தேவையில்லை உங்கள் பிச்சை...!!!
.
போனவாரம் ஸ்ரீரங்கம் போயிருந்தப்போ கோயில் முகப்புல இந்த சிறுவனை பார்க்க நேர்ந்தது. பச்சை வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தான். வாங்கிக் கோங்க என்று என் மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். என் மகள் வேணாம்டா என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவனும் விடுவதாக இல்லை. அக்கா வாங்கிக்கோங்க என்று வற்புறுத்தவே வேர்க் கடலை வேணாம் 10 ரூபாய் தர்றேன் வாங்கிக்கோ என்றார்.
அவன் வாங்க மறுத்து, என் குடும்ப சூழ்நிலை காரணமா பள்ளி முடிச்சுட்டு சாயந்திரத்தில இந்த வேர்க்கடலை வியாபாரம் பண்றேன். ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு வித்தா எனக்கு 5 ரூபா கிடைக்கும். 30 பாக்கெட் வித்துடுவேன். 150 ரூபாய் கிடைக்கும். நான் பிச்சை எடுக்க விரும்பல. என்னை இதுமாதிரி இலவசமா பணம் கொடுத்து சோம்பேறியா ஆக்க முயற்சிக்காதீங்க. ஒரு வாட்டி நான் இப்படி வாங்கிட்டா நாளடைவிலே அதுவே எனக்கு பழகிப் போயிடும். வியாபாரம் செஞ்சு சம்பாதிக்க நினைக்கிறேன். வேணும்னா காசு கொடுத்துட்டு வாங்கிக்கோங்க. இல்லைன்னா விடுங்கன்னு சொல்லிட்டு விறு விறு என நடக்க ஆரம்பித்தான். என் மகளுக்கு 'பொளேர்' என்று கன்னத்தில் அறைந்தது போலிருந்தது..
20 ரூபாய் கொடுத்து வேர்க்கடலை வாங்கினார் என் மகள். விடியற்கலை எழுந்து எங்க போய் வாங்கறான், அத எப்படி பொட்டலம் போடறான்கிற விவரங்களை சொல்லிக் கொண்டே வந்தான். அவன் நிறைய விஷயங்கள் பேசப்பேச என் மகள் பிரமித்துப்போய் கேட்டுக்கொண்டே வந்தார். சரி வா ஏதாச்சும் வாங்கித் தர்றேன் சாப்பிட்டுட்டு போ என்றார். அதற்கும் மறுத் தான். அக்கா நான் இதுலேயும் ரொம்ப கட்டுப்பாடோட இருக்கேன். யார் எது வாங்கிக் கொடுக்கனும்னு முயற்சி செஞ்சாலும் வேணாமுன்னு சொல்லிடுவேன்னான். ஏண்டா அப்படின்னு கேட்டா, ஒரு முறை யாராச்சும் வாங்கிக் கொடுத்து சாப்பிட ஆரம்பிச்சா அதுவும் நாளடைவில பழகிப்போய் எந்த வேலையும் செய்யாம யாராச்சும் வாங்கிக்கொடுப் பாங்களாங்கிற என்கிற எண்ணம் வந்துடும். இதுவும் ஒரு வகையான சோம்பேறித்தனத்திற்கான வழிதான் என்றான்.
அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கின்றான். அம்மா கோவில் வாசலில் பூ வியாபாரம். அவரைப் காண்பித்தான். பாவம் உடலெல்லாம் ஒட்டிப்போய் ஈனஸ்வரத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.
மொத்தம் இவனுடன் சேர்த்து 6 பிள்ளைகள். இவனுக்கு 2 தங்கைகள், இரண்டு அக்கா ஒரு அண்ணன். அப்பா நோய் வாய்ப்பட்டு 2 வருஷத்துக்கு முன்னாடியே இறந்து போயிட்டாராம். குடும்பத்துக்கு மாசம் எவ்வளவு செலவாகுதுன்னு பட்ஜெட் போட்டு பார்த்து இவங்க வங்க இவ்வளவு சம்பாதிக்கனும்னு கணக்கு போட்டு சம்பாதிச்சுகிட்டு பள்ளிக்கும் சென்று கொண்டு எல்லாருமே ஏதோ ஒரு வியாபாரம் செய்து குடும்பத்தின் செலவுகளை கவனித்துக்கொள்கின்றார்களாம்..
படிப்பு எப்படிடா எனக் கேட்டாள் மகள். 3 ரேங்குக்குள்ள வந்துடுவேன்க்கா என்றான். கடைசியாக உன் பெயர் என்னடா என என் மகள் வினவ ரங்கநாதன் என்றான்.. அவன் போனபின்னர் அந்த ரங்கநாதனே வந்து எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து சென்றதுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது என்றார் என் மகள்..
