மேகமலை ஊர் மக்கள்கிட்ட அமைச்சர் நிர்மல் திமுக சரியா வாதாடுல அதான் நீதிமன்றம் உத்தரவு போட்டு உங்கள் காலி பண்ண சொல்லி இருக்கு
நீங்க தைரியமா இருங்க தவெக கூட இருக்குனு மக்கள்கிட்டயும் , சட்டமன்றத்துலயும் , பதிவு பண்ணிட்டு நீதிமன்றம் போய் 3 மாதம் அவகாசம் குடுங்க மொத்த ஊரையும் காலி பண்ணி தரோம்னு சொல்லி இருக்கானுங்க
இவனுங்க மிக மோசமானவங்க
எவ்ளோ நாள் சோசியல் மீடியாவை மட்டும் வச்சி ஏமாத்துவாங்க இவனுங்க கிட்ட குறைந்தபட்ச நேர்மை கூட கிடையாது
மூன்று தமிழர் உயிரைக் காக்கத் தன்னுயிரையே ஈந்த தங்கை செங்கொடியின் தியாகத்திற்கு நெஞ்சார்ந்த வீர வணக்கம்!
தமிழர் உரிமைக்காகவும், மூன்று தமிழர் உயிர்களைக் காப்பதற்காகவும் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தங்கை செங்கொடியின் தியாகம் என்றும் தமிழர் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.
தியாகத் தங்கையே செங்கொடி,
உன் தியாகம் என்றும் வீண்போகாது!
நெஞ்சார்ந்த வீர வணக்கம்!
வீர வணக்கம்!
வீர வணக்கம்!
கர்நாடக வனத்துறையால் சுடப்பட்ட மூன்று தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள்கூட இப்படுகொலைக்கு நீதிவிசாரணைக் கேட்டும், படுகொலையைக் கண்டித்தும் பேசியிருக்கின்றன.
தமிழ்நாட்டை ஆளும் முதல்வர் விஜய், வாய்திறக்காது மூடிக்கொண்டு இருக்கிறார்.
கண்முன்னே மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் கல்லுளிமங்கன் போல இருப்பதுதான் முதலமைச்சரின் வேலையா?
*உலகில் சின்ன நாடு 🪷உலகளாவிய பெரிய ஐடியா !*👑
போட்டோவுல தெரியுறது சாதாரண அபார்ட்மெண்ட் கிடையாது. இது சிங்கப்பூரில் இருக்கிற 30 மாடி உயர செங்குத்து விவசாய பண்ணை. வெளியில இருந்து பார்த்தா கண்ணாடி கட்டிடம் மாதிரி தெரியும், உள்ளே முழுக்க பச்சை பசேல்னு காய்கறிகள் தான்.
இங்க மண் கிடையாது, பூச்சி மருந்து தெளிக்கிறது கிடையாது. Hydroponics முறையில தண்ணீரில் கரைக்கப்பட்ட சத்துக்கள் மூலமாகவும், LED வெளிச்சத்திலும் தான் பயிர்கள் வளருது. இதனால சாதாரண விவசாயத்தை விட 95% தண்ணீர் மிச்சமாகுது.
பருவநிலை பிரச்சனை, வெயில், மழைனு எதுவும் கிடையாது. வருஷம் 365 நாளும் அறுவடை தான். ஒரு நாளைக்கு சுமார் 1 டன் வரை fresh காய்கறிகள் இங்கிருந்து எடுக்குறாங்க.
நிலத்தை பக்கவாட்டில் தேடாம, வானத்தை நோக்கி விவசாயத்தை கொண்டு போனா என்ன செய்ய முடியும்னு சிங்கப்பூர் நிரூபிச்சிருக்கு. இது போன்ற தொழில்நுட்பம் நம்ம ஊர்களிலும் வந்தால் விவசாயத்திற்கு பெரிய பலமா இருக்கும்.
சிங்கப்பூரின் இலக்கு (30 by 30):சிங்கப்பூர் தனது நாட்டின் உணவுத் தேவையில் 90%-க்கும் மேல் மற்ற நாடுகளிடம் இருந்தே இறக்குமதி செய்கிறது.
