மக்கள் தலைவர் திரு. @annamalai_k அவர்களின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற "போதை இல்லாத கும்மிடிப்பூண்டி" மாரத்தான் போட்டியை இன்று சிறப்பாக நடத்தி வெற்றியடையச் செய்த @WTLFoundation இயக்கத்தின் அனைத்து உறவுகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வின் வெற்றிக்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களித்த ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும், ஒற்றுமையும், தன்னலமற்ற சேவையும் இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
இதே ஒற்றுமையுடனும் உற்சாகத்துடனும் மக்கள் நலன் சார்ந்த மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முன்னெடுப்போம்.
அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள்! 🙏
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
A. நரேஷ் குமார்
We The Leaders Foundation
#drugsfreebharat
#drugsfreetamilnadu
வீடியோவை பார்த்தேன் நடந்ததை சொல்லி இருக்கிறீர்கள் மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு💔🥹 இருந்தும் என்ன செய்வது கடந்த செல்வோம், கேடுகெட்ட தமிழ்நாடு திராவிட ஜனதா கட்சியில் இனி இருக்கிறவன் உப்பு போட்டு சோறு திங்களேன்னு நினைச்சுக்குவோம் ..
பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய திரு @cpnawinoffl அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும், இந்த திராவிட ஜனதா கட்சி கும்பல் ஏதேனும் குறைச்சல் கொடுப்பார்கள் எவிடன்ஸ் சரியாக வைத்துக் கொள்ளுங்கள் .. நன்றி 🙏
ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பியோடிய சம்பவத்திலிருந்தே தமிழகச் சிறைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், தற்போது தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடியதாக வெளியாகியுள்ள தகவல், சிறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறது.
சிறைகளுக்குள் கூட பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் அரசின் கவனம் எங்கே இருக்கிறது?
குறைந்தபட்சம் ஜோசப் விஜய்யின் தூய ஆட்சியில் புதிய குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை..
பிடித்து வைத்த குற்றவாளிகளை தப்பி விடாமல் பார்த்துக் கொண்டாலே போதுமானது என்ற மனநிலைக்கு தமிழக மக்கள் வந்திருக்கிறார்கள்..
#TVKVijayFails #TVKFails #wetheleaders
தமிழக பாஜக ஏதோ கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதைப் போலவும், பல தசாப்தங்களாகத் தமிழகத்தை ஆட்சி செய்து மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியதைப் போலவும் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
40 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் வலுவான மக்கள் ஆதரவைப் பெற்று, ஆட்சியைப் பிடிப்பதற்கான அரசியல் அடித்தளத்தைக்கூட இன்னும் உருவாக்க முடியாமல் இருக்கும் நீங்கள், மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களைக் குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?
BJP ஆதரவாளர்கள் என்று சமூக வலைத்தளத்தில் கொம்பு சுத்தி கொண்டிருக்காமல் மக்களை சந்தித்து வாக்குகளைப் பெற்று கட்சி வளர்க்கும் வழியை பாருங்கள்..
பாரதிய ஜனதா கட்சியில் 4 ஆண்டு காலம் நானும் பயணித்திருக்கிறேன். எந்த தேசியவாதியும் களத்துக்கு வந்து கட்சியை வளர்த்ததாய் தெரியவில்லை..
போய் இருக்கிற வேலையை பாருங்கடா..
அதிமுகவிடம் அடகு வைத்த திராவிட பாஜகவை முதலில் மீட்டெடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள்..
#TNBJP4 #TNBJP
@Johni_raja@annamalai_k முதலில் உங்கள் கட்சியில் இருக்கக்கூடிய மாநில நிர்வாகிகளை குறைந்தபட்சம் பல்லு படாமல் பேச சொல்லுங்க.. அப்போ மற்றவர்களை கேள்வி கேட்கலாம்.
2011-ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு. @narendramodi அவர்கள், தனது கைகள் கட்டப்படாமல் இருந்திருந்தால், டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருப்பேன் எனக்கூறினார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான அமைதியான போராட்டத்தை காவல்துறை ஒடுக்கியதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தினை தெரிவித்திருந்தார்.
என்னைப் பொறுத்தவரையில், அப்போது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கூறியது முற்றிலும் சரியான கருத்தே. அதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் இன்றோ, ஒருவர் காலவரையின்றிச் சிறையில் அடைக்கப்படலாம்; அவர் அளிக்கும் பிணை உத்தரவாதங்கள் கூட நிராகரிக்கப்படலாம். அதைவிட வியப்பான விஷயம் என்னவென்றால், தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிணை வழக்குகளைக் கையாள அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சிறப்பு நிர்வாக நீதிபதி (Special Executive Magistrate), அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரை எப்படியெல்லாம் அலைக்கழிக்க முடியும் என்கிற சூழ்நிலை வந்துள்ளது.
