கிரிக்கெட் வரலாற்றுப் பக்கங்களில், "The 438 Game" என்று தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அந்த ஒரு போட்டியை எந்த ஒரு ரசிகராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
2006 மார்ச் 12 அன்று ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த அந்த 5-வது ஒருநாள் போட்டிதான், இன்றுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் "தலைசிறந்த ஆட்டம்" (Greatest ODI Ever) என்று கொண்டாடப்படுகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, அதுவரை கிரிக்கெட் உலகம் நினைத்துக் கூட பார்க்காத ஒரு இமாலய சாதனையைப் படைத்தது. ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே முதன்முறையாக 400 ரன்கள் என்ற எல்லையைத் தாண்டி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 434 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியின் உச்சகட்டமாக 105 பந்துகளில் 164 ரன்கள் விளாசினார்.
ஆடம் கில்கிறிஸ்ட், சைமன் கட்டிச் மற்றும் மைக் ஹசி ஆகியோரும் தங்களின் பங்கிற்கு அதிரடி காட்ட, ஆஸ்திரேலியா எளிதாக தொடரைக் கைப்பற்றிவிடும் என்றே அனைவரும் நினைத்தனர். முதல் இன்னிங்ஸ் முடிந்து ஓய்வறைக்குச் சென்றபோது, தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஜாக் காலிஸ் கிண்டலாக, "ஆஸ்திரேலியா ஒரு 15 ரன்கள் குறைவாக அடித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்" என்று சொல்ல, ஒட்டுமொத்த அணியும் சிரித்ததாம். ஆனால், அந்த சிரிப்பு சில மணி நேரங்களில் நிஜமாகப் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
435 ரன்கள் என்ற அசாத்திய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் டிபெனார் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால், அதன் பிறகுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றிய அந்த அசுரத்தனமான பார்ட்னர்ஷிப் அமைந்தது. கேப்டன் கிரீம் ஸ்மித் 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுக்க, மறுபுறம் ஹெர்ஷல் கிப்ஸ் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மைக் லூயிஸ் வீசிய 10 ஓவர்களில் மட்டும் 113 ரன்கள் வாரிக் குவிக்கப்பட்டன. கிப்ஸ் தனது வாழ்நாளின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 111 பந்துகளில் 21 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கிப்ஸ் அவுட்டான பிறகும் ஆட்டம் குறையவில்லை. மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.
கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. பிரட் லீ வீசிய அந்த ஓவரின் 2-வது பந்தில் ஆண்ட்ரூ ஹால் பவுண்டரி அடிக்க, ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் கைக்கு வந்தது. ஆனால், அடுத்த பந்திலேயே அவர் அவுட்டாக, மைதானத்தில் மரண அமைதி நிலவியது. கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் தேவை, கையில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.
கடைசி விக்கெட்டாக மெகாத் நதினி களம் புகுந்து பதற்றமில்லாமல் 1 ரன் எடுத்து, ஸ்ட்ரைக்கை மார்க் பவுச்சரிடம் கொடுத்தார். ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட மார்க் பவுச்சர், மிட்-ஆன் திசையில் கம்பீரமாக ஒரு பவுண்டரியை விரட்டி, 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 438 ரன்கள் எடுக்கச் செய்து தென்னாப்பிரிக்காவை வரலாற்று வெற்றி பெற வைத்தார்.
ஒட்டுமொத்த மைதானமும், உலகெங்கும் இருந்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்த அசாத்தியமான சேஸிங்கைக் கண்டு உறைந்து போயினர். ஒரே போட்டியில் 872 ரன்கள், 87 பவுண்டரிகள், 26 சிக்ஸர்கள் என சாதனைகள் தவிடுபொடியாயின. கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ போட்டிகள் வந்தாலும், இந்த '434 vs 438' மாகாபிய ஆட்டத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.
பகிர்வு...
#cricket #tamilcricket #cricketfans #cricketlovers #anscyclopedia
இந்த படம் வந்து 30 வருஷம் மேல ஆச்சு ஆனால் இன்னும் south side விசேஷம்னா இந்த பாட்டு போடமா எந்த பங்சன் நடக்காது இந்த பாட்டை over come பன்ன எந்த சாங் இல்ல பாரதிராஜா & ரகுமான் ❤❤❤
மறைந்த பாரதிராஜா குறித்து திடீரென கேமராக்கள் முன்பு வந்து பேசி நெகிழ வைத்த மூதாட்டி.. நாசர் வந்த போது அவரை பார்த்து கொடுத்த ரியாக்சன்..
#Neelankarai | #BharathiRaja | #PolimerNews
ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல லஞ்சம் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்ட அதிகாரிகள் வரை எப்படி ஊறி போயிருக்குன்னு கேப்டன்ன வைத்து காட்டியிருப்பார் பாரதிராஜா 🥺🥲💔
பர்ஸை தொலைச்சுட்டு, கையில் காசு இல்லாம, மேல நாய்கள் கூட்டமா துரத்திட்டு வந்துச்சு. உயிர் பயத்துல ஓடிட்டு இருந்தேன்.
அப்போ ஒரு ஓரத்துல கோணி பையை போர்த்திக்கிட்டு ஒரு ஆள் படுத்திருந்தார்.
நான் ஓடி வரும்போது திடீர்னு காலை குறுக்க விட்டு என்னை கீழே விழுத்தாட்டிட்டார்!
“அடப்பாவாமே ..இதுல இது வேறன்னு ?“ன்னு எழுந்து பார்க்கும் முன்னாடியே, அவர் நாய்களை பார்த்து…
வவ் வவ்… வவ் வவ் வவ்…”ன்னு சரளமா நாய் பாஷையில பேச ஆரம்பிச்சார்.
அதிசயமா, நாய்களும் அவரை புரிஞ்சுக்கிட்டு, நான் வந்த திசைக்கு எதிர் திசையில ஓடிப் போயிடுச்சு!
நான் அதிர்ச்சியில,
“சார்… உங்களுக்கு நாய் பாஷை கூட தெரியுமா?”னு கேட்டேன்.
அவர் மெதுவா கோணி பையை விலக்கி,
“மாறுவேடத்தில் நகர்வலம் வரும் முதல்வர் நான்!” னு சொன்னார்.
நான் கண்ணீரை துடைத்துக்கொண்டே மூக்கில் வந்த ரத்தத்தையும் துடைத்தேன் !!
C&P
பெண்கள் பாதுகாப்பு from today:
அம்மா என்ன யாரோ காப்பாத்துறாங்கம்மா.
கருப்பு கோர்ட் சூட் போட்ருக்காரும்மா.
பாட்டிலுக்கு 10 ரூபான்னு பாடுறாரும்மா.
அவருக்கு குட்டி தொப்பை வேற போட்ருக்கும்மா.
~ ஸ்வேதா அங்கிருந்து ஓடிரு அவன நம்பாத
இரவு மிகவும் நீளமாக இருக்கிறது.
தூக்கம் வராததற்கு
தேநீரோ, வயதோ காரணமல்ல;
நினைவுகள்
ஒன்றன்பின் ஒன்றாக
சாட்சிக் கூண்டில் ஏறிக்கொண்டிருக்கின்றன.
நேற்று வரை
கைத்தட்டல்களின் சத்தத்தில்
கேட்காமல் போன குரல்கள்,
இன்று
மௌனத்தின் நடுவே
இடியாய் ஒலிக்கின்றன.