Entrepreneur, Disciple of Father of Nation - Netaji Subash Chandra Bose, Baba Sahib Ambedkar, Swami Vivekanandha, Veer Savarkar, Nation First is Secularism...
நானும் இத்தனை காலம் என்னை ஒரு மதச்சார்பற்ற மனிதனாகத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் இன்றைய அரசியல் சூழல் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக ஜோசப் விஜய்க்கு ஆதரவளிப்பதாக நான் பார்க்கும் அரசியல் சூழல், என்னை ஒரு சுயபரிசோதனைக்குத் தள்ளியிருக்கிறது.
ஒரு மதத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய மத அடையாளத்துடனும் நம்பிக்கையுடனும் ஒன்றிணைந்து அரசியல் ஆதரவை வெளிப்படுத்துவது அவர்களுடைய உரிமை என்றால், இந்துக்கள் தங்களுடைய மத உணர்வுகளை வெளிப்படுத்துவதும் அவர்களுடைய உரிமைதானே?
மற்ற மதத்தினர் தங்களுடைய மதத்தின் மீது பற்று வைத்திருப்பதை அவர்களுடைய உரிமையாகப் பார்க்கும் சமூகம், இந்துக்கள் தங்களுடைய மதத்தின் மீது பற்று வைத்திருக்கும்போது மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறது?
மதச்சார்பின்மை என்பது இந்துக்கள் மட்டும் தங்களுடைய மத அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்வதா?
மற்றவர்கள் தங்கள் மதத்திற்கும் நம்பிக்கைக்கும் உண்மையாக இருக்கலாம் என்றால், இந்துக்கள் மட்டும் ஏன் தங்களுடைய மத உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ள வேண்டும்?
எனக்கு எந்த மதத்தின் மீதும் வெறுப்பில்லை. எந்த மத மக்களுக்கும் எதிரானவனும் இல்லை.
ஆனால் ஒரு கேள்வி மட்டும் என் மனதில் ஆழமாக எழுகிறது.
மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் பொதுவான கொள்கையாக இருக்க வேண்டும். அது இந்துக்களுக்கு மட்டும் விதிக்கப்படும் கட்டுப்பாடாக இருக்கக்கூடாது!
இத்தனை காலம் நான் மதச்சார்பற்றவன் என்று பெருமையாக நினைத்தேன். இன்று மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதை மீண்டும் சிந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.
திறந்த ஒரு வருடத்தில் 1000 வது கப்பல்...
ஒரே வருடத்தில் 2 லட்சம் கோடி வருமானம் 😡😡😡
திராவிட, கம்யூனிச, தமிழ் தேசிய கும்பல்களின் அடாவடியால் கேரளா சென்ற நம் முதலீடு 😡😡😡