குஜராத் கலவரத்தின் POSTER BOY
இப்போது என்ன சொல்கிறார்?
👋👋👋👋👋
2002 குஜராத் கலவரத்தின்
அடையாளச் சின்னம் அசோக் மோச்சி.
அகமதாபாத்தில் தெருவோரம்
காலணிகள் பழுதுபார்க்கும் வேலை செய்த
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
2002 கலவரத்தின்போது எடுக்கப்பட்ட
அவரது புகைப்படம்
உலகம் முழுவதும் வைரல் ஆனது.
கையில் இரும்புக் கம்பியுடன்
ஆவேசமாக இருக்கும்
இந்துத்துவத்தின் ஆக்ரோஷமான முகமாக
அந்தப்படம்
ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டது.
👇👇👇👇👇
கலவரத்தின் முகமாக அறியப்பட்ட இவர்,
பின்னர் மனம் திருந்தினார்.
வெறுப்பு அரசியலுக்கு
எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.
தற்போது
தலித்-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி
பேசியும் செயல்பட்டும் வருகிறார்.
அவரது பேட்டி :
💥💥💥💥💥
"மத வெறுப்பு மற்றும் மத மோதல்களில்
சிக்க்கிக்கொள்ளும் தலித்துகளுக்கு
எந்தப் பயனும் கிடைக்காது.
நானே ஒரு உதாரணம்.
நான் ஒரு பிராமணனாகவோ அல்லது
வேறு உயர் சாதியைச் சேர்ந்தவனாகவோ
இருந்திருந்தால்,
குஜராத்தின் முதலமைச்சராகக் கூட
என்னால் ஆகியிருக்க முடியும்.
ஆனால் நான் ஒரு தலித் என்பதால்,
இந்து மதத்தில்
எனக்கு மதிப்பு, மரியாதை இல்லை.
மதவெறுப்பு பிரச்சாரங்களை நம்பி
ஏமாற வேண்டாம்.
💥💥💥💥💥