என்றும் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தது திமுகதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மக்கள் மன்றத்திற்குத் தெளிவாகத் தெரிந்த இந்த உண்மைகள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாமல் போனது வியப்பளிக்கிறது. சட்டமன்றம் என்பது கடந்த கால நிகழ்வுகளை வைத்துப் பரஸ்பரம் பழி சுமத்துவதற்கான இடமாக இல்லாமல், எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கான ஜனநாயக மேடையாகத் திகழ வேண்டும்.
— SDPI மாநிலத் தலைவர் திரு. முகமது முபாரக் அவர்கள்
Mujtaba Farooq, Vice President of the Welfare Party of India, Managing Director of Shaheen Edupower and Group Editor of Asia Express, addressed the National Symposium on Dialogue on Waqf and Uniform Civil Code in Jaipur. He emphasised the need for informed public discourse, constitutional safeguards and collective efforts to protect democratic values, religious freedom and the rights guaranteed under the Constitution.
#DefendingConstitutionalRights #DialogueOnWaqfAndUCC #SDPI #Jaipur #Constitution #Waqf #UCC
ostnSdpoer74i25hh0c5aaglguf2mtt392gul5lc021l51it175g5h6ah1mf ·
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் மண்டல இயக்குநரும், ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் ஜெ. சதகத்துல்லா அவர்கள் இறைவனின் பால் மீண்ட செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஒரு எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, தம் சுய உழைப்பால் உயரிய உயரங்களைத் தொட்டவர் டாக்டர் சதகத்துல்லா அவர்கள். ரிசர்வ் வங்கியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றிய டாக்டர் சதகத்துல்லா அவர்கள், சென்னை, சண்டிகர் ஆகிய இடங்களின் மண்டல இயக்குநராகவும், நிதி மேலாண்மை-மேம்பாட்டுப் பிரிவின் பொது மேலாளராகவும், ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியின் முதல்வராகவும் திறம்படப் பணியாற்றி, இந்திய வங்கியியல் மற்றும் நிதித்துறையின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்.
பணிக்காலத்திலும், பணிநிறைவுக்குப் பிறகும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஆலோசகராக விளங்கி, ஆய்வுப் பணிகள், கற்பித்தல் மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார்.
டாக்டர் சதகத்துல்லா அவர்களின் மகத்தான பொதுச்சேவையைப் போற்றும் வகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அவர்களுக்கு “சிறந்த அரசு அதிகாரிக்கான விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
டாக்டர் சதகத்துல்லா அவர்களின் மறைவு நாட்டின் வங்கியியல��க்கும் பொருளாதாரத் துறைக்கும் ஈடுசெய்ய இயலாத பெரும் இழப்பாகும்.
எஸ்டிபிஐ இயக்கத்தின் வளர்ச்சியில் என்றும் மாறா அக்கறை கொண்டு, நமது களப்பணிகளை உற்சாகப்படுத்தி, உரிமையோடு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நல்கிய வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் நற்செயல்களுக்கு நற்கூலி வழங்கி, 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்' எனும் சொர்க்கத்தை நல்குவானாக! அவரைப் பிரிந்து துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இறைவன் மன அமைதியையும், மனத்திடத்தையும் அருள்புரிவானாக!
- நெல்லை முபாரக்,
தலைவர், எஸ்டிபிஐ கட்சி, தமிழ்நாடு
JUNE 21
SDPI FORMATION DAY
Celebrating 18TH Year of Dedication
To Justice and Equality
17 YEARS OF
STRUGGLE. SERVICE. SACRIFICE.
FOR A JUST AND EQUITABLE INDIA.
#SDPI#SDPIFormationDay
பத்திரிகைச் செய்தி
18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் @SDPofIndia கட்சிக்கு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள ��ாழ்த்துச் செய்தி:
சிறுபான்மையினர் உரிமைகளுக்காகவும், சமூக அமைதி - சமூகநீதி - சம வாய்ப்பு - சமத்துவம், எளிய மக்களுக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) 18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துகள்!
எஸ்டிபிஐ கட்சி, அரசியல் ரீதியாகப் பல்வேறு போராட்டங்களைக் கடந்து வளர்ந்து வந்திருக்கிறது. இதன் வளர்ச்ச���க்கும், ஆக்கரீதியான அரசியல் பங்களிப்புக்கும் பாடுபட்டு வரும் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் திரு. எம்.கே. ஃபைஜி அவர்கள், மாநிலத் தலைவர் திரு. @nellai_mubarak அவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுதலையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த போதிலும், நீண்டகாலம் தோழமையுடன் இருப்பதைப் போன்ற உணர்வுடன் @sdpitnhq கட்சியின் நிர்வாகிகளும், தோழர்களும் முழு மூச்சுடன் கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைத்தனர். பரப்புரைக்காக நான் சென்ற இடங்களில் எல்லாம், எஸ்டிபிஐ கட்சியின் தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது ஆதரவையும், நல்லுணர்வையும் வெளிப்படுத்தியதை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.
எஸ்டிபிஐ கட்சி எளிய மக்களின் மேம்பாட��டுக்காக என்றென்றும் ஊக்கத்துடன் தொடர்ந்து பாடுபட்டு வரவும், அரசியல்ரீதியாக அதன் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்திடவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, சிறுபான்மை மக்கள் நலன் மீதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அக்கறையும், ஆதரவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தோழமையுணர்வோடு இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதி��ிதித்துவம் வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
எனினும், மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கையைக் கொண்டுள்ள இஸ்லாமிய சமூகத்��ைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. வரும் காலங்களில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
புதிய அமைச்சரவை அனைத்துத் துறைகளிலும் சிறப்பான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்; தமிழகத்தின் மாநில உரிமைகளை எவ்விடத்திலும் விட்டுக் கொடுக்காமல், சாமானிய மக்களை வஞ்சிக்காத, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்டை வளப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
- முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு.
