ஒரு மழைக்கால மாலைவேளை, கருமேகங்களும் மஞ்சள் வெயிலும் கலந்த ஒரு கலவையான வேலை... ஆடு மாடுகளை அந்தி மேய்ச்சலுக்கு விட்ட அந்த காலம்.நினைவுக்கு வருகிறது... எதையோ நினைத்து – நினைவே இல்லாமல் சுற்றிலுமுள்ள கட்டடங்களைப்பார்த்து வெறுமையாய் நிற்கிறான் அவன். நகர வாழ்க்கையின் ஆக்டபஸ் கரங்களுக்குள் அகப்பட்டுக்கொண்ட அவனின் நினைவுகள் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பயணிக்கிறது.
அந்த அவன் நீங்களாகவும் இருக்கலாம்…உங்களை கடந்து போகும் இவனாகக் கூட இருக்கலாம்...
தட்டான் பூச்சிகளில் இந்தியாவில் 300 வகைகள் இருக்காம். தட்டான் தாழப் பறந்தால் மழை வரும். ஆனால் இப்பொழுதெல்லாம் தட்டான் பூச்சிகளை அவ்வளவாகப் பார்க்க முடிவதில்லை..
தமிழ், பாரம்பரியம், என் பாட்டன், முப்பாட்டன் என்று வைகோகளும், சீமான்களும் சீறும்போதெல்லாம் இவனு��்கு ஆத��்கமாக இருக்கும். பாரம்பரியம்- அரசியல் செய்வதற்கும், இயற்கை வேளாண்மை கார்ப்பரேட் உலகுக்கும் நகர்ந்துவிட்டது... முன்பெல்லாம் மாலைவேளைகளில் வயல் வரப்புகளில் மாடு மேய்த்துக்கொண்டு நடக்கும்போது, எங்கோ வடிக்கும் சாதத்தின் நறுமணம் காற்றில் பறந்து வரும்...
அந்தக் நெல்லுக்கு வயலை பக்குவப்படுத்துவதே ஒரு கலை. அவனுக்கு அவன் தாத்தா வின் நினைவுகள் வருகிறது... நெல்லுக்கு அவர் வயலை பக்குவ��் படுத்துவதே ஒரு தனிக்கலை. மண்ணின் மீது அவருக்கு ஒரு தீராக்காதல். கொழிஞ்சிப் பூண்டும், வாதநாராயண இலையும், மாட்டுச்சாணியும் போட்டு வயலைப் பக்குவப்படுத்தியப்பின்பே நடவு ஆரம்பிப்பார்…
கருக்கலிலேயே வயக்காட்டுக்குப்போய் பயிர்களுடன் பேசி விளையாடுவார்...
அவனுக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்... செல்போன் டவர் வந்ததால சிட்டுக்குருவி இனமே அழிஞ்சி போச்சினு பேசிக்கிறாங்களே... அது உண்மையா...
என்னடா சிட்டுக்குருவி இனம் செல் போன் ரேடியேசனால தான் குறைஞ்சி போச்சான்னு GOOGLE பகவான் கிட்ட கேட்ட���ன்... அவரு அப்படி எந்த RESEARCH ரிசல்ட்டும் இல்லன்னுட்டார்...
சென்னை - பெங்களூர் மாதிரி மெட்ரோ சிட்டில இல்லாத செல்போன் ரேடியேசனா? அங்கல்லாம் நிறைய சிட்டுக்குருவி இருக்கே...
இப்படித்தான் அவங்க தாத்தா சொல்லுவாராம் - கரண்ட் வந்த பிற்பாடு பிசாசு இனமே இல்லாம போயிடுச்சாம்... சரி இப்ப நம்ம விசயத்துக்கு வருவோம்...
அவனுக்கு ஒன்னுமே புரியல... யார கேக்கலாம்? யோசிச்சுப் பாத்தா... ஒன்னுமே புரியல...
காட , ��வுதாரி, கானாங்கோழி, தூக்கணாங்குருவி, மரங்கொத்தி, மைனா குருவி, ஆப்பவால் குருவி, தேன் சிட்டு, வெள்ளெலி, கல்லெலி, கரம்பெலி, கருக்குருவி, பெருமாகழுகு, குள்ளநரி, வங்கா நரி, முயல், கீரிப்பிள்ளை, வயல் நண்டு, சாணிபுழு, மண்புழு, பாப்பாத்தி பூச்சி, பச்சை-சிவப்பு பொன்வண்டு, பொறிவண்டு, பீவண்டு, மின்னல் பூச்சி இப்படி எதையுமே காணம்...