ஜனநாயக நாட்டில், சட்டத்தின் உரிய நடைமுறைகள் மீறப்படுவதை நீங்கள் கேள்வி கேட்டால், உங்களுக்குப் பல்வேறு பெயர்கள் சூட்டப்படுகிற அவல நிலை உருவாகியுள்ளது. "அந்நிய கைகூலி" என்று முத்திரை குத்துவது உட்பட பல்வேறு தாக்குதல்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசிடம் நான் கேட்ட சமயத்திலிருந்து, தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களைச் சந்தித்து வருகிறேன். இருப்பினும், தமிழ்நாட்டில் களத்தினில் உள்ள பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம் என்று கருதியதால், அந்தத் தாக்குதல்களை நான் பொருட்படுத்தவில்லை.
ஒருவகையில், இந்தத் தாக்குதல்களை நான் ரசிக்கவும் செய்தேன் என்பதே உண்மை. ஏனெனில், நான் பாஜகவின் ‘பி-டீம்’ என்றும், ‘துரந்தர்’ படத்தில் வருவதைப் போல தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டவன் என்றும் கூறப்பட்ட முத்திரையை மிக விரைவாக அகற்ற இவை உதவும் என்றே நினைத்தேன். 😍
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, டெல்லியில் CJP அமைப்பின் போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்து நான் சில கேள்விகளை எழுப்பினேன். எதிர்பார்த்தபடியே, நேற்றிலிருந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.
பாஜகவில் உள்ள சிலருக்கு ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். உங்களது வசதிக்கேற்ப மறதியை தேர்ந்தெடுக்கும் பழக்கமிருந்தால், இதை இனி மறக்காதீர்கள், நான் 2026 ஜூன் 5-ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.
நேற்று நான் கூறியதைப் போல, CJP அமைப்பின் போராட்ட உத்திகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதோடு, அவர்களுடைய பல அணுகுமுறைகள் தவறாக வழிநடத்தப்பட்டவை என்றும் நான் கருதுகிறேன்.
ஆனால், அவர்கள் முக்கியமானதாகக் கருதும் ஒரு பிரச்சினையில் எதிர்ப்புத் தெரிவிக்கவோ, வாதிடவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால்?
நிச்சயமாக ஆம் என்பேன்!
எனவே, சிலருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தினாலும், மக்கள் மீண்டும் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு மத்திய அரசும் திசைதிருப்பும் அரசியல் வாதங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, இந்தக் கேள்விகளுக்குப் நியாயமாக பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
1. போராட்டம் நடத்த அனுமதி கோரி CJP அமைப்பு கடிதம் அளித்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடைமுறையில் இருந்த உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் எவ்வாறு போராட்டத் தளமாக இருப்பதிலிருந்து நீக்கப்பட்டது?
2. டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் (ACP) ஒருவருக்குச் சிறப்பு நிர்வாக நீதிபதியாக அதிகாரம் வழங்கி, ஒருவரைத் தடுப்புக் காவலில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கும் இந்த நடைமுறை இன்னும் எத்தனை காலம் தொடரும்?
டெல்லி காவல்துறையே புகாரளிப்பவராக இருக்கும் CJP வழக்கில், அதே டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ACP ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்.
அப்படியானால், தீர்ப்பு எந்தத் திசையில் செல்லும் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்ளலாம்!
3. அக்டோபர் 13-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து கைது செய்யப்பட்டவர்களின் பிணை விசாரணையின்போது, அக்டோபர் 19-ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் ACP எனப்படும் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் வேண்டுமென்றே தாமதமாக வந்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்த விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார்?
இது என்ன மாதிரியான விளையாட்டு? (1/2)
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வேண்டி, 1987ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்று, தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் தியாகத்தால், இன்று வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டின் பயனைப் பெற்று வருகின்றனர்.
தன்னுயிர் நீத்து பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றிய அந்தத் தியாகச் சீலர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்.
வீர வணக்கம்! 🙏
#vanniyar #pmk
முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அருள் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் எப்போதும் நிறைந்திருக்கட்டும். தொடங்கும் நற்காரியங்கள் அனைத்திலும் தடைகள் யாவும் நீங்கி, வெற்றிகளும் புதிய நல்வாய்ப்புகளும் கைகூட மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
மக்களின் எழுச்சியோடும், மாற்றத்தின் வழியோடும் முன்னேறுவோம்!
அன்புடன்,
நரேஷ் குமார் A
We The Leaders – Gummidipoondi
@annamalai_k@WTLFoundation
பாரத மண்ணில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு (BRICS Summit 2026) உலக அரங்கில் இந்தியாவின் தலைமைத்துவத்தையும் வலிமையையும் மீண்டும் ஒருமுறை கம்பீரமாகப் பறைசாற்றியுள்ளது.