வறுமையில் வாடும் ஒரு சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக வாழ்க்கையில் உழைக்க சோம்பல் பட்டுக் கொண்டு பிச்சைக்காரர்களாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கைச் சக்கரம் அதிலேயே உழன்று முடிந்து போய்விடுகின்றது. திறமையைும் உழைப்பும் இருந்து யாசகம் கோராமல் எதையாவது செய்து சம்பாதிக்க வேண்டும் என்று கருதும் இதுபோன்ற சிலருக்கு ஆதரவு என்ற வகையில் இந்த சமுதாயம் பரிதாபப்பட்டு எதையாவது கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்களாக மாற்ற முயற்சிக்கின்றது. இது சமுதாயத்திற்கு தெரியாமலேயே பரிதாபம் உதவி என்ற பெயரில் நடந்துபோகும் விஷயம் தான். இதில் சிக்காமல் ஒரு சிலர் அதிலிருந்து தப்பித்து ஒரு குறிக்கோளுடன் உழைத்து வெற்றி பெறுகின்றார்கள்.
இந்தச் சிறுவனது பேச்சில் ஒரு நம்பிக்கையும் தெளிவும் இருந்தது. கண்களில் ஒரு பிரகாசம் தெரிகின்றது.இவன் வாழ்க்கையில் உழைத்து வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கின்றது.. பாராட்டுவோம்...
"வாழ்க நீ எம்மான்"
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay
இந்த முயற்சி பாராட்டத்தக்கது. மக்கள் நேரடியாக தொடர்பு கொள்ள ஒரு எளிய வழியை உருவாக்கியதற்கு நன்றிகள் 🙏ஆனால் இந்த எண்ணிற்கு பல முறை அழைத்தும் அழைப்புகள் ஏற்கப்படவில்லை. காரணத்தை சரி செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.இல்லையெனில் இது நல்ல பெயருக்கு பாதிப்பாக மாறக்கூடும். @CMOTamilnadu🙏
கோவை போகும் வழியில், மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்திய போது தான், அவரை கவனித்தேன், அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்... கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும், வாயில் விசிலுமாய், ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்...
வயோதிகம் காரணமாகவோ,
நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, தனது கால்களை வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார். டீ சாப்பிட்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. அந்த இடத்தின் என் மனைவியோடு சில செல்பிகளை எடுத்துக் கொண்டே மீண்டும் அவரை கவனித்த போதும், அவர் அமரவே இல்லை. இது போன்ற எளிய மனிதர்களை கண்டால், இயன்றதை தருவது, என் வழக்கம். அருகே சென்று, தோளைத் தொட்டு திருப்பி, நூறு ரூபாய் பண நோட்டை நீட்டினேன், பணத்தை கவனித்தவர், மெல்ல புன்னகைத்தே, வேணாம் சார் என மறுத்தார். அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் எப்படியும் அது, அவரது ஒரு நாள் சம்பளமாகத்தான் நிச்சயமிருக்கும்.
"ஏன்?" எனக் கேட்டேன்.
"அவங்க கொடுத்துட்டாங்க"..
" யாரு "
திரும்பி, பஸ் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார். நிச்சயமாய் நான் கொடுத்ததை போல, அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை. பணம் கண்டு பேராசைப்படாத அவரின் உண்மையும், உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தேன்.
" பேரென்னங்க ஐயா "
"முருகேசனுங்க "
" ஊருல என்ன வேலை "
" விவசாயமுங்க "
" எத்தனை வருசமா இங்கே வேலை செய்யறீங்க "
" நாலு வருசமா செய்றேங்க "
" ஏன் விவசாயத்த விட்டீங்க "
மெல்ல மௌனமானார். தொண்டை அடைத்த துக்கத்தை, மெல்ல மெல்ல முழுங்கினார். கம்மிய குரலோட பேச துவங்கினார். ஆனால், என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும், அவரின் முழு கவனமும், சாலையில் செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே குறிக்கோளாகவே
இருந்தது.
" எனக்கு திருநெல்வேலி பக்கம் கிராமமுங்க, ஒரு பொண்ணு, ஒரு பையன், விவசாயந்தான் முழு நேர பொழப்பே நமக்கு. ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். நானும் முடிஞ்சவரை கடனை உடனை வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணுமே விளங்கலே, கடைசிவரை கடவுளும் கண்ணே தொறக்கலை. இதுக்கு மேல தாளாதுன்னு, இருக்கிற நிலத்தை வித்து, கடனெல்லாம் அடைச்சுட்டு, மிச்ச மீதிய வச்சு, ஒரு வழியா பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணினேன். பையன் இருக்கானே, அவனை படிக்க வைக்கணுமே, அதுக்காக,
நாலு வருசத்துக்கு முன்னாடி தான் இங்கே வந்து வேலைக்கு சேர்ந்தேன். மூணு வேளை சாப்பாடு, தங்க இடம், மாசம் 7500/- ரூபா சம்பளம். இந்த வேலைய பாத்துகிட்டே, பையனை என்ஜினியருக்கு படிக்க வைச்சேன். படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், பையன் கோயம்புத்தூருல வேலைக்கு சேர்ந்தான்"....
