"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
2021 மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ பள்ளிக்கல்வித் துறை கூட்டத்தை நடத்திக் கொண்டவர்கள் தான் இந்த ஓடுகாலி முன்னேற்றக் கழகப் பண்ணையார்கள்.
2024 நவம்பர் மாதம் உதயநிதி பிறந்தநாளின்போது, “ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?” என அப்போதே பாடிக்கொண்டிருந்தபோது, பள்ளி மாணவர்களை கொளுத்தும் வெயிலில் விளையாட்டு மைதானத்தில் நிற்க வைத்து உதயநிதிக்கு “Happy Birthday” வாழ்த்து ��ூறும் வீடியோவை வெளியிட்ட விளம்பர வெறியர்கள்… இன்று ஒட்டுமொத்தமாக நல்லவர் வேடம் கட்டி நடிக்கிறார்கள்!
எதிர்கால வரலாற்றை மாற்றி எழுதப்போகும் மகத்தான பிஞ்சு மாணவர்களின் கரங்களில் மையை ஊற்றி, கைரேகை (Thumbprint) மூலம் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை உருவாக்கி, பிறந்தநாள் பரிசாக அளித்தவர்கள் நீங்கள் தான்.
பள்ளிக்கூடங்களை ரசிகர் மன்றங்களாகவும், கட்சி அலுவலகங்களை ஆட்சி இடங்களாகவும���, பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகத்தையே கமிஷன் வாங்கும் பணச் சுடுகாடாகவும் மாற்றிய பெருமை, ஆஸ்கர் நாயகர்களின் அமைச்சரவைக் காலங்களில்தான் நடந்தது.
வெற்றிக் கழக அரசு அமைந்ததும், பள்ளிகளில் அரசியல் நடவடிக்கைகள் அறவே கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
தவெகவினராக இருந்தாலும், பள்ளிகளுக்குள் அத்துமீறி நிர்வாகத் தலையீடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது!
கட்சி நிகழ்வை பள்ளியில் ஒளிபரப்பிய விவகார��்தில்கூட,
அதிரடியாக,
உடனடியாக
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் இது வெற்றித் தலைவர் அவர்களின் நேர்மையான அரசு!
மனசாட்சி உள்ள மக்களாட்சி!
என்றும் மக்களுக்கான ஆட்சி!
கரூர் கம்பென�� முதலாளியும் தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டுபவருமான மிஸ்டர் மெகா க்ளீன்(?), ஒரு ட்விட் போட்டு உருட்டி இருக்கிறார். அதில் தானும் உருண்டு புரண்டு, அய்யோ அம்மா நெஞ்சு வலி என்று கார்க் கதவை உதைத்துக்கொண்டே கதறிய��ு போலக் கதறி இருக்கிறார்.
“யாரை முதலமைச்சர் ஆக்கலாம்னு பார்த்தப்ப… அந்தப் பட்டியல்ல இவரும் இருந்தாருங்க… இவரு கெட்ட கேடு…” என்று ஸ்டாலின் சாரால் அன்பாக, பண்பாக, ஊழலற்ற நேர்மைக்காகப் புகழப்பெற்றவர்தான், இன்று நம் வெற்றித் தலைவரைப் பார்த்துக் கேள்வி கேட்கக் கிளம்பி இருக்கிறார். அதைக்கூடப் பொதுவெளிக்கு வந்து கேட்கவில்லை. அதையும் ஒளிந்தபடி ஓடிக்கொண்டேதான் கேட்டிருக்கிறார்.
அரசியல் வியாபார vending machine திமுகவால் purchase செய்யப்பட்டு, பின்னர் அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்தெடுக்கப்பட்டவர், டாஸ்மாக் ஊழல் Don, இன்று நேர்மையாளர் போலப் பேசுவது, நரி நடனமாடுவது போல நகைச்சுவையாக இருக்கிறது.
உண்மையும் நேர்மையும் இருந்தால், ஓடி ஒளியாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே? அந்தத் திராணி இல்லாமல் தெறித்து ஓடிய நீங்கள் எல்லாம்?????
நாடே சிரிக்கிறது இந்த நரித்தந்��ிர நாயகர், ஊழல் உத்தமரைப் பார்த்து. இனியும் உங்கள் உத்தமர் வேடம் எடுபடாது, மிஸ்டர் மெகா க்ளீன்(?).