சர்வதேச அரசியலின் தவிர்க்க முடியாத திசைகாட்டியாகவும் பிரதமர் மோடியின் ஆளுமையால் பாரதம் இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது! 🇮🇳
நன்றி @narendramodi ji
#BRICS
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் தாய்மொழி உரிமை மீட்பு! – We The Leaders முயற்சிக்கு உடனடி பலன்! ✊
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பான பொது அறிவிப்புகளில் (PA System) ரயில்வே வாரியத்தின் விதிமுறைகள் மீறப்பட்டு, கடந்த சில தினங்களாக முதலில் இந்தி, இரண்டாவதாக ஆங்கிலம், இறுதியாகத் தமிழ் என ஒலிபரப்பப்பட்டு வந்தது.
இதனால் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
ரயில்வே விதிகளின்படி தமிழகத்தில் வட்டார மொழியான தமிழுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி, நமது We The Leaders அமைப்பின் சார்பில் இன்று கும்மிடிப்பூண்டி ரயில் நிலையக் கண்காணிப்பாளரிடம் நேரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நமது நியாயமான கோரிக்கையையும் ரயில்வே வழிகாட்டு நெறிமுறைகளையும் ஏற்றுக்கொண்ட நிலையக் கண்காணிப்பாளர், இன்று மாலைக்குள் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, தமிழே முதல் மொழியாக ஒலிபரப்பப்படும் என உறுதியளித்துள்ளார்.
மக்களின் உரிமைகளுக்காகவும் தாய்மொழியின் முன்னுரிமைக்காகவும் களமிறங்கிய நமது முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! பொதுநலப் பணிகள் தொடரும்! 🚩
என்றும் மக்கள் பணியில்
A. நரேஷ் குமார்.
WE THE LEADERS
🌱 பசுமை கும்மிடிப்பூண்டி 2030 🌳
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மக்கள் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், WE THE LEADERS இயக்கத்தின் சார்பில், கும்மிடிப்பூண்டி SIPCOT பகுதியில் 1008 நாட்டு மரக்கன்றுகளுடன் குறுங்காடு (Miyawaki Forest) அமைக்கும் பசுமைப் பணி இன்று இனிதே தொடங்கியது.
இது வெறும் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு மட்டுமல்ல; அடுத்த 3 ஆண்டுகள் தொடர்ந்து பராமரித்து, இப்பகுதியை வளமான பசுமைக் குறுங்காடாக உருவாக்கும் நீண்டகால முயற்சி. 🌿
இந்த பசுமைப் பணியில் ஆர்வத்துடன் களமிறங்கி, தங்களது உழைப்பையும் நேரத்தையும் வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏💚
இன்று நாம் நடும் ஒவ்வொரு மரமும்…
நாளைய தலைமுறைக்கான நம்பிக்கையும், தூய்மையான காற்றுக்கான வாக்குறுதியும்! 🌳
மாறுவோம்! மாற்றுவோம்!! 💚
#wetheleader #Gummidipoondi
@annamalai_k@WTLFoundation
அன்பு, அறம், அமைதி, தர்மம் ஆகியவற்றை உலகிற்கு உணர்த்திய
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால்,
நம் வாழ்வில் நம்பிக்கையும் நல்வழியும் வெற்றியும் நிறைந்திடட்டும்.
இந்த இனிய கிருஷ்ண ஜெயந்தி திருநாளில்
அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும்,
நலமும், வளமும் பெருகிட
நெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்! 🙏🦚
நரேஷ் குமார். A
We The Leaders – Gummidipoondi
@annamalai_k@WTLFoundation
பசுமை கும்மிடிப்பூண்டி 2030 🌱
வரும் செப்டம்பர் 5 – ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பசுமை கும்மிடிப்பூண்டி 2030 திட்டத்தின் கீழ் MIYAWAKI FOREST அமைக்கும் மாபெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
📍 இடம்: கும்மிடிப்பூண்டி SIPCOT
⏰ நேரம்: காலை 6.00 மணி
🌱 ஒரே நேரத்தில் 1000+ மரக்கன்றுகளை நட்டு, பசுமையான கும்மிடிப்பூண்டியை உருவாக்கும் இந்த முன்னெடுப்பில் அனைவரும் பங்கேற்போம்.
👕 முதலில் வருகை தரும் 200 தன்னார்வலர்களுக்கு இலவச T-Shirt வழங்கப்படும்.
🏆 பங்கேற்கும் அனைவருக்கும் GREEN CHAMPION CERTIFICATE வழங்கப்படும்.
மரம் நடுவோம்!
பசுமையான கும்மிடிப்பூண்டியை உருவாக்குவோம்! 🌳
🤝 பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு இந்த பசுமைப் பணியில் பங்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Registration link 🔗
https://t.co/qHiFl1P2iD
@annamalai_k@WTLFoundation