I came to know that State govt. and Central govt. jobs are reserved for the statehoods in some states up to 90%. Likewise, Government Jobs in Tamilnadu are only for Tamilians. Can't u find deserved candidates in this 6.5 crore peoples
#TamilNaduJobsForTamils#தமிழகவேலைதமிழருக்கே
அகிம்சையின் அடையாளமான தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய இலங்கை காவல்துறையின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது!
தியாகதீபம் திலீபனின் நினைவுநாளை ஈழத்தமிழர்கள் உணர்வோடு கடைப்பிடித்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்த அவரது உருவச்சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றி எடுத்துச் சென்றிருப்பது பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது. தங்களுக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் காவல்துறை தலையிடுவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது.
உண்ணாமல், நீரும் அருந்தாமல், அகிம்சை வழியில் தன் மக்களுக்காக உயிர் துறந்தவர் திலீபன். அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது உருவச்சிலையைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாதது ஏன்? உயிரோடு இருந்தபோது அவரது அறப்போராட்டத்துக்குச் செவிசாய்க்காதவர்கள், இன்றும் அவரது நினைவைக் கண்டு அஞ்சுகிறார்களா? இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனநிலை இன்னமும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.
ஒரு மக்களின் வரலாற்றை மறைக்கலாம்; அவர்கள் துயரத்தைப் பேசுவதற்கும் தியாகிகளை நினைவுகூர்வதற்கும் தடை விதிக்கலாம் என்று இலங்கை அரசு எண்ணுகிறதா? சிலையை அகற்றுவதால் திலீபனைத் தமிழர்களின் நெஞ்சிலிருந்து அகற்ற முடியாது. இத்தகைய நடவடிக்கை ஈழத்தமிழர்களின் மனக்காயத்தை மேலும் ஆழப்படுத்தவே செய்யும்.
இலங்கையில் ஆட்சிகள் மாறுகின்றன; ஆட்சியாளர்களின் முகங்களும் வாக்குறுதிகளும் மாறுகின்றன. ஆனால் தமிழர்களின் நினைவுகூரும் உரிமையைக்கூட மதிக்காத அரசின் அணுகுமுறை மாறவில்லை. இந்தச் செயல் அதற்கு இன்னுமொரு சான்றாக நிற்கிறது.
உலக நாடுகள் இனியாவது ஈழத்தமிழர்களின் குரலை நேர்மையாகக் கேட்க வேண்டும். தமிழர்களின் அடிப்படை உரிமைகளும் வரலாற்று நினைவுகளும் தொடர்ந்து மறுக்கப்படும் நிலையில், ஒற்றை இலங்கைக்குள் அவர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எத்தனை காலம் நம்பச் சொல்லப் போகிறீர்கள்? ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம், தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை ஆகியவற்றுக்காக உலக நாடுகள் உறுதியான குரல் எழுப்ப வேண்டும்.
தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். அகற்றப்பட்ட சிலையை உரிய இடத்தில் மீண்டும் நிறுவவும், ஈழத்தமிழர்கள் அச்சமின்றி நினைவுகூரும் உரிமையை உறுதி செய்யவும் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனத்தின் தாகத்திற்காகத் தொண்டை வறண்டு தன் உயிரையே கொடையாகக் கொடுத்தபோது பிறந்தது அந்தச் சரித்திரம்! தியாக தீபம் திலீபன்!
"ஆயுதப் போராட்டம் மட்டுமே புலிகளுக்குத் தெரியும்" என்று துாற்றிய உலகத்தின் கன்னங்களில், தன் 12 நாள் சொட்டு நீர் அருந்தாத உண்ணாநோன்பால் அறத்தின் வழியில் அறைந்தான் அந்த 23 வயது இளைஞன்.
ஒவ்வொரு நாளும் உடல் சுருங்கியது... உதடுகள் வெடித்தன... உடலுறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்தன... அந்நிலையில் கூட கதறி அழுத மக்களை நோக்கி, "போராடுவதற்கு நீங்கள் தயாராகுங்கள்" என்று தன் சாகும் தருவாயிலும் இன விடுதலைக்கனவை விதைத்துச்சென்றான்.
