@Dr_Ezhilan Do post the excerpts of your speech.. That's more imp that we pass on the info to the masses, the kind of scientific conversation we are having with kids Vs others..!!
So much Horse trading at horse's speed happening in blatant day light for the 1st time ever in TN history by TVK. Meanwhile @Ahmedshabbir20@tnrags are busy with ...!
@thedebatetamil Dinesh, request to tag Mr.Mani, seniorrrrrrrrrmost journalist to this elite banana list..!!
@RahulGandhi Hello, would you be available for a phone interview Tuesday Norwegian time. It would be interesting to hear how you view the visit to Norway.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
@RahulGandhi Thank you. But is this really d only way u could lend ur voice 4 ur own alliance..?? It's such a crucial election & i see there's no passion or real drive in your support. And I'm taking your own former msgs as a benchmark for comparison. Not the time 4 ego, u knw better..!!
அன்பிற்குரிய மதுரை மத்திய தொகுதி வாக்காளப் பெருமக்களே,
கடந்த ஒரு மாத கால தேர்தல் பரப்புரை நிகழ்வுகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீங்கள் காட்டிய அன்பு என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
எளிய மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதே உண்மையான வெற்றி என்பதை தங்கள் வாழ்வின் மூலம் எனக்கு கற்றுத் தந்த எனது முன்னோர்களைப் பின்பற்றி,
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், நான் சட்டமன்ற உறுப்பினராகவும் - அமைச்சராகவும் செய்த பணிகளைப் பாராட்டி, அதைத் தொடர வேண்டும் என நீங்கள் வெளிப்படுத்திய ஆதரவு எனக்குப் பெரும் மனநிறைவை அளித்துள்ளது.
ஏப்ரல் 23 அன்று, நீங்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது, சிலவற்றை சிந்தித்துப் பாருங்கள்:
கடந்த 10 ஆண்டுகளாக உங்களுடன் நின்றது யார்?
உங்கள் தொகுதி முன்னேற்றத்திற்குப் பாடுபட்டது யார்?
பொது வாழ்க்கையில் அனுபவம் உடையவர் யார்?
இனி வரும் காலங்களில் நமது தொகுதியை சரியான பாதையில் வழிநடத்தும் தகுதி படைத்தவர் யார்?
நமது மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தக் கூடியவர் யார்?
நமது மொழி, இனம், பண்பாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவர் யார்?
இவை அனைத்தையும் எண்ணிப் பார்த்து, நமது பணிகள் தொடர்ந்திட, உங்களில் ஒருவனாகிய எனக்கு 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#votefordmk