பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நா���ு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
@shafeeqkwt திமுகவை விமர்சனம் செய்ததற்கு ம���்னிப்பு கேட்க வேண்டும். கூட்டணிக்கு வந்தால் கவுண்டமணி கப்பல் ல வேலையினு போவார்ல அது மாதிரி MLA சீட் 2, mp சீட்1 தான் . அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும். அப்படி என்றால் கூட்டணிக்கு சேர்க்கலாம்
ஜமீன்களிலும் - பண்ணை���ளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று!
நாற்பதுகளில் இருந்த பேறிஞர் அண்ணா, இருபதுகளில் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தன் தம்பிமார்களுடன் கொட்டும் மழையில் தொடங்கிய தி.மு.கழகம் இன்று 78-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த 78 ஆண்டுகளில் ���ல எட்டாத உயரங்களுக்குத் தமிழ்ச்சமுதாயத்தை ஏற்றிவிட்ட பெருமை கழகத்துக்கு உண்டு.
சமூக நீதி - மாநில உரிமை - பெண் விடுதலை - தொழில் வளர்ச்சி என கொள்கை அடித்தளத்தில்,
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், தன்னிகரற்ற மாநிலமாக்கியது வரை கழகம் ஆற்றிய பணிகள் ஏராளம்.
எத்தனையோ அடக்குமுறைகள் - ஏவப்பட்ட நெருக்கடிகள் - புதிய புதிய எதிரிகள், இத்தனைக்குப் பிறகும் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் துடிப்போடு நடைபோடுகிறது தி.மு.கழகம்.
நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கழகத்தின் மேன்மைக்கு அயராது உழைப்போம்.
கருப்பு - சிவப்பு வெறும் நி��மல்ல - நம் உயிர் என்று முழங்குவோம்!
வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்!!
#DMK78
ஈராயிரம் ஆண்டு இருளுக்கு எதிராக அறிவுத்தீப்பந்தம் ஏந்திய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் இன்று!
‘மானமும் – அறிவும் மனிதர்க்கு அழகு. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்று முழங்கிய தந்தை பெரியாரின் பிறந்த நாளை, தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு #சமூகநீதி நாளாக அறிவித்தது.
திராவிட இயக்கத்தின் அடித்தளமும் – அடையாளமுமாக திகழும் தந்தை பெரியாரின் பணிகளை இன்னும் வேகமாக முன்னெடுப்போம்.
எக்காலத்துக்கும் பொருந்தும் பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் அதிகமாக கொண்டு சேர்ப்போம். தமிழ்நாட்டின் முற்போக்கு முகத்தை நிலைநாட்டுவோம்.
வாழ்க பெரியார்!
ஓங்கட்டும் அவர் புகழ்!!
#Periyar #SocialJusticeDay
தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!
பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.
ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.
பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.
ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள���; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்
தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு #DravidianModel ஆட்சியில் மேற்கொண்டோம்.
நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின��� முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலை��்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் என்பவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருந்த நிலையில், நேற்றைய தினம் அவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
காவல்துறையினரின் வன்முறைக்கு உள்ளாகி, உடல்நலம் பாதிக்கப்பட்டு தான் அந்த இளைஞர் உயிரிழந்திருப்பதாக அவரது உறவினர்கள் கூறுவது, இது காவல் மரணமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இம்மரணத்திற்குப் பொறுப்பேற்று, இதில் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
வேறொன்றும் சொல்வதற்கில்லை. குழந்தைக்குட்டிகளை பத்திரமாக பார்த்துக்கொண்டு இன்றைய ஒரு பொழுதைக் கடந்துவிடு��்கள். என்ன கொடுத்தாலும் உயிர் திரும்பவும் வராதில்லையா..
அரசாங்கத்தை நோக்கி எந்தக் கேள்விகளும் திரும்பாதபடி தவெக மிகக் கச்சிதமாக இந்த மாதத்தைக் கடந்துவிட்டது.
இந்த மாதம் முழுவதும் திமுக கூட்டணி உடைந்த கதையும் காங்கிரஸ் திமுக மோதல் கதையும் தான் முழுக்க விவாதி���்கப்பட்டுள்ளது.
எந்த மக்கள் பிரச்சனையும் விவாதிக்கப்படவில்லை.
ஆணவப்படுகொலைகள், பாலியல் குற்றங்கள் விவாதிக்கப்படவில்லை.
நிறுவனமயமாக்கப்பட்டுள்ள பொய் பரப்பல் குறித்து விவாதிக்கப்படவில்லை.
அமைச்சர்களின் பொறுப்பற்ற பதில்கள் விவாதிக்கப்படவில்லை.
இன்னும் எக்கச்சக்கம் விவாதிக்கப்படவில்லை.
ஆனால் திமுக கூட்டணி முறிந்ததை விழா எடுத்துக் கொண்டாடுகிறது புதிய தலைமுறை.
திமு�� to தவெக மாற்றம் பற்றி மட்டும் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு விசிக - சி.பி.ஐ - சி.பி.ஐ(எம்) பதில் சொல்லும்படி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கம் வெளியில் சொல்லிக்கொள்வது ஒன்றானாலும் உள்நோக்கம் ஒன்றும் புரிந்துகொள்ள முடியாதது அல்ல.
எல்லா பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் இதே கேள்விகள், இதே பதில்கள். ஏன்? அதே தான் இங்கேயும். ஏன்?
இதற்குப் பின்னால் உள்ள உந்துவிசை ஒன்றும் அடையாளம் காண முடியாததல்ல.
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாத��.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்த���ன் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச��� செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்��ி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!