மாற்றம் 🤡🤣
தமிழ்நாட்ல இனி அரசியலற்ற அரசியல் தான் பேசப்படும்.
இந்தியா முழுக்க தேவை இல்லாத politics பேசுனாலும் எப்��ோதும் real politics மட்டுமே சரியா பேசிட்டு இருந்த மண் இந்த மண்
இந்தியா ஒரு பக்கம் ஓடுச்சுனா
NEETah இருகட்டும் EWSah இருக்கட்டும்
Delimitationah இருகட்டும் எல்லாத்திலயும் சரியான பக்கம் ஓடுன ஊர் இது.
ஒரு காலத்துல world politicsலேந்து தெரு சண்டை வரை எல்லாத்தையும் பேசுன ஊர் இது.
Palestine உரிமைக்காக இந்தியால எத்தன CM பேசுனாங்க தெரியல ஆனா இங்க DMK பேசுச்சு.
இன்னைக்கு serious topic வந்தா stalin தோத்தத கிக்கிகி பிக்கி பிக்கி பன்னவும் DMK - ADMK rumour பத்தி பேசவும் தான் இவங்களுக்கு நேரம் correctah இருக்கு.
இன்னோரு பக்கம் இவங்க பரப்புர fake newsah fakenu சொல்லியே அன்றைய நாள் முடிஞ்சிருது.அடுத்த நாள் இன்னோரு fake news.
Enjoy The மாற்றம் 🤣🙏
Trying to be apolitical turning blind eye to all the clownery happening around but this is so triggering. What is she even doing in a school? Why is she insulting our children 😭
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
Doing the right thing isn’t free. Doing the right thing might even cost you everything.
But when the time comes, you have to ask yourself: Will you do the right thing when it counts? When it could cost you everything?
Trichy in the 1950s, beautifully preserved in this photograph.
One of my followers from Kerela, who is of Tamil origin, shared this image. His grandfather worked in Trichy in the 1950s in railways and had the privilege of experiencing the city's architectural peak. This photo was taken by him just look at how beautiful it was.
Sadly, much of our historic core was later replaced with concrete brutalist buildings. Even so, Trichy still retains a significant amount of its heritage even today.
Credits📸: @Aruns76902
“தமிழ்த்தாய் வாழ்த்து” மற்றும் “வந்தே மாதரம்” ஆகிய இரண்டு பாடல்கள் விவகாரத்திலும் உறுதியான நிலைப்பாடு எடுத்த தமிழக அரசுக்கு வாழ்த்துகள்.
ஆளுநர் உரையின் பொதுத்தன்மையை வரவேற்பதோடு, அதே நேரத்தில் குறிப்பிட்ட பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சியின் வலியுறுத்தலைத் தமிழக அரசு கவனத்தில் கொண்டு, சரியான நடவடிக்கை���ளை மேற்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
#தமிழகஅரசு #தமிழ்த்தாய்வாழ்த்து #வந்தேமாதரம் #அரசியல் #தமிழகஅரசியல் #மார்க்சிஸ்ட்கட்சி #TamilNaduGovernment #TamilThaiVaazhthu
இந்த அனல் ���ெறிக்கும் பேச்சுக்கு தானே தலைவா கோடிகணக்கான தமிழர்கள் உன்னிடம் சொக்கிபோய் கிடக்கிறோம்..😍
குடிசைதான்!
ஒரு புறத்தில் கூரிய வேல்வாள் வரிசையாய் அமைத்திருக்கும் வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும் வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும் மிளிரும்
புலியின் குகையினிலே அழகில்லை - புதுமையல்ல
கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா மானத்தின் உறைவிடம் - மறவன் மாளிகை
இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோறோடு வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்ப பொக்கைவாய் தனைத்திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவிஒருத்தி
ஓடிவந்தான் ஒரு வீரன் ஒரு சேதி பாட்டி என்றான் ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய் ஆண்மகனா நீ தம்பி மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும் பின் பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள் அந்தக் கிண்டலுக்குப் பேர்போன கிழட்டு��் தமிழச்சி!
வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி - உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு. மடிந்தான் உன் மகன் களத்திலென்றான்
மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை
தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு
களமும் அதுதான்
காயம் மார்பிலா? முதுகிலா? என்றாள்
முதுகி லென்றான்
கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;
வாளை எடுத்தனள்!
