அடிமட்டத்திலிருந்து தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்கான பயிற்சி கொடுத்து, நாம் ஆட்சிக்கு வரும்போது, உலகத்தரமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், உலக��்தரத்தில் அரசுப் பள்ளிகள் என, ஒரு சிறப்பான தமிழகத்தை உருவாக்குவோம்.
நமது @WTLFoundation மிகவும் இளமையான அமைப்பு. நமது அமைப்பின் தலைவர்களில், 54% பேர், 39 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதும், ஏற்படுத்தப் போவதும் இந்த இளைஞர்கள்தான்.
வரும் அக்டோபர் 15, 2026 அன்று, ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளன்று, கோயம்புத்தூரில் "Abdul Kalam Centre for Ethics and Politics" பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும். அடுத்த ஒரு ஆண்டுக்குள், 1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கும்.
நமது @WTLFoundation தொடங்கி ஒரு மாத காலத்தில் இணைந்துள்ள 19 லட்சம் உறுப்பினர்களில், 17% பெண்கள் என்பது, நமது அமைப்பின் முதல் வெற்றி.
இது மக்களுக்கான இயக்கம்!
'போதை இல்லா சமுதாயம்' என்ற உயரிய இலக்கை முன்னிறுத்தி, We The Leaders Foundation-இன் தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடு���்து வருகின்றனர்.
ஒவ்வொரு உறுதிமொழியும்...
ஒவ்வொரு ��ிழிப்புணர்வு நிகழ்வும்...
ஒவ்வொரு இளைஞரின் பங்களிப்பும்...
போதை இல்லா தமிழகம் உருவாகும் பாதையில் ஒரு வலிமையான முன்னேற்றமாகும்.
நீங்களும் உங்கள் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள் அல்லது சமூகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த விரும்பினால், We The Leaders Foundation-ஐ தொடர்புகொள்ளுங்கள்.
தொடர்புக்கு:
[email protected]
+91 82206 35959
+91 81229 42929
மாறுவோம்! மாற்றுவோம்!
போதை இல்லா தமிழகம�� படைப்போம்!
#WTL_WhiteBandMonth
கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரி���்துகொள்வது அவசியம்.
இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீ���் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கி���மிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.
��தே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நா��்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போரிட்ட மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
விடுதலை வேள்வியில் தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன��றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக ��ானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது?
இந்தக் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது. இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்���ப்பட்டிருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள், தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" (Deemed University) அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இந்தக் கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியிருப்பது, மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். இதனால், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்தக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், குறைந்தபட்சம் நான்கு மடங்கு உயரக்கூடும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளான, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி (250 இடங்கள்) மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் & சீனிவாசன் மருத்துவக் கல்லூரி (400 இடங்கள்) ஆகிய கல்வி நிறுவனங்களை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்காக எந்தவிதமான தடையில்லாச் சான்றிதழையும் (NOC) வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மறுப்புக் கடிதம் குறித்தான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு, UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022-இன் 5.02(i) மற்றும் 5.02(ii) விதிகளின்படி, இணைப்புப் பல்கலைக்கழகம் 60 நாட்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கும் இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு கருதி, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க முடியும்.
இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.
எனவே, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் விண்ணப்பத்தை முந்தைய திமுக அரசு, 60 நாள் காலக்கெடு முடியும் வரை திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்ததா என்ற முக்கி���மான கேள்வி எழுகிறது.
இந்த விவகாரம் குறித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்வியை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவை, எதிர்காலத்தை, நிர்வாக அலட்சியம் மற்றும் யாருடைய சுயநலத்துக்கும் பலிகடாவாக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
சமுதாயச் சிந்தனையாளராக, ஊடகவியலாளராக, அரசியல் தலைவராக, பட்டியல் சமூக மக்களின் உரிமைக்காகவும், பஞ்சமி நிலங்களின் மீட்பிற்காகவும் அயராது போராடிய மாமனிதர் ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து, தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி, சமத்துவம் ஆகிய உயரிய இலட்சியங்களுக்காக அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தளர்வின்றி பாடுபட்ட அவரது தன்னலமற்ற சேவையும், சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் என்றும் நமது வழிகாட்டியாக நிலைத்திருக்கும்.
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA), நியூஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்திய 39வது தமிழ் விழாவில் பங்கேற்று, தமிழ் வம்சாவளியினருடன் நேரில் சந்தித்து உரையாடிய���ு, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லைகளைக் கடந்து, தமிழின் மீதான அவர்களின் அன்பும், பற்றும், அர்ப்பணிப்பும் பெருமைக்குரியது.
தமிழ் மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் உயிர்ப்புடன் கொண்டு செல்லும் இது போன்ற முயற்சிக��், உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் இந்தப் பண்பு என்றும் தொடர வேண்டும்.
அன்போடும், உற்சாகத்தோடும் என்னை வரவேற்று, இனிய நினைவுகளைப் பரிசளித்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவைக்கும், விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ்ச் சொந்தத்துக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
தமிழால் இணைவோம், த���ிழால் உயர்வோம்.
https://t.co/rCWtlUVMtU
The news that the death toll in the Ammonia gas tragedy in a pvt company in Thiruvallur has increased to 17 is deeply disturbing. All the deceased are women and were migrant guest workers from North India.
