பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Appreciate the Tamil Nadu Government’s decision to reduce VAT on Aviation Turbine Fuel (ATF), a welcome step for the aviation sector. Thank you to Hon’ble Chief Minister Thiru @TVKVijayHQ for this initiative.
Making air travel more affordable requires the Centre and States to work together. Our shared priority must always be the passengers.
We welcome the Government of Tamil Nadu’s decision to reduce VAT on Aviation Turbine Fuel (ATF) and extend our sincere appreciation to the Hon’ble Chief Minister, @TVKVijayHQ, for this progressive initiative.
Such measures strengthen air connectivity, support the state’s tourism and economic growth, and contribute to a more robust aviation ecosystem in India.
We hope similar progressive initiatives will make air travel more accessible.
Huge crowd at CM Vijay’s Perambur office!
Long queues of schoolchildren and parents at Tamil Nadu CM C Joseph Vijay’s constituency office in Perambur to collect free stationery kits.
700 students have already collected supplies, including notebooks, pens, pencils, pencil boxes, erasers and sharpeners. The rush continues today, with a huge crowd lining up for the kits. This is being done on behalf of #TVK party, not govt.
Many kids here, mostly below age 10, are fans of CM Vijay
@CMOTamilnadu
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம்:
இதுவரை தமிழகத்தில் சுமார் 97 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் கடந்த 3 வாரங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 27,085 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு.
விண்ணப்பிக்கவும்: https://t.co/TJTHZgTAmJ
#TN1LakhTarget_TNRoofTopSolar
“நான் விஜய்யை பார்த்தது கிடையாது; அவருடன் பழகியதும் கிடையாது..
தேர்தல் நேரத்தில் திமுக அவருக்குப் பிரச்சினை கொடுத்தபோது, நான் அவருக்காகப் பேசினேன்..
நியாயம் எதுவோ, அதை என் மனசாட்சிப்படி பேசுபவன் நான்.
TVK நல்லது செய்தால் பாராட்டுவோம்; தவறு செய்தால் விமர்சிப்போம்!”
— அண்ணாமலை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மேற்கொண்டுவரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
#CMJosephVijay
மாணவர்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றி, அவர்களின் மகிழ்ச்சியைக் காண்பதே எங்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மனநிறைவு! ❤️
இந்த மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கித் தந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்! 🙏
மாணவர்களின் மகிழ்ச்சியில் எங்கள் மகிழ்ச்சி… அவர்களின் முன்னேற்றத்தில் எங்கள் பெருமை! 📚❤️
தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும்!
தமிழர் பெருமையைப் போற்றுவோம்! தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!
#CMJosephVijay
ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
திரு @SeemanOfficial அவர்கள்.
இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என
வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார்.
அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் திரு.சீமான்.
திராவிடக்கோட்பாட்டையும்
சனாதன எதிர்ப்பையும்
அரசியல்
படுத்தியவர்
பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்.
அப்படிப்பட்ட கலைஞரை தெலுங்கன் என்றும்
திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக,அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் திரு.சீமான்.
அதுமட்டுமல்ல,
கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால்,
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த
பார்ப்பனிய அடிமை தான் திரு.சீமான்.
இப்படி கோட்பாட்டு வழியிலும்
தனிநபர் தாக்குதலிலும்
ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை
திமுக மறந்திருக்கலாம்.
விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை
தந்தை பெரியாரையும்
புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும்.
பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது.
இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை;
நாதகவுக்கும் வெட்கமில்லை.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
22.10.2026
மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பணியாற்றிட எனது வாழ்த்துகள்!
Warm birthday wishes to the Hon’ble Union Minister of Home Affairs and Cooperation, Thiru. Amit Shah Avl. Wishing you a long life and good health in service to the nation.
#CMJosephVijay
📚 மாணவர்களே! கல்வி உபகரணங்கள் தேவைப்படுகிறதா?
மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
✏️ பேனா, பென்சில்
📒 நோட்டுப் புத்தகங்கள்
🎒 பென்சில் பாக்ஸ்
💧 வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும்.
📢 மாணவர்களும் பெற்றோர்களும் கவனத்திற்கு!
கல்வி உபகரணங்கள் தேவைப்படும் மாணவர்கள், பெற்றோருடன் அல்லது நேரடியாகப் பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
✅ கடிதம் தேவையில்லை!
✅ பரிந்துரை தேவையில்லை!
✅ உங்கள் தேவையைத் தெரிவித்தால் போதும்!
❤️ தேவைப்படும் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவி சென்றடைவதே எங்கள் நோக்கம்!
📍 பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம்.
#Perambur #கல்விஉதவி #மாணவர்கள்நலன் #மக்கள்சேவை
_இன்று (21.10.2026), கம்பம் நகராட்சிப் பகுதியில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள இரட்டைக் குழாய் வாய்க்காலில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை, கழக நிர்வாகிகள், கம்பம் நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டோம்.
நீர் மேலாண்மையை காப்போம்!!
தூய்மையான கம்பம் தொகுதியை உருவாக்குவோம்..!!
PLA. ஜெகநாத்மிஸ்ரா MLA.,
தேனி தென்மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
#CMJosephVijay #tamilagavettrikazhagam #Cumbum_MLA #கழிவுநீர்வாய்க்கால் #CleanCumbam #CleanlinessDrive #மக்கள்சேவை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.10.2026) சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர்களைக் கௌரவிக்கும் வகையில் காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையிலுள்ள ஒரு காவலர் என மொத்தம் 7 காவலர்களின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5 கோடியே 96 இலட்சம் ரூபாய்க்கான ஆணைகளை வழங்கினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (21.10.2026) laid a wreath at the Police Memorial during the Police Commemoration Day event held at the Police Headquarters premises in Chennai, paying tribute to police personnel who had laid down their lives in the line of duty. He also handed over orders for personal accident insurance payments totalling Rs. 5.96 crore under the Government of Tamil Nadu’s Salary Package Scheme to the families of seven Tamil Nadu Police personnel—six who died in the line of duty and one who is presently in coma state.
#CMJosephVijay