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்
கோழைக���குப் பால் கொடுத்தேன்
குப்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர் போர்வீரனாம்
முன்பொருநாள்
பாய்ந்துவந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா?
அடடா மானம் எங்கே?
குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.
இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும்
இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்
அதுவும் மானம் மானம் என்றே முழங்கும்
மதுவும் சுராவும் உண்டுவாழும் மானமற்ற வம்சமா
ஏடா! மறத்தமிழ்க் குடியிலே மாசு தூவிவிட்டாய்
மார்பு கொடுத்தேன் மகனாய் வளர்த்தேன்
தின்றுக் கொழுத்தாய் திமிர்பாய்ந்த தோள்களெங்கே?
தினவெடுக்கவில்லையோ? அந்தோ!
வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே
என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய்!!
என்று கதறினாள் எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.
சென்றங்குச் செருமுனையில் சிதறிக்கிடந்த
செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள்
அங்கு ���ந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று ரத்த வெள்ளம்!
பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை
மகன் பிறந்த போதும் அவள் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு
அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!
இதைக் கண்டாள் - இதயங் குளிர்ந்தாள்!
எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை
என் மகன் வீரனாய் இறந்தான் என்றாள்.
அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை
��டடா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?
வாளிங்கே! அவன் நாக்கெங்கே? 😍😍😍😍
#KalaignarForever
#Kalaignar103
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை நீங்கள் முதன்முதலாக நேரில் கண்டது எப்போது?
80களின் மத்தியில் மடிப்பாக்கம் திமுக கிளைச்செயலராக இருந்த கோ.தெய்வசிகாமணி அவர்களது புதுமனைப் புகுவிழாவுக்கு தலைவர் வந்திருந்தார். அப்போத���தான் முதலில் பார்த்தேன். பின்னர் எத்தனையோ கூட்டங்கள், நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன். கோபாலபுரம் இல்லத்தில் அவரது மாடியறையில் சந்திக்கும் வாய்ப்பெல்லாம் அமைந்தது வாழ்வின் பெரும்பேறு.
மெரீனா கடற்கரையில் தேசிய முன்னணி தொடக்க விழாவில் அப்பாவின் தோள்மீது நின்று கலைஞரை கண்டேன். அதே கடற்கரையில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கலைஞருக்கு 1996 தேர்தலுக்கு முன்பாக திரையுலகம் நடத்திய பாராட்டுவிழாவை நண்பர்களோடு சென்று ரசித்தேன். 2001ல் கலைஞர் கைதுக்கான கண்டன���்கூட்டமும் மெரீனாவில்தான் நடந்தது. ஐஜி அலுவலகத்துக்குள் குண்டர்கள் புகுந்து, அலை அலையாய் வந்துக் கொண்டிருந்த தொண்டர்கள் மீது வன்முறையை ஏவினர். இரண்டு மூன்று பேர் ஸ்பாட்டிலேயே மரணித்துவிட, அவர்களது உடலை மேடைக்கு முன்பாக எடுத்து வந்து போட்டார்கள். கலங்கிப்போன கலைஞர், “நான் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடக்கும் இந்த கூட்டம் வேண்டாம். நீங்களெல்லாம் அவரவர் இல்லங்களுக்கு பாதுகாப்பாக செல்வதுதான் இப்போது எனக்கு முக்கியம்” என்று கூறி கூட்டத்தை நிறுத்தி, எல்லோரையும் கலைந்துபோக சொன்னார்.
இணையதள நண்பர்களோடு அறிவாலயத்தில் தலைவர் அறையில் சந்தித்தபோது, “இன்னொரு அணியா? கழகத்துக்கு பிணியா மாறிடாதீங்க...” என்று அவருக்கே உரிய நக்கல் தொனியில் கமெண்ட் அடித்தார்.
“தினத்தந்தியே இணையத்துலே யூனிகோடுலே வருது, நம்ம முரசொலியும் யூனிகோடுலே வரணும்” என்று கோரிக்கை வைத்தபோது, புரியாமல் விழித்தார். “இணையத் தளத்திலே ஃபா��்ட் டவுன்லோடு பண்ணாமலேயே படிக்கிற மாதிரி வசதி ஏற்படுத்தித் தரணும்” என்று சொன்னபோது, “ஸ்டாலின் கிட்டே சொன்னீங்கன்னா செஞ்சித் தருவாரு, அவருதான் இப்போ இதையெல்லாம் பார்த்துக்கிறாரு” என்று சொன்னவர், “ஸ்டாலின் இன்னிக்கு அறிவாலயம் வந்திருக்காரா?” என்று அலுவலக உதவியாளர்களிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, தளபதி அறைக்கு எங்களை அழைத்துச் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.
