உண்மைதானே... 'கட்சி நிதி' என்றால் திமுக ஏன் பயப்பட வேண்டும்?
முதல்வரை முழுவதுமாக பேசவிட்டு, "காவல்துறை உங்ககிட்டதானே இருக்கு. பார்ட்டி பண்ட் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதுதானே..." என சட்டமன்றத்திலேயே @Udhaystalin சொல்லியிருந்தால், இந்த சர்ச்சை ஏற்பட்டிருக்குமா?
தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையில் 379 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின்போது மின்சாரம் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கலைவாணர் அரங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
Vaathi Raidu!
'பார்ட்டி பண்ட்' வசூல் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க தயாராகும் #tvkgovt முன்னாள் அமைச்சர்கள் ஒன்பது பேருக்கு குறி வைத்திருக்கிறது. அவர்கள் பற்றிய File-களை தோண்ட தொடங்கியிருக்கிறது.
Exclusive On tomorrow Junior Vikatan
#CMVijay#TVK#TVKVijay
'Party Fund' என்கிற பெயரில், டாஸ்மாக்கில் சட்டவிரோதமாக நிதி வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை, சட்டமன்றத்திலேயே குற்றச்சாட்டாக முன்வைத்திருக்கிறார் முதல்வர் விஜய் @TVKVijayHQ.
அந்த சட்டவிரோத பணத்தை அரசு கஜானாவுக்கு கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் சிஸ்டம், அரசு கஜானாவுக்கே வரும் போலிருக்கிறது.
இதுவரை மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்களை சும்மா விட போவதில்லை என்பதையும் கூறியிருக்கிறார் முதல்வர் விஜய். நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, செந்தில் பாலாஜி, முத்துசாமிக்கு மட்டுமல்ல... சுமார் ஓர் ஆண்டுக்கு டாஸ்மாக் பார்ட்டி பண்ட்டை கையாண்ட அண்ணாநகர் பிரமுகருக்கும் சிக்கல்தான்.
#tvk #dmk #CMVijay #UdhayanithiStalin
இன்றைய @TOIChennai பத்திரிக்கையில், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதை ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் நடந்த அதே அவலம், இந்த #TVK ஆட்சியிலும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் @VigneshTvkCbe எச்சரிக்கையையும் மீறி தொடர்கிறது.
பாட்டிலுக்கு 10, 20 ரூபாய் என, ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் பணம் சட்டவிரோதமாக வசூலிக்கப்படுகிறது. #TVKGovt
அமைந்த இந்த 40 நாளில் மட்டுமே 300 கோடி ரூபாய்க்கு மேல், பாட்டிலுக்கு 10 ரூபாய் பணம் வசூலானதாகச் சொல்கிறது அதிகாரிகள் வட்டாரம்.
அமைச்சர், ஆட்சியாளர்கள் யாருமே இந்த பணத்தை எடுக்கவில்லை. அப்படியென்றால், இந்த பணமெல்லாம் யார் பாக்கெட்டுக்குப் போகிறது?
மாவட்ட அளவிலான டாஸ்மாக் மேலாளர்களின் சொத்து விவரம், அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை ஆராய்ந்தாலே பல உண்மைகள் வெளிவரும்.
கண்ணுக்கு தெரிந்தே நடக்கும் இந்த கொள்ளையை தடுக்குமா #TVKVijay அரசு?
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சேவைக்கட்டணங்கள் மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்கள் உயர்வு..
சண்முகார்ச்சனை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது..
_மூலவர் அபிஷேகத்திற்கு 1500 ரூபாயில் இருந்து இரண்டு நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்வு..
முதல்வரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக, Route ஜெகதீஷ் தானே முன்வந்து கூறியிருக்கிறார். அதன்மூலமாக, ராம்குமாருக்கும் ஜெகதீஷ்க்கும் இடையே நடந்து வந்த அதிகார யுத்தம், ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
ஜெகதீஷை திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக்கிவிட்டு, முதல்வரின் தனிச்செயலாளராக ஆவதற்கு ராம்குமார் போட்ட திட்டம் தவிடு பொடியாகியிருக்கிறது.
