மகாராஷ்டிர ஆளுநர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.