சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கக்கூடிய, சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தனியார் நிறுவனங்கள் அமைக்க உள்ள ஜவுளிப் பூங்கா மற்றும் சாயப்பட்டறை ஆலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்களின் சார்பாக நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசினேன்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும்
ஈர்க்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த
மு.அதிபதி, மு.செந்தூரான் இவர்களின் ஒருங்கிணைப்பில்
திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை உள்ளடக்கிய தொகுதிகளை சார்ந்த
முத்துக்கருப்பன் மு.சபரி ரா.ராகுல�� பா. தமிழ் ச. பார்த்தசாரதி பி. பிரேம்குமார் வே. தனுஷ் சி. பிரவீன் குமார் மு. சரத் தி. நந்தகுமார் செ. அஜய் பா. பாலாஜி ரா. தருண்குமார் த. அருண் பாண்டியன் தீபக் குமார் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில்
ஐநூறுக்கும்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வை மாநில அமைப்புக்குழு உறுப்பினர் திரு. குமரவேல்.
மாவட்ட பொறுப்பாளர்கள்
மு பெரியசாமி க ரூபன் சுந்தர்
சு வேளாங்கண்ணி
சண்முகம் அலெக்ஸ்
லியோன் ராஜ் ஆகியோர் முன்னெடுத்த இந்நிகழ்வில் என்னோடு கட்சியின் முன்னணி நிர்வாகிகளான திரு.வெற்றிக்குமரன். அவர்களும் திரு.சுப.தனசேகரன். அவர்களும் பங்கேற்றனர்.
இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்காவின் திமிர்ப்பேச்சைக் கண்டிக்கிறோம்.
நேற்றைய தினம், இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கச்சத்தீவைப் பார்வையிட்டு, அந்தத் தீவை எந்தக் காலத்திலும் விட்டுத் தரமாட்டோம் என்று கூறியிருப்பது, தமிழக மீனவர்களின் உரிமைக்கும் , ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கும், நேரடியாகச் சவால்விடும் அகந்தை மிகுந்தப் பேச்சாகும்.
அவரது இந்தப் பேச்சை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
கச்சத்தீவு என்பது இலங்கையின் சொத்து அல்ல! அது தமிழர்களின் உரிமை நிலம். எங்கள் முன்னோர்களின் வியர்வை, எங்கள் மீனவர்களின் இரத்தம், எங்கள் தாய்மொழி தமிழின் அடையாளங்கள் அனைத்தும் கலந்த புனித நிலம்.
இலங்கை ��திபரின் திமிர்ப் பேச்சுக்குப் பிறகும்,
ஒன்றிய அரசும், குறிப்பாகத் தமிழகம் சார்ந்த அமைச்சர்களும், இன்னும் மௌனமாக இருப்பது, வரலாற்றின் பெரும் துரோகம் ஆகும் .
கச்சத்தீவு விவகாரத்தில், இந்தியா நமது உரிமையை வலியுறுத்தத் தயங்கினால், அது தமிழக மக்களின் நம்பிக்கையை, முற்றிலும் இழக்கும் என்பதே உண்மை.
இதுவரை, எண்ணூறுக்கும் அதிகமானத் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றும், பல இலட்சக்கணக���கான ரூபாய் மதிப்புள்ளப் படகுகளைப் பறித்தும், சிறையில் அடைத்தும், கொடுமை செய்து வரும், இலங்கை ��ட்சியாளர்களுக்கு எதிராக, ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
அதோடு, தமிழக அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான சட்ட, அரசியல் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படாவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும், எச்சரிக்கை செய்கிறேன்.
தமிழ்நாட்டில் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை வ��திக்க வேண்டும்!
வேளாண்மையிலிருந்து உழவர்களை வெளியேற்றுவது, கடல் பகுதிகளிலிருந்து மீனவர்களை வெளியேற்றுவது, துணி உற்பத்தியிலிருந்து நெசவாளர்களை வெளியேற்றுவது இதுதான் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கிறது.
