கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்! #KarurStampede #KarurTragedy
புதிதாக விண்ணப்பித்த தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly2025
இந்திய ஒன்றியம�� திரும்பி பார்க்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் 2023-ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இத்திட்டம், வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கூடுதல் மகளிர்க்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது என்கிற மகிழ்ச்சியான அறிவிப்ப��� சட்டப்பேரவையில் இன்று அறிவித்தோம்.
தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட 28 லட்சம் புதிய விண்ணப்பங்களில், விதிகளைப் பூர்த்தி செய்யும் மகளிர் அனைவரும் உரிமைத் தொகை பெறுவார்கள்.
மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்ய என்றும் அயராது உழைப்போம்.
இந்தியாவுக்கு இலங்கைப் பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும்
* கச்சத்தீவு மீட்பு
* இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல்
* மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை & திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல்
* பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு
* கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல்
ஆகியவற்றை, மாண்புமிகு @PMOIndia திரு. @NarendraModi அவர்கள் எழுப்பக் கோரிக் கடிதம் எழுதியுள்ளேன்.
I have written to the Hon'ble Prime Minister Thiru. @NarendraModi reiterating our key demands to be raised with the Hon'ble PM of Sri Lanka during her visit to India, to find an early and lasting solution for the distress of Tamil Nadu fishermen.
#WATCH | சென்னை: மணலி மாத்தூரில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் பிரியாணி, காடை வறுவல், முட்டை எ�� கம கம விருந்து வைத்த திமுக நிர்வாகி
#SunNews | #DMK | #Chennai
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என, பசியற்ற மனிதர்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாளான இந்த #தனிப்பெருங்கருணை_நாள்-இல், அவர் கூறிய “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும்!
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இரு���்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலை���ெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத��து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை ��ிரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிற���ே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே #அன்புக்கரங்கள்!
இத்தகைய மகிழ்ச்சியை மற்ற குழந்தைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வழங்கிட வேண்டும்!
“சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு!”
@Subramanian_ma
அ��்ணன் திரு. வைகோ அவர்கள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்ததுமே நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.
இன்று மருத்துவமனைக்குச் சென்று, அவரது குடும்பத்தாரிடமும், மருத்துவரிடமும் அவரது சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தேன்.
@duraivaikooffl
The shameful act against Hon’ble CJI Thiru. B. R. Gavai inside the #SupremeCourt is an attack on the highest judicial office of our democracy and deserves the strongest condemnation.
The manner in which the Hon'ble CJI responded with grace, calm and magnanimity shows the strength of the institution, but that cannot make us take the incident lightly. The reason revealed by the attacker for his act shows how deeply the oppressive and hierarchical mindset still lingers in our society.
We must nurture a culture that respects and protects our institutions and demonstrates maturity in our conduct.
கரூரில், அப்பாவி மக்���ள் 41 பேர் இறந்த போதும் கிஞ்சித்தும் மனிதாபிமானம் இல்லாமல், பொய் புரட்டுகளை, வதந்திகளை, சதிக் கோட்பாடுகளை, மக்களிடம் பரப்ப 'லூப்'களை கண்டுபிடித்து எத்தனை 'ரூட்டு'களில் பரப்பினர்.
ஆனால், நீதிமன்றத்தின் படியேறி, உண்மையை தவிர வேறு எதையும் பேச முடியாது என்பதை, இன்றாவது உணர்ந்திருப்பார்கள் என்று நம்புவோம்.
#JusticeForKarurVictims
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #திராவிட_மாடல் ஆட்சியில்,
மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டியில் புதிதாக செயல்பட துவங்கியுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய��்தில் பயிலும் மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினோம்.
நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை!
அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும் அறிவும் உள்ள மக்களாக நம்மை மாற்றிய தந்தை பெரியாரு���்காகத் திருச்சி சிறுகனூரில் அமையும் பெரியார் உலகத்துக்குத் தி.மு.க.வின் அனைத்து MLA, MP-களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவோம்!
மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களே... உங்கள் பணிகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்!
திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான #DravidianModel தொடரும்!
@AsiriyarKV #சுயமரியாதை100 #PeriyarForever