இதை மாற்றி, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் உணவுத் தேவையில் 30% உணவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கோடு (30 by 30 Goal) இதுபோன்ற அதிநவீன தொழில்நுட்ப விவசாயத்தை அந்த அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
தகவல்: Singapore Food Agency
மக்கள் பணத்தில் இயங்கும் LIC உள்ளிட்ட தேசிய வங்கிகளில் வாங்குனது
just ₹ 22,000 கோடி கடன்….
திரும்ப செலுத்தப்போவது…..₹ 6 கோடி..🫤
இந்த கேவலங்கெட்ட நாட்டுல வாழறதுக்கு தேர்தல் ஒரு கேடு வரிசையில நின்னு வாக்கு செலுத்தற நாமெல்லாம் கூமுட்டை ….டு…😡😡
56” சர்க்கஸ் சங்கி சாதி மத கலவர வெறி கோமாளியின் அரசு …. ……
விவசாயிகளிடமும் மாணவர்களிடமும் கொடுத்த கடனை வாங்க காட்டற வேகமும் ஆவேசமும் இந்த கார்பரேட் கபோதிகளிடம் காட்டாமல் பயந்து பம்மி பதுங்கி படுத்துடறானுவளே…?
எதனால …?
மார்ட்டின் கொடுத்த மாதிரி 1000 கணக்கான கோடி தேர்தல் நிதிக்காகவா…? 👊👊
அறிவியல் பேசுனா இங்க உள்ள அரைவேக்காடுகளுக்கு என்ன அண்ணே புரிய போகுது.
அண்ணன் எச்சரிக்காத இயற்கை பேரிடரே கிடையாது 🙏🙏🙏
ஆனாலும் இந்த தற்குறி மற்றும் கொத்தடிமைகளுக்கு புரிய போறதும் இல்லை, இந்த மக்கள் மாற போறதும் இல்லை🫤🥺
நேபாளத்தில் நடந்ததை 2025 லேயே பேசி இருக்கார்..
நீ அவரை கிண்டல் செய்..
நீ அவரை மதிக்காமல் இரு..
ஆனால் ஒரு சிறந்த தலைவனை தமிழனை இழந்து நிற்கிறாய்..😔😔
என்று திருந்துமோ இந்த தமிழினம்..
அமைச்சர் பிரபு ஆதரவு பின்னணியோடு 120கோடி மதிப்பிலான கோவில் நிலம் விற்பனை ?
கோவில் : இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில்...
காரைக்குடியில் சரியாக அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு எதிராக இருக்கும் 2.3 ஏக்கர் கோவில் நிலம் மதிப்பு சுமார் 120 கோடி. இதை எப்படி இவர்கள் TVK ஆட்சிக்கு வந்த பின் இத்தனை வருடங்கள் பதியப்படாத பட்டா தனி நபரின் பெயரில் பதிவாகிறது? அதுவும் விசாரனை மொத்தத்தையும் வருவாய் அலுவலரை வைத்து ஒரே நாளில் பேருக்கு நடத்தி முடித்துள்ளனர்.
கோவில் நிலத்தை காப்பாற்றுவது மட்டுமே பொறுப்பாக கொண்ட சிறப்பு தாசில்தார் இதற்கு NOC வழங்கியுள்ளார் அதுவும் அவருக்கு அந்த அதிகாரம் இல்லாமலேயே! காரைக்குடி வட்டாச்சியர் ராஜா சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பட்டா மாறுதல் உத்தரவை பிறப்பிக்கிறார் அதுவும் மாறுதல் கேட்ட விண்ணப்பித்தவர் பெயர் நாராணமூர்த்தி ஆனால் மாறுதல் தனலட்சுமி பெயரில் ஆனால் இந்த இடத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற சொல்லி 2024ல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது.. வெறும் noc மட்டுமே ஆதாரமாக கொண்டு.
இந்த காரைக்குடி வட்டாச்சியர் A ராஜாவும் - அமைச்சர் பிரபுவும் இணைந்து இதை கட்சிதமாக முடிக்க வேலை செய்துள்ளனர் என்ற குற்றாச்சாட்டு உண்மையே...
இதை பற்றி முழு ஆய்வு ஆதாரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்...
இந்த பிரபு எனக்கு தெரிந்து சர்வதேச ஊழல்வாதிகள் பட்டியலில் மொத்த குடும்பத்தையும் சேர்க்கலாம் அப்படி இருக்கு இவர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் எல்லாம்.
நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்களில் ஒருவரான அண்ணன் திருச்சி சரவணன் அவர்கள் இதயத்தில் ஏற்பட்ட சிக்கலால் உடல்நலக்குறைபாடு அடைந்துப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
உடனடியாக, Micro Stent வைத்து மருத்துவச்சிகிச்சை செய்ய 2 இலட்சம்வரை செலவாகும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
வாய்ப்புள்ள உறவுகள் உதவிபுரிக!
Gpay : 9487165559
ame: Saravanan Raj Mohan
Account no: 8746936621
Bank name: Kotak Mahindra Bank
IFSC code: KKBK0008756
Upi id: saravanan90@kotak
Branch : TRICHY-TANJORE ROAD.
நாம் தமிழர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நண்பர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் @_ITWingNTK ஒரு சிறிய வேண்டுகோள்!
அண்ணனின் @Seeman4TN பதிவுகள் பெரும்பாலும் ஆக்கப்பூர்வமானவை; மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சமூகப் பிரச்சினைகளைப் பேசுபவை. ஆனால் நான் கவனித்தவரை, இதுபோன்ற நீண்ட பதிவுகளை அனைவரும் முழுமையாகப் படிப்பதில்லை. கட்சி சார்ந்த பிள்ளைகள்கூட அவற்றைப் பெருமளவில் பகிர்வதில்லை.
நமது கருத்துகள் இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டுமென்றால், நமது சமூக வலைதள வியூகத்தைச் சற்று மாற்ற வேண்டிய நேரம் இது.
அண்ணன் பேசும் சமூகப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல், மக்கள் உரிமைகள், மொழி, விவசாயம் போன்ற ஒவ்வொரு முக்கியமான விஷயத்தையும் சிறிய காணொளிகளாக (Reels & Shorts) பிரித்து வெளியிட வேண்டும். நீண்ட உரையிலிருந்து 30–60 விநாடிகளில் ஒரு கருத்தை மட்டும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லும் காணொளிகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும்.
இன்றைய சமூக வலைதளச் சூழலில் இதுபோன்ற குறுங்காணொளிகள்தான் மக்களிடம் மிக வேகமாகச் சென்றடைகின்றன. திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிடும் குறுங்காணொளிகளின் வடிவத்தைக்கூட ஒரு நல்ல முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.
கட்சி தற்போது பத்திரிகையாளர் சந்திப்புகளைக் குறைத்திருப்பது ஒரு வகையில் நல்ல முடிவாக இருக்கலாம். நமக்குத் தேவையான நேரத்தில் உரிய ஊடக வெளிச்சத்தைத் தர மறுத்த ஊடகங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அண்ணனின் முகமும் கருத்துகளும் பரிச்சயமாக வேண்டிய மிக முக்கியமான இடம் — மக்களின் மனம்.
அதை இன்று மிக எளிதாகச் சென்றடையும் பாதை Reels & Shorts.
அண்ணன் ஒரு நீண்ட பதிவை வெளியிடும்போதே, அதிலிருந்து முக்கியமான கருத்துகளைத் தேர்ந்தெடுத்து, அவ்வப்போதே அதே இடத்தில் அண்ணனைப் பேச வைத்து பல குறுங்காணொளிகளாக வெளியிடலாம். அவற்றை கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மட்டுமல்லாமல், நாம் தமிழர் பிள்ளைகள் அனைவரும் ஒருங்கிணைந்து பரவலாகப் பகிர வேண்டும்.
ஒரு நீண்ட உரை → பல குறுங்காணொளிகள் → பல்வேறு மக்களிடம் ஒரே கருத்தின் தொடர்ச்சியான சென்றடைவு. இதுதான் பலபேரின் அல்கோரிதத்தை தமிழ் தேசியம் வழியில் வர வைக்கும்.
இது வெறும் சமூக வலைதள விளம்பரம் அல்ல. நாம் நம்பும் அரசியலையும், அண்ணன் முன்வைக்கும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான இன்றைய காலத்தின் முக்கியமான அரசியல் கருவி.
என்னைப் போன்ற ஒவ்வொரு நாம் தமிழர் பிள்ளைக்கும் இந்தக் கடமையும் பொறுப்பும் இருப்பதாகவே கருதுகிறேன்.
தம்பியின் அன்பு வேண்டுகோளைப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#நாம்தமிழர்!
“சீமான் அண்ணன் மீது நிறைய மரியாதை பற்று உண்டு” என்று சொல்லி திரியும் ஒரு பிரபல ஊடகவியலாளர்களுக்கு இந்த காணொலியை அனுப்பினேன்….. இது அண்ணன் 2025ல் “மரங்களின் மாநாடில்” பேசியது - 2026ல் அந்த பேரழிவை கண் முன்னே காண்கிறோம்….
இதை Xல் பதிவிட்டு “இது அண்ணன் சொன்னது” என்று போட கூட மனமில்லை பாவம் அந்த வித்தியாசமாக கூவி பேட்டி விருந்தினர்களை வரவேற்கும் அந்த ஊடகவியலாளருக்கு !!
அவர் எதை பதிவிட வேண்டும் என்பது அவர் உரிமை ஆனால் பொதுமக்களிடையே காணொலியில் சாட்சியுடன் அசிங்கபட்ட போது ஆதரவு கரம் நீட்டியவரிடம் கூட நன்றி இல்லை 😟
ஜோஸ் அலுக்காஸ் CEO, நடிகர் விஜயை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கலாம், சந்திப்பு நடந்த இரண்டாவது நாள் இத்திட்ட அறிவிப்பு வந்தது. இப்போது ஒரு பைசாவுக்கு அந்த குடும்பமே டென்டர் எடுக்கிறது. ஜோஸ் அலுக்காஸ் விளம்பரங்களில் நடித்து, brand ambassador ஆகவும் விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்சன் ஆக்ரோ சேர்மன் RG சந்திரமோகன், விஜயை சந்தித்த இரண்டாவது நாள் ஆரோக்யா பால் விலையேற்றப்படுகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.
'லஞ்சம் ஒழிந்தது. இனி அரசு பஸ் விலைக்கே டிக்கெட் தருவோம்' என தனியார் பஸ் ஓனர்களை மீடியாவிற்கு பேட்டியளிக்க வைத்தனர். இன்று, தனியார் பஸ்களில் அரசின் அனுமதியின்றி சத்தமில்லாமல் டிக்கெட் விலையேற்றி விட்டனர். விஷயத்தை மடைமாற்றி சரிகட்டுவற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு பேருந்தில் பாெதுமக்களை எவ்வாறு கனிவோடு கவனிக்க வேண்டுமென ஓட்டுனர் நடந்துனருக்கு பேருந்தில் வகுப்பெடுக்கும் ரீல்ஸ் பதிவிட்டு ஒப்பேற்றுகின்றனர்.
எம்எல்ஏக்களுக்கு கார் கேட்ட மறுதினமே, டென்டர் ஏதும் விடாமல் மஹிந்த்ரா கார்கள் மட்டும் சட்டமன்றத்தில் வந்து நிற்கின்றன. M&M ஆட்டோமொபைல் பிரசிடென்ட் வேலுச்சாமி விஜயை பதவியேற்ற பின் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் அறையை 5½ கோடி மதிப்பில் புதிதுபடுத்த டென்டர் விடும் முன்பே, வேலைகள் தொடங்கி பாதிமுடிந்துவிட்டன.
அரை மணி நேர டென்டரிலிருந்து அரை நாள் டென்டரெல்லாம் வரலாறு காணாத வகையில் இந்த நூறு நாட்களில் நடந்தேறி விட்டன.
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களது பராக்கிரமத்தை பாரீர்..
- கவியரசன் திருஞானம்
ஏன் தமிழ்தேசியம் வேனும் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு இவன் தான்!
தமிழனா இருந்தா அவர்களின் வலி புரிந்திருக்கும் இல்ல நாம பேசாம இருக்கலாம் என்றாவது தோணும் ஆனா இராணுவம் அனுபனுமாம்!
ஏண்டா எங்க ஊரில் நல்லா திண்ணு வாழ்ந்துகிட்டு பூர்வகுடிகளை வெளியேற்ற இராணுவம் அனுப்ப சொல்லுவ?
நடிகர் எம் ஆர் ராதா ஒரு சிறந்த நடிகர் அவரும் கூத்தாடி தான்? ஆனால் அவர் சொன்னது 100% உண்மையான வார்த்தைகள் இந்த நல்லவர் வார்த்தையை தமிழகத்தைச் சேர்ந்த யாரும் கேட்கவில்லை. தற்போதும் அப்படித்தான் தொடர்கிறது.
