தமிழ்நாடு அரசுக்கு:
போலீஸ��ர் Political Goons அல்ல
===========================
டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள 41 FIR-கள் @tnpoliceoffl-ன் DVAC-ஆல் பதிவு செய்யப்பட்ட காலம் 2017-முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் பதியப்பட்டவை என்று அமலாக்கதுறை தன்னுடைய Affidavit-ல் கூறியுள்ளது
பிரமாணப்பத்திரத்தில் எந்த இடத்திலும் Party Fund என்ற வார்த்தையை ED குறிப்பிடவில்லை
ஆனால்,
ED-ன் Affidavit பேரில் வழக்கு பதிவு செய்துள்ள DVAC குற்றம் நட���்த காலமென
2021-2025 வரை குறிப்பிட்டுள்ளது.
அதோடு PARTY Fund என்ற வார்த்தையையும் மிகவும் உள்நோக்கத்தோடு
பதிவு செய்துள்ளது
அதே போல, பழைய அல்லது பாட்டில்களை விநியோகிக்கும் நிறுவனங்கள், போலியான ரசீதுகளை வழங்கியோ அல்லது ரசீதுத் தொகையை மிகைப்படுத்திக் காட்டியோ மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்று,
பின்னர், தங்கள் கமிஷன் தொகையைக் கழித்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை அந்தந்த மதுபான உற்ப��்தி நிறுவனங்களிடமே திருப்பி அளித்ததாக
DVAC FIR-ல் குறிப்பிட்டுள்ள காலக்கட்டம்
2020-2025 வரை மட்டுமே..
அந்த மதுபான உற்பத்தி நிறுவனங்கள், விநியோக ஆர்டர்களைப் பெறுவதற்காக டாஸ்மாக் (TASMAC) அதிகாரிகளுக்கு லஞ்சம் (kickbacks) வழங்க அந்த பணத்தை பயன்படுத்தியதாக ED கூறியுள்ளதென DVAC,FIR-ல் தெரிவித்துள்ளது
கவனிக்க வேண்டியது என்னவென்றால்,
அதே Affidavit-ல்
2013 முதல் 2020 வரையிலான காலத்திலும் Devi
Bottles LLP மற்றும் Subramaniam Bottles LLP and SNS Bottles Pvt Ltd நிறுவனங்கள் M/s Kals Distilleries-க்கு ரூ.300 கோடியை ரொக்கமாக வழங்கியுள்ளதாக ED கூறியுள்ளது
அந்த தொகையும்
ஒப்பந்தம் பெறுவதற்காக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு லஞ்சமாக kickback பணம் என்றே ED கூறியுள்ளது
ஆனால், மிக லாவகமாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அந்த தரவுகளை FIR-ல் குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டது
ED-ன் Affidavit பேரில் FIR பதிவு செய்துள்ள DVAC சட்டமன்றத்தில்
விஜய் Party Fund என்று கூறிய ஒரே காரணத்திற்காக,
பட்ஜெட் கூட்டத்தொடரில் அதை நிரூபிக்கும் வகையில் CM அல���லது அமைச்சர்கள் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, Affidavit-ல் இருந்து
தேவையான தரவுகளை மாத்திரம் எடுத்து பட்டிமன்ற பேச்சாளர் உரை போல FIR-ஐ பதிந்துள்ளது DVAC
@tnpoliceoffl -ன் மிக முக்கியமான புலனாய்வு ஏஜென்சி DVAC
ஒரு துறையின் மொத்த தவறுகளையும் கண்டறிந்து முறைகேட்டில் ஈடுபட்டோருக்கு தண்டனை வாங்கித்தர வேண்டிய கடமை DVAC-க்கு உள்ளது
DVAC சட்டத்திற்குட்பட்டு அதிகபட்ச நேர்மையோடு நடக்கும் துறை என உறுதியாக கூறுவேன்
ஆனால், L&O மற்றும் CCB போல
அரசியல் அடியாள் தரத்திற்கு இந்த ஆட்சியில் கொஞ்சமும் நேர்மையற்று DVAC-யும் இறங்கியுள்ளது,
மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது..
DVAC நிர்வாகத்தில் நேரடியாக
@CMOTamilnadu முதலமைச்சர் அலுவலகமோ அல்லது அமைச்சர்களோ தலையிடாமல் இப்படி எல்லாம் நடக்க
நிச்சயம் வாய்ப்பே இல்லை
Political Goons போல போலீஸாரை பயன்படுத்துவதை இந்த அரசு நிச்சயம் தவிர்க்க வேண்டும்
கடந்த திமுக ஆட்சியில் ஜாபர் சாதிக் என்ற நபர் NCB -ஆல் கைது செய்யப்பட்ட போது
ரூ.2000 கோடி போதை மருந்து கடத்தல் என எந்த ஆதாரங்களும் இன்றி ஊடகங்கள் அடித்து விட்டனர்
அந்த செய்தியை வெளியிட்ட ஒரே ஒரு ஊடகம் கூட அந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை
அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் எந்த இடத்திலும் ரூ.2000 கோடிக்கு கடத்தல் நடந்துள்ளதென NCB க��றவில்லை என்பதும் தெரியாது
உண்மையாவது..பொய்யாவது அப்போதைக்கு அடிச்சு விட
வேண்டியது தான்..