இவர்களின் திட்டங்கள், பொருளியல் கொள்கைகள் ஆகிய அனைத்தும் இத்திசையிலேயே செயல்பட்டு வருகின்றன. இப்போது சில்லரை வணிகத்திலிருந்து மண்ணின் வணிகர்களை வெளியேற்றும் திட்டத்தை, மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, ஜி.எஸ்.டி. ஆன்லைன் வர்த்தகத்தால் நாட்டில் சில்லரை வணிகம் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால், மளிகை வணிகம் மட்டுமின்றி, சிறு, குறு, நடுத்த வணிகர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, அதானி, அம்பானி, டி மார்ட் மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காக உள்நாட்டு சில்லரை வணிகர்களும், உழவர்களும், சிறு உற்பத்தியாளர்களும் நசுங்க வேண்டும் என்பதே, ஒன்றிய அரசின் திட்டமாகும்.
தற்போது, டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தா��், நகர்ப்புறங்களில் உள்ள சில்லரை விற்பனையகங்களில் உணவு, பானங்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களின் விற்பனை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால், உள்ளூரைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் சரிவை சந்தித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றால், சில்லரை வணிகம் செய்ய அந்நியரை அனுமதிக்கக் கூடாது. ஆன்-ல���ன் வர்த்தகத்தைத் தடைசெய்ய வேண்டும். தவறான ஏற்றுமதி, இறக்குமதியை முறியடிக்க வேண்டியது கட்டாயம்.
எனவே, அக்கோரிக்கைகளை முன்னிறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முன்னெடுத்துள்ள மாபெரும் போராட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிப்பதோடு, அப்போராட்டத்திற்கு துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் மேனாள் முதல்வரும், சுதந்திர போராட்ட வீரரும் தமிழ்நாட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்காக இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவரும் தொண்டுள்ளம், தூய்மை, எளிமை, தியாகம், நேர்மை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக இன்றுவரை விளங்குகின்ற தமிழ்நாட்டு மக்களால் பெருந்தலைவர் என்று அன்போடு போற்றப்படுகின்ற அய்யா திரு.காமராஜர். அவர்களின் பிறந்தநாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புகழ் வணக்கம்.
அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள் : அ��சு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்!
மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் பெரும் பங்களிப்புடன் இருந்த வங்காளத்தின் முன்னாள் முதல்வர் மருத்துவர் பி.சி.ராய் நினைவாக 1991ம் ஆண்டு முதல் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கொரோனா போன்ற கொள்ளை நோய் காலத்தில் த���்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவம் பார்த்த மருத்துவர்களின் தியாகத்துக்கு ஈடு எதுவும் இல்லை.
தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படும், இந்த நாளில், அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றிட, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
குறிப்பாக, அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அக்கோரிக்கை நிறைவேற்றப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இருப்பினும், அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு இங்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்திற்காக தொடர்ந்து போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு இருப்பது வேதனை அளிக்கிறது.
சேலம்- மேட்டூரில் இருந்து சென்னை கலைஞர் நினைவிடம் நோக்கி, அரசு மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, பாதயாத்திரை மேற்கொண்டனர். ஆனால், அம்மருத்துவர்களை கைது செய்த அரசு, அவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.
கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி அரசு வேலை கேட்டு, 4 ஆண்டுகளாக கண்ணீர் விட்ட பிறகும் அந்த குடும்பத்தின் மீது அரசு கருணை காட்டவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.
எனவே, 2009 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354யை, மறுசீராய்வு செய்து ஊதிய பட்டை 4ஐ, 13 ஆவது ஆண்டில் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார மருத்துவ நிலைய மருத்துவர்களுக்கு படித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவை தவிர, வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் மருத்துவர்கள் போற்றப்பட வேண்டிய இந்த தருணத்தில் நோயாளிகளாலே மருத்துவர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்��ப்படுவதும் போன்ற சம்பவங்கள் தொடர்வது சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
#happydoctorsday2025
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும்
ஈர்க்கப்பட்டு
ஏராளமானவர்கள் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி
திரு.ரமேஷ்.மாநில நிர்வாகி,
திரு.நெப்போலியன்,மாநில நிர்வாகி,
திரு.அஜித். தொகுதி செயலாளர், திரு.ஃபாருக்கான். தொகுதி தலைவர்,
திரு,சுப்பிரமணி. தொகுதி பொருளாளர், ஆகியோரின் ஒருங்கிணைப்பில் கிரு���்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற இணைப்பு வி��ா பொதுக்கூட்டத்தில் தங்களை
தமிழக வாழ்வுரிமைக் கட்சியில்
இணைத்துக்கொண்டனர்.
அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் "பாசிச பாஜக அரசே பழங்குடியின அழிப்புப் போரை உடனடியாக நிறுத்து அமைதிப் பேச்சுவார்த்தையை உடனே நடத்து" என்கின்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
வரலாற்று நாயகர்களுக்கு
நூற்றாண்டு விழா!!
தமிழ்த்தேசிய ஆசான்கள்
புலவர்.கு.கலியபெருமாள்-
ஐயா வே.ஆனைமுத்து
ஆகியோரின்...
#நூற்றாண்டு_விழா#மாபெரும்_பொதுக்கூட்டம்
சிறப்பு அழைப்பார்கள்:-
தோழர் கொளத்தூர் த.செ.மணி
தலைவர்-திராவிடர் விடுதலைக் கழகம்
---------------------
தோழர்.தியாகு
பொதுச்செயலாளர் -
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
----------------------
தோழர்.வாலாசா வல்லவன்
மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி
----------------------
தோழர்.பொழிலன்
தமிழக மக்கள் முன்னனி
-----------------------------
தோழர்.சு.ப.உதயகுமார்
மாநில ஒர��ங்கிணைப்பாளர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
----------------------------
தோழர்.ஊர்மிளா வள்ளுவன்
(புலவர் கலியபெருமாள் பேத்தி)
-----------------------------------
பேருரை:-
தமிழினப் போராளி
முத்தமிழன். தி.வேல்முருகன் அவர்கள்.
நிறுவன தலைவர்-தமிழக வாழ்வுரிமைக் கட்சி
இடம்: மஞ்சக்குப்பம் திடல்-கடலூர்
நாள்:21/06/2025-சனிக்கிழமை
மாலை-4மணிக்கு
வரலாற்றை படிப்போம்!!
வரலாற்றை படைப்போம்!!
===============================
நிகழ்வு ஒருங்கிணைப்பு -
நூற்றாண்டு விழா குழுவினர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
வழித்தடம்:-
https://t.co/mVyYvVCeA1
காஞ்சிபுரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பள்ளி மாணவர்கள் 3 பேர் உள்பட 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
காஞ்சிபுரத்தில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்துக் கொடுத்து, பள்ளி மாணவர்கள் 3 பேர் உள்பட 4 பேர் ��ூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இச்சம்பவத்தில், கல்வி பயின்று வரும் பள்ளி மாணவர்களே ஈடுபட்டிருப்பது மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்கள் 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இருப்பினும் இது போதுமானதல்ல. அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ���நாட்டில் பள்ளி சிறுமிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடங்களிலும், பொதுப் போக்குவரத்துக்களிலும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீப காலங்களாக அதிகரித்து வரும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு போதைப்பொருள் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை ஒழித்திடவும், படிப்படியாக மதுபானக் கடைகளை மூடிடவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதை தடுப்பதற்கு காவல்துறை உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரு��் சூழலில், பள்ளி, கல்லூரி, தொழில் நிறுவனங்களில் மாணவிகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கிடவும், அவருக்கு உரிய கவுன்சிலிங் சிகிச்சை அளித்து தொடர்ந்து அச்சிறுமி கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள ���ேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் இன்றைய திருவண்ணாமலை மாவட்ட ஆய்வு பயணத்தின் போது அங்கு செயல்பட்டு வரும் அமராவதி முருகையா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆய்வு பயணத்தில் இடம் பெறாத போதும் அப்பள்ளியை பார்வையிட்டு பள்ளியின் சமை��ல் கூடம் தூய்மையாக பராமரிக்கப்படு��ிறதா என்பது குறித்தும் அங்கே உணவுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள காய்கறி உள்ளிட்ட சமையல் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு மாணவிகளிடம் அவர்களின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்ததோடு கழிப்பிடம் உள்ளிட்ட பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினோம்.