ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக ஆயுதம் வாங்க முயன்றார்கள் என பொய் குற்றம் சுமத்தி, UAPA மற்றும் ஆயுத சட்டத்தில் 2018 ஆம் ஆண்டு ஜம்ஷெத் ஸஹூர் பால் மற்றும் பர்வேஸ் ரஷீத் லோன் ஆகியோரை டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறை கைது செய்தது.
Association for Protection of Civil Rights (APCR) அமைப்பின் 8 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பின், டெல்லி
Patiala House Court இருவரையும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்துள்ளது!
சட்டப் போராட்டத்தில் இவர்கள் வெற்றி பெற்றாலும், 8 ஆண்டு கால வாழ்க்கையை தொலைத்துள்ளார்கள். அதற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்!
https://t.co/z1qfPV1TMW
மேற்குவங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள வேலையில், SIR மூலமாக இன்னும் வாக்குப்பறிப்பு வேலைகள் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
மொத்த மாநிலத்தில் 30+ இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 'Under Adjudication (UA)' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தீர்ப்பாயங்களின் மூலம் விசாரணையை எதிர்கொண்டு வாக்குரிமையை பெற வேண்டுமாம்!
19 தீர்ப்பாயங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றிற்கு இன்னும் அலுவலகமே முடிவாகவில்லை!
வேட்பாளர் மனு தாக்கல் செய்ய
ஏப்ரல் 9 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 வாரத்திற்குள் 30+ இலட்சம் பேர் எவ்வாறு தீர்ப்பாய விசாரணையை முடிக்க இயலும்!
ரகுநாத்கஞ்ச் தொகுதியின் முர்ஷிதாபாத் பகுதியிலுள்ள பூத் 192ல் (92.4% சிறுபான்மையினர் வாழ்கின்றனர்), 100% பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதியில் மட்டும் சுமார் 25k-30k வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அதே போல, சுஜாபூர் தொகுதியின் மால்டா பகுதியில், 33k+ வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
தீர்ப்பாய விசாரணைகள் மூலம்
NRCன் மறுவடிவமாக SIRஐ செயல்படுத்தி, ஆட்சியை பிடிக்க பாஜக பெரும் சூழ்ச்சியை செய்கிறது! நீதிமன்றம் தான் இந்த அநீதியை தட்டிக்கேட்க வேண்டும்!
https://t.co/pUtKv9Hbzt
மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் பகுதியில், ராம் நவமி ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் கடைகளை அடித்து நொறுக்கி அட்டூழியத்தில் ஈடுபடும் ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.
பாதையோர கடை வியாபாரிகளின் கடைகளில் பொருட்களை திருடி அதையே உண்ணும் மனித மிருகங்கள்! மே.வ அரசு இவர்கள் ஒவ்வொருவரையும் கைது செய்து, சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
https://t.co/d95peKdrzM
பெங்களூருவில் உள்ள PES பல்கலைக்கழகத்தில் படிக்கும் அஃப்பான் என்ற மாணவரை,
வகுப்பறையில் வைத்து சுமார் 10 முறைக்கு மேல் தீவிரவாதி என
ஏசியுள்ளார் பாடம் எடுத்த Dr.முரளிதர் தேஷ்பாண்டே.
ஈரான் போரிற்கே உங்களை போன்றோர் தான் காரணம் என வெறிபிடித்த மனநோயாளியை போலவும் பேசியுள்ளார். இவர்களெல்லாம் ஆசிரியர் பொறுப்பிற்கே அறுகதை அற்றவர்கள்.
இவரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யாமல், முழுமையாக பதவி நீக்கம் செய்து, வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
https://t.co/jgxmZStlbI
பிஹார் மாநிலம் நலந்தாவில் கடைக்கு சென்று வந்த பெண்ணை தேவையில்லாமல் சந்தேகப்பட்டு, சாலை நெடுக இழுத்து சென்று அப்பெண்ணை பலரும் சேர்ந்து மானபங்கப்படுத்தி, நெற்றியில் குங்குமம் வைத்து, வலுக்கட்டாயாமாக திருமணம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது சைக்கோ கும்பல்.