The TN government has given Compensation of Rs. 2 lakh to the next of kin of the deceased. How is this sufficient & justified? Odisha government has given Rs. 10 Lakh as compensation to the victim. The Odisha government also facilitated the return of those migrant guest workers who were discharged after the treatment. While the State Govt arranged safe passage of the deceased, how did the State administration forget the plight of those who were discharged from hospitals, waiting to return home?
The tragic loss of lives in the Ammonia gas tragedy in the private export firm in Thiruvallur also raises a lot of questions;
1)The first & foremost being the absence of the implementation of the 1979 Inter-State Migrant Workmen Act. Principal employers of establishments that employ five or more inter-state migrant workers must be registered under the Act. However, this accident and many earlier incidents have only shown that this Act is not implemented in Tamil Nadu and that no registry is being maintained.
Whenever a crime happens that involves a migrant guest worker from North India, a bunch of innocent migrant guest workers from North India are rounded up for enquiry, as there are no ways and means for the Police Department to narrow it down due to lack of registry.
However, after we pointed it out recently, we understand that the TVK Govt has begun enforcing this Act, at least in parts, if not in full. We trust that the State Govt takes the recent accidents/incidents seriously and enforces the availability of the register of migrant guest workers across all districts. TN State Govt could draw inspiration from the Athidhi app developed by Kerala for registering migrant guest workers and to ensure their welfare.
Even in the Thiruvallur ammonia gas tragedy, it was learnt that there was difficulty in establishing the actual identity of one of the deceased women, who carried a forged Aadhaar card to secure employment. This shows the inefficiency of the functioning of the inter-state migrant workers portal launched by TN Govt in 2023.
2)The welfare board for migrant guest workers is basically non-existent and needs to be established, strengthened and should be used to address the concerns of the migrant guest workers.
Tamil Nadu has today fallen below the replacement level, with a fertility rate of 1.3. To build the State’s infrastructure and work in industrial & commercial establishments across the State, we depend on the hard work of our migrant guest workers. Hence, it is important that we focus on their state of living, as most of the migrant guest workers are compelled to live in appalling conditions and have no place to complain, and their voices are never heard.
3)It is not just the duty of the welfare board but also the duty of the Department of Industrial Safety & Health (DISH) of the state government of Tamil Nadu. Even after a catastrophe that led to the death of 17 workers due to an ammonia gas leak, there seems to be no accountability taken by this department. It is time for “Transparency”. DISH should have made public their most recent inspection of this factory and any observations they made.
The factory in which these migrant guest workers suffered had accommodations within the place of work, surrounded by hazardous pipelines. How was this even allowed?
I demand that appropriate compensation be disbursed to the victims, that the 1979 Inter-State Migrant Workmen Act be enforced in both letter & spirit, and that transparency be brought by the Ministry of Labour of the TN State Govt on the functioning of the DISH & they also be made accountable, including the owners of the establishment, for deliberately ignoring the hazardous living conditions of the migrant guest workers.
@CMOTamilnadu
Delighted to have had the opportunity to inaugurate the expanded new campus of the Indian Multispeciality Hospital (IMSH) in Udumalpet today. Extending my heartfelt congratulations to the management team for their tremendous effort in bringing state-of-the-art medical departments, including Cardiology and Nephrology, to the region.
Best wishes to the entire team of consultant doctors, specialists, and support staff as they begin this new chapter in their medical service.
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) மற்றும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் 39 ஆவது தமிழ் விழாவில், அமெரிக்க நேரம் EST ஜூலை 3 அன்று மாலை,(இந்திய நேரம் ஜூலை 4 காலை) நமது அன்பான தமிழ் வம்சாவளியினரைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட ஆவலுடன் காத்���ிருக்கிறேன்.
அன்பும், தமிழ்ப்பற்றும் நிரம்பிய இந்த தமிழ்ச் சமூக சந்திப்பில், உங்கள் அனைவரையும் நேரில் காண ஆவலாக ��ள்ளேன்!
Looking forward to interacting with the leaders who have registered with the We the Leaders movement in New Jersey on the 5th of July 2026.
Together, let us exchange ideas and strengthen our commitment to service.
Narcotics are dangerously infiltrating TN, threatening our youth and our collective future. To combat this crisis, @WTLFoundation has prepared a policy paper for a Drug-Free Tamil Nadu. The policy paper elaborates on the crisis at hand and also explores the best practices worldwide in the fight against drugs.
https://t.co/SZqMKx6CZa
This policy paper also outlines a definitive 5-year roadmap focused on rigorous enforcement, prevention, rehabilitation, and reintegration to kill the demand for drugs in our state entirely.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!
#WTL_WhiteBandMonth
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நிதி மேலாண்மைக்கும், தொழில் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மைக்கும் உறுதுணையாக இருக்கும் அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும், தேசிய பட்டயக் கணக்காளர்கள் தின நல்வாழ்த்த���க்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் நிபுணத்துவமும், அர்ப்பணிப்பும், நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாகத் தொடரட்டும்.
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@moefcc@byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்க�� வளங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எ��ிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட��ுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மர��்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிண���ுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.
மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட���பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்��ப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் ��ிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான��
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
உயிர்களைக் காக்கும் அர்ப்பணிப்புடனும், மக்களிடம் நம்பிக்கையை விதைக்கும் கருணையுடனும், தினமும் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும், தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, மனிதநேயத்தின் உயர்ந்த சேவை. உங்கள் மேலான சேவைக்கு, எங்கள் மனமார்ந்த நன்றியும், மரியாதையும் என்றும் உரித்தாகட்டும்.