மதிப்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய எங்கள் ஹீரோவிடம் ஒரு கேள்வி, சீனா இத்தகைய ரோபோ விளையாட்டுகளை நடத்துவதன் மூலம் உலகிற்கு சொல்ல வருவது என்ன? நமது இந்தியா ரோபோ தயாரிப்பதை விட ரோபோவை செயல் இழக்கச் செய்யும் தொழில்நுட்பத்தை கட்டமைக்க வேண்டும் சரிதானே ஐயா?
@major_madhan
தலைவா, போதை பொருள் விநியோகத்துக்கு எதிரா உங்க ஸ்டைல்ல சாட்டைய எடுத்து விலாசுங்க. போதை பொருட்கள் விநியோகத்தை முற்றிலும் இரும்பு கரம் கொண்டு அடக்குங்க. இனி எந்த ஒரு உயிரும் இதனால் பறிபோகக்கூடாது. முக்கியமாக, கோயம்புத்தூர கொஞ்சம் கவனிங்க...பொருள், கேரள வரத்து போல!
@CMOTamilnadu
Warmest birthday greetings to our Hon President of India, Tmt. Droupadi Murmu avl.
Praying to the Almighty to bless her with a long, healthy life and continued strength in guiding our great nation.
@rashtrapatibhvn
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today.
My heartfelt greetings to Chairman Thiru PV Ravi avl on 50 years of academic excellence, to CEO @DrAnusharavi avl, to the dedicated faculty, and to the proud parents of these brilliant graduates.
We are stepping into a profound new era. In 1982, TIME’s "Man of the Year" was a computer; in 2025, it was AI. Urged the youth not to fear AI taking away jobs, but to adapt and harness it to evolve. The future belongs to those who take bold risks to solve the world's biggest problems.
Students should dream big with a global vision, be lifelong learners, stay humble, and never forget their Alma Mater. (1/2)
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
@gunag786gmailc1 யாருப்பா நீங்க எல்லாம்.... அண்ணாமலை அவரது பக்கம் தவிர வேறு யாரும் எந்த பக்கத்தையும் ( அண்ணாமலை பெயரில்) துவங்கவோ அல்லது பின்தொடரவோ வேண்டாம்.
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.
கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.
எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது.
@annamalai_k@BJP4TamilNadu வா தலைவா... வா. உங்களால் மட்டுமே மக்கள் நலனை கருத்தில் கொண்டு இப்படி தீமைகளை எதிர்த்து களம் காண முடியும். எங்கள் வீரத் திருமகன் நீங்கள் நீடூழி வாழ்கவே!