சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான பூமியை சமம் செய்யும் பணியில் தானே JCB வாகனத்தை இயக்கி பணியை தொடங்கிய தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.!
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எ��்கே போகிறது?
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்��ட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.
இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், ��தற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது ��திகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்ட��வது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும்.
@CMOTamilnadu @tnpoliceoffl
#LawAndOrderBreakDown
சென்னை பெருங்குடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள்.!
@followers@highlight
பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆசான்களில் ஒருவரான, சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 -ஆம் பிறந்தநாளையொட்டி, சென்னை - பெருங்குடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய போது.!
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய "மக்கள் காவலர்" மருத்துவர் அய்யா அவர்கள்
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில்
உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினேன்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 -ஆம் பிறந்தநாளையொட்டி தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
தேர்தல் காலத்தில் ஒரு வேடம், மற்ற நேரத்தில் இன்னொரு வேடமா? மக்களை ஏமாற்றக் கூடாது
2024-ஆம் ஆண்டில் தேர்தல் வந்ததால் அந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் ரூ.1000 வழங்கப்பட்டது
2025ஆம் ஆண்டில் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லை என்று தெரிகிறது
நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது
பொங்கலை மக்கள் ��ரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட வேண்டியது அவசியம்
நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே? - ராமதாஸ்
#PongalGift #Pongal2025 #Pongal #CMStalin #Ramadoss #TNGovt