தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன.
எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.
இன்றும் சொல்கிறோம்,
மே 4…
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#TNElections2026
#AIADMKWinsTN
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய @AIADMKOfficial மற்றும் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் @BJP4TamilNadu, பாட்டாளி மக்கள் கட்சி, @ammkofficial, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்.
தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, புரட்சித் தலைவருக்கும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
வெற்றி நமதே!
#அண்ணாதிமுக_WINNING!
#நல்லாட்சி_COMING!
@AIADMKOfficial
தனது உடன் பிறந்த சகோதரர் அழகிரி அவர்கள் கட்சியில் இருந்தால் தனது பதவிக்கு ஆபத்து என்று அவரைக் கட்சியிலிருந்து நீக்கி ஆப்பு வைத்தவர் தான் ஸ்டாலின்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை பட்டியலிட்ட மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#EPSfor2026
ஒரு ஓட்டு நாட்டினுடைய தலையெழுத்தையே மாற்றக் கூடிய விஷயம்.மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமென்றால் சிந்தித்து அதிமுகவிற்கு வாக்களித்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும்.
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி
@EPSTamilNadu@AIADMKOfficial#Thiruvallur | #AIADMKGovernmentLoading | #EPSFOR2026 | #eps4tamilnadu | #NaalaiNamadhe | #NaalaiNamadheTn |
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகம் இன்று கருணாநிதி குடும்பம் முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
நாம் அனைவரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பள்ளியில் பாடம் படித்த மாணவர்கள்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
காவிரியில் தமிழகத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடுக்க மாட்டேன் என்று சூழுரைத்த கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரிடன் ஸ்டாலின் கொஞ்சி குலாவல்.
எப்படி பழகுறார் பார்
ஏன்டா இப்படி அசிங்கபடுத்துறீங்க தமிழகத்த.
டெல்டாகாரனாம் 💦💦.
டெல்டா அழியகாரமானவனே அவன்தான்
வாக்களிப்பீர் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு
#மக்களை_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ADMK_CHN_VNR
#byebyestalin
#TNneedsAIADMK
#TrustAIADMK
@VNRavivirugai@RajaMSV
இன்றைய தினம், #சேப்பாக்கம்_திருவல்லிக்கேணி, #ஆயிரம்விளக்கு, #இராயபுரம், #துறைமுகம்#திருவிகநகர், #எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எனது எதிரிகள் தான் தீர்மானிக்கின்றனரே தவிர, நானல்ல.
இத்தனை நாள் மக்கள் பிரச்சனைகளை நான் பேசியபோது பதில் சொல்லாமல் இருந்த கருணாநிதி குடும்பம், இவர்கள் கதையைப் பேசியதும் புலம்பித் தள்ளுகிறார்கள்.
கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்ததை நானாக சொல்லவில்லை. கவிஞர் கண்ணதாசன் சொன்னதைத் தான் நான் மேற்கோள் காட்டினேன்.
அதேபோல், நான் யாரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. இவர்கள் தான் தானாக வந்து "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்று மாட்டிக்கொள்கிறார்கள்.
தங்களை சொன்னால் வரும் கோபம், ஒரு நாளாவது மக்களுக்காக வந்ததா?
இது ஒன்று போதும், திமுக-விற்கு ஏன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதை நிரூபிக்க!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
@AIADMKOfficial
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது என்று உதயநிதி கொடுத்த வாக்குறுதி என்னானது??
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
மறைந்த பிரதமர் மரியாதைக்குரிய வாஜ்பாய் அவர்களுக்கு காக்கா பிடித்தவர் தான் கருணாநிதி!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026