பொதுமக்களின் வரிப் பணத்தில் ரூ.5.54 கோடியில் அமைக்கப்படும் கடற்கரை தெரியும் வகையிலான முதலமைச்சரின் 10-வது மாடி அலுவலகப் பணிகளுக்கான டெண்டரில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன!
ஊரான் வீட்டு காசுல உங்க சீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க CM சார்!
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நடப்பாண்டில் அதிகரித்து இருப்பதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் அத்திட்டத்தின் கீழ் 2025 - 2026-ஆம் கல்வியாண்டில், அதாவது திராவிட மாடல் ஆட்சி காலத்தில் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்க்கைப் பெற்று பயின்றுவரும் மாணவருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் ஏன் இவ்வளவு அலட்சியம்?
ஏற்கனவே, இங்கிலாந்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பட்டமேற்படிப்புக்கு சேர நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ள நம் மாணவர்களுக்கு ‘மாநில அரசின் கல்வி உதவித்தொகையை ஏற்க முடியாது - இந்திய ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்’ என்ற புதிய விதியை சுட்டிக்காட்டி சேர்க்கை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அந்த புதிய விதிக்கான காரணமாக கல்வி நிறுவனங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் “மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் அமைப்பு, அதனை இடையிலேயே நிறுத்திவிட்டால் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை உருவாகுகிறது; எனவே இடைநிற்றல் ஏற்படும் சூழலும் ஏற்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தால், மலேசியா நாட்டில் பயிலும் நம்முடைய மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தாமல் த.வெ.க அரசு அலட்சியமாக இருப்பதால், அங்கும் எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசின் கல்வி உதவித்தொகையை நேரடியாக ஏற்க உயர்கல்வி நிறுவனங்கள் மறுக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
இன்னும் இதுபோல எத்தனை நாடுகளில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ என்கிற கேள்வியும் எழுகிறது.
Take Diversion அரசின் இத்தகைய அலட்சியப்போக்கு, அரசின் உதவித்தொகையை மட்டுமே நம்பி கல்விக்காக கடல்கடந்து சென்றுள்ள மாணவர்களுக்கு எத்தகைய மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. அலட்சியப் போக்கினை கைவிட்டு, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உரிய காலத்தில் விடுவிக்க மாண்புமிகு @CMOTamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் சாதனை என இந்த அரசு பெருமை பேசும் இதே நேரத்தில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு இந்த 100 நாளில் எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி! 👇
#LawAndOrder#நாசமாகும்தமிழ்நாடு#TVKVijayFails
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.
மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கழகத்துக்கும் தலைவர் கலைஞருக்கும் தன் இறுதிமூச்சு வரை உண்மையாக இருந்த களங்கமில்லாத திராவிடத் தீரர் முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன்.
அண்ணாவின் தம்பியாக அவர் ஆற்றிய உரைகளும் எழுதிய நூல்களும் நம் இயக்கத்தின் இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் பயின்றாக வேண்டிய பாடப்புத்தகங்கள்.
ஓர் எளிய தஞ்சை டெல்டா மைந்தன் டெல்லி வரை சென்று தடம் பதித்தார். பின்பு தோகா வரை சென்று இந்தியா மட்டுமில்லாமல், உலகின் வளரும் நாடுகள் அனைத்துக்காகவும் வாதாடினார். எத்தனை உயரம் சென்றாலும் அந்தப் புகழை எல்லாம் கலைஞருக்கே காணிக்கையாக்கிய #முரசொலிமாறன் அவர்களின் புகழ் வாழிய வாழியவே!
UK Visas and Immigration விதிமுறை மாற்றங்களால் தமிழ்நாடு அரசின் நிதியுதவி ஏற்கப்படாத நிலையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2025–26ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைந்திடக் கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோகாமல் இருக்க, இங்கிலாந்து அரசுடன் உடனடியாக பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல், தவெக அரசு மாணவர்களைக் காத்திருக்க வைப்பது மிகுந்த கவலையளிக்கின்றது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தைத், தற்போதைய தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்டுகின்றது?
மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகையை உடனடியாக விடுவிக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
@arivalayam@CMOTamilnadu@VanniTamizhVCK
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று மரியாதை செலுத்தினோம். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினோம்.
என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்!
#Kalaignar
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.
போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.
நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.
குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.
மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்?
இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
#சட்டம்_ஒழுங்கு
தி.மு.கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புக்கும் வாளும் - கேடயமுமாக திகழும், கழக சட்டத்துறையின் வடக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம்.
கழகத்தினர் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் கைது செய்வது; அதுவே, டெல்லி ஓனர்கள் பேசினால் கண்டுகொள்ளாமல் இருப்பது என பம்மி நிற்கும் டம்மி அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் கழக வழக்கறிஞர் அணி அம்பலப்படுத்த வேண்டும் என்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டு நலனுக்காகவும் - கழகத்திற்காகவும் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ள கழக வழக்கறிஞர் அணியின் பணிகள் மென்மேலும் வேகமெடுக்கும் வகையில் உற்சாகமூட்டினோம்.
வழக்கறிஞர் அணியின் பணிகள் சிறக்க வாழ்த்தினோம்!
@DMKLegalWing@RSBharathiDMK@nrelango_dmk@PWilsonDMK
இயக்குநர் இமயம் பாரதிராஜா - திரைக்கதை மன்னன் பாக்யராஜ் ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் திரையுலகம் சார்பில் இன்று நடத்தப்பட்ட ‘ராஜகோபுரங்கள் - நினைவு உற்சவம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
தமிழ்த்திரையுலகிற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திய பாரதிராஜா சார் - பாக்யராஜ் சாரின் பெருமைகளையும் - சாதனைகளையும் நினைவுகூர்ந்து உரையாற்றினேன்.
அவர்கள் இருவரின் கலைப்பணி என்றென்றும் மக்கள் நினைவுகளில் நிலைத்திருக்கும்!
#Bharathiraja #KBhagyaraj
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாகவும் - கழகத்தலைவர் அவர்களின் அன்புக்குரியவராகவும் திகழ்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாள் இன்று!
கழகத்தின் வளர்ச்சிக்காகவும் - திராவிட இயக்கக் கொள்கைகள் திக்கெட்டும் பரவிடவும் அயராது உழைத்தவர்.
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் உரிமைக்காக குரல் கொடுத்த பெருமைக்குச் சொந்தக்காரர்.
திரு.முரசொலி மாறன் அவர்களின் பணிகளை இந்நாளில் நினைவுகூர்வோம்.
அவர் புகழ் ஓங்கட்டும்!
#MurasoliMaran
கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.
த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.
இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், கழகத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகையாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 பேருக்கு, கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் ரூ.6,25,000/- மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் நிதி உதவிகளைப் பெறும் பயனாளிகளின் விவரம் வருமாறு:
#கழக_இளைஞர்_அணி