"யாராச்சி உங்க கிட்ட டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் பண்ண லஞ்சம் கேட்டாங்களா? நான் அமைச்சர் தான் யாராச்சி எதனா கேட்டு இருந்தா தைரியமா சொல்லுங்க"..
திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் ..
பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் தவறு ஏதாவது நடக்கிறதா என்று கேட்டறிந்த அமைச்சர்..!
#Madurai | #MinisterLokeshTamilselvan | #SubRegistrarOffice | #TVK | #PolimerNews
கலைஞர் மீது பெருமதிப்பு வர மற்றுமோர் காரணம்… தாழ்த்தப்பட்டோரிலும் தாழ்த்தப்பட்டோராக இருக்கும் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு தந்தது.
வாக்கரசியலில் இதெல்லாம் பெரிய சாதனை.
நேற்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை, 20 ஆண்டுகளுக்கும் முன்னரே அருந்தியினருக்கு 3% உள் ஒதுக்கீட்டை சட்டமாக்கிய தலைவர் கலைஞர், அந்தச் சட்டமுன்வரைவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, எழுதிய கடிதம். 👇
*"இன்று என் வாழ்விலே ஒரு முக்கியமான நாள். ஆம் #அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்திலே நிறைவேறுகின்ற நாள்.*
*இந்த நாளில் சட்டசபை வந்து இந்த மசோதாவை நானே முன்மொழிந்து நிறைவேற்றித் தர வேண்டுமென்று எண்ணியிருந்தேன். சட்டசபைக்கு வருவதாக இருந்தது.*
*ஆனால், டெல்லி டாக்டரும், சென்னை டாக்டர் நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும், அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.*
*எனினும் இன்று காலையில் நானே அருந்ததியர் மசோதாவினை அவையிலே முன்மொழிவதற்கான உரையைக் கைப்பட எழுதி அவையிலே அதனைப் படிக்குமாறு உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்து எனக்குப் பதிலாக இந்த மசோதாவினை அவரை முன்மொழியுமாறு கேட்டுக் கொண்டேன்.*
*கருத்து மாறுபாடுகளுக்கு இடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது. தமிழ்த்தாயின் கரம் நம்மைஒரு சேர அணைக்கிறது.*
*அறிவியக்கம், ஆன்மீகம், நாத்திகம் மற்றும் ஆத்திகம் இந்த வேறுபாடுகள், மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வையும், நன்மனிதநேயமும் வளர்த்திடுவோம்.*
*அருந்ததியருக்கான இந்த இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற கனவு எனது உள்ளத்தின் அடித்தளத்தில் நீண்ட பல ஆண்டுகளாக இருந்த போதும் அதனைச் சட்டமாக நிறைவேற்றுகின்ற நேரம் இப்போதுதான் வந்துள்ளது.*
*இந்த சட்டத்தின் காரணமாகச் சமுதாயத்தின் அடித்தளத்திலே இருக்கின்ற அந்த அருந்ததிய மக்கள் நாளை, நாளை மறுநாள் அவர்களும் வாழ்க்கையிலே வளம் பெறுவார்களேயானால், அன்றுதான் என்னுடைய உள்ளவேட்கை முழுவதுமாக நிறைவேறிய திருப்தி எனக்கு ஏற்படும். இதனைச் சட்டமாகக் கொண்டு வருவதற்குள் நான் பட்ட பாட்டினை நான்தான் அறிவேன்.*
*இதற்காக நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையிலே ஒரு குழுவினை அமைத்து, அல்லும், பகலும் பாடுபட்டு இது சம்பந்தமான பல சட்டப் பிரிவுகளையும் படித்தாய்ந்து இதற்கான அறிக்கையினை அரசுக்கு அளித்தார்கள்.*
*அதன்பிறகு இதனைச் சட்டமாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அரசு உயர் அதிகாரிகள் சிலரிடம் இது குறித்து நான் பேசிக் கொண்டிருந்த போது அவர்கள் இந்த சட்டத்தினைக் கொண்டு வருவதற்கு மேலும் சில கால நீடிப்பு தேவை என்று கூறினார்கள்.*
*அப்போது நான் அவர்களிடம் கூறினேன், 'இது என்னுடைய சொந்த பிரச்சனை. இது எவ்வளவுக்கெவ்வளவு விரைவில் நிறைவேறுகிறதோ, அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சி அடைவேன்' என்றேன்;. அவ்வாறே இது நிறைவேறுகிறது.*
*நீதியரசர் ஜனார்த்தனம் இது குறித்த பரிந்துரைகளை அரசிடம் தாக்கல் செய்து, அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்த நேரத்தில், இந்த அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் என்னைத் தலைமைச் செயலகத்தில் வந்து சந்தித்தார்கள்*
*அப்போது அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது,*
*'எங்கள் சமுதாயத்திற்காக இவ்வளவு உறுதியாக இதுவரை யாரும் செயல்பட்டதில்லை. ஆனால் நீங்கள் இந்த அளவிற்கு எங்களுக்காக எடுத்துக் கொள்ளும்; முயற்சிகளுக்காக என்ன கைம்மாறு செய்யப் போகிறோமோ? எது எப்படி இருந்தாலும் இந்தப் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீடு செய்து அது சட்டமாக நாங்கள் உங்களோடு துணை இருப்போம்' என்று தெரிவித்தார்கள்.*
*அவர்சளின் எண்ணப்படி இன்றைய தினம் அருந்ததிய சமுதாயத்தினருக்காக 3 சதவீத உள்ஒதுக்கீடு நிறைவேறுகிறது. இந்தநாள் அவர்கள் வாழ்விலே எந்த அளவிற்கு முக்கியமான நாளாக விளங்குமோ, அது போலவே என்னுடைய வாழ்வில் இந்த சட்டததைக் கொண்டு வருவதற்குக் காரணமானவன் நான் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருசிறது.*
*ஏன் முதுகுத் தண்டில் அறுவைச்சிகிச்சை செய்து கொண்டு காயம் பரிபூரணமாகக் குணம் ஆனதில் எந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேனோ, அதை விட அதிக அளவிற்கு அருந்ததிய சமுதாயத்திற்காக நடைபெற்றுள்ள சமூகநீதி அறுவை சிகிச்சையில் இன்று முதல் அந்த சமுதாயமே பெரிதும் நலம் அடையப் போகிறது என்ற எண்ணத்தோடு மகிழ்ச்சி அடைகின்றேன்.*
*அருந்ததியர்களுக்கான நல்வாழ்வை அளித்திடக்கூடிய இந்த மசோதாவைச் சட்டமாக ஆக்கிட உதவி செய்த அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இந்த சட்டம் வெளிவர பெரிதும் எனக்குத் துணையாக நின்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்."*
#தலைவர்கலைஞர்