செப்டம்பர் 26... அந்தப் புனிதமான காலை வேளையில், தன் இறுதிக்காற்றையும் இந்த மண்ணுக்காய்த் தந்துவிட்டு அவன் அமைதியானபோது, ஒரு தாயின் பிள்ளை மட்டும் இறக்கவில்லை... ஒட்டுமொத்தத் தமிழினத்தின் இதயமும் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது!
திலீபன் அன்று கொண்ட பசியும் தாகமும் இன்னும் ஆறவில்லை மக்களே... அவன் விட்டுச்சென்ற அந்த பெரும் பொறுப்பு இன்னும் நம் கைகளில்தான் இருக்கிறது.
அவன் சிந்திய ஒவ்வொரு துளி வியர்வைக்கும் கண்ணீருக்கும் குருதிக்கும் நாம் தரும் ஒரே பதில்,அவன் கனவை நெஞ்சில் ஏந்தி நிற்பதுதான்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
இன விடுதலைக்காக 12 நாட்கள் தண்ணீர் உணவு இன்றி உயிரை துரக்க மிக உறுதியான நெஞ்சுரம் வேண்டும்.
காந்தி கூட பலமுறை உண்ணாவிரதம் இருந்துள்ளார் ஆனால் அவர் மாவீரன் திலீபன் மாதிரி உண்ணாவிரதம் இருக்கவில்லை.
திலீபனுக்கு வீர வணக்கம்!
ஊனை உருக்கி உயிரை எரித்து, விடுதலை வேள்வி நடத்திய மாவீரன்..!
ஒரு சொட்டு நீர் அருந்தாமல் விடுதலைப்பசிக்குத் தன்னைத்தானே புசிக்க தந்த பெருமகன்..!
மருத்துவப் படிப்பைக் கைவிட்டு, இன அடிமை இடர் தீர்க்க,
தமிழ்த்தேசியத் தலைவர் தடம் பற்றிய தமிழீழத் தலைமகன்..!
புத்தன், காந்தி பெயரைச் சொல்லி இரத்தம் குடித்த ஓநாய்களின் முகத்திரை கிழித்த புலி வீரன்..!
ஆயுதம் ஏந்திய போராட்டக் களத்தில் அகிம்சையை ஆயுதமாக்கிய புரட்சியாளன்..!
கூர்த்த பெரும் அறிவாற்றலால் அரசியல் பிரிவின் தலைமைப் பொறுப்பேற்று, விடுதலைப்படையை வீறுகொள்ளச்செய்த தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தளபதி..!
லெப்டினண்ட் கர்னல், ஈகைப்பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் பேரீகம் போற்றுவோம்!
நாம் தமிழர்!
கர்நாடகாவைச் சார்ந்தவரை, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?
தமிழ்நாடு அரசே! நியமனத்தை இரத்து செய்!
ஜனநாயகன்' திரைப்படத் தயாரிப்பாளர் திரு. கே. வெங்கட் நாராயணா அவர்கள், டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழக மக்களிடையே பெரும் ஐயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், கர்நாடக முதலமைச்சர் திரு. டி.கே. சிவகுமார் மற்றும் அங்கிருக்கும் அரசியல், தொழில் வட்டாரங்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவர் என்று கூறப்படும் நிலையில், இந்த நியமனம் சனநாயக நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என்பது வெறும் அலுவல் சார்ந்த பதவி மட்டுமல்ல, அது இந்தியாவின் அதிகார மையத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களின் குரலைத் தடையின்றி ஒலிக்கச் செய்யும் மிக முக்கியப் பொறுப்பாகும்.
தற்போதைய சூழலில், காவிரி நீர்ப் பகிர்வு, மேகதாது அணைப் பிரச்சினை மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்ற நீர் உரிமைகளும், மொழி உரிமை, முறையான நிதிப் பகிர்வு, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்தல் போன்ற மாநில உரிமைகளும் எனத் தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பல்வேறு சவால்கள் நமக்கு முன்னால் உள்ளன.
இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில், தமிழகத்தின் சார்பில் டெல்லியில் பேசும் ஆளுமையின் மீது சிறிதளவும் சந்தேகம் எழக் கூடாது.
"மேகதாது அணையை எந்தச் சூழ்நிலையிலும் கட்டியே தீருவோம்" என்று கர்நாடக அரசுத் தொடர்ந்து ஒற்றைக்காலில் நிற்கும் வேளையில், அந்த மாநில அதிகார மையங்களுடன் நெருங்கியத் தொடர்பில் உள்ள ஒருவரைத் தமிழகத்தின் முகமாக டெல்லிக்கு அனுப்புவது, நம் அரசின் உறுதியான நிலைப்பாட்டின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இப்பதவியில் இருப்பவர் எந்தவொரு வெளிமாநிலத் தாக்கத்திற்கும் ஆட்படாதவராகவும், முரண்பாடுகளுக்கு இடம் தராமல் தமிழ்நாட்டின் நலனை மட்டுமே தனது ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படுபவராகவும் இருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும்.
எனவே, தமிழக மக்களின் நியாயமான அச்சங்களையும், அரசியல் ரீதியான சந்தேகங்களையும் அலட்சியப்படுத்தாமல், இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை, தமிழ்நாடு அரசு உடனடியாக இரத்து செய்து திரும்பப் பெற வேண்டும்.
பிற மாநில அரசியல் அல்லது தொழில் வட்டாரங்களுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத, தமிழ்நாட்டின் உரிமைகளில் சமரசமற்றப் பற்றுக்கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த நேர்மையான ஒருவரை இப்பொறுப்பில் அமர்த்த வேண்டும். காவிரி, மேகதாது உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைப் போராட்டங்களிலும் தமிழக நலனை மட்டுமே முன்னிறுத்தி, அசைக்க முடியாத மனஉறுதியுடன் டெல்லியில் செயல்படக்கூடிய ஆளுமைக்கே இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தருணத்தில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அரசின் கடமையாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நேர்மையும் நம்பகத்தன்மையும் மிக்க, தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமே அசைக்க முடியாத உறுதியுடன் செயல்படும் ஒருவரை டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைச் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை, அவரது இல்லத்தில் உறவின் நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினேன்.
@Seeman4TN@NaamTamilarOrg
தமிழ்நாட்டின் இளம் சதுரங்க வீரர் அன்புமகன் பிரக்ஞானந்தா அவர்கள் நார்வே சதுரங்க தொடர் - 2026 வாகையர் பட்டத்தை வென்று தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளதை அறிந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன்.
உலகின் முன்னணி சதுரங்க வீரர்களையெல்லாம் வீழ்த்தி இந்தியப் பெருநாட்டிலேயே முதன்முறையாக நார்வே சதுரங்கப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா, சதுரங்க ஆட்டத்தில் தமக்குள்ள அளப்பரிய தனித்திறன் மூலம் உலக வாகையர் பட்டத்தை வெல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
வருங்காலங்களில் மேலும் பல பன்னாட்டு சதுரங்கப் பட்டங்களை வென்று, உலகின் முதல்நிலை சதுரங்க வீரராகத் திகழ அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு என்னுடைய பேரன்பும், வாழ்த்துகளும்!
@rpraggnachess
ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரைத்துறை மட்டுமின்றி என்னுடைய அரசியல் பயணம் வெற்றியடையவும் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி வாழ்த்திய பெருந்தகையின் மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள்ளத்தை மிகவும் பாதித்துள்ளது. இப்பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன்!
