#பேரன்பு
தமிழ் படம் எப்படி miss பண்ணினேன்னு தெரியல, சமீபமா பார்க்க நேர்ந்த ஒரு நல்ல படம், எதோச்சையா பார்க்க போய் இந்த படத்தில் நடிச்ச அஞ்சலி மேல தனி காதல் வந்திடுச்சு, ஒரு பொண்ணு ஒருத்தனை எப்படி சுலபமா மயக்க முடியும்னு வரும் காட்சி
P 1/3
கிடைச்ச ரெண்டு மூணு நொடி தான் அதில் ஒரு முக சுழிப்பு, சின்ன செல்லம் கோவம், வாஞ்சை, ஆசை, ஆருதம், கொஞ்சல், பிரியாசைன்னு பரிமளிக்க வைத்த அழகு...
இப்படி ஒரு அழகி கண், மூக்கு, உதடு, கன்னம்ன்னு இத்தனை அபிநயம், முகாபாவம் கொடுத்து கொஞ்சினா எவனா இருந்தாலும் விழுந்துருவான்...
P2/3
இதுவே படத்தின் climax aah இருந்திருக்கலாம்...
தமிழ் சினிமா சரியா பயன் படுத்த மறந்த இன்னொரு நடிகை...
பேரழகியான்னு தெரியல கண்டிப்பா அழகி தான்...❤️
P 3/3
Link 🖇️ கீழ 👇
https://t.co/RNNBmbXH4I
~
❤️
தெய்வமே
தேர்ந்தெடுத்தழைத்தும்
உடன் இணைத்துக்
கொள்ள ஏழாத
கையறுநிலை ;
விவிலியத்தின்
நிக்கோ தேமு
போல...
நின்
வழி துணைக்கு
கொஞ்சம் காசும்
கண்ணீரும் மட்டுமே
ஈந்த வாய்க்க பெற்ற
பொல்லாத இந்த
வாழ்க்கை...
~ சூர்யபாலா.,
பேச பேச
பழக பழக
நேசிக்க நேசிக்க
மட்டுமே புரிகிறது
அவர்களுக்கு நாம்
ஒரு மயிர்க்காலுக்கு
கூட உபயோகம்
இல்லையென
இருந்தும்
இல்லாமல் தோன்றும்
உறவுகளை எல்லாம்
நாம்தான்
இழுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறோமென...
#தசிகா ✨
"மனித வாழ்க்கையின்
மிகப்பெரிய ஆச்சர்யம்
அன்புக்கு உரியவர்களை
எந்த இடத்தில்
எப்படி சந்திக்கப் போகிறோம் என்பதும்
எங்கே
எப்போது
எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும்
முன்கூட்டியே
தெரியாமல் இருப்பதுதான்"
- நா.பார்த்தசாரதி