பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கிட்டு, குற்றத்துக்குத் துணைபோன சட்டமன்ற உறுப்பினரை காப்பாத்தும் இந்த மானங்கெட்ட அரசு மனுநீதிச்சோழன் அரசா?
வாய்ல வந்துரும்.. வேண்டாம் முதல்வரே!
@CMOTamilnadu@TVKVijayHQ
குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்..!
திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!
உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!
குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!
இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்..!
தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
உலக குருதிக்கொடையாளர் தினம் 2026 முன்னிட்டு ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் குருதிக்கொடைப் பாசறையின் உயிர்நேய பணிகளுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி SRM குழுமம் இன்று சிறப்பித்தது ...
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
திருவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?
பாதிக்கப்பட்ட பெண்ணே திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியும், எந்த நடவடிக்கையும் இதுவரையும் எடுக்காதது ஏன்?
ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மவுண்ட் போலீசார் வழக்கு பதிவு.
கணவனை இழந்த பெண்ணுக்கு மொபைலில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதோடு, வீட்டில் அவர் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு இருதினங்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் சென்ற ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அப்பெண் கூச்சலிட்டதும் த.வெ.க நிர்வாகி வேம்புலி தப்பிச் சென்றார். பின்னர் மவுண்ட் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் த.வெ.க நிர்வாகி வேம்புலி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக நிர்வாகிகளிடம் இருந்து தமிழ்ப்பெண்களை பாதுகாக்கத்தான் சிங்கப்பெண் படையா ?
திருவைகுண்டம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்குத் துணைபோன சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணனைக் கட்சியைவிட்டு நீக்காது, பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?
இதுதான் பெண்களைப் பாதுகாக்கும் இலட்சணமா? உங்களை நம்பி வந்த கட்சிப் பெண்ணைப் பாதுகாக்கத் துப்பு இல்லையா?
@TVKVijayHQ@CMOTamilnadu
தமிழ்த்திரையில் எளிய மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்த திரைப்போராளி ! தான் கொண்ட கொள்கையில் துளியளவும் சமரசம் செய்யாத பெருந்தமிழர் !
இயக்குனர் இமயம் ஐயா பாரதிராஜா அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் !
#Bharathiraja
தமிழ்த்தேசிய இனத்தின் கலை அடையாளம்!
மண்ணின் மகத்தானப் படைப்பாளி!
இனமான உணர்வுகொண்ட பெருந்தமிழர்!
எங்கள் ஐயா பாரதிராஜா அவர்களுக்குப் புகழ் வணக்கம்!
காலங்கடந்து நிற்கும் உங்களது ஒப்பற்றப் படைப்புகளாலும், இனமானச் செயல்பாடுகளாலும் இரவா புகழ்கொண்டு தமிழர் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு வீற்றிருப்பீர்கள் ஐயா!
RIP Bharathiraja || பாரதிராஜாவுக்காக நின்ற சீமான்..!
மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகள் முழுவதையும் அவரது பாசறையில் வளர்ந்த இயக்குநரும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மேற்கொண்டார்
சீமானுக்காக நாம் தமிழர் கட்சி மேடையில் வாக்குக் கேட்டுப் பேசியுள்ளார் பாரதிராஜா. இறுதிவரை பாரதிராஜாவை 'அப்பா' என்றே சீமான் அழைத்தது குறிப்பிடத்தக்கது
BharathiRaja | RIP Bharathiraja | Director Bharathiraja Passed away
#Mariselvaraj | #BharathiRaja | #RIPBharathiraja | #DirectorBharathirajaPassedaway | #Newstamil24x7 | #Tamilnews