மேடையில் பேசுவதற்குக்கூட பஞ்சாங்கம் பார்த்து 'நல்ல நாள், நேரம்' குறிக்கும் தலைவர் ஒருபக்கம்... "நாங்கள் சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை" என்று கூசாமல் பொய்சொல்லிக் கொண்டே, கணக்கச்சிதமாக ஸ்ரீரங்கம், மயிலாப்பூரில் மட்டும் பிராமண வேட்பாளர்களைக் களமிறக்கிய உங்களின் 'நிழல் முதல்வர்' மறுபக்கம்!
குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் கூட மக்களைச் சாதி ரீதியாகத் தனிமைப்படுத்தி, மோசடி செய்து பிரித்தாளும் சைதாப்பேட்டை தவெக எம்.எல்.ஏ அருள் பிரகாசத்தின் இந்தச் சாதிவெறிச் செயல்தான் நீங்கள் முழங்கும் சமத்துவமா?
#CasteistTVK
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைக்கும் விவகாரத்தில் திமுக இடையூறு செய்யாது. தி.மு.கழக அரசு செயல்படுத்திய மகளிர் உரிமைத்தொகை திட்டம், காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் உள்ளிட்ட நலத்திட்டங்களை புதிதாக அமையும் அரசு தொடர வேண்டும்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் (07-05-2026) தீர்மானங்கள்
தீர்மானம் : 1
தமிழ்நாட்டு மக்களுக்கும் தோழமை இயக்கங்களுக்கும் நன்றி
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் - இந்த வெற்றிக்காகத் தோளோடு தோள் நின்று பாடுபட்ட தோழமை இயக்கங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலம் முதல் மக்கள் இயக்கமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அதனை மக்களும் உணர்ந்து நன்றி உணர்வோடு வாக்களித்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகாமல் போனாலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. அந்த வகையில் வலிமையான, அதிக அளவிலான நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ளார்கள் என்பதே உறுதியாகிறது.
பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, தமிழினத் தலைவர் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டு, திராவிட நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழிநடத்தப்படும் திராவிட முன்னேற்றக் கழகம், என்றும் மக்களுக்கான இயக்கமாகவே செயல்படும் என்று ஒருமனதாக உறுதியேற்கிறோம்.
தீர்மானம் : 2
கழகத் தலைவருக்கு நன்றி
14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை தொடங்கியது முதல் ஆறாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்திக் காட்டியது வரை, இந்த அரை நூற்றாண்டு காலமாக தனது உண்மையான உழைப்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தாய்த் தமிழ்நாட்டையும் போற்றிப் பாதுகாத்து வருகிறார் கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
கடந்த ஐந்தாண்டு காலம் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டிய ஆளுமைத் திறன் கொண்டவர் நம் தலைவர் அவர்கள். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை உயர்த்தினார்கள். சமூக வளர்ச்சிக் குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணிக்கு வந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து பார்த்தது.
ஐந்தாண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்கள்; அத்தனை திட்டங்களும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மலர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டியது அவரது உண்மையான உள்ளத்துக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
கோட்டையில் இருந்து மட்டுமல்ல, மக்களோடு மக்களாக இருந்து ஆட்சியை நடத்தினார்கள். தங்களில் ஒருவராகவே தமிழ்நாட்டு மக்கள் அவரைப் போற்றினார்கள். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். அவர் முகத்தைக் கண்டதும், மக்கள் முகங்கள் மலர்ந்தன. இதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிகப்பெரிய மதிப்பையும், மரியாதையும் உருவாக்கித் தந்தார் தலைவர் அவர்கள். இன்னும் நூறாண்டு காலத்துக்கு யாராலும் அசைக்க முடியாத பேரியக்கம் என்பதற்கான அடித்தளத்தை உறுதி செய்தார் தலைவர் அவர்கள்.
சட்டமன்றத் தேர்தல் களத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உழைப்பு மலையளவு ஆகும். தினந்தோறும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக முழங்கினார் தலைவர் அவர்கள். நடைபயணங்களின் மூலமாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தும் மக்களோடு கலந்துரையாடினார்கள். இலட்சக்கணக்கான மக்களை தனித்தனியாகச் சந்தித்ததும் தலைவர் அவர்களின் சாதனை ஆகும்.