அதே தான் தற்போது,
ஊத்தங்கரை MLA விவகாரத்தில் நடந்து வருகிறது..ரூ.35 கோடி பண பேரம் என்பது தற்போது ரூ.180 கோடியாக மாறி,கார்பொரேட் கம்பெனி களமிறங்கியுள்ளதாக “தகவல்” என்ற கட்டத்திற்கு வந்துள்ளது
அப்போதாவது NCB-ல் பணியாற்றிய ஞானேஸ்வர்சிங் என்ற அதிகாரி முகத்தை காட்டினார்..
அவர் தான் வதந்திகளை திட்டமிட்டு பரப்பினார் என தெரியவந்தது
ஆனால், MLA புகார் விவகாரத்தில்
தகவல்களை பரப்பும் அதிகாரி யாரென்றே
செய்தியை வெளியிட��ம் ஒரே ஒரு நபருக்கு கூட தெரியாது..
உண்மையில்,
@chennaipolice_ -ல் MLA கொடுத்த புகாரை விசாரிக்கும்
Investigation Officer யார் ?
மேற்பார்வையிடுவது யார் ?
வழக்கின் விசாரணை விபரங்கள் சொல்லப்படுவது ஆணையருக்கா ?
தனி நபர்களுக்கா ?
ஒரே ஒரு நபரைக்கூட இன்னும் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொள்ளாத சூழலில்
எப்படி இஷ்டத்திற்கு தகவல்கள் கசிகிறது ?
எதிர்க்கட்சிகள் குறித்து மத்திய ஏஜென்சிகள் மூலமாக இஷ்டத்திற்கு பாஜக அரசு அடித்து விடுவது சகஜம்
அதே பாணியை தவெக அரசு தொடங்கியுள்ளதோ எனத் தோன்றுகிறது
உண்மையில் ஆட்சியை கலைக்க சதி செய்வோரை கண்டுபிடிப்பது @tnpoliceoffl காவல்துறையின் நோக்கமா ?
அல்லது தினமும் ஏதாவது வதந்தியை கட்டாயம் பரப்ப வேண்டுமென்பது தான் விசாரணை டீமிற்கு,உயரதிகாரிகள் கொடுத்துள்ள இலக்கா?
ஏதாவது ஒரு தொலைக்காட்சி
வதந்தியை ஒளிபரப்பினால் போதும்,,
மற்ற எல்லோரும் எல்லோருமே ஈயடிச்ச��ன் காப்பி தான்
வாட்சப்பில் Forward ஆவதை ஒரு வரி மாறாமல் Live Report,Breaking News-ஆ
அடிச்சு தள்ள வேண்டியது தான்
No verification No cross check
ஒரு சென்சிட்டிவ்வான வழக்கின் விசாரணை குறித்த கூடுதல் தகவல்களை @chennaipolice_ முறைப்படி அறிக்கையாக வெளியிடுவது தானே சரியாக இருக்கும்
செய்ய மாட்டார்கள்..செய்யவும் முடியாது
MLA இளையராஜாவிடம் முதலில் பேசியது
பத்திரிகையாளர் ராஜேஷ் என்பதே FIR-ல் உள்ள தகவல்
ஆச்சர்யமாக உள்ளது,
ஒரு கார்பொரேட் கம்பெனி தாம்பரத்தை தாண்டி செயல்படாத சாதாரண பத்திரிகையாளரை ஆட்சிக்கலைப்பிற்காக பயன்படுத்தியதா ?
இல்லை செந்தில் பாலாஜி தரப்பினர்
நேரடியாக திருநாவுக்கரசு,ராஜேஷ் வகையறாக்களை பயன்படுத்தினரா ?
இதில் எது உண்மை ?
செந்தில் பாலாஜி,அசோக் சொல்லியே பேரம் பேசியதாக காவல்துறை 01-07-26 அன்று வெளியிட்ட பத்திரிகை செய்திக்கும்,,
கார்பொரேட் கம்பெனியே களமிறங்கியுள்ளதாக காவல்துறை கொடுத்து வெளிவந்துள்ள
தகவலுக்கும் எவ்வளவு முரண் !!
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப்பத்திரம் மற்றும் குற்றப்பத்திரிக்கையை ப��ிப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன்