மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்திரவின்படி, 2026-பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை, இன்று (14.01.2026) கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தோம்.
தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 7,359 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 20,004 பேருந்துகள் இயக்கப்பட்டு,9,20,000 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வின்போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நல்லா படிங்க, நல்ல மதிப்பெண் வாங்குங்க...
பேரென்ன?
மகாலட்சுமி.
சன்னாசி நல்லூர் பஸ் வேணுமா?
ஆமாம், சார்.
ஏற்பாடு செஞ்சுடுவோம்...
எங்கள் மாணவநேசனுக்கு 💐💐💐🙏🙏🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் உத்தரவின்படி, சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், சிறுபான்மையின மக்களின் கருத்துருக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறியவும் நடைபெறும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்காக பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய குழு தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண் அவர்கள்,துணைத் தலைவர் எம்.எம்.அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட ஆணையத்தின் உறுப்பினர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரவேற்ற போது.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்,அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.
🛺 ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணத்துக்கு காவல் உதவி QR குறியீடுகள் எனும் @chennaipolice_ முன்முயற்சி தொடக்கம்,
⚡️ சோழிங்கநல்லூரில் ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் உயர்தர மின் மேலாண்மைக் கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையத்துக்கு அடிக்கல்
🏞️ போரூரில் M.S. சுவாமிநாதன் ஈரநிலப் பசுமைப் பூங்கா திறந்து வைத்தல்,
🛍️ கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மற்றும் சாத்தங்காடு இரும்பு மற்றும் எஃகுச் சந்தை வளாகத்தில் மேம்பாட்டுப் பணிகள் திறந்து வைத்தல்,
உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வீரன் நகரில் 70-க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது, அவர்கள் நீர்நிலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் தற்காலிக குடிசைகளை அமைத்து குடியிருந்து வரும் நிலையில், அவர்களுக்கு முறையான மாற்று இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்கள். அதன்பேரில், சுமார் 77 குடும்பங்களுக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. மேலும், அவர்கள் உடனே வீடு கட்ட ஏதுவாக ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் தலா ரூ.5 லட்சம் என சுமார் ரூ.4 கோடி அளவுக்கு நிதி உதவியையும் அவர்களின் வீடுகளுக்கே சென்று இன்று நேரில் வழங்கினோம்.
வீட்டுமனைப்பட்டா மற்றும் வீட்டுக்கான நிதி உதவியைப் பெற்ற நரிக்குறவ இன மக்கள் மகிழ்ச்சியோடு நம் திராவிட மாடல் அரசை வாழ்த்தினர்.
சமூகத்தில் அழுத்தப்பட்டோர் - ஒடுக்கப்பட்டோர் யாரும் முன்னேற்றப்பாதையில் இருந்து விடுபட்டுவிடக்கூடாது என்பதில் நம் திராவிட மாடல் அரசு எப்போதும் உறுதியோடு செயல்படும் என்று அவர்களை வாழ்த்தினோம்.
@TRBRajaa@kalaivanandmk
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் வாழ்த்து தெரிவித்த போது!
#தலைவர்72#FairDelimitationForTN