பொதுவாக தேர்தல் பிரச்சாரத்தை சைதை தொகுதியில்தான் சென்ட்டிமெண்ட்டாக ஆரம்பிப்பார். ஒருமுறை மறைமலை அடிகள் பாலம் அருகே, இன்னொரு முறை ஜோன்ஸ் ரோடு பொதுக்கூட்டம், இன்னுமொருமுறை ஜெய்கோபால் கரோடியா பள்ளி மைதானம் என்று தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் போதெல்லாம் சரவெடியாக இருக்கும். 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு தீவுத்திடலில் அன்னை சோனியா பங்கேற்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கூடினர். வைகோ பொடாவ��ல் இருந்து வெளியே வந்தபோது, அவர் பங்கேற்கும் விதமாக மயிலை மாங்கொல்லையில் கூட்டம், 2006 தேர்தல் பிரச்சாரத்தை அடையாறு ��ெலிபோன் எக்சேஞ்ச் அருகில் தொடக்கிய கூட்டம் என்று கலைஞரை கண்ட சந்தர்ப்பங்கள் ஏராளம். குறிப்பாக கலைஞர் பிறந்தநாள் மற்றும் முப்பெரும் விழாக்களை மறக்கவே முடியாது. என்னைப் போன்று சென்னையிலும், சென்னைக்கு அருகிலும் பிறந்து வளர்ந்தவர்கள் கலைஞரை நூற்றுக்கணக்கான முறை பார்த்திருப்பார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் சிறுகதைகள் வெளியீட்டு விழா, காமராஜர் அரங்கில் நடந்தபோது உடல்நலக்குறைவால் நலிந்திருந்த கலைஞர் பேசியது சரிவர புரியவில்லை. 1938ல் இருந்து தமிழ், தமிழர் உரிமைக்கு சங்கநாதமாய் முழங்கிய குரலுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அடுத்த சில நாட்களுக்கு உறக்கம்கூட வரவில்லை.
2009ல் இருந்துதான் கலைஞர் சக்கரநாற்காலியில் வலம் வரத் தொடங்கினார் என்று நினைவு. 2010ல் செம்மொழி மாநாட்டு மேடைக்கு ‘முத்தமிழே நீ வாழ்க’ பாடல் பின்னணியில் ஒலிக்க, அவரை சக்கரநாற்காலியில் ���ார்த்தபோது, கர்ச்சீப்பை முகத்தில் ஒற்றி விம்மி அழுதேன். பின்னர் கலைஞர் மரணத்துக்கு கூட நான் அழவில்லை. அது கல்யாண சாவு. அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வு கிடையாது. அரசியலோடு தன் வாழ்க்கையை பிணைத்துக் கொண்டவர். தன் வாழ்வில் அவர் பார்க்காத ஏற்றமும் இல்லை, தாழ்வும் இல்லை. எந்தவொரு மனிதருக்கும் கிட்டிராத அதிசய அனுபவங்களை கடந்து வந்தவர்.
கடந்தகால துயரங்களை திரும்பிப் பார்த்து சுயபச்சாதாபம் கொள்ளாமல், எதிர்காலத்தை நோக்கி மட்டுமே தன் நம்பிக்கைப் பார்வையை பதித்தவர். கலைஞர் அள���ுக்கு ஸ்போர்ட்டிவ் ஆக காலத்தை எதிர்கொண்ட மனிதர்கள் வரலாற்றில் மிக மிக அரிதானவர்கள்.
First graduate scholarship..
MBBSக்குனு மொத்தமா செலவு பண்ணது 15 ஆயிரம் இருக்கும்…
தம்பி Anna awardee அந்த காசு கூட தேவை இல்லாம MBBS முடிச்சாப்ல..
அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஸ்கூல் கூட முடிக்கல.ஒரு Cardiologist, interventional radiologist.
நன்றி மறப்பது நன்றன்று. #Kalaignar103