திருவாசகமாய் ஒரு வாசகம்:
என்னடா நடிகன், கலைஞன், தலைவன்னு ஆளாளுக்கு ஒரு பேரு வச்சிக்கிறானுக.
ஆனா நம்ம பாட்டன் காலத்துல அவனுக்கு இருந்த ஒரே பேரு என்ன தெரியுமா? கூத்தாடி!
கூத்தாடின்னா யாரு?
ஊர்ல உள்ளவன் எல்லாம் காலைல எந்திரிச்சு காடு கரை வயலுன்னு உழைக்க போவான். வெயில்ல வேர்வை சிந்துவான். இந்த கூத்தாடி பய என்ன பண்ணுவான் தெரியுமா?
மத்தியானம் வரைக்கும் தூங்குவான். சாயங்காலம் ஒரு மூட்டைய தூக்கிட்டு வீடு வீடா போவான், "ஆத்தா கூத்தாடி வந்திருக்கோம், கொஞ்சம் அரிசி, கம்பு, சோளம் இருந்தா போடுங்க தாயி"னு பிச்சை எடுப்பான். அதுதான் அவனுக்கு சோறு.
உழைச்சு களைச்சு வந்த மக்கள் எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்க ராத்திரி கூத்து பார்க்க வருவான். அப்போ தான் இவன் வேலையே ஆரம்பிக்கும்.
கொஞ்ச நேரம் ஆடுவான், பாடுவான், அழுவான், சிரிப்பான். மக்களுக்கு கொஞ்சம் உற்சாகம் கொடுத்துட்டு மறுபடியும் அரிசி மூட்டைய தூக்கிட்டு போயிடுவான்.
இவ்வளவு தான் கூத்தாடி பரம்பரை!
அதுக்கு என்னமோ படிப்பு, தொழில், உழைப்பு எதுவும் கிடையாது. ஒழுங்கா படிச்சு ஒரு வேலைக்கு போறவன் எவனாவது கூத்தாட வருவானா? ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவன் தான் அங்க போவான். அவன் வேலையே நடிக்கிறது தான்.
இன்னைக்கு என்ன ஆச்சு? விஞ்ஞானம் வளர்ந்துருச்சு. அன்னைக்கு அவன் நம்ம வீடு தேடி வந்து அரிசி வாங்கினான்.
இன்னைக்கு அதே கூத்தை ஒரு கொட்டாயில போட்டு, அதுக்கு தியேட்டர்னு பேரு வச்சி, நம்மள அவன் கொட்டாய் தேடி வர வச்சி காசு வாங்குறான். அவ்வளவு தான் வித்தியாசம். அன்னைக்கு அரிசி, இன்னைக்கு காசு.
அதுக்காக? கூத்தை பாரு, ரசி, கை தட்டு, விசில் அடி, 25 பைசா கொடுத்துட்டு வீட்டுக்கு வந்துரு. அதை விட்டுட்டு அவனையே தலைவனாக்கி, அவன் கட் அவுட்டுக்கு பால் ஊத்தி, அவன் பின்னாடி மன்றம் வச்சி போனா எப்படி?
*ஹோட்டல்ல பிரியாணி நல்லா இருக்குன்னு சாப்பிடலாம், அதுக்காக சமைச்சவனையே வீட்டு மாப்பிள்ளை ஆக்குவோமா?*
கூத்துக்கு காசு கொடு, தலைவன அங்க தேடாத. காசு கொடுத்தா எப்படி வேணாலும் நடிப்பான், அது தான் அவன் தொழில் தர்மம்!
- நடிகர்,M.R.ராதா- 1970 களில் பேசியது..
ஊழல் குறித்த கோப்புகள் மேஜை மேல் இருந்தும் நேரம் பார்த்து காத்திருப்பவன் ஒன்னு மக்களை பற்றி சிந்திக்காத சந்தர்ப்பவாதியா இருக்கணும், இல்லை அவனை விட பெரிய ஊழல்வாதியா இருக்கணும்.
நீங்க எப்படி?! @TVKVijayHQ
இது மாற்றம் அல்ல, மற்றொரு ஏமாற்றம் 😏
1.தலைவரை அருண்ராஜ் அடிக்கடி வந்து பார்ப்பார். ரகசியமாக வந்து பார்ப்பதற்கு பதிலாக, ஐஆர்எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேரடியாக உங்களை பார்க்கிறேன் என்று கூறினார். அவரின் மாமனார், மாமியார் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ஏற்கவில்லை. ஆனால் எங்கள் தலைவர், தைரியமாக ராஜினாமா செய்யச் சொன்னார்..!