தனக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ளன என்று கூறியும், இந்த கொடுமைகளை செய்துள்ளனர். மீண்டும் மணிப்பூர் சம்பவவத்தை நினைவுபடுத்துகிறது இந்த காணொளி.
இரண்டு பேர் மட்டுமே கைதாகியுள்ள நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டு அதிகபட்ச தண்டனை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். பிஹாரில் பாஜகவின் நிழல் ஆட்சி நடக்கும் போதே இந்நிலை என்றால், முழுமையாக ஆட்சி மாற்றம் அமைந்தால் பெண்களின் பாதுகாப்பு மேலும் மோசமடையும்!
https://t.co/EF5dEqZsfO
FCRA சட்டத் திருத்தத்தின் மூலம் சிறுபான்மை சமூக மக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு கட்டமைகப்பட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நிறுவனங்கள் என அனைத்தையும் சட்டரீதியாக அரசே சுருட்டி கொண்டு கார்ப்பரேட்களுக்கு கொல்லைப்புறமாக தாரைவார்க்கும் முயற்சி கொண்டுவரப்பட உள்ளது.
வக்ஃப் திருத்த சட்டத்தின் மூலம் சங்பரிவார சிந்தனை கொண்டவர்களை வக்ஃப் சொத்தின் நிர்வாகத்தில் புகுத்தி, பிரச்சினைகளை உருவாக்குவதற்கு பதிலாக, சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களை ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில், முறைகேடு நடந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டுவிட்டு, உரிமைத்தை பறித்து, மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய ஒன்றிய அரசு இறங்கியுள்ளது.
அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்த சட்டம் கொண்டு வர துப்பில்லாமல், NGO க்களை முடக்கி சிறுபான்மையினரை மேலும் நசுக்கும் இந்த முயற்சியை அனைவரும்
கடுமையாக எதிர்க்க வேண்டும்.
https://t.co/P8iBuYBXzc
ஜம்மு காஷ்மீரில் ஜூலை 1997 ஆண்டு கூர்கா ரெஜிமெண்ட் படையால் பிடித்து செல்லப்பட்ட அப்துல் வாஹித் வானி என்ற இஸ்லாமியரை சிறையில் வைத்தே இராணுவ அதிகாரி மேஜர் V.P.யாதவ் கொலை செய்துள்ளார்.
கொல்லப்பட்டவரின் எந்த தடையங்களும் கிடைக்காத நிலையில் சட்டரீதியான அனுமானத்தின் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் வானி கொல்லப்பட்டுள்ளார் என
ஸ்ரீநகர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
1989 முதல் இன்று வரை J&Kல் சுமார் 8000-10000 பேர் வரை காணாமல் போயுள்ளனர். தங்களின் கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமலேயே 1500-2500 பெண்கள் அரை விதவைகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் நீதி கிடைக்குமா?
https://t.co/WHmdY6ywtY
மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியின் மொத்த மக்கள் தொகையில் 25% பேர் முஸ்லிம்கள் உள்ளனர் . ஆனால், SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் 95% பேர் முஸ்லிம்களாக உள்ளனர் என ஆராய்ச்சி நிறுவனமான Sabar Institute அறிக்கை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் மம்தா பேனர்ஜி இத்தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் மீண்டும் வெற்றியை பெறுவதற்கு முஸ்லிம்களின் வாக்குகளை நீக்கும் வேலைகள் சட்டரீதியாக நடந்துள்ளது. மேற்குவங்க மக்கள் விழிப்புடன் வாக்களிக்க வேண்டும்.
https://t.co/kVTLEvGH6X
மணிப்பூரில் ஏப்ரல் 7, 2026 நடந்த குண்டுவீச்சில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டு அவர்களது தாய் காயமடைந்த சம்பவம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியதை அடுத்து மக்களின் கொந்தளிப்பான போராட்டம் வெடித்துள்ளது.
பாதிப்புகள் வெளி உலகிற்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, செய்திகள் வெளியே கசியாத வண்ணம் அரசு நிர்வாகம் வேலை செய்கிறது.
பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் மணிப்பூரின் நிலை மோசம் அடைந்துள்ளது.
https://t.co/ZRKldWHAvV
தன்னை எதிர்ப்பவர்களை விட ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டால், நினைத்ததை எல்லாம் சட்டமாக கொண்டுவரலாம் என்ற போக்கில் தொகுதி மறுவரை சட்டத்தை தான்தோன்றித்தனமாக அமல்படுத்த ஒன்றிய அரசு முனைந்து தோற்றுப்போனது.
மதீனாவில் முஹம்மத்(ஸல்) ஆட்சி செய்த காலங்களில், யூதர்கள் தன்னை எதிர்த்தார்கள் என்ற போதும், அவர்களை ஓரம்கட்ட சட்டம் போட்டு, அவர்களுக்கான உரிமைகளை பறிக்கும் வேலையை நபிகள் நாயகம்(ஸல்) ஒரு போதும் செய்ததில்லை.
#ThePerfectLeaderMohamed
https://t.co/grhk0igPRg
ஒன்றிய அரசின் வரிச்சுமையால், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்த மிகுந்த சிரமப்படுகிறார்கள்.
கல்நெஞ்சக்காரனாக ஆட்சியாளர் இருக்கக்கூடாது என எச்சரித்த முஹம்மத்(ஸல்) அவர்கள், தனது ஆட்சியில் மக்களின் நலனுக்ககாவே பாடுபட்டார்கள்!
#ThePerfectLeaderMohamed
கொலை, பாலியல் குற்றங்கள் செய்த அரசியல் தலைவர்கள் மலிந்திருக்கும் காலச்சுழலே இன்று நிலவுகிறது. தன் மீதான பாலியல் குற்றங்களை மடைமாற்ற ஈரான் மீது நியாயமின்றி போர் தொடுத்து பல்லாயிரம் பேரை கொன்றுள்ளார் டிரம்ப்.
உடன்படிக்கை எடுக்கும் போது கூட தன் மீது அந்நிய பெண்களின் கைபடாமல், தன் அரசியல் முன்னேற்றத்திற்காக எந்த மனிதநேயமற்ற செயல்களையும் செய்யாதவர் தான் நபிகள் நாயகம்(ஸல்)!
#ThePerfectLeaderMohamed
https://t.co/EdGgfVESWE
ஆட்சியாளர்கள் சாலையில் வருகிறார்கள் என்பதற்காக பெரும் மக்கள் கூட்டத்தை கூட்டுவது, அவசர தேவைக்கு செல்வோரை காக்க வைப்பது - இவற்றையெல்லாம் இன்றைய அரசியல் காட்சிகளாக பார்க்கிறோம். இதை ஆட்சியாளர்கள் விரும்பவும் செய்கிறார்கள்.
மாபெரும் சாம்ராஜ்யத்தை ஆண்ட முஹம்மத்(ஸல்) அவர்களோ, எளிமையின் சிகரமாக மக்களோடு மக்களாக வாழ்ந்தார்கள், பகட்டு வாழ்க்கையை வாழ துளியும் அவர்கள் விரும்பவில்லை!
#ThePerfectLeaderMohamed
கூட்டு மனசாட்சி என்ற பெயரில் பெரும்பான்மை சமூகத்தை திருப்திபடுத்த சிறுபான்மையினர் நலன்கள் பின்னுக்கு தள்ளப்படும் நோக்கில் தான், நாட்டில் சட்டங்களும், தீர்ப்புகளும் அமைகின்றன.
தனது 10 ஆண்டு கால ஆட்சியில் அனைத்து மக்களுக்கான சம உரிமையை வழங்கியவர் தான் முஹம்மத்(ஸல்). அவரது ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்களின் வழிபாட்டு உரிமை, வாழ்வுரிமை பாதுகாக்கப்பட்டது. இன்றைய ஆட்சியாளர்கள் அவரிடம் பாடம் கற்க ஏராளம் உண்டு!
#ThePerfectLeaderMohamed
https://t.co/ZVmb5TlqvX