#தமிழும்ராமனும்
பொயு 9ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவ, பாண்டிய அரசுகளைத் தோற்கடித்து எழுந்தது பிற்காலச் சோழர்களின் பேரரசு. விஜயாலய சோழன் தோற்றுவித்த இந்த வம்சம் குறுகிய காலத்திலேயே தமிழகம் முழுவதும் ஆளத் தொடங்கியது. மற்ற இரண்டு அரசுகளைப் போல அல்லாமல், சோழர்கள் ராமனுக்கு இன்னும் நெருக்கமானவர்களாக இருந்தனர். தங்களை சூரிய வம்சத்தினர் என்று குறிப்பிட்டுக்கொண்ட சோழர்கள், ராமபிரான் தோன்றிய இக்ஷ்வாகு வம்சத்தில் தாங்களும் வந்ததா அவர்களுடைய செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பதிவு செய்திருக்கின்றனர். சோழர்களின் வம்சாவளியைப் பற்றிச் சொல்லும்போது சூரியன், அவனுடைய மகனான மனு, மனுவின் மகனான இக்ஷ்வாகு என்று சொல்லி வரிசையாக அந்த வம்சத்தில் வந்த அரசர்களைப் பட்டியலிடுகின்றன அவர்களின் ஆவணங்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கது வீரராஜேந்திர சோழனின் சாராலச் செப்பேடும் அவனுடைய கன்னியாகுமரிக் கல்வெட்டும். சோழர்களின் மூதாதையான ராமபிரானின் வாழ்க்கையை மிகத் தெளிவாகப் பதிவு செய்கின்றன இந்த சாசனங்கள்.
அரக்கர் கொடுமையை அழிப்பதற்காக திருமால் பூமியில் திருஅவதாரம் செய்வது, தந்தை சொல் காக்கக் கானகம் செல்வது, தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் அமைத்து ராவணனை வதம் செய்தது போன்ற நிகழ்வுகளைக் கூறும் சாராலச் செப்பேடு, ராமன் அறத்தின் படி வாழ்ந்தவன், அறத்தின் படி எப்படி வாழ்வது என்று கற்பித்தவன் அதனால் மக்கள் அவனை தர்மவான் என்று புகழ்ந்தனர் என்பதைக் குறிப்பிடுகிறது. சாராலச் செப்பேட்டிலிருந்து சில ஸ்லோகங்களைப் பார்ப்போம். கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் இதே செய்திகள் வருவது முக்கியமான ஒன்றாகும்.
பொயு 9ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவ, பாண்டிய அரசுகளைத் தோற்கடித்து எழுந்தது பிற்காலச் சோழர்களின் பேரரசு. விஜயாலய சோழன் தோற்றுவித்த இந்த வம்சம் குறுகிய காலத்திலேயே தமிழகம் முழுவதும் ஆளத் தொடங்கியது. மற்ற இரண்டு அரசுகளைப் போல அல்லாமல், சோழர்கள் ராமனுக்கு இன்னும் நெருக்கமானவர்களாக இருந்தனர். தங்களை சூரிய வம்சத்தினர் என்று குறிப்பிட்டுக்கொண்ட சோழர்கள், ராமபிரான் தோன்றிய இக்ஷ்வாகு வம்சத்தில் தாங்களும் வந்ததா அவர்களுடைய செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பதிவு செய்திருக்கின்றனர். சோழர்களின் வம்சாவளியைப் பற்றிச் சொல்லும்போது சூரியன், அவனுடைய மகனான மனு, மனுவின் மகனான இக்ஷ்வாகு என்று சொல்லி வரிசையாக அந்த வம்சத்தில் வந்த அரசர்களைப் பட்டியலிடுகின்றன அவர்களின் ஆவணங்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கது வீரராஜேந்திர சோழனின் சாராலச் செப்பேடும் அவனுடைய கன்னியாகுமரிக் கல்வெட்டும். சோழர்களின் மூதாதையான ராமபிரானின் வாழ்க்கையை மிகத் தெளிவாகப் பதிவு செய்கின்றன இந்த சாசனங்கள்.
அஸ்மின் அம்ஸசதுஷ்டயேன பகவான் வம்ஸே அஜநிஷ்ட ப்ரபு
க்லிஷ்டாம் வீக்ஷ்ய வஸுந்தராம் அதிபலை ப்ரஷ்டை மஹாராக்ஷஸை
ராமோ லக்ஷ்மண ஸம்யுதோ அத பரத ஸத்ருக்ன யுக்த த்விதி
த்வந்த்வம் விஷ்ணு புஜாயுகத்வயதுலாம் ஊர்ஜ்ஜ்ஸ்வலாம் யத்யயௌ
அப்படிப்பட்ட வம்சத்தில் இறைவன் நான்கு அம்சங்களாக அவதரித்தார். வலிமை வாய்ந்த தீய அரக்கர்களால் துன்புறும் இந்தப் பூமியைக் காப்பதற்காக அவர் தோன்றினார். ராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகிய நான்கு சகோதரர்கள் இவ்வம்சத்தில் பிறந்து பெரும் புகழடைந்தனர்.