2.ஆதவ் அர்ஜுனாவை எனக்கு கண்டிப்பாக
வேண்டும் என்று தலைவரிடம் கேட்டு
வாங்கினேன். உங்களுடன் நிறைய நாள் அவர்
இருந்தார். ஒரு புத்தகம் வெளியிட்டதால், அவரை
விட்டார்கள். நாங்கள் அழைத்துக் கொண்டோம்.
3.சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அவர் ஒரு தொகுதி கேட்டார், முடியாது என்று கூறினேன். அந்த தொகுதி தான் வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் 30 ஆண்டுகளாக இருக்கிறார் என்று கூறினேன். உடனே தலைவரிடம் சென்று, நான் அந்த தொகுதியில் நிற்கவில்லை என்றார். நீங்கள் விரும்பும் தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் தலைவர். எனக்கு வேண்டாம், என் மகனுக்கு சீட் கொடுங்கள் என்று கூறினார்.
4. செங்கோட்டையன் அண்ணன் வந்த போது, சீனியர் வருகிறாரே என நினைத்தேன். வந்தார், தலைவருக்கு அவரை மிகவும் பிடிக்கும். எனது தொகுதியை எனக்கு கொடுப்பீர்களா என தலைவரிடம் கேட்டார். ஏன் என்னிடம் கேட்கிறீர்கள், அது உங்கள் தொகுதி என முதல்வர் கூறினார். நீங்கள் கொடுக்கும் தொகுதியில் நிற்கிறேன் என பணிவோடு கூறினார்
5. நிதியமைச்சர் மரியவில்சன் வரும் போது, முடி வளர்த்து வந்தார். தேர்தலில் நிற்கவேண்டும் என்றால் இந்த முடியை வெட்ட வேண்டும் என்றேன். ஒரு வாரம் கழித்து முடி வெட்டி வந்தார். கண்டிப்பாக நீங்கள் எம்எல்ஏ ஆகிவிடுவீர்கள் என்று கூறினேன்.
6. துணை சபாநாயகராக இருக்கும் ரவிசங்கரை நிற்க சொல்லும் போது, தன்னிடம் ரூ.75 ஆயிரம் தான் இருப்பதாக சொன்னார். நீ நில், நான் பார்த்துக் கொள்கிறேன் என முதல்வர் சொன்னார். இன்று அவர் துணை சபாநாயகராக இருக்கிறார்"
7. சர்க்கார் என்கிற படத்தில் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால், நீங்கள் தான் திரும்ப வந்திருப்பீர்கள். அது கிழித்ததால் தான் நீங்கள் இன்று ஆட்சியில் இல்லை
8. 32 ஆண்டுகளுக்கு முன் தலைவரின் தந்தை கஷ்டப்பட்டார், ஆனால், தங்கத் தட்டில் வைத்து தான் அவரது பெற்றோர் பார்த்துக் கொண்டார்...!
இவ்வளவும் நிர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த சட்டமன்றத்தில் பேசியது..
இவ்வளவும் பேசி எதாவது பலன் இருக்கிறதா என்று பாருங்கள்..
கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசவேண்டியதை, கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேச வேண்டியதை எல்லாம் , நேரத்தை ஓட்டுவதற்கு சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்...
காவிரி விவகாரம் பற்றியோ, மேகதாது பிரச்சினை பற்றியோ அவர் சட்டமன்றத்தில் பேசி யாராவது பார்த்திருக்கிறோமா..?! நீரில்லாமல் அல்லாடும் டெல்டா விவசாயிகள் பற்றியோ, தண்ணீர் தராத கர்நாடக அரசுக்கு எதிராக ஒரு வெங்காயத்தையாவது உரித்திருக்கிறாரா இந்த அமைச்சர்...?!
தி.நகர் தொகுதியில், இந்த மாபெரும் மக்கள் பிரதிநிதிக்கு வாக்களித்தவர்கள் எல்லாம், வீட்டில் கண்ணாடி இருந்தால், அதில் முகத்தைப் பார்த்து இருமுறை துப்பிக்கொள்ளவும்...
🤮🤮🤮