இத்தகைய பெருமைமிகு தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் தனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. "இப்படி ஒருவரைத் தலைவராகப் பெற என்ன தவம் செய்தோம்?" என்று பெருமைப்படும் வகையிலான நம் தலைவர் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு நம்மை வழிநடத்த வேண்டும் என்று கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் : 3
தலைவருக்கு அதிகாரம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும்.
இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு உறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும்.
இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 4
காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி!
அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கழகத் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
***
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.
தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்திற்காக, கழகத் தலைவர் வழிகாட்டுதலில் அயராது உழைப்போம்.
@arivalayam
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்!
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்!
#VoteForDMK
2026 தேர்தல் டெல்லி vs தமிழ்நாடு தேர்தல்..!!
அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நான் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றேன், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூரில் கழகத் தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜக போட்டியிடும் மயிலாப்பூரில் ஆரம்பித்தார், இதில் இருந்தே தெரிகிறது எடப்பாடியின் கொள்கைத் தலைவர்கள் மோடியும், அமித்ஷாவும் தான் என்பது.
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
The recent newspaper reports indicate that women’s representation in Parliament and Legislative Assemblies is being considered based on the 2011 Census.
This step is not in line with The Constitution (128th Amendment) Bill, 2023 passed by the Union BJP Government and its earlier position to take up this historic initiative only after delimitation is carried out based on the Census conducted after 2026. This is most probably aimed at securing electoral gains in the forthcoming Assembly elections in four major States. Pushing such an important step when the Model Code of Conduct is already in force is unprecedented.
Having said that, as the President of the DMK and the proud inheritor of the Dravidian legacy that has spearheaded women’s empowerment for more than a century, I fully support this initiative of #WomensReservation without any preconditions, while at the same time stressing our right to fair delimitation.
It is our consistent stand that the current proportional representation of States should not be disturbed under any circumstances. To achieve this, the delimitation and distribution of constituencies among States must include a constitutional provision ensuring the same for the next 30 years.
Considering the current Model Code of Conduct and the preoccupation of political parties, I request that a Special Session of Parliament be convened in early June to enact these historic constitutional amendments for delimitation, increase of seats, continuation of the current share of representation of States, and a guarantee that such representation will continue for the next 30 years.
🔷 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
🔷 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது.
🔷 எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
🔷 மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்.
🔷 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.
பெண்களுக்கான ஆட்சி, மக்களுக்கான நல்லாட்சி! - எனத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் நற்சான்றிதழே இந்த ஆட்சியின் மகத்தான சாட்சி. மக்களின் பேராதரவோடு 2026-ல் மகத்தான வெற்றி நிச்சயம்.
#StalinWave2026
கடல் இல்லாத திருச்சி மாநகரில் கருப்பு சிவப்புக் கடல் போன்று இலட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் சூழ தி.மு.கழகத்தின் மாநில மாநாடு சீரும் சிறப்புமாக கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது!
ஈடு இணையில்லாத வெற்றியை ஈட்ட களத்தில் அயராது உழைப்போம்! 🌄
#StalinWave2026
விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,
5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும்,
பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி,
மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் -
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!
#வெல்வோம்_ஒன்றாக!
உழைப்பால், குணத்தால், பண்புகளால், கொள்கை உறுதியால், மக்களின் வாழ்வுயர்த்தும் சீர்மிகு திட்டங்களால், தொடர் வெற்றிகளால் இந்திய துணைக்கண்டமே வியந்து பார்க்கும் #ஒரே_தலைவன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் திராவிட நாயகரின் தலைமையில் #வெல்வோம்_ஒன்றாக!
யு டியூப்பில் காண https://t.co/9Oliboi0nk
#HBDCMMKStalin
ஒரு திராவிட சகாப்தத்தை காக்க வந்த ஒரே தலைவனின் வரலாறு🔥
M.K.Stalin - The Long Walk to Power
உங்களை நோக்கி...
விரைவில்...
#HBDCMMKStalin#OraeThalaivan#ஒரே_தலைவன்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் தி.மு.கழகத்தின் பெருஞ்சேனை இன்று திரள்கிறது. தென் மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மானாமதுரை, பொன்னேரி, துறைமுகம், விருகம்பாக்கம், உத்தரமேரூர், சங்ககிரி, ஈரோடு மேற்கு, ஆத்தூர், பண்ருட்டி, திருவாரூர், பூம்புகார், விராலிமலை ஆகிய 12 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு @TThenarasu அவர்கள்!
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!
ஜூலை மாதம் #DravidianModel 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!
நமது #DravidianModel அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்…
#TNInterimBudget