போட்டியில் இருந்து ஜெகதீஷ் ஒதுங்கிக் கொண்டதால், திருச்சி கிழக்கு வேட்பாளராக கு.ப.கிருஷ்ணன் மகன் சிரஞ்சீவி அறிவிக்கப்படலாம்.
#route Jag-யிடம் தோல்வியடைந்த ராம்குமார் அடுத்ததாக என்ன செய்ய போகிறார்?
#TVKVijay #tvk #TVKVijayHQ #jagadish
After a sharp decline in vote share and a disappointing 2026 Assembly election performance, Naam Tamilar Katchi is reportedly planning a major organizational restructuring and overhaul. Discussions are also underway on fielding Seeman in the upcoming Ambasamudram by-election, a move many see as crucial to the party’s revival. Whether he will emerge as a common candidate, however, remains a matter of speculation.
#NTK #Seeman
தவெக-வுடன் கூட்டணி வைத்து, மதிமுக-வுக்கு உயிரூட்ட பார்க்கிறார் வைகோ. வரும் ஜூன் 27-ம் தேதி நடைபெறவுள்ள கட்சி பொதுக்குழுவில் தவெக உடன் கூட்டணி அமைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளது மதிமுக.
வைகோவுக்கு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி அளிக்கப்படலாம்.
தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக ஏன் முயல வேண்டும்... இந்த திட்டத்தின் பின்னால் இருப்பவர்கள் யார், யார்? அவர்களுடைய நோக்கம் என்ன?
விரிவான விடியோ....
https://t.co/PzeBkezQZL
#TVKVijay#dmk#udhayanidhi#TVKVijayHQ
உழைப்பவர்களுக்கும் சாமானியர்களுக்கும் அங்கீகாரம் கொடுக்கும் ஜனநாயகப் பூர்வமான இயக்கம் அதிமுக. கட்சி சீனியர்களின் வாரிசுகள் என்பதாலேயே யாருக்கும் சலுகை வழங்கப்பட்டதில்லை. மீண்டும் அதை தெளிவுப்படுத்தி இருக்கிறார் எடப்பாடி.
'அவர் வாரிசை கொண்டுவந்தால், நாமும் நம் வாரிசை வளர்க்கலாமே...' என கனவு கண்ட கிருஷ்ணகிரி கட்டப்பா தான் அப்செட் ஆகியிருப்பார்.
@EPSTamilNadu
'TVK-வில் விஜயபாஸ்கர் இணையட்டும், மணலை நாம் கையாளலாம்' என காத்திருக்கிறது குளத்திரான்பட்டு கரிகாலன் கும்பல்.
@TVKVijayHQ உஷாராகவில்லை என்றால், திமுக எதிர்கொண்ட பல சிக்கல்களை இந்த அரசாங்கமும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
"அதிமுக-வில் தலைமை சரியில்லை. 2016க்கு முன்பாக பொதுச்செயலாளருக்கு எவ்வளவு சொத்து இருந்தது என்பதை அவர் காட்ட வேண்டும்...", இப்படி பேசியிருக்கும் இவர் யார் தெரியுமா..?
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் கருப்பையா. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால், மணல் மாஃபியா கரிகாலனின் தம்பி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், கட்சிக்காக உழைத்த எத்தனையோ பேர் சீட் கேட்டபோது, அவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு திருச்சியில் போட்டியிட கருப்பையாவுக்கு சீட் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. காரணம், விஜயபாஸ்கரின் சிபாரிசு.
அந்த சமயத்தில்தான், கரிகாலன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி முடித்திருந்தது. 'திமுக-வோடு தொடர்புடைய கரிகாலின் தம்பிக்கு சீட் கொடுக்கக் கூடாது' என எத்தனையோ பேர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, விஜயபாஸ்கர் சொன்னாரென சீட் கொடுத்தார் எடப்பாடி. அதற்கான பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
https://t.co/thKAyMg3se