"அப்படியா, உங்க பையன் என்ஜுனியரா, சூப்பர்.. சரி, அதான் பையன் வேலைக்கு போறான்ல, நீங்க ஊரோட போக வேண்டியது தானே பெரியவரே"...
"நிச்சயமா போவேன் சார்,
பையனே 'நீ கஷ்டப்பட்டது போதும்ப்பா, வந்துடு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்'னு தான் சொல்லுறான், ஆனா, இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு, அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் "
" எப்போ? "
" இன்னும் ஒரு அஞ்சு மாசம் ஆவும் சார்.. "
" சரி, கடவுள் இருக்கார் பெரியவரே, இனி எல்லாமே நல்லதாவே நடக்கும்".
பெரியவர் சிரித்தார்.
நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது,
ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து, அவரிடம் காதில் ஏதோ சொன்னான், பெரியவர் முகம் மலர்ந்தார்.
" கொஞ்ச நேரம் உட்கார சொல்லிருக்காங்க" என்றார்.
"என்ன சொன்னீங்க சார். கடவுளா.. கடவுள் என்ன சார் கடவுளு, அவன் ரொம்ப ரொம்பக் கொடுமைகாரன் சார். இல்லன்னா, ஊருக்கே சோறு போட்ட என்னைய, கடனாளியாக்கி இப்பிடி நடு ரோட்டுல நின்னு, சாப்பிட வாங்கன்னு
கூப்பிட வைப்பானா, மனுஷங்க தான் ஸார் கடவுள்.. முகம் தெரியாத, என்னை நம்பி இந்த வேலையை தந்து, நான் வேலைகாரன் தானேன்னு கூட பாக்காம, இதோ இந்த வயசானவனுக்கு கால்
வலிக்கும்ன்னு உட்காற சொல்ற, என் முதலாளி ஒரு கடவுள்..
'உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப்படனும், பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு, கூழோ, கஞ்சியோ இருக்கிறதை பகிர்ந்து சாப்பிடலாம்'னு சொன்ன, எம் பொண்ண சந்தோஷமா வச்சிருக்கிற, என் மாப்பிள்ளை ஒரு கடவுள்..
கஷ்டப் பட்டு அப்பா படிக்க வச்சதை கொஞ்சம் கூட மறக்காம, 'நீ வேலைக்கு போவாதப்பா, எல்லாம் நான் பாத்துகிறேன்'ன்னு சொன்ன
என் புள்ளை ஒரு கடவுள்..
நான் கடனை அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத, எனக்கு கடன் கொடுத்தவங்க எல்லாருமே ஒரு கடவுள்...
இங்கே வந்து என்னையும் சக மனுசனா மதிச்சி
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு எப்படி பட்டா கொடுத்தீங்க ? என்று கேட்ட முதியவரை தாக்கிய காவல்துறை அதிகாரி... 300 ஏக்கராம்...
இதற்கு தான் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமா ?
கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய அப்பாவி பெண்ணை தாக்கி இழுத்துச் சென்ற காட்சி ....
ஒரு நாயை கல்லால் எடுத்து அடித்தால் பீட்டா அமைப்பு ஓடி வந்து கேள்வி கேட்கிது
ஸ்டாலின் ஆட்சில நடக்கக்கூடிய கொடுமைகள் எல்லாம் எந்த ஊடகத்திலும் வர மாட்டேங்குது
சி பி ஆர் தமிழர் என்பதற்காக அவரை ஜெயிக்க வைக்க முடியாது. அவர் பாரதிய ஜனதாவில் இருக்கிறார் , அவர் சங்கீ , ஆர் எஸ் எஸ். - உடான்ஸ் பிறப்புக்கள் உருட்டு.
அதே சி பி ஆரை நல்லகண்ணுவுக்கு எதிராக வெற்றிபெற வைத்தது யார் ? தி மு க தான்.
இதுக்கு பேர் தான் கருணாநிதித்தனம்
நேற்று இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட சேது விரைவு ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வாலாந்தரவை ரயில்வே கேட் அருகே வந்த போது அப்பகுதியில் இருந்த ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கண்டு சுதாரித்துக் கொண்ட சேது விரைவு ரயில் இன்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டு கிழே இறங்கி வந்து கேட்டை மூடும்படி கூறியதையடுத்து கேட் மூடப்பட்டது. இதுகுறித்து கேட் கீப்பரிடம் கேட்டபோது தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கேட்டை மூடவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
#Valantaravai | #RailwayGate | #Train | #Ramanathapuram