புரட்டாசி அட மழைக்கு ஈசல் புறப்பட்டுச்சினா முன்னால் இருக்கிற ஆள��� தெரியாது... இப்ப ஈசலையும் காணம் ஒன்னையும் காணம்...
ஐப்பசி மழைக்கி பச்சை பிடிச்சா நிலமெல்லாம் மஞ்ச போத்தி நெருஞ்சியா பூத்துக்கிடக்கும்... பூத்துக் கெடக்கற தும்பச் செடில புதுசு புதுசா பட்டுப்பூச்சிங்க உக்காரும்... இப்ப நெருஞ்சி பூக்கறதுக்கும், தும்பப் பூக்கறதுக்கும் நிலமே இல்ல... எல்லாம் பிளாட் போட்டு வீடா கட்டிட்டாங்க... இங்க ஒரு வீடுனா கூப்புடற தூரத்துலதான் இன்னொரு வீடு இருக்கும்...
அந்தந்த பட்டத்துக்கு ஏத்தமாதிரி ஒரே மாதிரி���ா வெள்ளாமயா எல்லாரும் பண்ணுவாங்க... அப்பதான் பூச்சித் தாக்கமும் இருக்காது விளைச்சலும் நல்லா இருக்கும்... இப்ப அந்த கட்டுப்பாடே இல்லாம போச்சி...
கம்பு - சோளம் பால் கட்டற சமயத்துல எங்கள எல்லாம் குருவி முடுக்க காட்டுக்கு ஓட்டி விட்டுருவாங்க...
கொள்ள ( கொள்ளு) வறுத்து டவுசர் சோப்புல போட்டுகிட்டு டால்டா டப்பாவ கழுத்துல மாட்டிகிட்டு டம்டம்ன்னு அடிச்சிகிட்டே ஓடுவான்.. கருப்பஞ்சிட்டு வ��்துச்சினா மேகமே கீழ இறங்கி வந்தாப்ல ஆயிரம் ரெண்டாயிரம்னு ஒன்னா வரும்... சோளக்காட்டுல பொன்வண்டு பிடிச்சி விளையாடிகிட்டே பொழுது சாயிற வரைக்கும் குருவி முடுக்குவான்...
மாட்டுச்சாணியும் ஆட்டுப்புளுக்கையும் போட்டு விவசாயம் பண்ற வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது... எப்ப வெள்ளக்காரன் விவசாயம் பாக்க ஆரம்பிச்சமோ அப்பமே எல்லாம் போச்சி...
அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது, தாத்தா ஏர் உழும் போது நூற்றுக்கணக்கான காக்கை, கொக்குகள் பறந்து வந்து வயலில் குவிந்து விடும்... கருக்குருவியும், காக்கைகளும் நுகத்தடியிலும், காளைகளின் திமிளிலும் மாறி மாறி உட்காரும்... உச்சி வெயில் வரைத் தொடரும் பறவைகளின் இந்த போட்டி இப்போதெல்லாம் காணக் கிடைப்பதில்லை...கலப்பைக்கடியில் பெயர்ந்து வரும் மண்ணில்- பூச்சிகளும், புழுக்களும் குருவிகளும் வயிறு முட்ட தின்றுவிட்டு மூக்கை கல்லிலும் மரத்து கிளைகளிலும் தேய்த்துக் கொண்டிருக்கும்...யூரியா, உரம், களைக்கொல்லி ன்னு போட்டு மண்ணு விஷமானதால புழுப்பூச்சி எல்லாம் செத்துப்போச்சி... அதத்தின்னு காக்கா குருவிக செத்ததுதான் மிச்சம்...
கதிரு பால் கட்றப்ப பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே பண்றதால பூச்சி எல்லாம் செத்து, அத கொத்தித்தின்ன பாவத்துக்கு குருவி இனமெல்லாம் அழிஞ்சி போச்சி...