அப்பா பாரதிராஜாவை இழந்து பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவிவாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
"பாரதிராஜா" எனும் இந்த பெயரை உச்சரிக்காத தமிழர்கள் இருக்கமுடியாது.. "என் இனிய தமிழ் மக்களே" என்ற குரலை ரசிக்காத அடுத்த மொழிக்காரர்கள் இல்லை, கேட்காத காதுகள் இல்லை.. அவரின் படைப்புகளை பார்த்து பார்த்து வியக்காத கண்கள் இல்லை.. இவையனைத்தையும் உணர்ந்து உருவானவர்களே இங்குள்ள அனைத்து இயக்குனர்களும்.. எங்களை கைபிடித்து நல்ல சினிமாவை நோக்கி பயணிக்க வைத்த மாபெரும் கலைஞன். எங்களின் படைப்புகளுக்கு ஒரு பெருமை கிடைக்குமெனில் அதில் 50 சதவீதம் எங்கள் பிதாமகனுக்கு உரிமை உண்டு.. இது இன்றோடு முடிவடையும் வரலாறு அல்ல.. திரையில் தமிழ்சினிமாக்கள் கொண்டாடப்படும் காலங்கள் தாண்டி பண்பாடுகளின் ஆய்வுகளில், கலை இலக்கிய கொண்டாட்டங்களில், கீழடி போல திரைசினிமாக்கள் தோண்டி எடுக்கப்படும்போது எல்லாம் கிடைக்கப்போகும் பொக்கிஷங்கள்.. பாதுகாப்போம்.. நம் முன்னோடிகளின் பாதச்சுவடுகளை வணங்கி போற்றுவோம்..
Hearty congratulations to our very own @rpraggnachess on winning the Norway Chess 2026 title.
Winning four classical games in a row, taking down world champions, and securing the title with a spectacular final game is nothing short of phenomenal.
Tamil Nadu and the entire nation are immensely proud of his outstanding achievement.
தமிழை காப்பாற்றுவது ஆவணங்கள் மட்டுமே!
தமிழ் பற்றி பேசுபவர்கள் ஏராளம்.
ஆனால், தமிழின் வரலாற்றையும், இலக்கியச் செல்வங்களையும், அரிய நூல்களையும், மறைந்து போகும் ஆவணங்களையும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து பாதுகாத்தவர்கள் மிகவும் அரிது.
அப்படிப்பட்ட அரிய தமிழறிஞர்களில் ஒருவர்தான் திரு. பல்லடம் மாணிக்கம் அவர்கள்.
பல தசாப்தங்களாக தமிழின் அரிய ஆவணங்களைத் தேடி சேகரித்து, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் வாழ்ந்தவர் பல்லடம் மாணிக்கம்.
உண்மையில், தமிழுக்காக அவர் செய்த பணி ஒரு தனிநபரின் சாதனை அல்ல; அது ஒரு கலாச்சார இயக்கம்.
இன்று தமிழர் தேசியம், தமிழ் அடையாளம், தமிழ் பண்பாடு பற்றி நாம் பெருமையாக பேசுகிறோம். ஆனால் அந்த அடையாளத்திற்கான ஆதாரங்கள், அந்த வரலாற்றிற்கான சான்றுகள், அந்த பண்பாட்டிற்கான பதிவுகள் பாதுகாக்கப்படாமல் போனால், நமது பெருமை வெறும் வார்த்தைகளாக மட்டுமே மாறிவிடும்.
அதனால்தான் பல்லடம் மாணிக்கம் போன்றவர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது.
இந்நேரத்தில், @CMOTamilnadu தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சகத்திற்கும் @imrajmohan , தமிழ் வளர்ச்சி துறைக்கும் நான் ஒரு பணிவான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன்.
திரு. பல்லடம் மாணிக்கம் அவர்கள் பாதுகாத்து வைத்துள்ள அனைத்து முக்கிய நூல்கள், ஆவணங்கள், இதழ்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் இலக்கியச் சேமிப்புகளையும் அரசு முறையாக ஆய்வு செய்து, அவற்றை அரசின் பாதுகாப்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
அவை டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட வேண்டும்.
அவை ஆய்வாளர்களுக்கு திறக்கப்பட வேண்டும்.
அவை தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.
அவை அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதுவே தமிழுக்கு செய்யப்படும் உண்மையான சேவை.
இதுவே தமிழ் மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வழி.
இதுவே தமிழ் பண்பாட்டை எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் பாதை.
தமிழை காப்பாற்ற வேண்டுமெனில் தமிழின் ஆவணங்களை காப்பாற்ற வேண்டும்.
தமிழை வளர்க்க வேண்டுமெனில் தமிழறிஞர்களை மதிக்க வேண்டும்.
