தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பூஜை செய்தேன். நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அருளுமாறு பகவான் மகாதேவனின் ஆசீர்வாதங்களை வேண்டி பிரார்த்தனை செய்தேன்.
தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும், தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கும் ஒவ்வொரு துணியும், உலக அரங்கில் நம் பாரம்பரியத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துச் செல்கிறது.
கைத்தறி நெசவாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிப்பதும், கைத்தறி பொருட்களை அதிகம் பயன்படுத்தி, அவர்கள் வாழ்க்கை வளம் பெற ஆதரவளிப்பதும், நம் அனைவரின் பொறுப்பாகும்.
நம் பாரதம் வெறும் நிலப்பரப்பு அல்ல; தியாகங்களால் கட்டியெழுப்பப்பட்ட புனித தேசம்.
இந்த மண்ணிற்கு தூய்மையான நதிகளும், உயர்ந்த சிந்தனையும், நாகரிகமான அரசியல் பண்பாடும், தேசநலமே முதன்மை என்ற உறுதியும் அவசியம்.
இதைக் காண, களத்தில் இறங்கி களம் காணும் தங்களின் ஒவ்வொரு முயற்சியும் பாராட்டுக்குரியது @annamalai_k.
தேசம் முதலில்... எப்போதும். 🇮🇳
#WeTheLeader #WTL @WTLFoundation
#NationFirst #Bharat #TamilNadu
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுடன் போராடிய மாவீரர் குணாளன் நாடார் அவர்கள் நினைவு தினம் இன்று.
தீரன் சின்னமலை அவர்களுடன் தோளோடு தோள் நின்று மூன்று முக்கியப் போர்களில், தனது வீரத்தால் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டிய பெருமைக்குரியவர்.
கொங்கு நாட்டின் பெருமைக்குரிய கட்டுத்தடிக்காரர். விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற வீரர்களில் ஒருவரான மாவீரர் குணாளன் நாடார் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் பாடப்பட்ட மன்னரும், 14 நாடுகளை உள்ளடக்கிய கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரருமான வல்வில் ஓரி அவர்களின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும் கொடையாளியாகவும், இணையற்ற வீரராகவும் விளங்கிய அவரது வாழ்க்கை, தமிழரின் வீரத்திற்கும் அறத்திற்கும் எடுத்துக்காட்டாகும். வீரம், கொடை, நீதி ஆகிய உயரிய பண்புகள் கொண்ட மாவீரர் வல்வில் ஓரி அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
இன்று மாலை தூத்துக்குடி தெரேஸ்புரத்தில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தில் பங்கேற்று உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி.
சுத்தமான, வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன், கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது உற்சாகத்துடன் திரண்டு வந்த சகோதர, சகோதரிகளின் உறுதியும், அர்ப்பணிப்பும், நமது இயக்கத்திற்கு மிகவும் வலு சேர்த்திருக்கிறது.
மக்களின் பங்கேற்பால் உருவாகியிருக்கும் நமது பயணத்தை இன்னும் பல மடங்கு வலுப்படுத்தி, தூய்மையான, பசுமையான, வளமான தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம். (1/2)
இன்று உவரியில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளின் உற்சாகமான பங்களிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது.
சுத்தம், பசுமை, பொதுமக்கள் பங்களிப்பு – இந்த மூன்றும் இணைந்தால்தான் வளமான தமிழகம் உருவாகும். இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்து, நம் மண்ணையும், நம் இயற்கையையும், நம் எதிர்காலத்தையும் பாதுகாப்போம். (1/2)
Children deserve alcohol free environments around their schools. Worshippers deserve dignity around their places of prayer. Commuters deserve safer transit hubs.
Enforcing the 500 metre rule is a simple yet meaningful step towards achieving these goals.
Kudos to @annamalai_k and the We The Leader Foundation for taking this important initiative. It is not only aimed at improving the quality of life in Tamil Nadu but also at nurturing a younger generation with values, discipline, and leadership to build a stronger nation.
@WTLFoundation
#WeTheLeader #TamilNadu #Leadership #Youth #AlcoholFreeZones #TASMAC
We wish to draw the kind attention of the Hon CM of TN, Thiru @TVKVijayHQ avl, to the ground assessment conducted by We the Leaders Foundation.
We have noticed that 129 TASMAC retail shops continue to operate across TN within a 500-meter radius of educational institutions, places of worship, and bus stations.
We kindly request the immediate closure of these shops and the safeguarding of the spaces where our children learn, pray, and commute.
@CMOTamilnadu@WTLFoundation (1/2)
Wishing everyone a blessed Guru Purnima.
On this auspicious day, let us offer our deepest respects to the our teachers and mentors who tirelessly guide us from the darkness of ignorance toward the light of wisdom.
//மாநாட்டுக்கு 20 கோடிகள் செலவு செய்து, எல்லா ஊர்களில் இருந்து வரும் வண்டிகளுக்கும் பணம் கொடுத்தது வரவழைத்திருக்கிறார்கள்//
இப்போவும் time இருக்கு
50 கோடி செலவு பன்னி😛 இந்தியா பூரா travels book பன்னி😛
இடம் இதவிட பெருசா ready பன்னி😛
தமிழிசை அவர்கள் நடத்தும் மாநாடு ன்னு poster அடிச்சு ஒட்டி பாருங்க..
எத்தனை பேர் அக்கா பேச்சை கேக்க வர்றாங்க ன்னு..
இதை ஒரு challengeஆ எடுத்து பன்னி😜
செஞ்சு காமிங்களேன்..
🤣🤣🤣
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)