கோவா விமான நிலையத்தில் @CISFHQrs வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்ட���ச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொட��்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல.
பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமைய��� என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். #StopHindiImposition
கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவ���ிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் @CISFHqrs வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?
பல்வேறு மொழி பேசும் மக்���ளின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.
#StopHindiImposition
73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று @GWR சாதனை படைத்துள்ள #கலைஞர்100 பன்னாட்டு மாரத்தான் போட்டியை நடத்திக் காட்டியுள்ளார் மாண்புமிகு @Subramanian_ma அவர்கள். #Guinness சாதனை மாரத்தானாக மட்டுமல்ல, முதன்முறையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருநர்களும் பங்கேற்ற வகையில், சமூகநீதி மாரத்தானாகவும் இது திகழ்ந்து கலைஞருக்குச் சிறப்பு சேர்த்துள்ளது. எண்ணிக்கையோடு எண்ணத்திலும் உயர்ந்து #KalaignarCentenaryMarathon அமைந்துள்ளது!
உடலுறுதியையும் உள்ளவுறுதியையும் வளர்க்கும் இத்தகைய விளையாட்டுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்! இளைஞர்களும் பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வத்துடன் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் மூலம் கி��ைக்கும் பதிவுத்தொகை, #ChepaukTriplicane தொகுதியிலுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் என்ற மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அண்ணன்@Subramanian_maஅவர்களுக்கு நன்றி.
சுயமரியாதை, பகுத்தறிவு, இனமானம், சமூகநீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட கருத்தியல்களால் தமிழ்நாட்டை வளமாக்க "தம்பி" என தட்டியெழுப்பி திமுக-வை உருவாக்கினார் அண்ணா! "உடன்பிறப்பே" என்றார் கலைஞர்!
நம் கொள்கையில் வென்றிட உங்களில் ஒருவன் அழைக்கிறேன் #உடன்பிறப்புகளாய்_இணைவோம்#JoinDMKonline