இப்பல்லாம் எங்க இட்டேரி இருக்கு? எல்லாத்தையும் ஒழிச்சிக் கட்டிட்டு கம்பி வேலி போட்டுட்டாங்க... அப்பல்லாம் காடு கண்ணிகளுக்கு வேலினா இட்டேரிதான். பனமரம், வேப்பமரம், நுணாமரம், கிளுவமரம், அரப்பு மரம், பாலமரம்ன்னு ஒரே மரமா இருக்கும். கார முள்ளு, பெரண்ட, நாயுருவி, ஆவாரம் இப்படி எத்தனையோ செடி கொடிக காட்டுக்கு வேலியா இருந்துச்சி...
அவன் முன்ன சொன்னானே காட , கவுதாரி, கானாங்கோழி, தூக்கணாங்குருவி, மரங்கொத்தி, மைனா குருவி, ஆப��பவால் குருவி, தேன் சிட்டு, வெள்ளெலி, கல்லெலி, கரம்பெலி, கருக்குருவி, பெருமாகழுகு, குள்ளநரி, வங்கா நரி, முயல், கீரிப்பிள்ளை, வயல் நண்டு – இப்படி ஒன்ன ஒன்னு சார்ந்து இருந்த எல்லாமே இருப்பிடம் இல்லாமயும் விஷ விவசாயத்தாலயும் அழிஞ்சி போயிடுச்சி...உயிரி சமநிலை இல்லாம போனதால மயிலுக மட்டும் பெருகிப்போயிடுச்சி...
சில சமயம் வெட்டுக்கிளிக கூட்டமா வந்து விவசாயத்தையே ரெண்டொரு நாள்ல அழிச்சிட��ம்... அப்புறம் சாப்பிட ஒன்னும் இல்லாம அதுகளா செத்துடும்...அந்த வெட்டுக்கிளி நிலைமைலதான் மனுசங்க நாம இப்ப இருக்கிறோம்...
இப்போ சொல்லுங்க சிட்டுக்குருவிகள் காணாமப் போனதற்கு செல்போன் ரேடியேசன் தான் காரணமா?
நேற்று விடிய காலை 5 மணிக்கு இளம்பிள்ளை பஸ்டாண்டில் (ஆங்கில சொல்லை தமிழில் எழுதும் போது எந்த ' ன் / ண் " சரி என்று தெரியவில்லை) இருந்து வீட்டுக்கு பல நாய்ப்படைகளை நினைத்து பயந்து போய் நடந்து கொண்டிருந்தேன். புளியம்பட்டி மாரியம்மன் கோயில் அருகே ஒரு நாய் படுத்திருந்தது. முழங்கால் முட்டிகள் படபடவென அடித்து கொண்டதை உணர முடிந்தது. செருப்பு சத்தம் வராமல் மெதுவாக நடக்கிறேன்... திடீரெண்டு துள்ளியெழுந்த நாய், பத்து பதினைந்தடி ஓடி குரைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டது. அப்���ோது தான் எனக்கு ஒன்று புரிந்தது. நாம் அமைதியாக கடக்கும் போது எதிராளி நம்மீது ஒரு பயத்தோடு தான் இருப்பான் என்று..
இன்று சின்னப்பம்பட்டி வழியாக ஜலகண்டாபுரம் போய்க்கொண்டிருந்தேன். சந்தபேட்டை தாண்டியவுடன் ஒரு 40-50 பேர் கூட்டமாக இருந்தனர். ஏதோ விபத்து போல. அருகில் இருந்த டீ கடையில் நின்ற போது அங்கே இருந்த இரண்டு பெருசுகள் பேசிக்கொண்டிருந்தது...
" பிளசர் காரு.. டயர் பஞ்சர் இழுத்து கிட்டு போய் முன்னால வண்டில இடிச்சிபிட்டான்... பைக் காரன் பாவம் வண்டி முச்சூடும் நொறுங்கி போச்சி.. வண்டி மு��்னமாரி கெட்டி இல்லப்பா ... காத்தாட்டம் இருக்கு..."
நான் நினைத்துக்கொண்டேன்,
ஐயா எங்கள் வேலையே
B6 initiative, Weight reduction, cost cutting, fuel efficient, performance improvements இதையெல்லாம் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா ?
@itskJayaprakash இவங்களுக்கு எப்பவும் ஏதாவது மற்றவர்களை நோண்டி கொண்டே இருக்க வேண்டும்... முடியலனா நசுக்கி, பிதுக்கின்னு அழ வேண்டியது... என்ன பொழப்பு இது