தமிழை உலகளவில் உயர்த்த வேண்டுமெனில் தமிழின் வரலாற்று நினைவகங்களை பாதுகாக்க வேண்டும்.
எனவே, திரு. பல்லடம் மாணிக்கம் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய அரசுமரியாதையையும், அவருடைய வாழ்நாள் சாதனைகளுக்கு நிலையான அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அவரது பெயரில் ஒரு சிறப்பு ஆவணக் காப்பக மையம், ஆய்வு மையம் அல்லது நினைவு நூலகம் நிறுவப்பட வேண்டும்.
தமிழின் உண்மையான காவலர்களை நாம் கௌரவிக்கத் தவறினால், வருங்கால தலைமுறைகள் நம்மை மன்னிக்காது.
தமிழுக்காக பேசுபவர்களை நாம் மறந்தாலும் பரவாயில்லை.
தமிழுக்காக வாழ்ந்தவர்களை மறந்துவிடக்கூடாது.
திரு. பல்லடம் மாணிக்கம் போன்ற தமிழறிஞர்களே ஒரு மொழியின் உண்மையான பாதுகாவலர்கள்.
அவருக்கு எங்கள் மரியாதை.
அவரது பணிக்கு எங்கள் நன்றிகள்.
அவரது பாரம்பரியத்திற்கு அரசின் நிரந்தர அங்கீகாரம் கிடைக்கட்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
எமதருமைத் தோழர் வன்னி அரசு அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்தோம்.
கடந்த 16 ஆண்டுகளாக மே17 இயக்கத்தின் நிகழ்வுகளின் பங்கேற்பாளர், போராட்டக் களங்களில் சகதோழர் என நீண்ட அரசியல் பயணம் தோழர் வன்னிஅரசு உடன் எங்களுக்குண்டு. எத்தனையோ போராட்டங்களில் பங்கெடுத்து காவல்துறை அடக்குமுறைகளை எதிர்கொண்ட நிகழ்வுகள் ஏராளமுண்டு. ஏழு வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இரட்டை ஆவணப்படுகொலை நிகழ்வினைக் கண்டித்த பேரணியில் காவல்துறையின் அடக்குமுறைகளை மீறிச் சென்று பலியானவர்களுக்கு மரியாதை செய்த நிகழ்வு, சென்னை ஸ்வாதி கொலையில் அப்பாவியாக சேர்க்கப்பட்டு படுகொ*லையான ராம்குமாரின் சடலத்தை வைத்து வழக்கு பதிய ராயப்பேட்டை பிணவறையின் முன் மறியல், காவிரி உரிமைப் போராட்டம், 7 தமிழர் விடுதலை, இலங்கை அலுவலக முற்றுகை என நினைவுபடுத்தி எழுத ஏராளமான சம்பவங்களுண்டு. போராட்டக்களத்தில் முழங்கியவற்றை நடைமுறைப்படுத்த, கோரிக்கைகளை நிறைவேற்ற தோழர் வன்னிஅரசுவிற்கு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பொழுது, தமிழ் அடையாளம், தமிழீ**ழம் வெல்க என்று உணர்வெழுச்சியுடன் முழங்கினார். அவரது அமைச்சர் பொறுப்பு தீர்க்கப்படாத பலசிக்கல்களை தீர்த்து வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவருமென நம்புகிறோம்.
பெரும்போராட்டக் களத்திற்கு சொந்தக்காரரான தோழர் வன்னி அரசுவிற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள், தோழர்களுக்கும் எங்கள் மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.
அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்றவும், பங்களிக்கவும் மே17 இயக்கம் என்றென்றும் துணை நிற்கும்.
@VCKofficial_@VanniTamizhVCK@thirumaofficial
இன்று தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, எனது இணையர் ஆதிரை, மகன்கள் பைந்தமிழ் வளவன் மற்றும் செந்தமிழ் திலீபன் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக நீதி களத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் என்றும் துணையாக இருப்போம் என்று மாண்புமிகு முதலமைச்சரிடம் உறுதி அளித்தேன்.
@CMOTamilnadu@thirumaofficial