மேற்கு வங்கத்தில் பாஜக தூண்டிவிடும் வகுப்புவாத வன்முறையை SDPI கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது!
சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் வக���ப்புவாதத் துருவமுனைப்பைத் தூண்டி வன்முறையைக் கட்டவிழ்த்து விட பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பும் திட்டமிட்டு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வெற்றி கொண்டாட்டங்கள் என்ற பெயரில், எதிர்க்கட்சித் தொண்டர்கள், முஸ்லிம்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் ச��ந்தமான சொத்துக்களைக் குறிவைத்து ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பல மாவட்டங்களிலிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன
மே 10 அன்று ஹூக்ளியில் ஒரு வயல்வெளியில் இரத்தக் கறையுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பஞ்சாயத்து உறுப்பினர் சகாதேவ் பாக் என்பவரின் கொடூரக் கொலை, தேர்தலுக்குப் பிந்தைய ஆறாவது கொலையாகப் பதிவாகியுள்ளது. இதற்கு முன்ன��ாக நானூர் (பிர்பூம்) பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்ட அபீர் ஷேக், பெலேகட்டா (கொல்கத்தா) பகுதியில் விஸ்வஜித் பட்நாயக், என்டல்லியில் தபாஸ் நாஸ்கர் மற்றும் குல்பியில் (தெற்கு 24 பர்கானாக்கள்) மிதுன் சமந்தா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜூன் 4 முதல் ஜூன் 7 வரை கூச் பெஹார், வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள் மற்றும் ஹவுரா உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் நடந்த குறைந்தது 34 வன்முறைச் சம்பவங்கள் விரிவான அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கூச் பெஹாரின் கோசாணிமாரி பகுதியில் "ஜெய் ஸ்ரீராம்" ஊர்வலத்தின் போது பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதில் அடங்கும்; அங்கு வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாக்க முயன்றபோது ஒரு முஸ்லிம் நபர் கொல்லப்பட்டார். மேலும் நந்தினா மற்றும் அபுத்ரா போன்ற கிராமங்களில் முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டதும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும், இறைச்சி���் கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களும் அந்த அறிக்கையில் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவங்களின் தன்மை, துருவமுனைப்பை ஏற்படுத்துவதையும் வங்காளத்தின் நீண்டகால சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமிடப்பட்ட அச்சுறுத்தல் செயல்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
பதிவான அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் பாரபட்சமற���ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு எதிராகத் தாமதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி கோருகிறது.
எஸ்டிபிஐ கட்சி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவாக நிற்பதோடு, வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலை உறுதி��ுடன் நிராகரிக்குமாறு மேற்கு வங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. வங்காளத்தின் ஒற்றுமையும் சமூகக் கட்டமைப்பும் பாதுகாக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும்.
-யா முகைதீன்
தேசியச் செயலாளர், SDPI
தமிழ்நாட்டின் புதிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
புதிய அரசின் முதல் அமைச்சரவையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பிரதிநிதி
இடம்பெறாதது கவலையளிக்கிறது!
-எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக்
----
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ��ொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய அரசின் பதவியேற்பு விழாவின்போது, இந்த அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்கிற உறுதியைத் தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உறுதியுடன், அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மாநில உரிமையைக் காக்கும் அரசாகவும் செயல்பட வாழ்த்துகிறேன்.
இன்று நடைபெற்ற புதிய அரசு பதவியேற்பு விழாவின் தொடக்க நிகழ்வுகள், காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அரசு நடைமுறைகளைச் சிதைக்கும் வகையில் அமைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் கொடுக்கப்பட்டிருப்பது நீண்டகால மரபை மீறிய செயலாகும். தமிழகத்தின் அடையாளமாகவும், பண்பாட்��ு விழுமியமாகவும் திகழும் தமிழ்த்தாய் வாழ்த்தை விழாவின் தொடக்கத்திலேயே பாடிக் கௌரவிப்பதே முறையானது. இந்த முன்னுரிமை மாற்றமானது தமிழ்ப்பற்றுடைய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தமிழ்நாட்டின் நீண்டகால மரபைப் புதிய அரசும் பின்பற்றி அதனைப் பாதுகாக்கும் வகையில் சட்டப்பேரவைக் கூட்டம் உள்ளிட்ட அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை ��ந்த அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அமைச்சரவை உருவாக்கத்தில் அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதில் ஒரு மிகப்பெரிய இடைவெளி இருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கூட இந்த அரசின் முதல் அமைச்சரவையில் இடம்பெறாதது மிகுந்த கவலைக்குரியது. ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்துத் தரப்ப��� மக்களின் குரலும் அதிகார மையத்தில் ஒலிக்க வேண்டியது அவசியமாகும். இனி அது சரிசெய்யப்படுவதாக இருந்தாலும், புதிய அரசில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் அமைச்சரவைப் பிரதிநிதித்துவத்தை அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், முதல் அமைச்சரவை பதவி ஏற்பில் அச்சமூகத்திற்குப் பிரதிநிதித்துவம் இல்லாதது கவலையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
தற்போது இந்தியா முழுவதும் முஸ்லிம் சமூக���் பல்வேறு அரசியல் காரணங்களால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழல் நிலவுகிறது. இத்தகைய காலகட்டத்தில், சமூக நீதியைப் போற்றும் தமிழகத்திலும் அதே போன்றதொரு புறக்கணிப்பு தொடர்வது ஆரோக்கியமானதல்ல. சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், அவர்களின் அரசியல் பங்கேற்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை இந்த அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, வரும் காலத்தில் அதனை��் சரி செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#TVK #விஜய்