பிதரி தனய வ்ருத்தம் ப்ராத்ருஷு ப்ராத்ரு வ்ருத்தம் யுவதிஷு
பதி வ்ருத்தம் ஸத்ரவே சத்ரு வ்ருத்தம் முனிஷு
ந்ருபதி வ்ருத்தம் பாந்தவே பந்து வ்ருத்தம் ஸகலமகிலநாத
ஸிக்ஷயாமாஸ லோகம்
உலகிற்கு எல்லாம் தலைவனான அவன் (ராமன்) தந்தையிடம் மகன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று போதித்தான், சகோதரர்களிடம் சகோதர நடத்தையையும் பெண்களிடம் கணவனின் நடத்தையையும் எதிரிகளிடம் எதிரிகள் நடக்க வேண்டிய முறைகளையும் கற்பித்தான். முனிவர்களிடம் அரசர்கள் நடக்க வேண்டிய முறைகளையும் உறவினர்களிடம் உறவினர்கள் எப்படி நடக்கவேண்டும் என்பதையும் காண்பித்தான்.
ஸேதும் நேதும் கபிபலஸௌ பத்தவான் நைகமப்தௌ
சக்ரே வக்ரேதரகுணநிதி தர்ம்ம ஸேதுன் அஸேஷான்
கேதும் விபுத விபதாம் வ்யாபதாந்தாநவீநாம்
ராமம் காமம் கதயதி ஜன ஸத்குணானாம் நிதானம்
குரங்குகளைக் கொண்டு அவன் ஒரு சேதுவை (பாலத்தை) மட்டும் உருவாக்கவில்லை, நேர்மையான குணநிதியான ராமன் பல தர்ம சேதுக்களை உருவாக்கினான். தேவர்களின் எதிரிகளுக்கு வால்நட்சத்திரம் போல விளங்கினான். ஆகவேதான் மக்கள் ராமனை நல்ல குணங்களின் நிதி என்று புகழ்கின்றனர்.
ந க்ரோதேன ஜகான ராக்ஷஸ பதிம் காமேன ந ப்ரேயஸீம்
ஸ ப்ரத்யாஹ்ருதவான் மஹீஸசரிதம் கார்த்ஸ்ந்யேன சக்ரே பரம்
அரக்கர்களின் தலைவனான ராவணனை அவன் கோபத்தாலோ விருப்பத்தாலோ கொல்லவில்லை. தன்னுடைய மனைவியை கவர்ந்ததாலே ராவணனை ராமன் கொன்றான்.
சோழர்களின் சாசனங்கள் ராமனைப் புகழ்வதிலிருந்த ஒரு துளிதான் இது. இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்.
@Seeman4TN@ntkwomenswing டேய் மிசினரி கைக்கூலி நாயே, தமிழர்கள் எங்களுக்கு சித்திரை 1-தான் தமிழ்ப்புத்தாண்டு.. தை-1 எங்களுக்கு பொங்கல் பண்டிகை.. எங்க கலாச்சாரத்தை அழிக்க பாக்காத.. ஈனப்பயலே
@shanmugamchin10@annamalai_k ஏண்டா பரதேசி, தைரியம் இருக்குறவன், எதிர்கட்சியை களத்துக்கு போகவிடாம, தடுக்க மாட்டான்.. தொடை நடுங்கிதான் குறுக்கு வழியில் தடுப்பான்.. காமராஜர் திமுகவை இப்படி ஹேண்டில் பண்ணிருந்தா, திமுக மயிர்லதான் ஆட்சியை புடிச்சுருக்கும்.. பாஜகவை பார்த்து நடுங்கும் தொடை நடுங்கி பசங்களா
ராமபிரானைப் பற்றிப் பேசுகின்ற இரண்டு சங்க இலக்கியப் பாடல்களை நேற்று பார்த்தோம். இன்று சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறு என்ற நூலில் இருந்து ஒரு பாடல்
‘பெரியவங்க கூட இரு’, ‘பெரியவங்க சொல்றதைக் கேள்’ என்று நம் வீடுகளில் அறிவுரை சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதையே இந்தப் பழமொழி நானூறு பாடலும் சொல்கிறது. என்ன, அப்படிப் பெரியவர்களோடு சேர்ந்து யாரும் புகழடையாமல் இருந்ததில்லை என்று சொல்கிறது இது. அதற்கு என்ன ஆதாரம் என்று நம்மவர்கள் கேட்பார்கள் அல்லவா. அதற்கு உதாரணமாக ராமாயணத்திலிருந்து ஒன்றைச் சொல்கிறது இந்தப் பாடல்.
பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்
அழகிய மாலையை அணிந்த ராமனோடு சேர்ந்ததால், ராவணனின் தம்பியான விபீஷணன் இலங்கைக்கே அரசனாக ஆக முடிந்தது. ஆகவே பெரியோர்களைச் சேர்ந்தவர்கள் பெருமையடையாமல் போனதில்லை என்பது இதன் பொருள்.
ராமனைப் பெரியோன் என்றும் அவனைச் சேர்ந்தவர்கள் புகழடைவார்கள் என்றும் போற்றுகிற இந்தப் பாடலின் மூலம் ராமபிரானைத் தமிழர்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பது தெரிகிறதல்லவா.
#தமிழும்ராமனும் #பழமொழிநானூறு #RamMandirAyodhya
தமிழகத்தை ஆட்சி செய்த பேரரசர்களின் முக்கியமான சில கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா ?
அவற்றைப் பற்றிய தெளிவான விளக்கத்தைக் கொடுக்கிறது அடியேனுடைய இந்த நூல். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம் சுவாசம் பதிப்பகம் F20 அரங்கு.
#தமிழும்ராமனும்
பல்லவர்கள் ஒருபுறம் ராமனைப் போற்றியும் அவனுக்குக் கோவில் கட்டிக்கொண்டும் இருக்கும்போது, அதே காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியை ஆட்சி செய்த பாண்டியர்கள் மட்டும் சும்மாவா இருப்பார்கள். அவர்கள் ஒரு படி மேலே போய், ராவணனிடம் தாங்கள் சமாதானம் கூடப் பேசினோம் என்று தங்கள் செப்பேடுகளில் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். தளவாய்புரச் செப்பேடு இப்படி ஒரு குறிப்பை அளிக்கிறது. இது ஒருபுறமிருக்க, வால்மீகியின் ராமாயணத்தின் பாண்டியர்களைப் பற்றிய குறிப்பும் இருக்கிறது.
ततो हेममयम् दिव्यम् मुक्ता मणि विभूषितम् ||
युक्तम् कवाटम् पाण्ड्यानाम् गता द्रक्ष्यथ वानराः
தெற்கு திசை நோக்கி சீதையைத் தேடிச் செல்லும் வானரங்களுக்கு வழி சொல்லும் சுக்ரீவன், தாமிரபரணி நதியைத் தாண்டியவுடன் பாண்டியர்களின் நகரான கபாடபுரம் (கவாடம்) இருப்பதைக் கூறுகிறான். பாண்டியர்களின் வரலாற்றுக் குறிப்புகள் மதுரைக்கு முன்னால் பாண்டியர்களின் தலைநகராகக் கபாடபுரம் இருப்பதாகச் சொல்வது இங்கே கவனிக்கத்தக்கது.
இடைக்காலத்தில் பாண்டியர்கள் எழுப்பிய ராமபிரானுக்கான கோவில்களில் முக்கியமானது திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜகந்நாதப் பெருமாள் கோவில். இதன் அருகே உள்ள சேதுக்கரையிலிருந்துதான் இலங்கைக்கு ராமர் பாலம் அமைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இங்கே தர்ப்பைப் புல்லில் தலைவைத்து ராமபிரான் படுத்திருந்த காரணத்தால் இந்த இடம் தர்ப்பசயனம் என்றும் அழைக்கப்படுகிறது. படுத்திருக்கும் கோலத்தில் உள்ள ராமர் விக்ரஹம் இந்தக் கோவிலில் உள்ள அபூர்வங்களில் ஒன்று. இடைக்காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டிருந்தது என்பதை இந்தக் கோவிலுக்கு மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இருபத்தோரு பாசுரங்களால் இந்தக் கோவிலைப் புகழ்ந்திருக்கும் திருமங்கையாழ்வார், இதைப் புல்லாணி என்றே அழைக்கிறார்.
வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த
வல்லாளன் பின்போன் நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என்தன்னை ஏசிடினும் பேசிடினும்
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே
என்கிறார் ஆழ்வார். பிற்காலப் பாண்டியர்களின் பல கல்வெட்டுகள் இந்தக் கோவிலில் உள்ளன.
இதுபோன்ற பல கோவில்களுக்கும் திருப்பணி செய்திருக்கும் இடைக்காலப் பாண்டியர்காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று திருநெல்வேலி நான்குநேரி மனோன்மணீஸ்வரர் கோவிலில் உள்ள மாறஞ்சடையனான வரகுண பாண்டியன் காலத்தைய கல்வெட்டு. பொயு 863ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு அதே ஊரைச் சேர்ந்த “ஶ்ரீ ராகவப் பெருமாளுக்கு” பத்து மா நிலக் கொடை கொடுத்ததைப் பதிவு செய்கிறது. இப்படிப் பாண்டியர்களாலும் போற்றப்பட்ட தயாளன் ராமபிரான்.
#RamMandirAyodhya #பாண்டியராமன்