கலையின் மீது மதச் சாயம் பூசுவது, கடும் கண்டனத்திற்குரியது!
Zee தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு பாட்டு நிகழ்ச்சியில், ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய சிறுமி "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்" என்ற இந்துக் கடவுளுக்குரிய பாடலைப் பாடி விட்டார் என்பதற்காக, சில இஸ்லாமியர்கள் அச்சிறுமிக்கு மிரட்டல் விடுப்பதை ஆளும் @TVKPartyHQ அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கிறிஸ்துவ மதத்தை பின்னணியாகக் கொண்ட, திரு. KJ யேசுதாஸ் அவர்களின் ஐயப்பன் பாடல்களையும், திருமதி. LR ஈஸ்வரி அவர்களின் அம்மன் பாடல்களையும் கொண்டாடி, ரசித்து வரும் நமது தமிழ் சமூகத்தில், மற்ற மதத்தினர் இந்து பக்திப் பாடல்களை பாடுவது ஒன்றும் புதிதல்ல. இவ்வளவு ஏன், இந்து மதத்தைச் சேர்ந்த பலர், பல இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பக்திப் பாடல்களையும் பாடியுள்ளனர், இன்றளவும் பாடி வருகின்றனர்.
"கலை" என்ற குடையின் கீழ், நாம் அனைவரும் சமம்.
அப்படியிருக்கையில் முருகனின் பாடலைப் பாடியதற்காக ஒரு இஸ்லாமிய சிறுமி மீது, இத்தனை வெறுப்புகள் பரப்பப்படுவது உள்ளபடியே மன வேதனையளிக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதுமட்டுமன்றி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் அச்சிறுமிக்கு துணையாக நிற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
A scientist who powered India’s dreams and a President who inspired millions. 🚀
Dr. A. P. J. Abdul Kalam, the ‘Missile Man’ of India and former President, left an enduring legacy through his scientific contributions, visionary thinking and commitment to nation-building.
Fondly remembered as the ‘People’s President’, he inspired generations of young Indians to dream big, believe in their potential and work towards shaping a better future.
#APJAbdulKalam #MissileManOfIndia #AbdulKalam
President Droupadi Murmu paid floral tributes to Dr. APJ Abdul Kalam, former President of India on his birth anniversary at Vijayawada, Andhra Pradesh.
அறிவியல், கல்வி, தேசப்பற்று என, தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டு முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த, முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில், அவரது நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம். அவரது கனவுகளும் சிந்தனைகளும் என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழும்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு, உயரிய சிந்தனைகளையும், அறம் சார்ந்த அரசியல் முன்னெடுப்பையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், APJ Abdul Kalam Centre for Ethics and Politics இன்று தொடங்கப்படவிருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடம்: PSG iTech Convention Centre, நீலாம்பூர், கோயம்புத்தூர் – 641062
நாள்: 15 அக்டோபர் 2026
நேரம்: காலை 9.30 மணி
ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளைச் செயலாக்கி, நேர்மையும், அறமும், மக்கள் சேவையும் நிறைந்த தலைவர்களை உருவாக்குவோம்.
#JUSTIN திருவேற்காட்டில் ஆன்லைன் டிரேடிங் மோசடி: 3 பேர் கைது
ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் பார்ப்பதாக வீடியோ வெளியிட்டு, அதற்கு பயிற்சி அளிப்பதாக கூறி சுமார் 40 பேரிடம் தலா ரூ.40,000 வசூலித்து மோசடி செய்த புகாரில் 3 பேரை கைது செய்த ஆவடி சைபர் கிரைம்
#Thiruverkadu #onlinetrading #CyberCrime #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கனரா வங்கியில் வாங்கிய ரூ.50,000 கடனைத் தவணைகளுடன் முழுமையாகச் செலுத்தி முடித்துவிட்டார். கடன் முழுவதையும் அடைத்துவிட்ட நிம்மதியில் இருந்த அவருக்கு, வங்கியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது கடனில் இன்னும் ரூ.9.34 நிலுவையில் இருப்பதாகவும், அந்தத் தொகையைச் செலுத்துவதற்காக நேரில் வங்கிக்கு வர வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெறும் ரூ.9.34-க்காக வாடிக்கையாளரை நேரில் வரவழைத்து அலைக்கழிப்பதைக் கண்டு அதிருப்தியடைந்த விவசாயி, வங்கிக்குச் சென்றார்.
அங்கு ரூ.10 நோட்டைக் கொடுத்து, அதிலிருந்து நிலுவைத் தொகையான ரூ.9.34-ஐ எடுத்துக்கொண்டு மீதமுள்ள 66 பைசாவைத் திருப்பித் தருமாறு கேட்டார்.
ஆனால், வங்கியில் சில்லறை இல்லாததால் மீதமுள்ள 66 பைசாவைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயி, வங்கியின் செயல்பாட்டைக் கேள்வி எழுப்பினார்.
“எனக்குச் செலுத்த வேண்டிய ரூ.9.34-க்காக வங்கிக்கு நேரில் வரச் சொல்லும்போது, நான் கொடுத்த பணத்தில் மீதமுள்ள 66 பைசாவையும் திருப்பித் தர வேண்டியது வங்கியின் கடமைதானே?” என்று அவர் வாதிட்டார்.
தனக்குச் சேர வேண்டிய தொகையை வழங்காதது சேவைக் குறைபாடு எனக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் தொடர்பாகக் கனரா வங்கிக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.
ஒரு சிறிய தொகையாக இருந்தாலும், அது தனக்குச் சேர வேண்டிய பணம் என்பதில் உறுதியாக நின்று தனது உரிமைக்காகக் குரல் கொடுத்த விவசாயியின் இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. #karnataka #farmers
சிவகாசியை சேர்ந்த பட்டாசுத் தொழிலாளி தம்பதியரின் மகள் துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் தேர்வாகி அசத்தல்... அதிநவீன துப்பாக்கி இருந்தால் போட்டிக்கு உதவியாக இருக்கும் எனக் கூறி முதலமைச்சருக்கு கோரிக்கை
#Sivakasi | #GunShooting | #CMVijay | #PolimerNews